July 27, 2007

Poor girlஉம் Production issueவும்:



Training periodla நல்லா லூட்டி அடிச்சுட்டு (இந்த training periodகுன்னு தனியா ஒரு பதிவே போடலாம்) projectல join பண்ண time. First 2 months there was literally no work. சும்மா document அடிக்கறது, class attend பண்றது தான்
வேலையே. ஹையா training மாதிரியே இங்கேயும் நல்லா ob அடிக்கலாம்னு happya இருந்தேன்.என் ஆசைல லோடு லோடா மண்ணு அடிக்கப்போறாங்கனு அப்ப தெரியாது.ஒரு வழியா சின்ன வேலையெல்லாம் நல்லா??!!! செய்ய ஆரம்பிச்சதுக்கப்புறம் production issues எப்படி solve பண்ணனும்னு train பண்ண ஆரம்பிச்சாங்க. இங்கதான் சனியன் சம்மணம் போட்டு உக்காந்து சடை பின்ன ஆரம்பிச்சுது. இந்த production issues இருக்கே அது super star மாதிரி. எப்ப வரும் எப்படி வரும்னே தெரியாது. ஆனா வரக்கூடாத நேரத்துல correcta வந்துடும்.வரக்கூடாத நேரம்னு எதை சொல்றேன்னு தெரிஞ்சுக்கோங்க.
1. Correcta tea குடிக்கப் போகும்போது. அதுவும் நல்ல தலவலியா இருக்கும். தொண்டை வறண்டு போயிருக்கும். அப்போ வந்து சேரும்.

2. எங்க teamla மத்த ரெண்டு பேரும் (இருக்கறதே 3 பேருதான்) lunchukku போயிருக்கும்போது வந்து தொலைக்கும். பசி வேற கண்ண கட்டும். சரி போனவங்க திரும்பி வந்துட்டாங்கலேன்னு அவங்களை பார்த்துக்க சொன்னா "Why dont u finsih it off. let it be single handed"னு தத்துவம் பேசுவாங்க. பசி மயக்கத்துல client பேசறது கிணத்துக்குள்ளருந்து கேக்குற மாதிரி இருக்கும். இதே நான் lunchக்கு போயிருக்க timeல issue வர்ற chances ரொம்ப கம்மி.

3. ரொம்ப கஷ்டப்பட்டு plan பண்ணி treatக்கு போலாம்னு கெளம்பும்போது சொய்ய்ய்ங்குன்னு வந்து குதிக்கும். சரி சீக்கிரமா முடிச்சுட்டு கிளம்பலாம்னா அன்னைக்குன்னு பார்த்து இதுவரைக்கும் வந்திராத issueவா இருக்கும். நமக்கு தெரிஞ்ச issue solve பண்றதுக்கே time ஆகும். இதுல புது issue வந்தா கேக்கவா வேணும்??? Treat குடுக்கறவன் இதான் சாக்குனு "Its getting late ya. What shall we do?"ன்னு bita போடுவான். அவனுக்கு ஒரு தலை குறைஞ்சா செலவு கம்மியாகுமேன்னு ஒரு ஆசை. கஷ்டப்பட்டு இல்லாத மூளையை போட்டு கசக்கி ஒரு வழியா solve பண்ணிட்டு கிளம்பறதுக்குள்ளே lunchuக்கு போறதா இருந்தது diinerக்கு shift ஆகியிருக்கும்.

4. Friday வந்தாலே குஷியா இருக்கும். Most of the time weekend வீட்டுக்கு ஓடிடுவேன். மாசத்துக்கு ஒரு weekend தான் சென்னைல இருக்கறது. நான் வீட்டுக்கு போகனும்னா central போய் sub-urbanல (unit trains) போகணும். OMR to Central, evening time எவ்ளோ நேரம் ஆகும்னு நிறைய பேருக்குத் தெரியும். சரி கொஞ்சம் சீக்கிரம் கிளம்பலாம்னு தப்பித் தவறி கூட நினைக்கக்கூடாது. Issue முன்னாடியே கிளம்பி Correcta நான் கிளம்பற நேரத்துல வந்து சேர்ந்துடும். PL என்னை பார்த்து சொல்வார் "I can understand. But this issue can solved by u better than any of us" அப்படின்னு (இப்ப சொல்லுங்க. Appraisalனு வரும்போது ஆப்பு வச்சுடுங்க). எல்லத்தையும் சரி பண்ணிட்டு நான் central போறதுக்குள்ள 3 unit joot விட்ருக்கும். பேய் மாதிரி நடுராத்திரில போய் இறங்க வேண்டியதாய் இருக்கும்.

