April 17, 2009

Grand Palace - Chrompet

டிஸ்கி : பசி நேரத்தில் பதிவை பார்த்து வயிறெரிந்தால் கம்பெனி பொறுப்பாகாது:)

தாம்பரத்தில் ஹாட் சிப்ஸ், அடையார் ஆனந்த பவனை விட்டால் வேறு ஏதும் நல்ல ரெஸ்டாரெண்ட் கிடையாது. ஆனால் நல்ல கையேந்தி பவன்கள் உண்டு:) (அது அப்புறமாய் தனி பதிவு). ரகுவின் ஆபிஸ் நண்பர்கள் மூலமாக அறிமுகமானது கிராண்ட் பேலஸ். குரோம்பேட்டையில் உள்ளது. நாங்கள் சென்றது பஃபேக்கு. 250 ரூபாய்க்கு அசத்தலான பஃபே. அளவான அயிட்டங்கள். அத்தனையுமே அட்டகாசம். இரண்டு ஆச்சர்யமான விஷயங்கள். முதலாவது கொசகொசவென்றில்லாமல் நல்ல spacious பஃபே ஹால் (நாங்கள் சென்றபோது மூன்று டேபிள்கள் மட்டுமே ஆக்ரமிக்கப்பட்டிருந்தன). சூடான உணவுகள். ஸ்டார் ஹோட்டல்களில் பரிமாறப்படும் ஆறிப்போன அயிட்டங்களை ஓப்பிடும்போது ஆச்சர்யத்தக்க வகையில் கொதிக்க கொதிக்க பஃபே அயிட்டங்கள். சரி over to the spread now.


வெஜ்/நான் வெஜ் சூப்கள் டேபிளில் சர்வ் செய்யப்படுகின்றது. நாங்கள் சென்றிருந்தன்று பப்பாளி ஜூஸும் பரிமாறப்பட்டது. ஸ்டார்டர்களான கோபி வறுவல், சில்லி வெஜிடபிள்ஸ் ரெண்டுமே மொறு மொறுவென சூப்பர். ஸாலட்களில் தக்காளி பேபி கார்ன் சாலட், weight watchers salad, முளைகட்டிய பயறு சாலட் மூன்றும் நன்றாக இருந்தன.டேபிளில் சர்வ் செய்யப்பட்ட நாண்/ரொட்டி ரொம்ப மோசம். ஆனால் சைட் டிஷ்கள் எல்லாமே ருசியாக இருந்தன. மேத்தி மலாய் சப்ஜி, தால் மக்கனி, பனீர் ஜால்ப்ரைஸ், தால் தட்கா, கோவா முட்டை கறி எல்லாம் worth mentioning. நான் வெஜ் அயிட்டங்களில் ரெண்டு கிரேவியும் மட்டன் பிரியாணியும் இருந்தது.

இதோடு schezwan fried rice, sprouted bean noodles, சாதம், ரசம் ஆகியவையும் இருந்தன. Desserts ரொம்ப நார்மல். ஆனால் என்னோட பேவரிட்டான கேரட் அல்வாவும், கேரமல் புட்டிங் ரெண்டும் டாப் கிளாஸாக இருந்தன. தேங்காய் பர்ஃபி, ஜாங்கிரி, fruit tiramsu ஆகியவையோடு வெண்ணிலா/ஸ்ட்ராபெர்ரி ஐஸ்கிரீமும் வைக்கப்பட்டிருந்தன.
மேலதிக தகவல்கள்

உணவகம் - ஹோட்டல் கிராண்ட் பேலஸ்
இடம் - குரோம்பேட்டை பேருந்து நிலையத்தின் எதிர்புறம். Nitra பர்னிச்சர்ஸ் பக்கத்தில்.
டப்பு - பஃபே உணவுக்கு 250 ரூபாய். இருவருக்கு வரிகளும் சேர்த்து 520 ரூபாய் ஆனது.

பரிந்துரை - கொடுத்த காசுக்கு திருப்தியான உணவு. வெரைட்டி கொஞ்சம் கம்மி தானென்றாலும், சுவை ரொம்ப நல்லாருக்கு. கண்டிப்பா ஒரு தடவை முயற்சி செய்யலாம்.

