April 15, 2009

ஈழமும் ஓட்டு வங்கியும்

எவ்வளவோ போராட்டங்கள். எவ்வளவோ பேரணிகள். எவ்வளவோ தீக்குளிப்புகள். தீர்வே இல்லையா என கதறும் சொந்தங்கள். நம் சொந்தங்கள். ஆனால் அதிகாரவர்க்கம் அழுத்தமாய் மௌனம் காக்கின்றது. இல்லையேல் அவ்வப்போது கொஞ்சம் கண்துடைப்புகள். சீக்கியர்களின் போராட்டத்தை கருத்தில் கொண்டு டைட்டலருக்கும், சஜ்ஜானுக்கும் போட்டியிட வாய்ப்பளிப்பதைப் பற்றி மறுபரிசீலனை செய்யப்படும் என அறிவிக்கும் காங்கிரஸ் கட்சிக்கு நிதம் போராட்டம் என சொந்தங்களைக் காப்பாற்றத் துடிக்கும் தமிழர்களின் குரல் காதில் விழவில்லையா? இல்லை கேட்காததுபோல் நடிக்கிறார்களா? இன்றைக்கு ஈழத்தில் நடக்கும் கொடுமைகள் நாளைக்கு நமக்கும் நடக்கும். நடக்காதென்பதிற்க்கு யார் உத்திரவாதம்?


பதவியை துறந்தால் தீர்வு வந்துவிடுமா? சிலர் பேசும் பேச்சுக்கு நான் பதவியில் இருப்பதால் தான் தப்பித்துக்கொண்டிருக்கிறார்கள் என்கிறார் முதல்வர். தமிழ் உணர்வாளர்களென தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளும் திருமாவுக்கோ, வைகோவுக்கோ இப்போது எம்.பி சீட் தான் முக்கிய பிரச்சனையாக தெரிகிறது. இலங்கைப் பிரச்சனையில் இந்தியா தலையிட்டு தீர்வு காணாதபட்சத்தில் தமிழகத்திலுள்ள அனைத்து கட்சிகளும் தேர்தலை புறக்கணிப்போமென கூறினால் மத்திய அரசி பணியாதா? கண்டிப்பாக நம் அரசியல்வாதிகள் இதை செய்யமாட்டார்கள். தன் வீட்டில் இழவு கொட்டாத வரை அவர்களுக்கு கவலையில்லை.


நம்மால் ஏதும் செய்ய இயலுமா? நாம் ஏன் இந்த சுயநல அரசியல்வாதிகளைப் புறக்கணிக்கக் கூடாது? ஓட்டு வங்கிகளாக இருந்தது போதும். இந்த தேர்தலில் சிந்தித்து வாக்களியுங்கள். ஒட்டு மொத்த அரசியல்வாதிகளுக்கும் கொஞ்சமேனும் பயத்தை ஏற்படுத்த வேண்டுமெனில் நம் கையிலிருக்கும் ஆயுதம் 49O. ஏற்கனவே இம்முறையினில் வாக்களிப்பதைப் பற்றி பதிவிட்டிருக்கிறேன். குமுதத்தில் ஞானி "வேட்பாளர்கள் பெற்றிருக்கும் வாக்குகளை விட 49O முறையில் அளிக்கப்பட்ட வாக்குகள் அதிகமிருக்குமேயானால் நீதிமன்றத்தில் வாக்காளர் வெற்றி பெற்றது செல்லாது என அறிவிக்கக் கோரி வழக்கு தொடரலாம்" என தெரிவித்துள்ளார். இது சாத்தியமா என தெரியவில்லை. நடைமுறைப் படுத்தலாம் என்றால் நாம் ஏன் 49Oவை ஆயுதமாக உபயோகிக்கக்கூடாது? அவ்வாறு செய்து மறுபடியும் தமிழகத்துக்கு தேர்தல் நடக்குமேயானால் ஈழப்பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வரும் கட்சிக்கே ஓட்டு என அறிவித்தால் நான் நீயென போட்டி போட்டுக் கொண்டு தீர்வுகாணமாட்டார்களா? இதுவும் நடைமுறைக்கு ஒத்துவருமா என தெரியவில்லை.

எது எப்படி இருந்தாலும் உங்கள் ஜனநாயக கடமையை நிறைவேற்றுங்கள்.

