August 26, 2009

அஞ்சலையும் அஞ்சனாவும்

ரம்மியம், துள்ளல் என கலந்து கட்டி அடிக்கும் குரலுக்கு சொந்தக்காரர். எந்த கடவுளுக்கு நேந்துகிட்டு பாட ஆரம்பிச்சாரோ தெரியல. ஹிட்ஸ் மேல ஹிட்ஸா கொடுத்துகிட்டே இருக்கார். ஆங் பாடகர் யாருன்னு தலைப்பை வெச்சே கெஸ் பண்ணிருப்பீங்கன்னு நினைக்கிறேன். இப்போதான் அஞ்சலைய வச்சு ஆட வைச்சார். இப்போ அஞ்சனான்னு உருகிட்டிருக்கார். கார்த்திக். இப்போதிருக்கும் இளம் தலைமுறைப் பாடகர்களில் தி மோஸ்ட் வெர்சடைல். அழகானவரும் கூட;)

ரஹ்மானால அறிமுகப்படுத்தப்பட்டு ஹாரிஸ் ஜெயராஜ் மூலமாக லைம் லைட்டிலேயே இருப்பவர். சீசனுக்கு ஒரு ஹிட் கொடுத்திடறார். 2001ல் வெளிவந்த ஸ்டார் படத்தில் official ப்ளேபேக் சிங்கராக அறிமுகமானார். நேந்துகிட்டேன் பாடல் சூப்பர் ஹிட்.






பிறகு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைப்பில் வெளியான மின்னலே படத்தில் இரண்டு தீம் மியுசிக்கில் இவர் குரல் எட்டிப்பார்க்கும். "பூப் போல் பூப்போல் என் நெஞ்சை கொய்தவள்"






2002ல் வெளிவந்த சூர மொக்கைப் படமான கண்களால் கைது செய் படத்தில் வரும் அனார்களி பாட்டு அட்டகாசம் (பாட்டுக்காகவே மாஸ் பங்க் செய்துவிட்டு படத்துக்குப் போய் நொந்து நூடுல்ஸ் ஆனது தனிக்கதை).






பின்னர் அழகியில் வரும் "ஒளியிலே தெரிவது தேவதையா" மூலம் பைத்தியம் பிடிக்க வைத்தார். நான் காலேஜ் படிக்கும்போது இவரோட பெஸ்ட் ஹிட்ஸ் நிறைய வந்தது. என் தோழி ஒருத்தி இவரின் கல்யாணத்தன்று நாள் முழுவதும் அழுது புலம்பிக் கொண்டிருந்தாள். பாபாவில் "சக்தி கொடு" மற்றும் "மாயா மாயா" பாடல்கள் இவருக்கு நல்ல தீனியாக அமைந்தன. லேசா லேசா படத்தில் வரும் "அவள் உலக அழகியே" என்ற பாட்டு என் ஆல் டைம் பேவரிட்.

வித்யாசாகர் இசையமைப்பில் ரன் படத்தில் "தேரடி வீதியில் தேவதை வந்தா", யுவன் ஷங்கர் ராஜா இசையமைப்பில் ஏப்ரல் மாதத்தில் "சைட் அடிப்போம்" பாடல்கள் 2002ஆம் ஆண்டில் யூத்களின் தேசிய கீதமாய் இருந்தது.பாய்ஸ் படத்தின் மூலம் இவருக்கு ஒரு பெரிய ப்ரேக் கிடைத்தது. "எனக்கொரு கேர்ள் பிரண்ட்" தான் மாசிவ் ஹிட் என்றாலும் எனக்குப் பிடித்ததென்னவோ "எகிறி குதித்தேன்" பாடல் தான்.

இதற்க்குப் பிறகு கஜினியில் இவர் பாடிய "ஒரு மாலை இளவெயில் நேரம்" பாட்டிற்கு பிலிம்பேஃர் விருது கிடைத்தது. உன்னாலே உன்னாலே "உன்னாலே உன்னாலே", வாரணம் ஆயிரம் "அஞ்சலை", அயனில் "விழி மூடி யோசித்தால்", லேட்டஸ்டாக ஆதவன் "ஹசிலி பிசிலி" என பாடுவதெல்லாம் ஹிட்.

தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் என ஹிட்டடித்துக்கொண்டிருக்கிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் கஜினியில் "பேக்கா", யுவராஜில் "ஷனோ ஷனோ" ரெண்டும் சூப்பர் ஹிட். தெலுங்கில் ஹேப்பி டேஸ் படத்தில் வரும் "அரே ரே" அவ்வளவு ரம்மியமாக இருக்கும்.






