April 6, 2009

அல்லோவ் மைக் டெஸ்டிங்

ம்ம்ம். நாலு தெரு கூடுற இடத்திலெல்லாம் இனிமே காதைப் பொத்திக்கிட்டு தான் போகனும். அரசியல் கட்சிக்காரங்க அளப்பறைய ஆரம்பிச்சாச்சு. இனிமே நம்ம சொல்ல வேண்டிய டயலாக் இதுதான் "நாராயணா இந்த கொசுத் தொல்லை தாங்க முடியலடா நாரயணா." நானும் என் பங்குக்கு கொஞ்சம் தோரணம் கட்டலாம்ன்னு தான் இந்த பதிவு.
**************

3 சீட்டுக்கும் 4 சீட்டுக்கும் நான் கட்சி ஆரம்பிக்கல. மக்களுடனும் கடவுளுடனும் தான் கூட்டணி - கேப்டன் விஜயகாந்த்

அப்புறம் எதுக்கு உங்க மச்சான் சுதிஷும் பண்ரூட்டி ராமச்சந்திரனும் டெல்லிக்கு போய் தொன்னை சே அன்னை சோனியாவை சந்திச்சாங்களாம். ஒருவேளை உங்க அடுத்த படத்துல அம்மா வேஷம் கட்ட கால்ஷீட் கேட்டுப் போனாங்களோ?
**************

சீரஞ்சீவி பற்றி சிலாகித்துப் பேசியிருக்கார் சரத்குமார். அவர் தான் தன் ரோல் மாடல்ங்கற மாதிரி சொல்லிருக்கார். ஏதேது விட்டா புயல் ஆந்திராவில் மையம் கொண்டு அங்கே ஆட்சிய கைப்பற்றிடும் போலிருக்கே. போங்கய்யா போய் புள்ளய படிக்க வைங்க.
**************

"தன் மகனின் பதவிக்காக முடிவை மாற்றினார் ராமதாஸ்". கலைஞர் குற்றச்சாட்டு. தோடா பதவியப் பத்தி யார் பேசறது. ஆஸ்பத்திரில படுத்துக் கிடந்தாலும் பரவால்ல. ஆனா நான் தான் முதலமைச்சரா இருப்பேன் அடம்பிடிச்ச நீங்க இந்த ஸ்டேட்மெண்ட் வுடக்கூடாதய்யா.
**************

அம்மாவின் கணக்கே வேற. அவங்களுக்கு இந்த சப்ப முதலைமைச்சர் பதவி மேலெல்லாம் துளிகூட ஆசை கிடையாது. இப்போ அவங்க டார்கெட் எல்லாம் பிரதமர் போஸ்ட் மேலதான். "கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவன் வானமேறி வைகுண்டம் போறானாம்".
**************

பா.ம.க அண்புமணியிடம் கேக்கக் கூடாத கேள்வி - "சார் ஜெயிச்சு கப் வாங்கறதுன்னா என்னா சார்?"
************

தேவைப்பட்டால் ஆட்சி அமைக்க காங்கிரசின் ஆதரவை கேட்போம் - பிரகாஷ் காரத்.
காங்கிரசுடன் இனிமேல் எப்போதுமே கூட்டணியில்லை - சீதாராம் யெச்சூரி.

பொலிட் பீரோவை கூட்டி பொளிச்சுன்னு ஒன்னு வைச்சா தான் சரிவரும் போல. பொறந்ததிலிருந்தே நீங்க இப்படித்தானா? அரசியல்ல காமெடி பண்ணலாம். ஆனா அரசியலையே காமெடியா பண்ணா?
************

கூட்டணியில் சிறுத்தைகளை சேர்க்கக்கூடாது - காங்கிரஸ்.
தி.மு.க கூட்டணியில் தான் இருப்போம் - தொல்.திருமாவளவன்.

திருமா சார் போடா நீங்களும் உங்க தொகுதி ஒதுக்கீடும்ன்னு தூக்கிப்போட்டுட்டு வரவேண்டியதுதானே. சோக்கா உண்ணாவிரதமெல்லாம் இருந்தீங்க. இப்போ எங்க போச்சு ஈழ பேச்சு. தேர்தல் தேதி அறிவிச்சதிலிருந்து ஈழத்துக்கு ஸ்பெல்லிங்கூட மறந்துபோயிருச்சு உங்களுக்கு. நீங்கன்னுல்ல எல்லா அரசியல்வாதிகளுக்கும் ஈழம்ங்கறது தோள்ல போடுற துண்டு மாதிரி தான். இதப் புரிஞ்சுக்காம ஏதாவது நல்லது நடந்துடும்ன்னு ப்ச்ச் விடுங்க. மானங்கெட்ட அரசியல்வாதிகள்ன்னு திட்ட எனக்கு அவமானமா இருக்கு.