டிஸ்கி : 4 மாதங்களுக்கு முன்னால் எழுதிய பதிவு. எப்படியோ மிஸ்ஸாகியிருந்தது:)

23 comments:

Truth said...

க்க்கும். நல்ல விஷயம் :-) நல்லா சாப்டீங்களா?
சரி இப்போ கொஞ்சம் எனக்கும் உதவி பண்ணுங்க.
உங்க முழு நேர வேலை என்னங்க? ஆர் யூ வர்கிங்க?

Truth said...

ஓ, மீ தான் மீ தி பஷ்டா? :-)

Cable சங்கர் said...

ம். நல்ல பசியை கொடுக்கும் பதிவு..

Vidhya Chandrasekaran said...

வாங்க truth. இப்படி சாப்பிட்டும் i managed to shed weight:)

cvidhya@gmail.com mail பண்ணுங்க. கண்டிப்பா உதவறேன்.

அகநாழிகை said...

வித்யா, கிராண்ட் பேலஸ் சென்றிருக்கிறேன். அவ்வளவாக என்னை ஈர்க்கவில்லை. கிராண்ட் பேலஸில் குறையாக நான் கருதும் விஷயம், வெரைட்டி கிடையாது. நீங்கள் மறுபடியும் வேறொரு நாள் சாப்பிடப்போனால் அதே அயிட்டங்கள்தான் இருக்கும்.
கிராண்ட் பேலஸ்க்கு சற்று அருகில் இருக்கும் ‘ஆத்தங்குடி‘ என்னைக் கவர்ந்த இடம். அருமையான இன்டீரியருடன், ஆப்பம், தேங்காய்ப்பால், நாட்டுக்கோழி என பிரமாதமாக இருக்கும். ஒரு முறை போய்ப்பாருங்கள். நான் தாம்பரத்தில் இருக்கும் போதெல்லாம் ஒரே நல்ல ஓட்டல் ‘பட்ஸ் போஜன்‘ தான். அதன் பிறகு வசந்தபவன், ஹென்கலா எல்லாம் வந்தது. ரங்கநாதபுரம் போகிற வழியில் இருந்த அஞ்சப்பர் (அரசப்பர்...?) இப்போது இல்லையா ? தெரியவில்லை. பூந்தமல்லி நெடுஞ்சாலையிலிருக்கும் ‘ரிவால்விங் ரெஸ்டாரண்ட்‘ போயிருக்கிறீர்களா..? வித்தியாசமான அனுபவமாக இருந்தது.

- “அகநாழிகை“ பொன்.வாசுதேவன்

Vidhya Chandrasekaran said...

நன்றி சங்கர்ஜி.

வருகைக்கு நன்றி அகநாழிகை. பட்ஸ், வசந்தபவன் ரெண்டுமே பழைய மாதிரி டேஸ்ட் இல்லை. ஆத்தங்குடி போனதில்லை. இப்போ சமீபத்தில் முடிச்சூர் ரோட்டில் அஞ்சப்பர் திறந்திருக்கிறார்கள். நீங்கள் சொல்லும் அந்த ரிவால்விங் ரெஸ்டாரெண்ட் எங்கிருக்கிறது?

நாகை சிவா said...

:)

கோவா முட்டை கறி பற்றி ஒரு இரு வார்த்தைகள் முடிந்தால் கூறவும்.

//நான் வெஜ் அயிட்டங்களில் ரெண்டு கிரேவியும் மட்டம் பிரியாணியும் இருந்தது.//

மட்டம் பிரியாணியா. புதுசா இருக்கே... நல்லா இருந்துச்சா ;)))

நாகை சிவா said...

//நீங்கள் சொல்லும் அந்த ரிவால்விங் ரெஸ்டாரெண்ட் எங்கிருக்கிறது?//

டைலர்ஸ் ரோடு பஸ் நிறுத்தம் (சரி தானா) கோயம்பேடு ல இருந்து வரும் போது பச்சையப்பாஸ் க்கு அடுத்த நிறுத்தம். இது வரை போனது இல்லை. இந்த முறை இந்திய பயணத்தின் மூலம் போகலாம் என்று ஒரு எண்ணம். நீங்க பில் கொடுப்பதாக இருந்தால் முழு முகவரி தொலைபேசி எண் னுடன் வாங்கி அனுப்புறேன். என்ன சொல்லுறீங்க ;)

Vidhya Chandrasekaran said...