இவர் குரலில் எனக்குப் பிடித்த முக்கியமான பாடல்கள் சில

யாவரும் நலம் - சின்னக் குயில் கூவும்.
யாரடி நீ மோகினி - ஒரு நாளைக்குள் எத்தனை கனவு
சிவப்பதிகாரம் - சித்திரையில் என்ன வரும்
உனக்கும் எனக்கும் - உன் பார்வையில் பைத்தியமானேன்
பொல்லாதவன் - மின்னல்கள் கூத்தாடும்
மருதமலை - ஹே என் மாமா
மொழி - என் ஜன்னலில் தெரிவது
காக்க காக்க - ஒரு ஊரில் அழகாய்
சித்திரம் பேசுதடி - இடம் பொருள் பார்த்து
7G ரெயின்போ காலனி - கண் பேசும் வார்த்தைகள் புரிவதில்லை
வெயில் - காதல் நெருப்பின் நடனம்
ஓரம் போ - இதென்ன மாயம்
பிரிவோம் சந்திப்போம் - கண்டேன் கண்டேன்
வெண்ணிலா கபடி குழு - லேசா பறக்குது மனசு
அ ஆ இ ஈ - நட்ட நடு ராத்திரியை
நாளை - ஒரு மாற்றம்

பாடுவதோடு மட்டுமில்லாமல் ஜிங்கிள்ஸ் எனப்படும் விளம்பரங்களுக்கு இசையமைக்கத் தொடங்கியுள்ளார். விஜய்யின் லேட்டஸ்ட் கோக் விளம்பரம் இவர் பாடி இசையமைத்தது.






கூடிய சீக்கிரம் ஒரு நல்ல மியூசில் ஆல்பத்தை உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறோம் கார்த்திக்.

August 24, 2009

Cascade

டிஸ்கி 1 : பசி நேரத்தில் பதிவைப் படித்து வயிற்றெரிச்சல் பட்டால் கம்பேனி பொறுப்பாகாது.
டிஸ்கி 2 : இடுகை முழுக்க முழுக்க பெர்சனல் எக்ஸ்பீரியன்ஸை பேஸ் பண்ணி எழுதப்பட்டது. உங்களுக்கு மாற்று அனுபவம் ஏற்படுமெனில் அதற்கும் கம்பேனி பொறுப்பாகாது:)


முதல் முறை அலுவலக நண்பர்களுடன் பெசண்ட் நகரில் இருக்கும் கிளைக்கு சென்றேன். 12 பேர். இருவருடைய பர்த்டே ட்ரீட். சாப்பாடு, கிண்டல் கேலியென ரொம்ப சந்தோஷமாய் இருந்தது. நீண்ட இடைவேளைக்குப் பிறகு நான், ரகு, தம்பி, அண்ணா நால்வரும் நுங்கம்பாக்கம் கிளைக்கு சென்றோம்.

சப்பை மூக்கர்கள் திண்பதில் ஜப்பானீஸ் தவிர்த்து, சைனீஸ், தாய்லாந்து ஆகிய நாடுகளின் உணவுகள் (Not sure about the authenticity) கிடைக்கின்றன. அசைவத்திற்க்கு இணையாக சைவமும் மெனுவில் இருப்பது கூடுதல் சிறப்பு. நால்வரில் இருவர் சைவம், இருவர் அசைவம். Hunai Soup என்ற சைனீஸ் பார்ஸ்லி பிளேவர்ட் வெஜிடபிள் சூப்,
ஸ்பைசி சிக்கன் சூப்போடு, ப்ரைட் வெஜ் வாங்டான்ஸ்,
பெப்பர் சிக்கன்,
வெஜ் மோமோஸ்,

சிக்கன் திம்சும்ஸ் என ஆரம்பித்தோம்.
சூப் மிகவும் அருமையாக இருந்தது. அளவும் அதிகம். துளியூண்டு பெப்பர் சிக்கன் சாப்பிட்டேன். சிம்ப்ளி சூப்பர்ப். திம்சும் சுட சுட அட்டகாசமான சுவை. வாங்டன்சுடன் பரிமாறப்பட்ட Schezwan Sauce ரொம்ப அருமையாக இருந்தது.