இந்த மாதிரி பல நாள் நடந்திருக்கு. Production issueகூட solve பண்ணிடலாம். Issue solvedனு ஒரு mail அடிக்கனும் பாருங்க அது இன்னும் கொடுமை. பார்த்து பார்த்து எழுதனும் (School examla composition கூட இவ்வளவு carefula எழுதிருக்க மாட்டேன்). Maintenance projectla இது ஒரு பெரிய தலவலி. இப்ப யார் அந்த கொடுமைய அனுபவிக்கிறாங்கன்னு தெரியல.

P.S: யார் அந்த poor girlனு யோசிக்கிறவங்களுக்கு, அது நாந்தேன்:)

July 19, 2007

முரண்பாடுகள்....


நம் வாழ்க்கையில் நிறைய ஏற்ற தாழ்வுகள் உண்டு. நாம் அவற்றைப்பற்றி அதிகம் அலட்டிக்கொள்வதில்லை. ஆனால் சமுதாயத்தில் இருக்கும் ஏற்ற தாழ்வுகள்??? சுமார் ஆறு மாதங்களுக்கு முன் நடந்த சம்பவம் சமீபத்தில் என் மனதில் நிழலாடியது. அன்று மனமும் உடலும் மிகவும் சோர்ந்து போனது போல் ஒரு உணர்வு. கடற்கரை சென்றால் பரவாயில்லை என்று தோணியதால் கணவருடன் besant nagar சென்றிருந்தேன். கடற்கரையில் சிறிது நேரம் காற்று வாங்கிவிட்டு (விலை என்னன்னு கேக்காதீங்க pls) dinner முடிச்சுட்டு வரலாம்னு plan. நடைபாதையை ஒட்டியுள்ள மேடையில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தோம். அப்போது "அக்கா பூ வாங்கிக்கோக்கா. 3 முழம் பத்து ரூவா தான்க்கா" என்று ஒரு சிறுமியின் குரல் கேட்டது. வேண்டாம் என்று மறுத்தவளிடம் "அக்கா தயவு செஞ்சு வாங்கிக்கோக்கா. நோட்டு வாங்க உதவியா இருக்கும்" என்றாள். எவ்வளவோ மறுத்துப்பார்த்தும் அவள் நகர்வதாயில்லை. சரி போகட்டும் என்று வாங்கினேன். (ஆனால் நிஜமாகவே அந்தப்பணம் நோட்டு வாங்க தான் செலவாகப்போகுதா என்ற சந்தேகத்தை தவிர்க்க முடியவில்லை). அந்தச் சிறுமி நகர்ந்ததும் ஒரு கார் வந்து நின்றது. அதிலிருந்து அம்மா, அப்பா, ஒரு சிறுமி இறங்கினார்கள். அந்த சிறுமிக்கும் பூக்காரச் சிறுமியின் வயதுதான் இருக்கும். இவள் அழுவதும் பெற்றோர் சமாதானம் செய்வதிலிருந்து, அவள் ஏதோ பொருளுக்கு ஆசைப்பட்டு அழுவது புரிந்தது. இருவருக்கும் உள்ள வேறுபாடுகள் என்னை யோசிக்க வைத்தன. இருவருக்கும் ஒரே வயதுதான் இருக்கும். ஒருத்தி அன்றாடம் ஜீவனம் நடத்த பூ விற்கிறாள். இன்னொருத்தியோ வசதி இருந்தும் இன்னும் வேண்டுமென அழுகிறாள். ஒரே வயதுடைய இருவருக்குள் ஏனிந்த ஏற்ற தாழ்வுகள்? ஒருத்திக்கு கிடைத்த வசதியும் வாய்ப்பும் இன்னொருத்திக்கு ஏன் கிடைக்கவில்லை? இதற்கு யார் காரணம்? வசதிகளை பெருக்கிக்கொள்ளத் தெரியாத பெற்றோர்களா? இல்லை வறுமைக்கோட்டிற்கு கீழ் இருக்கும் மக்கள் எண்ணிக்கை 35%லிருந்து 34.5%யாக குறைந்துள்ளது என வெகட்கமேயில்லாமல் அறிக்கை விடும் அரசியல்வாதிகளா? இந்த ஏற்றத்தாழ்வை எப்படி சரி செய்வது? இந்த கேள்விகள் எதற்கும் என்னிடம் பதில் இல்லை. வீடு திரும்பியபின் tv போட்டால் நாய்களுக்கான உணவு பற்றிய விளம்பரம் "We care for dogs" என்றது. எனக்கு அழுவதா சிரிப்பதா என்று தெரியவில்லை.