Make a wise decision. Vote for YOUR future.

34 comments:

நட்புடன் ஜமால் said...

ஒன்றில்லை

49 ஓ போட்டுடுவோம்.

ttpian said...

யார் கண்டது? மாமியும்,மாமாவும் சேர்ந்து போட்டி போட்டு நம்மை எமாட்ரும் காலம் விரைவில் வரலாம்!

S.A. நவாஸுதீன் said...

இலங்கைப் பிரச்சனையில் இந்தியா தலையிட்டு தீர்வு காணாதபட்சத்தில் தமிழகத்திலுள்ள அனைத்து கட்சிகளும் தேர்தலை புறக்கணிப்போமென கூறினால் மத்திய அரசி பணியாதா? கண்டிப்பாக நம் அரசியல்வாதிகள் இதை செய்யமாட்டார்கள். தன் வீட்டில் இழவு கொட்டாத வரை அவர்களுக்கு கவலையில்லை

இது அரசியல்வா(வியா)திகளின் தனித்தன்மை. இவர்களுக்கு இது முடியாத காரியம். மக்கள் தான் ஏதாவது செய்ய வேண்டும்

SK said...

மீண்டும் ஒரு அருமையான பதிவு வித்யா.

49O என்பது ஒரு நல்ல ஆயுதம். அதை விட ஒவ்வொரு தொகுதியிலும் நல்ல கற்றறிந்த சுயேட்சை வேட்பாளர்கள் இருக்கிறார்கள். இருப்பார்கள். அவர்களை கண்டறிந்து, அவர்களின் தேர்தல் அஜெண்டா என்ன என்பதை அறிந்து அவர்களை வெற்றிபெற செய்யலாம்.

ஐந்து வருடம் எந்த ஒரு திராவிட கட்சியும் பெரும்பான்மை இல்லாமல் இருந்தால் அடுத்த முறை ஒழுங்காக இருக்க வாய்ப்பு உள்ளது.

ஆனால் இண்டேர்நேடை படிப்பவர்களை காட்டிலும் கடைநிலை வாக்காளர்களே அதிகம். அது தான் இந்த பாரம்பரிய அரிசியல் கட்சிகளின் பலமும் கூட. :(

Vidhya Chandrasekaran said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜமால்
ttpian
Syed Ahamed Navasudeen

Vidhya Chandrasekaran said...

வா SK. நீ சொல்றது கரெக்ட் தான். ஆனா ஜெயிச்ச உடனே சுயேச்சைகள் பண்ற முதல் வேலை பேரம் பேசுறது தானே. கடைநிலை மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவே முடியாதா?
அட்லீஸ்ட் அவங்க ஓட்டாவது போடறாங்க. நம்மள் மாதிரி படிச்ச ஆளுங்க??

SK said...

நான் எழுதனும்னு நினைச்சு விட்டுட்டேன். சுயேட்ச்சை ஜெயிச்ச அப்பறம் அவுங்க பண்ற முதல் காரியம் நீங்க சொல்றது தான். அதுக்கு என்ன செய்யலாம்னு தான் யோசிக்கணும். பாண்டு எழுதியா வாங்க முடியும் ?? :)

கடைநிலை வாக்காளர்கள் கிட்டே விழிப்புணர்வு வரணும். அவுங்களுக்கு எல்லாத்தையும் சொல்லித்தரனும். இன்னைக்கு கிடைக்கிற ஆயிரமும் ரெண்டாயிரமும் முக்கியம் இல்லைன்னு. ஆனா நாமலே 0.1% அதிகம் சம்பளம் கிடைச்சா மாத்திடறோம் வேலைய... தினம் சாப்பாட்டுக்கு கஷ்டபடுரவங்க நிலைமை. :(

படிச்சவங்க செய்யறது தெரிஞ்சு தான் செய்யறாங்க. ஈழப்பிரச்சனை ஒரு உதாரணம். என்ன தான் ஈழப்பிரச்சனை பத்தி பக்கம் பக்கமா எழுதினாலும், மணி கணக்கா பேசினாலும் வாக்குன்னு விழும் போது எனக்கு பிடித்த கட்சி, என்னோட ஜாதி கட்சி, என்னோட தலைவன், இப்படி தான் முடிவு பண்றாங்க. இவங்களையே மாற (திருத்த) முடியாத போது நாம கடைநிலை வாக்காளர்கள் பத்தி யோசிக்கவே முடியாது.