மெயின் கோர்ஸிர்க்கு Spicy Thai rice, Schezwan ஸ்பைசி சிக்கன் ப்ரைட் ரைசோடு, டோஃபு தாய் கறி ஆர்டர் செய்தோம். எல்லாமே சூப்பராய் இருந்தது.
டெசர்ட்ஸ்க்கு ப்ரைட் ஐஸ்க்ரீம் (the best in town), லிட்சி கூலர், டேட்ஸ் பான் கேக் ஆகியவை ஆர்டர் செய்தோம். ப்ரைட் ஐஸ்க்ரீம் மிகவும் நன்றாக இருந்தது. மற்ற இரண்டும் ஓகே ரகங்கள்.


இந்த உணவகத்தின் மிகப் பெரிய அட்வாண்டேஜாக நான் கருதுவது உணவின் அளவு மற்றும் சர்வீஸ் தான். ஒரு ப்ளேட் ரைஸை இருவர் தாரளமாக சாப்பிடலாம். அதே போல் நீட்டாக பரிமாறுகிறார்கள். Sea food அதிகளவில் இருக்கிறது.

மேலதிக தகவல்கள்

உணவகம் - Cascade
இடம் - காக்கனி டவர்ஸ், நுங்கம்பாக்கம் (United colours of Benetton மாடியில்). பெசண்ட் நகர் மற்றும் அண்ணா நகரிலும் கிளைகள் உண்டு.
டப்பு - நால்வருக்கான கம்ப்ளீட் மீல் 1400 ரூபாய் (இரண்டு பேர் அசைவம்)

பரிந்துரை - தாரளமாக போகலாம். ரிசர்வ் செய்யும் வசதியில்லை. வாரயிறுதியில் கூட்டம் கொஞ்சம் ஜாஸ்தி. மறக்காமல் ப்ரைட் ஐஸ்க்ரீமை ட்ரை பண்ணுங்கள்.

August 14, 2009

என் ராசி அப்படி...

ஒருவழியாக தாம்பரத்திற்க்கு டாட்டா காட்டிவிட்டு புது வீட்டில் குடியேறியாச்சு. இந்த இரண்டு வாரங்களும் வேலை. ஸ்ஸப்பா. புது வீடை செட் பண்ணும் வரையில் ஜூனியர் எங்களுடன் இருக்கட்டும் என பெற்றோர் அழைத்து சென்றுவிட்டனர். ஒரு வழியாக வீட்டை செட் பண்ணி சென்ற வியாழன் அவனை அழைத்து வந்தேன். நான்கே நாட்களில் இந்தப் பாழாய்ப்போன பன்றிக்காய்ச்சல் பீதியால் திரும்பவும் அண்ணாநகர் போய்விட்டார் துரை. நீ அங்கே நான் இங்கே என சோக கீதம் இசைத்துக் கொண்டிருக்கிறேன்:(
***********

இரண்டு நாட்களுக்கு முன்னர் தான் இணைய இணைப்பு கிடைத்தது. வேலைப் பளு கொஞ்சம் குறைந்தாற்போல் தெரிந்ததில் கொஞ்சூண்டு ஆனந்தப்பட்டேன். மடேர் மடேர் என அடிக்க வரிசையாக க்யூ கட்டி நிற்கின்றன. மாமனாருக்கு அடுத்த வாரம் ஒரு ஆப்ரேஷன். அது முடிந்ததும் அண்ணாவின் கல்யாணத்துக்கு போகனும்.அது முடிச்சு இன்னொரு பங்கஷன். கவுண்டமனி ஸ்டைலில் "ஆமாமா. நான் ரொம்ப பிஸி." என அலுத்துக்க வேண்டியுள்ளது.
************

Its raining food in anna nagar. மெக்டொனால்ட்ஸை தொடர்ந்து கேஎஃப்சி கடை பரப்புகிறார்கள். சிக்கன் பழக்கப்படுத்தறேன்னு தம்பி அங்க அழைச்சுட்டுப் போனான். சப்புக் கொட்டிக் கொண்டு போனால் இன்னும் ஸ்டரக்ச்சரிங் வொர்க் இருக்கு சார். வீ ஆர் யெட் டு ஓபன் என்றான். யோவ் வேலை முடியலன்னா ஒரு தட்டிய போட்டு கடைய மறைங்கய்யா. நல்லா லைட்டெல்லாம் போட்டுட்டு சின்னப்பசங்கள ஏமாத்தாதீங்க.
************

