April 2, 2009

யூத்புல்விகடனில் எனது பதிவு

ஹே எல்லாரும் பாருங்கப்பு நானும் ரவுடிதான்:) வெள்ள நிவாரணம் பற்றிய என்னுடைய பதிவுக்கான சுட்டி யூத்புல் விகடனில் கொடுக்கப்பட்டுள்ளது. ப்பூ இதெல்லாம் ஒரு மேட்டரா எனக் கூறுபவர்களுக்கு என்னுடைய எழுத்துக்கும் அங்கீகாராம் கிடைத்திருக்கிறதே. என்னைப் பொறுத்த மட்டில் அது பெரிய விஷயம் தான். தகவல் தந்த உழவனுக்கு மிக்க நன்றி.

பதிவில் நான் கூறியிருந்த தீர்வுகளை செயல்படுத்திப் பார்க்க விழைகிறேன். SK கூறியதுபோல் மக்கும் குப்பை மக்காத குப்பை என தரம் பிரிப்பதால் நிலங்கள் குப்பை மேடாவதை தடுக்க முடியுமென நினைக்கிறேன். இதற்கான முயற்சிகளை எப்படி எங்கிருந்து ஆரம்பிப்பதென்று தெரியவில்லை. அடுத்த பருவ மழைக்குள் ஒரு சிறிய இடத்தையாவது சீரமைக்கவேண்டுமென்பது என் ஆசை. விவரம் தெரிந்தவர்கள் யாரேனும் உதவுங்களேன். ஏதோ நம்மால் முடிந்தளவு பூமியின் அழிவை தள்ளிப்போடுவோமே.

29 comments:

சந்தனமுல்லை said...

:-) வாழ்த்துகள் வித்யா!

முரளிகண்ணன் said...

wishes to achieve more (No tamil fond sorry)

pudugaithendral said...

வாழ்த்துக்கள். ரொம்ப சந்தோஷமா இருக்கு. :)))))

அ.மு.செய்யது said...

வாழ்த்துக்கள் வித்யா...

எங்கயோ போயிட்டேள் !!!!!

Vidhya Chandrasekaran said...

நன்றி முல்லை.

நன்றி முரளி.

நன்றி சிஸ்டர்.

நன்றி அ.மு.செய்யது:)

கார்க்கிபவா said...
This comment has been removed by the author.
மணிகண்டன் said...

வாழ்த்துகள் வித்யா! எங்க / என்ன ட்ரீட் ?

Vijay said...

அதை அப்படியே ஸ்கேன் செய்து போட்டிருக்கலாமே :-)

Vijay said...

வாழ்த்துக்கள் சொல்ல மறந்துட்டேனே, வாழ்த்துக்கள்!!!!

ஆதவா said...

உங்களது நிவா'ரணம்' பதிவைப் படித்தேன்.. நல்ல அலசலான பதிவு!. மழை என்பது இறைவன் நமக்குக் கொடுக்கும் திட்டம். அதை சேமிப்பதும் தூக்கி எறிந்து தூற்றுவதும் நாமே1!!!

மழை, கவிதை எழுத மட்டும்தான் இப்பொழுதெல்லாம் சேமிக்கப்படுகிறது!!!! (எங்கள் வீட்டில் மழை சேமிப்பு சிறிதளவேனும் உண்டு!!!)

வாழ்த்துக்கள், இளமை விகடனில் பவனி வந்தமைக்கு!!

Cable சங்கர் said...

வாழ்த்துக்கள்..வித்யா

Vidhya Chandrasekaran said...

நன்றி ஜமால்.

நன்றி மணிகண்டன். இன்னொரு கவிதை எழுதறேன். அதான் ட்ரீட்:)

நன்றி விஜய்.

Vidhya Chandrasekaran said...

நன்றி ஆதவா.

நன்றி சங்கர்ஜி:)

நாகை சிவா said...

எழுத்தாளர் வித்யா வாழ்க! வாழ்க!

போன பதிவில் போட்ட ஒட்டலில் வாழ்க கோஷம் எழுப்புவர்களுக்கு எல்லாம் டிரீட் அவங்க செலவுலே!

வாய்ப்பை தவற விடாதீர்! :)

எம்.எம்.அப்துல்லா said...