முட்டை கறி சூப்பராக இருந்தது. அது மட்டன் பிரியாணி தான் சிவா. அப்புறம் உங்களுக்கு ஸ்பான்சர் பண்றேன். ஆனா நீங்க எனக்கு accord metropolitan போக ஸ்பான்சர் பண்றீங்களா?

KarthigaVasudevan said...

//"அகநாழிகை" said...
வித்யா, கிராண்ட் பேலஸ் சென்றிருக்கிறேன். அவ்வளவாக என்னை ஈர்க்கவில்லை. கிராண்ட் பேலஸில் குறையாக நான் கருதும் விஷயம், வெரைட்டி கிடையாது. நீங்கள் மறுபடியும் வேறொரு நாள் சாப்பிடப்போனால் அதே அயிட்டங்கள்தான் இருக்கும்.
கிராண்ட் பேலஸ்க்கு சற்று அருகில் இருக்கும் ‘ஆத்தங்குடி‘ என்னைக் கவர்ந்த இடம். அருமையான இன்டீரியருடன், ஆப்பம், தேங்காய்ப்பால், நாட்டுக்கோழி என பிரமாதமாக இருக்கும். ஒரு முறை போய்ப்பாருங்கள். நான் தாம்பரத்தில் இருக்கும் போதெல்லாம் ஒரே நல்ல ஓட்டல் ‘பட்ஸ் போஜன்‘ தான். அதன் பிறகு வசந்தபவன், ஹென்கலா எல்லாம் வந்தது. ரங்கநாதபுரம் போகிற வழியில் இருந்த அஞ்சப்பர் (அரசப்பர்...?) இப்போது இல்லையா ? தெரியவில்லை. பூந்தமல்லி நெடுஞ்சாலையிலிருக்கும் ‘ரிவால்விங் ரெஸ்டாரண்ட்‘ போயிருக்கிறீர்களா..? வித்தியாசமான அனுபவமாக இருந்தது.

- “அகநாழிகை“ பொன்.வாசுதேவன்//

வித்யா பதிவை படிக்க வந்து உங்க பின்னூட்டத்துல அதிக விஷயங்கள் தெரிஞ்சிகிட்டேன் ...இந்த வீக் எண்டு ரிவால்விங் ரெஸ்டாரண்ட்‘ தான் எங்க சாய்ஸ்..நன்றி வித்யா & பொன் வாசுதேவன்

Thamira said...

அய்யய்யோ.. ஏண்டா இங்க வந்தோம்னு ஆயிப்போச்சு.! காஞ்சு கிடக்குறவன்கிட்ட போயி முட்டை கறி, பேபி கார்ன், சூப், மட்டன்.. அது இதுன்னு.. அவ்வ்வ்வ்...

சந்தனமுல்லை said...

ஹ்ம்ம்...யம்மி!

அ.மு.செய்யது said...

சென்னையில எந்த ரெஸ்டாரண்ட்ல எது கிடைக்கும்னு உங்களுக்கு ஃபிங்கர் சிப்ஸ்....... சாரி..டிப்ஸ் போல..

Vidhya Chandrasekaran said...

நன்றி மிஸஸ் தேவ்.

வாங்க ஆதி. அப்பாடா பதிவின் நோக்கம் நிறைவேறிடுச்சு:)

நன்றி முல்லை. இட் வாஸ் யம்மீ:)

செய்யது நான் இப்பதாங்க எக்ஸ்ப்ளோர் பண்ண ஆரம்பிச்சிருக்கேன். Long way to go. அடுத்த மாதம் இட்டாலியனும், லெபானிஸும்:)

மணிகண்டன் said...

****
அடுத்த மாதம் இட்டாலியனும், லெபானிஸும்
****

இட்டாலியன் போக முடியாட்டா நான் எழுதின அராபியாட்டா வேப்பம் பூ ரசம் வைங்க ! நம்ப ஊரு இட்டாலியன் இப்படி தான் இருக்கும்.