July 13, 2007

Feeling the fear….


I came to my moms place in April for my delivery. Most of you know how difficult it is to kill time during weekdays, that too in the mornings. All the tv channels are loaded with those stupid serials. At this time my husband helped me out by giving some books to boost up my self confidence. One among them was FEEL THE FEAR AND DO IT ANYWAY by Susan Jeffers. This book deals with concrete techniques to turn passivity into assertiveness. Susan teaches how to stop negative thinking patterns and reeducate our mind to think more positively. As I turned the pages, I realized that fear occupies us most of the time in our life. Fear creates difficulty making decisions, looking for a new job, leaving an unsatisfactory relationship, spending money and the list continues.

Susan says to develop the habit of positive thinking to drive away the fear. But these days society looks being positive in attitude as unrealistic. If you start observing, you can find many situations, where a barrier is put for your positive attitude (though it’s very rare) by your friends, parents, co-workers etc,

Fear holds us from making important decisions in our life. We always have “what if” phenomena occupying us during decision making. At an early age we are trained to do what other people want us to do. So when we start thinking about what we want from life fear occupies us. The decision we would make today might not be the decision we would make five years from now.

This book (atleast) makes us think about our fears and the techniques to handle them. Quite interesting philosophical guide.

July 3, 2007

முதல் பதிவு:

என் கிறுக்கலை படிக்க போகும் அனைவருக்கும் என் ஆழ்ந்த அனுதாபங்கள்:)
Actually நான் பாட்டுக்கும் சிவனேன்னு என் வேலைய பார்த்துகிட்ருந்தேன். நீ தான் நல்லா எழுதுவியே Blogla account create பண்ணேன்னு சும்மா இருந்தவளை சொறிஞ்ட்டு போய்ட்டான் என் தம்பி. அவன் அளவுக்கு இல்லைன்னாலும் ஓரு காலத்துல நான் கூட சுமாரா எழுதுவேன் (I'm not talking about composition & paragraph writing). School daysla கதை, கவிதைனு நிறைய எழுதிருக்கேன் (Not like the one in Chennai - 60028 movie). School முடிஞ்சவுடனே அந்த நல்ல பழக்கம் போயிடிச்சி. ஆனா அப்பப்போ உள்ள தூங்கிட்டு இருக்கிற சிங்கம் அரை கண்ணை தொறந்துபார்க்கும். அப்பல்லாம் busya இருந்ததனாலே ஒன்னும் பண்ண முடியல. அதான் இப்போ வெட்டியா இருக்கும்போது எதாவது கிறுக்கலாமேன்னு இங்க வந்து சேர்ந்துருக்கேன். இதப்பத்திதான் எழுதனும்னு இல்லாம எல்லா விஷயத்தயும் ஒரு கை பார்த்துடலாம்னு இருக்கேன். மேற்கொண்டு என்ன எழுதலாங்கறதப்பத்தி யோசிக்கணுங்கிறதால இப்போதைக்கு joot விடறேன். Next postla சந்திக்கிறேன். வர்ட்டா:)