April 6, 2009

கர்ணனின் மனைவி பேர் என்ன?

ஒரே நாள்ல ரெண்டு படத்த பத்தி விமர்சனம் போட்டிருந்தேன். யார் கண்ணு பட்டுச்சோ தெரியல. வெண்ணிலா கபடிகுழுவிற்க்கு பிறகு படம் பார்க்கும் வாய்ப்பே கிடைக்கவில்லை (அலுக்க அலுக்க பயணங்கள், அசரடித்த ஆணிகளின் புண்ணியம்.). ரொம்ப நாளாக யாவரும் நலம், அருந்ததீ பார்க்கனும்ங்கற ஆவல் போன வெள்ளி தான் நிறைவேறிச்சு. அதுவும் யாவரும் நலம் மட்டும் தான் பார்க்க முடிந்தது. வீணாப் போன மீனாவும், பாழாப்போன பிரசாந்தும் நடிச்ச???!!!! ஷாக் படத்தைப் பார்த்து நொந்து போயிருந்த எனக்கு தமிழில் இப்படியோர் த்ரில்லர். விறுவிறுப்பான திரைக்கதை. பார்ட் இரண்டுக்கு வெயிட்டிங் விக்ரம் சார்.
*******************

யாவரும் நலம் பார்த்தது அன்னை அபிராமி திரையரங்கில். இதுக்கு முன்னாடி அபிராமி மாலில் ஆதி என்ற சூரமொக்கை படத்துக்கு (ஸாரி கார்க்கி) போனேன். அன்னை அபிராமியை சைனீஸ் தீமில் வடிவமைத்திருக்கிறார்கள். தியேட்டர் சூப்பராக இருந்தது. ஆனால் பயங்கர கும்பல். ரொம்பவே குறுகலான பாதைகள். கொஞ்சம் கவனிங்கப்பா. எமர்ஜென்ஸி காலங்களில் ரொம்ப கஷ்டம்.
********************

அப்பாவிற்க்கு உடல்நிலை சரியில்லாததால் மெடிக்கல் லீவில் இருக்கிறார். (வேற வழியே இல்லாமல்) டிவி பார்த்து செம எரிச்சலில் இருக்கார். போன வாரம் அங்கு சென்றிருந்தபோது ராஜ் டிவியில் கர்ணன் படம் போட்டிருந்தார்கள். முக்கால்வாசி படம் முடிந்த பின்னர்தான் பார்க்க ஆரம்பித்தோம். "உள்ளத்தில் உயர்ந்த உள்ளம்" பாட்டு முடியும் வரை சேனல் மாற்றக்கூடாது என அம்மா உத்தரவிட்டார்கள். தீடிரென்று கர்ணனின் மனைவி பெயர் அறியும் ஆவல் ஏற்படவே
"அப்பா கர்ணனின் மனைவி பேரென்ன?"
"தேவிகா"
"அய்யோ. நான் நடிகை பேரை கேக்கலை. நிஜமா கர்ணன் மனைவி பேரக் கேட்டேன்."
"Mrs. கர்ணன்"
"கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்"
*************

நண்பன் ஒருவனை ரொம்ப வருடங்கள் கழித்து நேரில் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. ரகுவும் உடன்வந்திருந்தார். என் கல்யாணத்துக்கு அவன் வரவில்லை. ரகுவிடம் பேசிக்கொண்டிந்தபோது இதைக் கூறி வருத்தப்பட்டான். உடனே ரகு "நானே போயிருந்திருக்கக்கூடாது. விதி யாரை விட்டது?". அதற்க்குப் பிறகு என்ன நடந்திருக்குமென்பதை நான் சொல்லத்தேவையில்லை.
***********

வர வர இந்த குமுதம் பண்ற ரப்சருக்கு அளவே இல்லாம போச்சு. அத திங்காத, இத திங்காதன்னு வாரம் ஒரு அயிட்டத்த போட்டு வெறுப்பேத்தறாங்க. விட்டா சாப்பிடவே கூடாது. சாப்பிட்டா வாய்ல கேன்சர் வரும்ன்னு சொல்லுவாங்க போலிருக்கு. நடத்துங்கப்பு நடத்துங்க.
***********

வரும் நாட்களில் இரண்டு தொடர் பதிவுகளை எழுத ஆரம்பிக்கலாமென்றிருக்கேன் (இருக்கிற இம்சைல இது வேறயான்னு நீங்க சொல்றது கேக்குது). பயப்படாதீங்க அதுவும் ஒரு விதமான மொக்கை தான். மொக்கையைத் தவிர யாமறியோம் பராபரமே.