அப்புறம் இந்த பா.ஜ.க, மதிமுக போன்ற கட்சிகளை துவைக்கறதுக்கு மனசு வரல. செத்த பாம்ப அடிக்கிற கோழையில்ல நான். பாவம் அவுங்களும் எவ்வளவு அடிதான் தாங்குவாங்க.

இந்த தடவையும் 49O போடலாமா இல்ல சுயச்சை யாருக்காவது குத்தலாமான்னு யோசிக்கிறேன். வாழ்க பணநாயகம். சே ஜனநாயகம்.

33 comments:

Anonymous said...

கண்ணு, பின்னி பெடல் எடுகறியே, இதையே தேர்தல் வரை பாலோ பண்ணு. குட்.

Vijay said...

அரசியலிலும் பின்னி பெடலுடுக்கறீங்க. அசத்துங்க.

நாகை சிவா said...

கலக்கல்!

சுயேட்சையோ, 49 ஓ வோ.. ஆனா ஒட்டு போடுங்க.. அது போதும் :)

அமிர்தவர்ஷினி அம்மா said...

ஜே.கே.ரித்தீஷ் கூட தேர்தல்ல நிக்கிறாருன்னு கேள்விப்பட்டேன்.

அவரை கலாய்க்காம விட்டுட்டீங்களே.

அம்மாவின் கணக்கே வேற. அவங்களுக்கு இந்த சப்ப முதலைமைச்சர் பதவி மேலெல்லாம் துளிகூட ஆசை கிடையாது. இப்போ அவங்க டார்கெட் எல்லாம் பிரதமர் போஸ்ட் மேலதான். "கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவன் வானமேறி வைகுண்டம் போறானாம்".
Lol

Deepa said...

கலக்கல் வித்யா!
எல்லாமே சூப்பர்..

highlight ”அம்மா வேஷம் கட்ட கால்ஷீட் கேட்டுப் போனாங்களோ?”
அய்யோ... முடியலம்மா!
:-))))
Now i am one of your fans...Hats off!

நட்புடன் ஜமால் said...

\\இந்த தடவையும் 49O போடலாமா இல்ல சுயச்சை யாருக்காவது குத்தலாமான்னு யோசிக்கிறேன். வாழ்க பணநாயகம். சே ஜனநாயகம்.\\

சுப்பர்.

Vidhya Chandrasekaran said...

நன்றி மயில்.

நன்றி விஜய்.

நன்றி சிவா. கண்டிப்பா ஒட்டு போடுவேன்.

Vidhya Chandrasekaran said...

வாங்க அமித்து அம்மா. தலய கலாய்ச்சா தவிச்ச வாய்க்கு தண்ணீ கிடைக்காதுன்னு பெரியவங்க சொன்னதனால அவர லூஸ்ல விட்டுட்டேன்.

நன்றி தீபா. நீங்க அம்புட்டு நல்லவங்களா??

நன்றி ஜமால்.

narsim said...

போட்டி பலமா இருக்கே.. ம்.. கலக்கல் வித்யா. தாம்பரம்தானே...

ஆ.ஞானசேகரன் said...

நல்லா அசத்தல்தான்... 49ஓ க்கு நல்ல வரவேற்பு போல இருக்கு

தராசு said...

//மானங்கெட்ட அரசியல்வாதிகள்ன்னு திட்ட எனக்கு அவமானமா இருக்கு.//

ரிப்பீட்டேய்!!!!!!!!!

தூள் கிளப்புறீங்க, அடிச்சு ஆடுங்க.

Vidhya Chandrasekaran said...

நன்றி நர்சிம்.ஆட்டோ அளவுக்கு நான் வொர்த் இல்லீங்கோ.

நன்றி ஞானசேகரன்.

நன்றி தராசு.

SK said...

யக்கோவ் பிரிச்சு பிடல் எடுங்கோ :)

சென்ஷி said...

மீண்டும் கலக்கல் :-)

அப்துல்மாலிக் said...

அரசியல்லே பின்னிருக்கீங்க‌

ஹூம் நீங்க ஏதாவது கட்சியிலே சேர்ந்து கொள்கை(?) பரப்பு செயளாலர் ஆகலாம். அப்புறம்.. அப்படியே எம் எல் ஏ, மந்திரி, முதலமைச்சர், பிரதம மந்திரி... ஆகிடலாம்.....

நல்லாயிருந்தது படிக்க‌

மணிகண்டன் said...

Vidhya, Why ?

Vidhya Chandrasekaran said...

நன்றி SK.

