January 14, 2009

படிக்காதவன்

வில்லு போவதாய் தான் இருந்தது. கடைசி நேரத்தில் வேண்டாம்ன்னுட்டு படிக்காதவன் போனோம். கொஞ்சம் தயக்கத்தோட தான் போனேன். ஆனா பொல்லாதவன்ல வர்ற மாதிரி தனக்கு இதுதான் ஒத்து வரும்ன்னு புரிஞ்சு பண்ணிருக்கார் தனுஷ்.அண்ணன்கள், தம்பி, தங்கை, அண்ணிகள் முதல்கொண்டு எல்லாரும் மெத்த படித்த குடும்பத்தில் படிக்காதவனாய் வருகிறார் தனுஷ். பிரெண்ட்ஸ் கொடுக்கிற ஐடியாக்களின் மூலம் தமன்னாவை லவ்வுகிறார். பின்னர் வரும் பிரச்சனைகளே படம். கடைசியில் சுபம். கதை என்று பெரிதாக ஏதுவுமில்லை. ஆனால் திரைக்கதை சூப்பர். பின்பாதியில் கொஞ்சம் திராபையாக இழுக்கிறார்கள். தனுஷ், விவேக் ரெண்டு பேருமே நல்லா ஸ்கோர் பண்ணுகிறார்கள். தமன்னா ஹூம். ஹோம் வொர்க் செய்யுங்க மேடம். கல்லூரில நல்லாருந்தாங்க. காமெடி, ஆக்ஷன் என நல்ல பேமிலி எண்டர்டெய்னர். ஒரு தடவை பார்க்கலாம்.டெயில் பீஸ்: டைரக்டர் சொல்றது மட்டும் செய்யறதுதான் வேலைக்காகும்ன்னு தனுஷ் புரிஞ்சுகிட்டாரு. சிம்புக்கு இது எப்ப விளங்கப்போதோ தெரியல. அதுவரைக்கும் தமிழ்நாட்டு மக்களுக்கு ஏழரை சனி தான்.

18 comments:

முரளிகண்ணன் said...

அப்போ நம்பி போலாம்கிறீங்க?

குடுகுடுப்பை said...
This comment has been removed by the author.
ஜீவா said...

தமன்னா ரொம்ப அழகுங்க :)

சின்னப் பையன் said...

//ஒரு தடவை பார்க்கலாம்//

எங்கள வெச்சி காமெடி கீமெடி பண்ணலியே????

குடுகுடுப்பை said...

படிக்காதவன் படிச்சிட்டி இங்கே வாங்க வில்லுக்கு
குடுகுடுப்பை: வில்லு - ஒரு முன் பழமைத்துவ காவியம்.

அது சரி(18185106603874041862) said...

தனுஷோட திருடா திருடி, யாரடி நீ மோகினி, திருவிளையாடல், பொல்லாதவன், புதுப் பேட்டை எல்லாம் பார்க்கற மாதிரி இருந்துச்சு...அதனால நீங்க சொல்றத நம்பலாம்னு நினைக்கிறேன்..:0)))

சிம்புவும் அவரோட தகுதிக்கு ஏத்த மாதிரி அடக்கமா நடிக்க கத்துக்கிட்டா ஒரு வேளை ஜெயிக்கலாம்...ஏதோ பெரிய ஷாருக்கான், ரஜினி, அமிதாப்னு நெனச்சிக்கிட்டு அவர் செய்ற தொல்லை....ஸ்ஸ்ஸ்ஸ் யப்பா...முடியல சாமி!

நட்புடன் ஜமால் said...

\\வில்லு போவதாய் தான் இருந்தது\\

ஜஸ்ட் எஸ்கேப்பு ...

நட்புடன் ஜமால் said...

\\டெயில் பீஸ்: டைரக்டர் சொல்றது மட்டும் செய்யறதுதான் வேலைக்காகும்ன்னு தனுஷ் புரிஞ்சுகிட்டாரு. சிம்புக்கு இது எப்ப விளங்கப்போதோ தெரியல. அதுவரைக்கும் தமிழ்நாட்டு மக்களுக்கு ஏழரை சனி தான்.\\

சரியாக(ச்) சொன்னீர்கள் ...

நட்புடன் ஜமால் said...

ஜூனியர் நலமா ...

Arun Kumar said...

இப்பதான் நிம்மதியா இருக்கு :)
//ஒரு தடவை பார்க்கலாம்//

தியேட்டரிலா அல்லது டிவிடியிலா என்பதை தயவு செய்து கூறவும் :)

☀நான் ஆதவன்☀ said...

//நட்புடன் ஜமால் said...

\\வில்லு போவதாய் தான் இருந்தது\\

ஜஸ்ட் எஸ்கேப்பு ...//

ரிப்பீட்டேய்.......

VIKNESHWARAN ADAKKALAM said...

//டெயில் பீஸ்: டைரக்டர் சொல்றது மட்டும் செய்யறதுதான் வேலைக்காகும்ன்னு தனுஷ் புரிஞ்சுகிட்டாரு. சிம்புக்கு இது எப்ப விளங்கப்போதோ தெரியல.//
:)))

Vidhya Chandrasekaran said...

முரளிக்கண்ணன்
லாஜிக்கெல்லாம் பார்க்காம ஒரு பொழுதுபோக்கு படமா பார்க்கலாம்.
****************
Gg தமன்னா அழகில்ல நான் சொல்லவே இல்லீங்க. நடிப்பு கொஞ்சமாவது வரணுமில்ல:)
******************
ச்சின்னப்ப்பையன் - சிலம்பாட்டம் பார்த்த எனக்கு இந்த படம் நல்லாதான் இருந்தது.
**********

Vidhya Chandrasekaran said...

குடுகுடுப்பை
நல்லவேளை ரங்கமணி காப்பாத்திட்டாரு. வில்லுக்கு தான் டிக்கெட் வாங்க சொல்லிருந்தோம். கடைசி நேரத்துல ரங்கமணி படிக்காதவன் போலாம்ன்னு சொன்னதால பிழைச்சோம்:)
*************
அது சரி
நீங்க சொல்றது 100% உண்மை.
*************
ஜமால்
ஜூனியர் is recovering:)
************
அருண்
தியேட்டரில் ஒருதடவை பார்க்கலாம்.
******
நான் ஆதவன்:))

நன்றி விக்னேஷ்வரன்.

narsim said...

டெயில் பீஸ்..பீஸ்..

ஷாஜி said...

//வில்லு போவதாய் தான் இருந்தது. கடைசி நேரத்தில் வேண்டாம்ன்னுட்டு படிக்காதவன் போனோம்.//

--யப்பா நீயும் உன் குடும்பமும் போன ஜென்மத்துல செய்த புண்ணியம். Great Escape மச்சி...

A N A N T H E N said...

//சிம்புக்கு இது எப்ப விளங்கப்போதோ தெரியல.//
முதல்ல தல சரியா இருந்தா தானே வால் சரியா இருக்குறதுக்கு... அப்பா வழிய பின் தொடருறாரு போல

பி.கு: தலன்னு சொன்னது அஜித்ன்னு நீங்க நினைச்சா நான் பொறுப்பு இல்ல... அவர் என் தல கிடையாது... என் தல என் கழுத்துக்கு மேல இருக்குது...

அமிர்தவர்ஷினி அம்மா said...

சிம்புக்கு இது எப்ப விளங்கப்போதோ தெரியல. அதுவரைக்கும் தமிழ்நாட்டு மக்களுக்கு ஏழரை சனி தான்.

ஹா ஹா ஹாஅ