50 comments:

Vijay said...

Me the First ;-)

Vijay said...

\\அப்பாவிற்க்கு உடல்நிலை சரியில்லாததால் மெடிக்கல் லீவில் இருக்கிறார். (வேற வழியே இல்லாமல்) டிவி பார்த்து செம எரிச்சலில் இருக்கார். \\

உடல் நிலை சரியில்லாமல் இருக்கும் போது டி.வி பார்க்காமல் இருப்பது நல்லது. அதிலும் மெகா சீரியல்கள் பார்க்காமலிருப்பது இன்னும் நலம். சீக்கிரம் நலமடைய வேண்டுகிறேன்.

\\"உள்ளத்தில் உயர்ந்த உள்ளம்" \\
அது உள்ளத்தில் நல்ல உள்ளம் :-)

\\நிஜமா கர்ணன் மனைவி பேரக் கேட்டேன்\\
எந்த மனைவியின் பெயரைக் கேட்கிறீர்கள்?

\\ உடனே ரகு "நானே போயிருந்திருக்கக்கூடாது. விதி யாரை விட்டது?"\\
ரகு உண்மையை உணர்ந்தவர். என்ன செய்ய எல்லாரும் காலம் கழிந்து தான் உண்மையை உணர்கிறார்கள் :-)


\\மொக்கையைத் தவிர யாமறியோம் பராபரமே\\
Same Blood

Deepa said...

//உடனே ரகு "நானே போயிருந்திருக்கக்கூடாது. விதி யாரை விட்டது?".//

:-))))))))))))))))))))
(இதை எத்தனை பேர் கோட் செய்யப் போகிறார்கள் பாருங்கள்!)

Classic!

Deepa said...

//வர வர இந்த குமுதம் பண்ற ரப்சருக்கு அளவே இல்லாம போச்சு. அத திங்காத, இத திங்காதன்னு வாரம் ஒரு அயிட்டத்த போட்டு வெறுப்பேத்தறாங்க.//

REPEAT!

Vidhya Chandrasekaran said...

வருகைக்கும் விரிவான?? அலசலுக்கும் நன்றி விஜய்.

வாங்க தீபா. இதுக்கு பேர் தான் சொந்த செலவுல சூனியம் வெச்சிக்கறது:)

நட்புடன் ஜமால் said...

ஆமா! என்ன பேரு ...

யார்ன்னா சொல்லுங்கோ!

கார்க்கிபவா said...

/ஆதி என்ற சூரமொக்கை படத்துக்கு (ஸாரி கார்க்கி) போனேன்//

உண்மைதனக்க. அது அதிபயங்கர மொக்கை(ஸாரி விஜய்)

எம்.எம்.அப்துல்லா said...

ரகுவுக்கு இன்னோரு பேரு கர்ணனா இருந்தா எனக்கு பேர் தெரியும்!!!

narsim said...

கல்யாணத்துக்குப் போற மேட்டர் சூப்பர்

எம்.எம்.அப்துல்லா said...

joke apart

கர்ணனின் மனைவி பெயர் விருஷாலி.

எம்.எம்.அப்துல்லா said...

நான் சொன்னது முதல் மனைவி பேரு. இரண்டாம் மனைவி பேரைச் சொல்பவர்கள் ஆண்களாக இருந்தால் பதிவர் சந்திப்பில் ஸ்பெஷல் டிரீட், பெண்களாய் இருந்தால் அவர்கள் கணவருக்கு ஸ்பெஷல் டிரீட்.(கல்யாணம் ஆகலன்னா அவங்க அண்ணன் தம்பிக்கு )

:))

Vidhya Chandrasekaran said...

வாங்க ஜமால் அண்ணே. அப்துல்லா அண்ணே சொல்லிட்டாரு பாருங்க:)

உண்மைய ஒத்துகிட்ட கார்க்கி வாழ்க:)

ஹி ஹி அவர் கர்ணன் தானுங்கோ. ஆனா சிவாஜி இல்ல:)

நன்றி நர்சிம்.

Vidhya Chandrasekaran said...

என்னாது கர்ணனுக்கு ரெண்டு பொண்டாட்டியா:)

சீமாச்சு.. said...

