May 5, 2009

ஒரு பாட்டு பாட்றீ

ஒரு பாட்டு பாட்றீ
என்ன பாட்டய்யா?
நம்ம பாட்டுத்தேன்

இது தேவர் மகனில் வரும் டயலாக்.

உன் இசையென்னும் இன்ப வெள்ளத்தில் மூழ்க ஓடோடி வந்த என்னை ஏமாற்றாதே. பாடு சாந்தா. பாடு.

இது எந்த படம்ன்னு தெரியல.

நான் காலேஜ் படிக்கும்போது ரொம்ப பேமஸ் டயலாக் இதுரெண்டும். என் வகுப்பில் சுமாராக பாடக்கூடியவர்களில் நிறைய பேர். (நானும் ஒருத்தின்னு சொன்னா நம்பவா போறீங்க). ஸ்கூல் choir (தமிழ்ல என்ன?) டீமில் பெரிய மனசு பண்ணி எனக்கு ஒரு இடம் கொடுத்தாங்க. பாரதியாரின் "பூட்டைத் திறப்பது" பாட்டுக்கு இசையமைத்து பாடியதில் எங்களுக்கு நி்றைய பாராட்டுக்கள். சிறு வயதில் விடியற்காலையில் தலையில் ஸ்கார்ஃப் கட்டி கதறக் கதற பாட்டு கிளாசுக்கு துரத்தப்பட்ட சிறுமிகளில் நானும் ஒருத்தி. நல்லவேளையாக பாட்டு டீச்சர் கல்யாணமாகி வேறு ஊருக்கு சென்றுவிட்டதால் நானும் தப்பித்தேன். என் இசைப் பயணம் "ராரா வேணு கோபாலா"வோடு நின்றுவிட்டது. தொடர்ந்திருக்குமேயானால் நானும் இன்னிக்கு ஏதாவது ஒரு சேனலில் யாரோட அபஸ்வரத்திற்க்காவது மார்க் போட்டுக்கொண்டிருப்பேன். ஆனாலும் என் திறமையை???!! வளர்க்க முயற்சி செய்தது பள்ளி நிர்வாகம். கர்நாடிக் கத்துக்க சொன்ன மியுசிக் டீச்சரிடம் "நீங்க போதும் மிஸ். நான் வேறயா?"ன்னு கேட்டு அவங்க கொஞ்சம் லேட்டா புரிஞ்சுகிட்டு நான் ரொம்ப லேட்டா சாரி சொன்னது தனிக்கதை.

சரி மேட்டருக்கு வருவோம். என்னை மாதிரி சரி சரி காண்டாவதீங்க. பொதுவா பாத்ரூம் சிங்கர் என்றழைக்கப்படும் கர்னாடக சங்கீதத்தை முறைப்படி பயிலாதவர்கள் நிறையப் பேருக்கு குரல் வளம் ரொம்ப நல்லாருக்கும். கல்லூரியில் விரிவுரையாளர் வராத சமயங்களிலோ, டூர் போகும்போதோ அந்தாக்ஷ்ரி எனப்படும் பாட்டுக்கு பாட்டு விளையாடுவது வழக்கம். செம ஜாலியா இருக்கும். மொழி வரைமுறை இல்லாமல் ஒரே பாட்டு தமிழ், தெலுங்கு, ஹிந்தி என ரீப்பிட்டடிக்கப்படும். சில சமயம் ஸோலோ பெர்பாமன்சும் நடத்தப்படும். அம்மாதிரியான சமயங்களில் அடிக்கடிப் பாடப்படும் (கணக்கிலடங்கா) பாடல்களில் சிலவற்றை, எனக்குப் பிடித்தவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

1. கண்மனி அன்போடு காதலன் - குணா
2. நறுமுகையே நறுமுகையே - இருவர்
3. மனம் விரும்புதே - நேருக்கு நேர்
4. நேற்று இல்லாத மாற்றம் - புதிய முகம்
5. யமுனை ஆற்றிலே - தளபதி (நூத்துல 90 பேரோட சாய்ஸ் இதுதான்)
6. மின்னல் ஒரு கோடி - வி.ஐ.பி
7. ராசாத்தி உன்னை காணாத - வைதேகி காத்திருந்தாள்.
8. கண்ணன் வந்து பாடுகின்றான் - ரெட்டைவால் குருவி
9. கண்ணுக்கு மை அழகு - புதியமுகம்

