December 19, 2008

ஷார்ட் பிரேக்

என் கிறுக்கல்களை (சகித்துக்)படித்துக்கொண்டிருக்கும் வலையுலக பெருமக்களே உங்களுக்கெல்லாம் ஒர் நற்செய்தி. ஆமா அதேதான்.

கொஞ்ச நாளைக்கு என் மொக்கைகளிலிருந்து உங்களுக்கு ஜாமீன் தரலாம்னு இருக்கேன். நோட் தி பாயிண்ட் கொஞ்ச நாள்தான். கொஞ்ச நாளாவே கொஞ்சம் depressed feel பண்றேன் (காரணத்தை அப்புறமா பதிவிடுறேன்). என்னை refresh பண்ணிக்கறதுக்காக ரகுவின் ஐடியாப்படி ஊட்டில ஒரு நாலு நாள் பொறுக்கலாம்னு இருக்கேன். அதுவுமில்லாம இப்பதான் பாண்டிச்சேரிலருந்து வந்ததால வீடு அலங்கோலமா (ரகுவின் உபயம்) இருக்கு. அத வேற சரி பண்ணனும். வர்ற புதன் இரவு பயணம் ஆரம்பமாகுது.

So கொஞ்ச நாள் மீ த எஸ்கேப் from பதிவுலகம். நடுவில் நேரம் இருந்தால் எல்லார் பதிவிலும் ஆஜராரேன். இப்போதைக்கு அவ்ளோதான்.

Will be back with a bang after 2 weeks:)

10 comments:

Arun Kumar said...

ஊட்டியில் குளிர் அதிகமாக இருக்காம்.
அதோட நீங்க ஊட்டி போகும் நேரத்தில் பெங்களூர் -> ஊட்டி சைக்கிள் பயணத்தில் ஒரு குழு வராங்க. என் நண்பர்கள் பல பேரு பெங்களூரில இருந்து ஊட்டிக்கு சைக்கிள் ஓட்டி வராங்க.. அந்த குழு உங்கள் கண்ணில் பட்டால் மறக்காம all the best சொல்லுங்க :)

மீண்டும் புத்துணர்ச்சியோட வர வாழ்த்துக்கள்,,புது வருட வாழ்த்துக்கள்.

Vidhya Chandrasekaran said...

குளிர் அதிகம்னு தெரியும். இப்ப ஒரே கவலை ஜூனியர் எப்படி adapt பண்ணிப்பாருன்னு தான்.
கண்டிப்பா அவங்களை பார்த்தா சொல்றேன்.
உங்களுக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்:)

விஜய் ஆனந்த் said...

:-)))...

depressions எல்லாத்தையும் முழுங்கி ஏப்பம் விட்டு்ட்டு, நல்லபடியா திரும்பி வாங்க!!!

தாரணி பிரியா said...

ஹை எங்க ஊர் பக்கம் வர போறீங்களா வாங்க வாங்க உங்களுக்கு இனிய வரவேற்புகள்.

ஊட்டில இப்ப செம குளிர்தான் வித்யா ஆனாலும் ஸ்வெட்டர் எல்லாம் போட்டு அட்ஜஸ்ட் செஞ்சுக்கலாம். :) வாங்க.

நீங்க ஃப்ரெஷ் ஆகி புதிய ப்ரெஷ்னா பதிவுகள் போட வாழ்த்துக்கள்

எல்லாருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்

சங்கரராம் said...

பயணம் சிறக்க வாழ்த்துக்கள்

Anonymous said...

நல்லா எஞ்சாய் பண்ணீட்டு வாங்க. எதையும் மனசுல போட்டு குழப்பாம இருங்க

கார்க்கிபவா said...

சூப்பர்.. ப்ரேக்க சொல்லல.. டூர சொன்னேன்.. ஆனா ஒரு டவுட்.. புதன் கிழமை நைட் கிளம்பினா நியூ இயர் பய‌ணத்தின் போதா?

ஜூனியர பத்திரமா பார்த்துக்கோங்க..

அமிர்தவர்ஷினி அம்மா said...

Enjoy with Junior
Happy Holidays
Take care.

பிரியமுடன்... said...

Welcome Back ! ஊட்டியெல்லாம் எப்படியிருந்தது? மலை..மலையா இருந்தது, மரங்கள் இருந்தது, பசுமையா இருந்தது, குதிரை இருந்தது, ஏரி இருந்தது, குளிர் இருந்தது, குரங்கு இருந்தது என்று எல்லாம் சொல்லி வெறுப்பேற்றாமல், உங்கள் பயண்த்தில் அமைந்த சுவையான அனுபவங்களை(சென்சார் செய்து) மற்றும் இனிய நடவடிக்கைகளையும் சொல்லி எங்களுக்கு இலவசமாக ஊட்டியை சுற்றி காட்டுங்கள். பயணம் பாதுகாப்பாய் அமைந்திருக்கும் என நம்புகிறேன்.. வாழ்த்துக்கள்! நீங்கள் கிளம்பியவுடனே போடப்பட்ட பதிவு என்பதை கருத்தில் கொள்ளவும்.

நட்புடன் ஜமால் said...

விடுமுறை காலம் ...

கொண்டாடுங்கள்.

புகைப்படங்களுடன் வந்து பதியுங்கள்.

இயற்கை காட்சிகளை.