//"அப்பா கர்ணனின் மனைவி பேரென்ன?"
//

கர்ணன் எழுபது ஆண்டுகள் உயிர் வாழ்ந்தவன்.அவனது வளர்ப்புப் பெற்றோரான அதிரதனும் ராதையும் அவனுக்கு சூட்டிய பெயர்- வசுக்ஷேனன். கர்ணனுக்கு மனைவியல்ல; மனைவியருண்டு.இருவர்.வ்ருஷாலி,சுப்ரியை.ஒன்றல்ல மூன்று புத்திரர்கள்-வ்ருஷாலி யின் மைந்தர்களான வ்ருஷசேனன்,வ்ருஷகேதன்.சுப்ரியையின் புதல்வன் சுசேனன்.


அதில் கர்ணன் படத்தில் வருவது வ்ருஷாலி என நம்பலாம்.

மேலதிக விவரங்கள் இந்தச் சுட்டியில் உள்ளன. கண்டுபிடிச்சது நானில்லை.
சுகுமாரன் என்று ஒருத்தர். நான் வெறும் cut and paste மட்டுமே.

http://www.thinnai.com/?module=displaystory&story_id=60407221&format=print

நட்புடன் ஜமால் said...

\\எம்.எம்.அப்துல்லா said...

நான் சொன்னது முதல் மனைவி பேரு. இரண்டாம் மனைவி பேரைச் சொல்பவர்கள் ஆண்களாக இருந்தால் பதிவர் சந்திப்பில் ஸ்பெஷல் டிரீட், பெண்களாய் இருந்தால் அவர்கள் கணவருக்கு ஸ்பெஷல் டிரீட்.(கல்யாணம் ஆகலன்னா அவங்க அண்ணன் தம்பிக்கு )\\

பின்னூட்டத்திலேயே!

விடு-கதை.

எம்.எம்.அப்துல்லா said...

சீமாச்சு அண்ணே சென்னை வரும்போது சொல்லுங்க, டிரீட் வச்சுருவோம் :)

சீமாச்சு.. said...

//சீமாச்சு அண்ணே சென்னை வரும்போது சொல்லுங்க, டிரீட் வச்சுருவோம் :)

//

அப்துல்லா தம்பி, நன்றி.. அவசியம் ட்ரீட்டுக்கு வந்துவிடுவேன்... மறக்க மாட்டேன் !!
அனேகமா, ஜூலை மாசம் வருவேன்.

அன்புடன்
சீமாச்சு..

அமிர்தவர்ஷினி அம்மா said...

நன்றி வித்யா

கர்ணணின் மனைவி(கள்) பெயரை தெரியவெச்சதுக்கு.

அப்ப இருக்குற ஆண்களுக்கு ரொம்ப தைரியம் போல இருக்கு //

பாருங்களேன் மூணு கல்யாணமெல்லாம் பண்ணியிருக்காங்க.

உங்க ஆத்துக்காரர் சொன்னது....
ஒன்னும் சொல்றதிக்கில்லீங்க.

Vidhya Chandrasekaran said...

சீமாச்சு கட் பேஸ்ட் பண்றதுக்குக்கூட பொறுமை வேணும் சார். நிறைய தகவல்கள் நன்றி.

ஜமால் அண்ணே விடை தெரிஞ்சுடுச்சா.

சந்தனமுல்லை said...

//"Mrs. கர்ணன்//

LOL!

Vidhya Chandrasekaran said...

அப்துல்லா அண்ணே. தெரிய வெச்சதுக்காக எனக்கும் ட்ரீட்:)

ஆமாம் அமித்து அம்மா. எல்லாருக்கும் ரொம்பவே தைரியம்:)

Vidhya Chandrasekaran said...

வாங்க முல்லை:)

Anonymous said...

//உடனே ரகு "நானே போயிருந்திருக்கக்கூடாது. விதி யாரை விட்டது?".//

நானும் இப்ப அதன் நினைக்கறேன், ரகுக்கு வந்த யோசனை எனக்கு வரலியே ??

நாகை சிவா said...

யாவரும் நலம் இனிமேல் தான் பாக்கனும்!

தீ பாருங்க, செமையா சுடும் ;)

அபிராமி ல எனக்கு பிடிக்காத விசயமும் அது தான். சந்து பொந்துக்குள் போற மாதிரி ஒரு பீல் வரும்!

உங்க அப்பா சூப்பருங்க ;) செம டைமிங்க் :)

எம்.எம்.அப்துல்லா said...