ஸோலோ பெர்மான்ஸ் மாதிரியே குழுவாய் கும்மியடிக்கவும் சில ரெடிமேட் பாடல்கள் இருக்கும். நாலு வரிக்கு மேல் யாருக்குமே தெரியாது. அப்படியே தெரிந்தாலும் ஆரம்பிக்கும்போது இருக்கும் டெம்போ கொஞ்சம் கொஞ்சமாய் குறைந்து ஸ்ருதி சேராமல் ஒருத்தர் மட்டும் மெய்மறந்து??!! பாடிக்கொண்டிருக்க மற்றவர்கள் கிண்டல் பண்ண என முடியும். கண்டிப்பாக யாராவது ஒருத்தர் டேபிள், நோட் புக் என எதிலாவது தாளம் போடுவார். சில இடங்களில் கோரஸ் சப்தம் காதைக் கிழிக்கும். எவ்வளவு சோகமாக இருந்தாலும் இப்படி குழுவாகப் பாடும்போது தொற்றிக்கொள்ளும் உற்சாகம் அலாதியானது. அதில் சில

1. செந்தமிழ் தேன்மொழியாள்
2. காட்டுக்குயிலே - தளபதி
3. முஸ்தபா முஸ்தபா - காதல் தேசம்
4. தண்ணீ குடம் எடுத்து - வைகாசி பொறந்தாச்சு
5. மாங்குயிலே பூங்குயிலே - கரகாட்டக்காரன்

இது வெறும் உதாரணம் தான். இந்த மாதிரி நிறைய பாட்டு இருக்கு. இப்போதைக்கு இந்த பாட்டெல்லாம் அசைப் போட்டு ஜாலியா இருங்க.

அப்புறம் முக்கியமான விஷயம் மறந்துட்டனே. பாடகர் அவதாரம்??!! எடுத்திருக்கும் அப்துல் அண்ணாவுக்கு வாழ்த்துக்கள். அப்படியே இந்த பதிவு அவருக்கு டெடிகேட் செஞ்சுக்கறேன் (ஏண்டா பாடினோம்ன்னு பீல் பண்றீங்களாண்ணே).

37 comments:

Raju said...

அப்துல்லா அண்ணனுக்கு வாழ்த்துக்கள்...
நாட்டாமைதான் பாட்டே போட மாட்டேங்குறாரே...!

வித்யா அக்கா நீங்களும் பாடகியா?
சொல்லவே இல்ல..!
(காந்தி வேற செத்துட்டாராம்பா..!)

கார்க்கிபவா said...

நான் கூட பாட்டு பாடி பரிசு வனக்கியிருக்கேன்.. அட நம்புங்க.. godrej ல் வேலை செய்த போது, கண் பேசும் வார்த்தைகளுக்கு இரண்டாம் பரிசு, LGல் வேலை செய்த போது செந்தமிழ் தேன்மொழியாள், கல்லுரியில் சங்கீத மேகம், சங்கீத ஜாதி முல்லை.. இப்படி போகுதுங்க..ஆனா பழைய பாடல்கள்ன்னா எனக்கு ரொம்ம்ம்ப புடிக்கும்

இதெல்லாம் ஏன் சொல்றேன்னா.. மீதிய ஸ்ரீமதி வந்து சொல்வாங்க.. :))))

விக்னேஷ்வரி said...

என் வகுப்பில் சுமாராக பாடக்கூடியவர்களில் நிறைய பேர். (நானும் ஒருத்தின்னு சொன்னா நம்பவா போறீங்க). //

சுமாராங்குறதுனால நம்புறேன்.

தொடர்ந்திருக்குமேயானால் நானும் இன்னிக்கு ஏதாவது ஒரு சேனலில் யாரோட அபஸ்வரத்திற்க்காவது மார்க் போட்டுக்கொண்டிருப்பேன். //

இது கொஞ்சம் அதிகமா தெரியல.

"நீங்க போதும் மிஸ். நான் வேறயா?"ன்னு கேட்டு அவங்க கொஞ்சம் லேட்டா புரிஞ்சுகிட்டு நான் ரொம்ப லேட்டா சாரி சொன்னது தனிக்கதை.

:D

நீங்கள் பட்டியலிட்டிருக்கும் பாடல்கள் அனைத்துமே 90/100 பேருக்குப் பிடிக்கும் வித்யா.