எத்தியோப்பியன் உணவகம் இருக்கான்னு தேடி பாருங்க. வெஜ் மக்களுக்கு நல்ல தீனி.

Vidhya Chandrasekaran said...

ஹி ஹி continental வீட்ல ட்ரை பண்ணி கொடுமைபடுத்த மாட்டேன்னு ரகுவுக்கு சத்தியம் பண்ணி கொடுத்திருக்கேன் மணிகண்டன். லெபானீஸ் போயாச்சு:)

இத்தாலியன் ரெண்டு ஆப்சன் இருக்கு. எதுக்கு போலாம்னு யோசிச்சிகிட்டிருக்கேன்.

தாரணி பிரியா said...

கொட்டிக்கலாம் வாங்கன்னு லேபிள்ல மட்டும்தான் போடறீங்க. ஒரு தடவையாவது கூப்பிட்டுட்டு போறீங்களா போங்க வித்யா உங்க பேச்சு கா

நாகை சிவா said...

//முட்டை கறி சூப்பராக இருந்தது.//

ஒரு இரு வார்த்தைகள் என்றால் சூப்பராக இருந்துச்சுனு முடிச்சுட்டீங்க. டேஸ்ட் எப்படி இருந்துச்சு. கோவா முட்டை கறி போட்டு இருந்ததும் கேட்டேன், நம்ம ஊர் முட்டை கறி மாதிரி தானா? இல்ல வேறு மாதிரியா?

// அது மட்டன் பிரியாணி தான் சிவா. //

சரி செய்துட்டீங்க போல...

//அப்புறம் உங்களுக்கு ஸ்பான்சர் பண்றேன். ஆனா நீங்க எனக்கு accord metropolitan போக ஸ்பான்சர் பண்றீங்களா?//

Accord Metropolitan னா அப்படி ஒரு உணவகம் இருக்கா என்ன? விசாரித்து பாப்போம், அப்புறம் முடிவு பண்ணலாம் ;)) நாம தெளிவுனா அதர் எண்ட் அதை விட தெளிவா இருந்தா எப்படி பொழப்பு நடத்துவது ??? :(

Vidhya Chandrasekaran said...

கோச்சுக்காதீங்க தாரணி. அடுத்த தடவை கோவை வரும்போது நீங்களே அழைச்சிகிட்டு போங்க:)

சிவா நம்ம ஊரு டேஸ்ட் இல்ல. காரம், மசாலா கொஞ்சம் கம்மியா இருந்தது. அந்த கிரேவி ரொம்ப ரிச்சா இருந்தது. அப்புறம் accord சென்னைல பெரிய 5 ஸ்டார் ஹோட்டல். அங்கிருக்கும் ஒரு உணவகத்திலிருந்து சென்னையின் மொத்த அழகையும் கண்டு ரசிக்கலாமாம். High altitude dining. ஒரு முறை பஃபே பற்றி கேட்டதுக்கு 790+taxes என்றார்கள். அதான் ஸ்பான்சர் தேடிகிட்டிருக்கேன்:)

Arun Kumar said...

//வாங்க truth. இப்படி சாப்பிட்டும் i managed to shed weight:)//

எப்படி?எங்களுக்கும் சொல்லுங்க..

மனுநீதி said...

அந்த revolving restaurant பேர் carnival heights. tailors ரோடு பஸ் ஸ்டாப் அருகில் உள்ளது. ஒரு த்ரில்காக போகலாம் ஆனா சாப்பாடு ரொம்ப பிரமாதமா இருக்கும்னு சொல்ல முடியாது.

Vidhya Chandrasekaran said...

வாங்க அருண். அதப்பத்தி தனியா டிஸ்கஸ் பண்ணலாம்:)

தகவல்களுக்கு நன்றி மனுநீதி. லிஸ்டில் சேர்த்துட்டேன். போஒனவுடன் பதிவா போடறேன்:)

நாகை சிவா said...

ம்ம்ம்ம்ம்

போயிடலாமே!

உங்க பையன் பிறந்தநாள் வேற வருது! உங்க அழைப்பிற்காக வெயிட்டிங்க :))))