//அப்ப இருக்குற ஆண்களுக்கு ரொம்ப தைரியம் போல இருக்கு.பாருங்களேன் மூணு கல்யாணமெல்லாம் பண்ணியிருக்காங்க.
//


அப்ப இருந்த ஆண்கள் மிகவும் நல்லவர்கள், லீகலா பண்ணுனாங்க

:)

எம்.எம்.அப்துல்லா said...

// வித்யா said...
அப்துல்லா அண்ணே. தெரிய வெச்சதுக்காக எனக்கும் ட்ரீட்:)


//

முதல்ல போன் பண்ணு...அப்புறம் சொல்றேன்

;)

நட்புடன் ஜமால் said...

நிறைய விடைகள் தெரியுது.

Truth said...

oo appo karnanukku kalyanam aacha? appadi mahabarathathula kaatina maadhiri nyabagame illa.

thodar padhivugal. ezhudunga. :-)

G.Ragavan said...

கர்ணன் படத்துல தேவிகாவோட பேரு சுபாங்கி.

அப்பச் சுபாங்கி மூனாவது மனைவி போல!!!

மணிகண்டன் said...

ஜி ரா,

வ்ருஷாலிக்கு இன்னொரு பெரும் உண்டு. அது தான் சுபாங்கி. (பாட்சா படத்துல ரஜினி சொல்லுவாரு இல்ல. அது மாதிரி !)

மணிகண்டன் said...

***
இருக்கிற இம்சைல இது வேறயான்னு நீங்க சொல்றது கேக்குது
***

கேக்குது தான. அப்புறம் ஏன் ?

மணிகண்டன் said...

***
உடனே ரகு "நானே போயிருந்திருக்கக்கூடாது. விதி யாரை விட்டது?"
***

தைரியமானவர் போல.

சென்ஷி said...

ஹா ஹா ஹா

செம்ம கலக்கல் பதிவு :-)

SK said...

உண்மையை உரக்க சொன்ன ரகு வாழ்க வாழ்க :)

கர்ணன் மேட்டர் அருமை :)

Vidhya Chandrasekaran said...

வாங்க மயில்.

கண்டிப்பா பாருங்க சிவா. தீ படம் ட்ரெய்லரே பார்க்க முடியல:(

அண்ணே லீகலோ இல்லீகலோ தப்பு தப்பு தானே. அப்புறம் நீங்க போன் எடுங்க:)

Vidhya Chandrasekaran said...

தெளிவா இருக்கீங்க truth:)

வருகைக்கு நன்றி ராகவன்.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி மணிகண்டன்.

நன்றி சென்ஷி.

நன்றி SK.

Anonymous said...

//உடனே ரகு "நானே போயிருந்திருக்கக்கூடாது. விதி யாரை விட்டது?". அதற்க்குப் பிறகு என்ன நடந்திருக்குமென்பதை நான் சொல்லத்தேவையில்லை.//

எல்லா ரங்கமணிகளும் அப்படித்தான். அவங்க எல்லாரும் அப்பாவிங்கன்னு நம்பணுமாம்

அ.மு.செய்யது said...

//அய்யோ. நான் நடிகை பேரை கேக்கலை. நிஜமா கர்ணன் மனைவி பேரக் கேட்டேன்."
"Mrs. கர்ணன்"
//

ஹா..ஹா...

அ.மு.செய்யது said...

G.Ragavan said...
கர்ணன் படத்துல தேவிகாவோட பேரு சுபாங்கி.

அப்பச் சுபாங்கி மூனாவது மனைவி போல!!!
//

iNbaramation is wealth !!!!

Vidhya Chandrasekaran said...

வாங்க சின்ன அம்மிணி. ஆமாம் அதேதான்.

வாங்க அபுஅஃப்ஸர்:)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

உங்க பதிவு படிச்சுட்டு நானும் கூகிள் செய்து பார்த்தேன்..ஒரு தெருக்கூத்து கிடைச்சது.. கேளுங்க.. எனக்கு முழுசா டவுன்லோட் ஆகலை..
அதுல சுபாங்கன் மகள் பொன்னுருவி கர்ணன் மனைவின்னு சொல்றாங்க
அதான் சுபாங்கியோ.. :)
இதான் அந்த லிங்க்
http://ishare.rediff.com/filemusic-Ponnuruvi%20Karnan%20Tirumanam%20(Tamil%20-%20Play-id-10060304.php

எம்.எம்.அப்துல்லா said...
This comment has been removed by the author.
எம்.எம்.அப்துல்லா said...