பாடகர் அவதாரம்??!! எடுத்திருக்கும் அப்துல் அண்ணாவுக்கு வாழ்த்துக்கள். //

என்னது இது. புதுக்கதையா இருக்கு. எனிவே, வாழ்த்துக்கள் அப்துல்லா அண்ணே.

அமிர்தவர்ஷினி அம்மா said...

உன் இசையென்னும் இன்ப வெள்ளத்தில் மூழ்க ஓடோடி வந்த என்னை ஏமாற்றாதே. பாடு சாந்தா. பாடு.

இது எந்த படம்ன்னு தெரியல.

சிங்காரவேலன்... ஜெமினி, சாவித்திரி...

கர்நாடிக் கத்துக்க சொன்ன மியுசிக் டீச்சரிடம் "நீங்க போதும் மிஸ். நான் வேறயா?"ன்னு கேட்டு அவங்க கொஞ்சம் லேட்டா புரிஞ்சுகிட்டு நான் ரொம்ப லேட்டா சாரி சொன்னது தனிக்கதை.
:))))

வாழ்த்துக்கள் அப்துல்லா அண்ணா.

S.A. நவாஸுதீன் said...

அம்மாதிரியான சமயங்களில் அடிக்கடிப் பாடப்படும் (கணக்கிலடங்கா) பாடல்களில் சிலவற்றை, எனக்குப் பிடித்தவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

"இளைய நிலா பொழிகிறது" பாட்ட மறந்துட்டீங்களே வித்யா. இத சோலோவா பாடாத யாரும் இருப்பாங்கலான்னா சந்தேகம்தான்.

Vidhya Chandrasekaran said...

ஹி ஹி டக்ளஸ் சத்தியமா காந்தி என்னால சாவல:)

ஏன் மீதிய நீ சொல்ல மாட்டியா கார்க்கி?

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி விக்னேஷ்வரி

Vidhya Chandrasekaran said...

நன்றி அமித்து அம்மா.

வாங்க நவாஸுதீன். மறந்துட்டேங்க.

Thamira said...

டெம்பிளேட் பாடல்கள்.! நல்ல நகைச்சுவை நடை உங்களுக்கு.. கலக்கல்.!

Thamira said...

உன் இசையென்னும் இன்ப வெள்ளத்தில் மூழ்க ஓடோடி வந்த என்னை ஏமாற்றாதே. பாடு சாந்தா. பாடு.

இது எந்த படம்ன்னு தெரியல.//

அது 'மணாளனே மங்கையின் பாக்கியம்'. அது சரி, இதெல்லாம் உங்களுக்கு எங்கே தெரியப்போகுது? :-))

சந்தனமுல்லை said...

நேரில் பார்க்கும்போது "ராரா"வை பாட வேண்டும் நீங்கள்..ஓக்கே..:-))

Vidhya Chandrasekaran said...

நன்றி ஆதி. அதானே எனக்கு எப்படி தெரியும். வயசானவங்களுக்கு தான் தெரியும்:)

முல்லை நான் பாட ரெடி. ஆனா நீங்க தெறிச்சு ஓடிட்டீங்கன்னா?

முரளிகண்ணன் said...

அப்ப மே 10 கருத்தரங்க தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடி துவக்கப் போறது நீங்கதானா?

நர்சிம் said...

சிங்காரவேலனே தேவா..

படம் :கொஞ்சும் சலங்கை...

jothi said...

ஒண்ணுமே இல்லாத விஷயத்தையும் உங்களுக்கு சுவையாய் சொல்ல தெரியும் கலை தெரிந்து இருக்கிறது.ஆனால் சாரி மேடம், வாசகர்களை கருத்தில் கொண்டு இந்த மாதிரி எல்லாம் மொக்கை topic போடாதீர்கள்.

Arun Kumar said...

ஒவ்வோரு பதிவிலும் நகைச்சுவை ரொம்ப casual ஆக உங்களுக்கு வருகிறது..

எங்க காலேஜல் யாராச்சுக்கும் லவ் புட்டுகிட்டா அபிராமி அபிராமி , அதையும் எழுதனுமா

பாட்டு தான் பாடி கடுப்பேத்துவோம்

Vidhya Chandrasekaran said...