குறிப்பு : உங்களோட குப்பை மற்றும் மழை வடிகால் பற்றிய பதிவுக்கு பதில் இன்னும் பாக்கி இருக்கு. ஒழுங்க எழுதனும்னு ஒரு சோம்பேறி தனத்துல தள்ளிபோட்டே வர்றேன். விரைவில் எழுதுகிறேன்.

முரளிகண்ணன் said...

நல்ல கருத்து

Deepa said...

அருமையான கருத்து.

கார்க்கிபவா said...

இங்க ஓ போட்டூகறேன்..

அங்க 49ஓ போடரேன்

Cable சங்கர் said...

oooooooo ohhhhhhh pathivu

Vidhya Chandrasekaran said...

ஆமாம் SK. அன்றாடங் காய்ச்சிகள் தான் அரசியல்வாதிகளின் நாடித்துடிப்பு. மாற்றம் முதலில் கல்வியிலிருந்து தொடங்க வேண்டுமென்று நினைக்கிறேன். Take ur time dude:)

நன்றி முரளிகண்ணன்.

Vidhya Chandrasekaran said...

நன்றி தீபா.

நன்றி கார்க்கி.

வாங்க சங்கர்ஜி:)

zara said...

That's correct. I am also ready to vote on 49-o. recently i was started a community in Orkut for 49-O. http://www.orkut.co.in/Main#Community.aspx?cmm=60940982

www.narsim.in said...

சபாஷ்

Arun Kumar said...

@ காங்கிரஸ் கட்சிக்கு நிதம் போராட்டம் என சொந்தங்களைக் காப்பாற்றத் துடிக்கும் தமிழர்களின் குரல் காதில் விழவில்லையா? @

காதில் விழுந்தும் என்ன தான் செய்வது?
87ல் அமைதி படையை அனுப்பியது போல திரும்ப அனுப்பலாமா?

இல்லை அரசியல் தீர்வு உதவி செய்யலாமா?

இதில் என்ன செய்தாலும் கண்டிப்பாக முகத்தில் கறியை பூசி வர போவது உறுதி.

சரி போரை நிறுத்த ஏற்பாடு செய்யலாம்..அப்புறம் அமைதி பேச்சுக்கு வழி செய்யலாம்.

சரி இலங்கை அரசும் விடுதலைபுலிகளும் சம்தான தீர்வுக்கு வருவார்களா?

கடைசியில் நார்வேக்கு ஆன கதை தான். ஏற்கனவே 80களில் அனுபவித்த நல்ல அனுபவம் இருக்கிறது.

இதில் இந்தியா என்ன தான் செய்ய முடியும்?

என்னை பொருத்தவரை இலங்கை அரசை குறை தூற்றுபவர்கள் இந்த பிரச்சனைக்களுக்கு போருக்கு முழு காரணமான விடுதலை புலிகளை கண்டு கொள்வதே இல்லை.

புலிகள் சமாதான நேரத்தில் சரத் பொன்சேகாவிற்க்கு மனித வெடிகுண்டு அனுப்பினார்கள். வலிய போருக்கு அழைத்தார்கள்..

தேர்தலை புறக்கணிக்க சொல்லி ராஜபக்சேவை தேர்ந்த எடுக்க வைத்தார்கள்

தற்போது தோல்வி அடையும் நேரத்தில் மக்களை அடைத்து வைத்து அனுதாபம் தேட பார்க்கிறார்கள்.

புலிகள் அழிவது வருங்கால தமிழ்நாட்டுக்கு நண்மையே.


இப்போதைய தேவை போர் சூழலில் மாட்டி கொண்டு முழிக்கும் மக்களை காப்பாற்றுவதே.

அதை செய்ய இந்தியா முயற்ச்சி செய்யலாம்.



@இன்றைக்கு ஈழத்தில் நடக்கும் கொடுமைகள் நாளைக்கு நமக்கும் நடக்கும். நடக்காதென்பதிற்க்கு யார் உத்திரவாதம்@

கொடுமைகள் நடப்பதும் நடக்காமல் இருப்பதற்க்கும் மக்களே காரணம்.

நாளை நமக்கும் இதை போல நடந்தால் அதற்க்கு முழு காரணமாக நாமாக தான் இருக்க முடியும்.