// எம்.எம்.அப்துல்லா said...
வித்யா said...


வாங்க அபுஅஃப்ஸர்:)


//


என்ன மப்பா?? வந்தது செய்யது, அபுஅஃப்ஸர் இல்லை.

Vidhya Chandrasekaran said...

வாங்க முத்துலக்ஷ்மி அக்கா. எனக்கும் டவுன்லோட் ஆகல.

ஹி ஹி அண்ணே உங்ககிட்ட பேசினதுக்கப்புறம் தான் நான் இப்படி ஆயிட்டேன்.

மன்னிச்சுகோங்க அ.மு.செய்யது:)

Unknown said...

//உடனே ரகு "நானே போயிருந்திருக்கக்கூடாது. விதி யாரை விட்டது?". //

அவர் தைரியமா சொல்லிட்டாரு. தைரியமில்லாதவங்க இங்கே கும்மி அடிக்கிறோம் :-)

//"அப்பா கர்ணனின் மனைவி பேரென்ன?"
"தேவிகா"
"அய்யோ. நான் நடிகை பேரை கேக்கலை. நிஜமா கர்ணன் மனைவி பேரக் கேட்டேன்."
"Mrs. கர்ணன்"
"கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்"//

ஒட்டுமொத்த குடும்பமே இப்படி (நகைச்சுவை உணர்வு உள்ளவங்க) தானா?

Cable சங்கர் said...

//"அப்பா கர்ணனின் மனைவி பேரென்ன?"
"தேவிகா"
//

haa.haa...haa..

Vidhya Chandrasekaran said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ராஜா.

வாங்க சங்கர்ஜி:)

Arun Kumar said...

@வரும் நாட்களில் இரண்டு தொடர் பதிவுகளை எழுத ஆரம்பிக்கலாமென்றிருக்கேன் (இருக்கிற இம்சைல இது வேறயான்னு நீங்க சொல்றது கேக்குது). பயப்படாதீங்க அதுவும் ஒரு விதமான மொக்கை தான். மொக்கையைத் தவிர யாமறியோம் பராபரமே. @
எப்படி பயப்படாம இருக்கிறது..
வலிக்கவே வலிக்காதுன்னு டாக்டர் ஊசி குத்தறுது போல இருக்கு

விக்னேஷ்வரி said...

பயங்கர கும்பல். ரொம்பவே குறுகலான பாதைகள். கொஞ்சம் கவனிங்கப்பா. எமர்ஜென்ஸி காலங்களில் ரொம்ப கஷ்டம். //

நம்ம மக்கள் எது பண்ணனுமோ, அதைப் பண்றதில்லை.

ரகு "நானே போயிருந்திருக்கக்கூடாது. விதி யாரை விட்டது?". அதற்க்குப் பிறகு என்ன நடந்திருக்குமென்பதை நான் சொல்லத்தேவையில்லை.//

பாவம் அவர், வாய விட்டு வாங்கிக் கட்டிக்கிட்டாரா.... சில சமயங்கள்ல உண்மைய எல்லாம் இப்படி வெள்ளந்தியா சொல்லிடக் கூடாதுன்னு அவர் கிட்ட சொல்லுங்க.

வர வர இந்த குமுதம் பண்ற ரப்சருக்கு அளவே இல்லாம போச்சு. அத திங்காத, இத திங்காதன்னு வாரம் ஒரு அயிட்டத்த போட்டு வெறுப்பேத்தறாங்க.//

குமுதம் மாதிரி வெட்டி புக்கெல்லாம் படிக்காதீங்க வித்யா.
இப்ப என்ன, குமுதத்துல சாப்பிட வேணாம்னு சொன்னா, நாம அதை எல்லாம் சாப்பிடாம இருக்கப் போற மாதிரி பேசுறீங்க. அவன் பொழப்பு அவனுக்கு, நம்ம பொழப்பு நமக்கு.

மொக்கையைத் தவிர யாமறியோம் பராபரமே. //

மொக்கையரசி வித்யா வாழ்க. தாரணி, கோவிச்சுக்காதீங்க ப்ளீஸ்... ;)

Vidhya Chandrasekaran said...

வாங்க அருண். டாக்டர் சொன்னா நம்பித்தானே ஆகனும்.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி விக்னேஷ்வரி.