பாண்டி பஜாரில் உள்ள சரவண பவனிற்கு சென்றோம். அப்பாக்கு அங்கு மட்டும் தான் நல்ல சாப்பாடு கிடைக்குதென்ற நினைப்பு (சுமார் பத்து வருஷமாக ஹோட்டல் என்றால் அங்குதான்). கீழே பயங்கர கும்பல் என மாடியில் உள்ள ஹாலுக்கு போனோம். மீல்ஸ் 185 ரூபாய் என போட்டிருந்தது. சர்வரைக் கூப்பிட்டு ஏன் எனக் கேட்டதுக்கு வெள்ளிப் பாத்திரத்தில் உணவு பரிமாறப்படும் என்றார். "இந்த விலைக்கு சாப்பிட்டுட்டு பாத்திரத்தையும் கையோடு கொண்டுபோய்டலாம் போலிருக்கே" என நான் சொன்னதை அவர் ரசிக்கவில்லை.
"சார் நான் தக்காளி சூப் கேட்டேன். மாத்தி சாஸ் வெச்சிருக்கீங்க பாருங்க" என நான் சொன்னதும் முறைத்தார். ஹும். நாளுக்கு நாள் சரவண பவனில் விலை அதிகரித்துக் கொண்டேஇருக்கிறது. சர்வீசும், குவாலிட்டியும் பாதாளத்துக்கு போய்க்கொண்டிருக்கின்றன.
************

பெற்றோரின் திருமண நாளுக்காக அவர்களுக்கு ட்ரெஸ் எடுக்க போயிருந்தோம். வேண்டாமென சொல்ல சொல்ல அப்பா ஒரு புடவையும், தம்பி இரண்டு சல்வாரும் எடுத்துக்கொடுத்தார்கள். ப்ளீஸ் புடவை வேண்டாமெனக் கெஞ்சியும் கேக்கவில்லை. வீட்டிற்க்கு வந்துப் பார்த்தால் அம்மாவின் புடைவையைவிட என்னுடையது காஸ்ட்லி. உனக்கு மட்டும் எப்படிடி இப்படி அமையுது என அண்ணா கேட்க "என் ராசி அப்படி" என்றேன்.
************

சில வாரங்களுக்கு முன்னால் பைக்கில் சென்ற தம்பி சில்லறை பொறுக்கிவிட்டு வந்தான்.
"ஏண்டா சில்லறை பொறுக்கின?"
"ரெண்டு எருமைமாடுங்க ராங் சைடுல வந்திடுச்சுடி".
"எருமைமாடுக்கு எப்படிடா ரைட்டு ராங்குன்னு தெரியும்?"
"காலேஜ் போற எருமைங்களுக்கு அதுகூட தெரியலன்னா எப்படி?"
***********

இந்த முறை கிருஷ்ண ஜெயந்திக்கு எங்க வீட்டு கிருஷ்ணருக்கு அலங்காரம் பண்ண அம்மாவும் மாமியாரும் தடை விதித்துவிட்டார்கள். காரணம் நான்கு மாதமாக இருந்தபோது கிருஷ்ண அலங்காரம் பண்ணி போட்டோ எடுத்த அடுத்த வாரம் உடல்நிலை மோசமாகி ஆஸ்பிட்டலில் 3 நாள் இருக்க வேண்டியதாய்போச்சு. பட்டதே போதுமென்றார்கள்.ஆசையில் மண் விழுந்த சோகத்தில் நான்.
***********

வழக்கம்போல் பதிவுலகில் இயங்க இன்னும் கொஞ்ச நாள் ஆகும். அடுத்து கண்டிப்பாக ரெஸ்டாரெண்ட் ரிவ்யூ தான். கேஸ்கேடை தொடர்ந்து நளாஸ் ஆப்பக் கடை, BBQ Nation என வரிசையாக வயிறெரிய வைக்கப் போகிறேன் என்பதை அளவில்லா ஆனந்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன். பொறுப்புகளை எல்லாம் நல்லபடியாக முடித்து திரும்பும் வரையில் கடைய பத்திரமா பார்த்துக்கோங்க. என் கடைக்கு வரலயேன்னு கவுத்துடாதீங்க.
***********

ரொம்ப முக்கியமாக பதிவர் சிங்கைநாதனின் உடல்நிலை குறித்த நர்சிம் மற்றும் கேவிஆரின் பதிவுகளை பார்த்தேன். என்னால் இயன்றதை செய்துவிட்டேன். அவர் விரைவில் பூரண நலன் அடைய என் பிரார்த்தனைகள்.

நீங்களும் உதவ நினைத்தால்

ICICI Account Details
Account Number: 612801076559
Name: M.KARUNANITHI
Branch: Tanjore

Singapore Account Details
Account Number: 130-42549-6
Name: Muthaiyan Karunanithi
Bank: DBS - POSB Savings

ராஜாவின் தொலைபேசி : +966 508296293
நண்பர் கருணாநிதி செல்பேசி எண் : +65 93856261