Unknown said...

//புலிகள் சமாதான நேரத்தில் சரத் பொன்சேகாவிற்க்கு மனித வெடிகுண்டு அனுப்பினார்கள். வலிய போருக்கு அழைத்தார்கள்..
///

Sorry to type in ENGLISH.

Yes man.. I can understand you easily forgot that land minnes were blowout in north & east before this incidents. And Tamil MPs got killed.

You better check the facts before you write.

Arun Kumar said...

@ Sorry to type in ENGLISH.

Yes man.. I can understand you easily forgot that land minnes were blowout in north & east before this incidents. And Tamil MPs got killed.

You better check the facts before you write.@



இரண்டு தரப்புமே ஒருத்தரை ஒருத்தர் போட்டு தள்ளவதில் குறைந்தவர்கள் இல்லை.

ஒவ்வோரு கொலைக்கும் நியாயம் கற்பிப்பது அல்லது அதை நியாய படுத்தவது மோசமான முன்னுதாரணம்.

சார், இந்த சிங்கம் புலி விளையாட்டுக்கு நான் வரவில்லை :)
என்ன விடுங்க சார்..:)

Vidhya Chandrasekaran said...

நன்றி zara.

நன்றி நர்சிம்.

Vidhya Chandrasekaran said...

அருண் நானும் முழுக்க அப்பாவி மக்களை நினைத்தே இந்த பதிவை எழுதியுள்ளேன். சில மாதங்களுக்கு முன் ஈழப் பிரச்சனைக்காக பதிவுலகமே பற்றியெரிந்த போதும் நான் வாய் திறக்கவில்லை. இங்கே புலிகள் எதிர்ப்பென்பது ஈழத்திற்க்கே எதிர்ப்பு என்றுதான் கருதப்படுகிறது. இலங்கை அரசைப் போலவே விடுதலைப் புலிகளும் குற்றம்சாட்டப்படவேண்டியவர்கள். நான் இந்தியா தலையிட வேண்டுமென சொல்வது அப்பாவி மக்களின் பாதுகாப்பிற்குத் தானொழிய இலங்கைக்கோ, புலிகளுக்கோ ஆதரவாக வேண்டியில்லை. பங்களாதேஷின் சுதந்திரத்திற்க்கு நாம் இன்று அனுபவிப்பது போல் எதிர்காலத்தில் நடப்பது நிச்சயம். நம்மால் முடிந்தது இருதரப்பினருக்கும் ராணுவ உதவி செய்யாமலிருப்பது. அங்கே சிக்கித் தவிக்கும் தமிழர்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்துவது. ஒன்று மட்டும் நிச்சயம் போர் தொடர்ந்தால் தமிழர்கள் மட்டுமல்ல, இலங்கையும் நாசமாகும் எனப்தில் ஐயமில்லை.

☀நான் ஆதவன்☀ said...

நல்ல பதிவுங்க வித்யா..

//மத்திய அரசி பணியாதா?//

நுண்ணரசியலா?? இல்ல எழுத்து பிழையா??

ரொம்ப ரசிச்சேன் :)

ராஜ நடராஜன் said...

//குமுதத்தில் ஞானி "வேட்பாளர்கள் பெற்றிருக்கும் வாக்குகளை விட 49O முறையில் அளிக்கப்பட்ட வாக்குகள் அதிகமிருக்குமேயானால் நீதிமன்றத்தில் வாக்காளர் வெற்றி பெற்றது செல்லாது என அறிவிக்கக் கோரி வழக்கு தொடரலாம்" என தெரிவித்துள்ளார்.//

இந்தக் கருத்தை இதுவரையிலும் யாரும் தெரிவிக்க வில்லையே.அப்படியெனில் நிச்சயாமாக 49/0 வெற்றி பெற அனைவரும் முயற்சி செய்யலாமே.

ராஜ நடராஜன் said...

கட்சிகளை விட சுயேட்சைகளுக்கும் ஒரு சந்தர்ப்பத்தைக் கொடுத்துப் பார்க்கலாமே.

ராஜ நடராஜன் said...