நன்றி சென்ஷி.

நன்றி அபுஅஃப்ஸர். ஒரு கொலைவெறியோட தான் இருக்கீங்க:)

ஏன் மணிகண்டன் நல்லால்லயா?

மணிகண்டன் said...

இந்த பதிவுல நல்லா இருக்கு / நல்லா இல்லன்னு சொல்ல என்ன கொல வெறி கவிதையா எழுதி இருக்கீங்க !!!

உங்க முந்தைய பதிவு சூடான இடுகைல வந்து இருக்கு.

எம்.எம்.அப்துல்லா said...

//ஹூம் நீங்க ஏதாவது கட்சியிலே சேர்ந்து கொள்கை(?) பரப்பு செயளாலர் ஆகலாம். //

வித்யா எங்க தலயோட கொ.ப.சேவா இருக்குறத விட பெருசா வேற என்ன பதவி இருக்கு???

☀நான் ஆதவன்☀ said...

உங்கள போல பதிவும் சூடாக வாழ்த்துகள் வித்யா.

//சுயேட்சையோ, 49 ஓ வோ.. ஆனா ஒட்டு போடுங்க.. அது போதும் :)//

இதுக்கு ஒரு பெரிய ரிப்பீட்டு

Vidhya Chandrasekaran said...

தகவலுக்கு நன்றி மணிகண்டன். இல்ல yன்னு கேட்டிருந்தீங்களே. அதானால தான் அப்படி சொன்னேன்.

அதானே. அந்த பதவி கிடைக்க நான் புண்ணியம் பண்ணிருக்கனும். எல்லா புகழும் அப்துல்லா அண்ணனுக்கே:)

நன்றி ஆதவன்.

தாரணி பிரியா said...

வித்யா இதுக்கு பேருதான் பின்னி பிரிச்சு பெடல் எடுக்கிறது சரியா. கலக்கிட்டிங்க :)

அ.மு.செய்யது said...

//வாழ்க பணநாயகம். சே ஜனநாயகம். //

ஹா..ஹா..அர‌சிய‌ல் ????

அன‌ல் ப‌றக்கும் ப‌திவு வித்யா ...

ம‌டை திறந்த‌ வெள்ள‌ம் போல க‌ருத்துக்க‌ள்..( தேர்த‌ல் சீச‌ன் ல‌ அதான் )

Vidhya Chandrasekaran said...

நன்றி தாரணி பிரியா.

நன்றி அ.மு.செய்யது.

Truth said...

49O eppayaachum kuthi irukeengala?

Arun Kumar said...

சூப்பர்.. சூப்பரோ சூப்பர்..
துக்ளக் சத்யா எழுதுவது போல இருக்கே !!

Vidhya Chandrasekaran said...

வாங்க truth.

நன்றி அருண்:)

விக்னேஷ்வரி said...

நல்லா எழுதிருக்கீங்க வித்யா. என்ன பண்ண, நம்மளால இப்படி பொலம்ப தான் முடியும். வேற என்ன பண்ணிட முடியும்.....

Vidhya Chandrasekaran said...

நன்றி விக்னேஷ்வரி. இல்லீங்க கொஞ்சம் முயற்சி பண்ணா நம்மாள நம் தலையெழுத்த மாத்த முடியும்.

ரிதன்யா said...

//ஒருவேளை உங்க அடுத்த படத்துல அம்மா வேஷம் கட்ட கால்ஷீட் கேட்டுப் போனாங்களோ?//

தப்பு பண்ணிட்டீங்க, இப்ப அவங்க வில்லி வேசம் கட்டத்தான் லாயக்கு.

Truth said...

வாங்க truth.-a????
ennoda comment-a padikkave illa pola irukku. template vechirukeengala comments reply panradhuku :-)

Vidhya Chandrasekaran said...

அட சினிமாவுலயாவது நல்லவங்களா நட்டிச்சிட்டு போட்டும் ரிதன்யா.

மன்னிக்கவும் truth. உங்களுக்கு பதிலளித்துவிட்டேன் என்று நினைத்து விட்டேன். ஒரு முறை 49O முறைப்படி வாக்களித்திருக்கிறேன்.

"உழவன்" "Uzhavan" said...

//அப்புறம் இந்த பா.ஜ.க, மதிமுக போன்ற கட்சிகளை துவைக்கறதுக்கு மனசு வரல. செத்த பாம்ப அடிக்கிற கோழையில்ல நான். பாவம் அவுங்களும் எவ்வளவு அடிதான் தாங்குவாங்க//

அவங்கெல்லாம் ரொம்ம்ம்ப நல்லவங்க. எவ்வளவு அடினாலும் தாங்குவாங்க :-)