ஹையா...நானே வாங்கினமேரி சந்தோஷமாகீது சிஸ் :)

Vidhya Chandrasekaran said...

சிவா என்னை வெச்சு காமெடி எதுவும் பண்ணலயே? வேணும்னா ஒரு டீயும் பட்டர் பிஸ்கட்டும் வாங்கித் தரேன். ஏதோ ஒரு ஏழை ஸாப்ட்வேர் இஞ்சினியரின் மனைவியால் முடிந்தது.

நன்றி அண்ணே.

தாரணி பிரியா said...

வாழ்த்துக்கள் வித்யா,

நான் இப்போதான் அந்த பதிவை படிச்சேன். பிரச்சினைன்னு புலம்பிகிட்டு மட்டும் இருக்காம அதுக்கான தீர்வும் சொல்லி இருக்கிங்களே. நிச்சயம் இது பெரிய விசயம்தான். இன்னும் நிறைய படைப்புகள் பெரிய விகடன்ல வர வாழ்த்துக்கள்

நாகை சிவா said...

//வேணும்னா ஒரு டீயும் பட்டர் பிஸ்கட்டும் வாங்கித் தரேன். //

நல்ல வேளை டீ போட்டு தரேன் என்று சொல்லாம வாங்கி தரேன் என்று சொன்னீங்க பாருங்க... அது சூப்பர். எனக்கு பிஸ்கெட் பிடிக்காது. ஒரு பிட்ஸா (4 சீசன்) ஒகே.

//ஏதோ ஒரு ஏழை ஸாப்ட்வேர் இஞ்சினியரின் மனைவியால் முடிந்தது.//

இது எல்லாம் ஒவரா இல்ல? நீங்க போற ஒவ்வொரு ஒட்டலிலும் நீங்க சாப்பிடும் போது சிந்துவதை சாப்பிட்டே ஒரு ஊரே வாழுதாம். அப்படிப்பட்ட நீங்க இப்படி சொல்லாமா? :))))

Arun Kumar said...

வாழ்த்துக்கள் வித்யா :)
கண்டிப்பாக இன்ன்மும் சில நாட்களில் விகடன் வரவேற்பரையில் உங்கள் பதிவு வரும் :)

//சிவா என்னை வெச்சு காமெடி எதுவும் பண்ணலயே? வேணும்னா ஒரு டீயும் பட்டர் பிஸ்கட்டும் வாங்கித் தரேன். ஏதோ ஒரு ஏழை ஸாப்ட்வேர் இஞ்சினியரின் மனைவியால் முடிந்தது.//

பராவாயில்லை சோழா இல்ல லீ மெரிடியன்ல டீ பிஸ்கட் வாங்கி கொடுங்க

தமிழ் அமுதன் said...

வாழ்த்துக்கள்!!! முன்னாடியே வந்திருக்கணும்!!!

narsim said...

வாழ்த்துக்கள்

T.V.ராதாகிருஷ்ணன் said...

வாழ்த்துக்கள் வித்யா...

Deepa said...

வாழ்த்துக்கள் வித்யா.
That post of yours deserves more!

SK said...

என்னோட பதில் விரைவில்... வாழ்த்துக்கள் வித்யா.

கடைக்குட்டி said...

வாழ்த்துக்கள்!! நம்ப கட பக்கமும் கொஞ்சம் வாங்கக்கா!!!

விக்னேஷ்வரி said...

Congratulations Vidhya. Go ahead with success.

Vidhya Chandrasekaran said...

நன்றி தாரணி பிரியா.

ஹி ஹி அண்ணன் சிவா வாழ்க:)

நன்றி அருண்.

நன்றி ஜீவன்.

நன்றி நர்சிம்.

Vidhya Chandrasekaran said...

நன்றி ராதாகிருஷ்ணன்.

வெயிட்டிங்க் SK.

நன்றி கடைக்குட்டி.

நன்றி விக்னேஷ்வரி.

"உழவன்" "Uzhavan" said...

உங்கள் பொதுநலத் தொண்டு சிறக்க வாழ்த்துக்கள். நாங்களும் உங்களுக்கு உதவத் தயார்.