//இங்கே புலிகள் எதிர்ப்பென்பது ஈழத்திற்க்கே எதிர்ப்பு என்றுதான் கருதப்படுகிறது. இலங்கை அரசைப் போலவே விடுதலைப் புலிகளும் குற்றம்சாட்டப்படவேண்டியவர்கள்.//

விடுதலைப் புலிகள் விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவர்கள் என்றில்லை.ஆனால் நிகழ்வுகளை ஆழ்ந்து நோக்கினால் மட்டுமே விடுதலைப் புலிகள் குற்றம்சாட்டப்படவேண்டிய எல்லையைக் கடந்து விட்டது புரியும்.

Vidhya Chandrasekaran said...

நன்றி ஆதவன். ஹி ஹி அது கன்பர்ம்டா எழுத்துப் பிழைதாங்க. வெளிய சொல்லிடாதீங்க:)

வாங்க ராஜ நடராஜன். சுயச்சேகள் வென்ற பிறகு ரத்தத்தின் ரத்தமாகவோ, உடன்பிறப்பாகவோ மாறதவரை சரிதான். புலிகளின் ஆரம்பகால அரசியல் கொலைகள் அவர்களை ஆதரிக்க முயலுவோர்கூட ஒரு கணம் யோசிக்கவைக்கிறது. நிகழ்வுகளை தொடர்ந்து அலசிவருவதாலே நான் இந்நிலைப்பாட்டினைக் கொண்டுள்ளேன்.

Unknown said...

//நம்மால் முடிந்தது இருதரப்பினருக்கும் ராணுவ உதவி செய்யாமலிருப்பது.//

This is what eelam tamils expect from India atleast.

Thank you.

Thamira said...

நல்ல சிந்தனைங்க..

Vidhya Chandrasekaran said...

நாங்களும் அதைத்தான் சொல்கிறோம் Akkansha. எல்லரும் செவிடர்களாய் நடிக்கிறார்கள்:(

நன்றிங்க ஆதி:)

தாரணி பிரியா said...

ஒட்டுதான் போடணுமுன்னு நினைச்சுகிட்டு இருந்தேன். ஓ போடலாமான்னு யோசிக்க வெச்சு இருக்கிங்க வித்யா :)

மணிகண்டன் said...

வித்யா,

எனக்கு 49 O விட 12 B தான் பிடிக்கும் !

எம்.எம்.அப்துல்லா said...

//நானும் முழுக்க அப்பாவி மக்களை நினைத்தே இந்த பதிவை எழுதியுள்ளேன். சில மாதங்களுக்கு முன் ஈழப் பிரச்சனைக்காக பதிவுலகமே பற்றியெரிந்த போதும் நான் வாய் திறக்கவில்லை. இங்கே புலிகள் எதிர்ப்பென்பது ஈழத்திற்க்கே எதிர்ப்பு என்றுதான் கருதப்படுகிறது. இலங்கை அரசைப் போலவே விடுதலைப் புலிகளும் குற்றம்சாட்டப்படவேண்டியவர்கள். நான் இந்தியா தலையிட வேண்டுமென சொல்வது அப்பாவி மக்களின் பாதுகாப்பிற்குத் தானொழிய இலங்கைக்கோ, புலிகளுக்கோ ஆதரவாக வேண்டியில்லை. பங்களாதேஷின் சுதந்திரத்திற்க்கு நாம் இன்று அனுபவிப்பது போல் எதிர்காலத்தில் நடப்பது நிச்சயம். நம்மால் முடிந்தது இருதரப்பினருக்கும் ராணுவ உதவி செய்யாமலிருப்பது. அங்கே சிக்கித் தவிக்கும் தமிழர்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்துவது. ஒன்று மட்டும் நிச்சயம் போர் தொடர்ந்தால் தமிழர்கள் மட்டுமல்ல, இலங்கையும் நாசமாகும் எனப்தில் ஐயமில்லை.

//


வெல்டன் சிஸ்டர்.

பாலகுமார் said...

//தன் வீட்டில் இழவு கொட்டாத வரை அவர்களுக்கு கவலையில்லை//

சரியாக சொன்னிர்கள்.

மிக சரியான பதிவு.

Vidhya Chandrasekaran said...

நன்றி தாரணிபிரியா.

அப்படின்னா படமா மணிகண்டன்?

நன்றி அண்ணே.

நன்றி பாலகுமார்.

மணிகண்டன் said...

அப்படின்னா படமா மணிகண்டன்?

:)-