முரளிகண்ணன் யூ மீன் டமில்டாய் வால்த்து. மீ சாரியா. மீ டோண்ட் நோ டமில்:) ஏங்க கருத்தரங்கம் நல்லா நடக்கனும்ங்கற ஆசை இல்லியா உங்களுக்கு?

வாங்க நர்சிம். ஆதி வேற ஏதோ படம் சொல்லிருக்காரு. பெருசுங்க ரெண்டும் சேர்ந்து ஒரு முடிவுக்கு வாங்க.

ஜோதி நீங்க தப்பா நினைச்சிட்டீங்க. மொக்கை தான் நம்ம ரெகுலர் சரக்கு. வர்றத தானங்க எழுத முடியும்?

Thamira said...

நர்சிம் :
சிங்காரவேலனே தேவா..
படம் :கொஞ்சும் சலங்கை...//

யோவ் நானே கொஞ்சம் கலாய்க்கலாம்னு அதை எழுதினா நீங்கள் பெரிய புத்திசாலி மாதிரி உள்ளே வர்றீங்களா?

பாருங்க ரெண்டு பேரையும் விட்டு கலாய்க்கிறதை.. தேவையா இது நமக்கு?

பாவம் 'வித்யாவின் மணாளன்'!

அ.மு.செய்யது said...

//நறுமுகையே நறுமுகையே - இருவர்//

என்னோட‌ ஆல்டைம் பேவ‌ரைட்ங‌க்..

ர‌ஹ்மான்,வைர‌முத்து,உன்னி மூணு பேரும் அடிச்சி புர‌ண்டு இந்த‌ பாட்ட உருவாக்கியிருப்பாங்க‌...

YUVA said...

உன் இசையென்னும் இன்ப வெள்ளத்தில் மூழ்க ஓடோடி வந்த என்னை ஏமாற்றாதே. பாடு சாந்தா. பாடு.

Thats RathaKanneer.

சின்னப் பையன் said...

கலக்கல்!!

Vidhya Chandrasekaran said...

நன்றி அருண்.

ஆதி என் மணாளன் பெரும் பாக்கியம் பண்ணிருக்கனும்:)

Vidhya Chandrasekaran said...

நன்றி அ.மு.செய்யது.

யுவா எல்லாரும் பேசி ஒரு முடிவுக்கு வாங்க.

நன்றி ச்சின்னப்பையன்.

எம்.எம்.அப்துல்லா said...

//பாடகர் அவதாரம்??!! எடுத்திருக்கும் அப்துல் அண்ணாவுக்கு வாழ்த்துக்கள். அப்படியே இந்த பதிவு அவருக்கு டெடிகேட் செஞ்சுக்கறேன் //

டேங்க்யூ..டேங்க்யூ..டேங்க்யூ :)

//(ஏண்டா பாடினோம்ன்னு பீல் பண்றீங்களாண்ணே).

//

நான் ஏன் ஃபீல் பண்றேன்?? ஏன்டா பாட வச்சோம்னு ஒரு வேளை பரத்வாஜ் சார் பீல் பண்ணுனாலும் பண்ணியிருப்பாரு. :)))

அ.மு.செய்யது said...

அ.மு.செய்யது said...
மன்னிக்கவும்..தாமதமாக தான் உங்கள் பின்னூட்டத்தை பார்த்தேன்.

அலுவலகத்தில் ஜிமெயில் தடை.ஆகவே கீழ்க்கண்ட எனது உத்யோக முகவரியை குறித்து கொள்ளவும்.

syed.kadhar@wipro.com

தாரணி பிரியா said...

தேங்கஸ் வித்யா எதுக்கா அடுத்த பதிவுக்கு ஐடியா தந்ததுக்கு. நான் பாட்டு பாடி எல்லோரையும் எப்படி அழுகவெச்சேன் அப்படின்னு சொல்லிறலாம்தானே.

அப்புறம் உங்க ஆல் டைம் பேவரைட் எனக்கும் விருப்ப பாடல்கள்தான். காட்டுகுயில எனக்கு ரொம்ப பிடிச்ச பாட்டு. தலைவர் கலக்கி இருப்பாரே :)

Vidhya Chandrasekaran said...

வாங்க அண்ணே. எப்போ ட்ரீட் தர போறீங்க?

நன்றி தாரணி பிரியா.

Vijay said...

அட, நீங்க பாட வேற செய்வீங்களா? பல்கலை வித்தகியாஇருக்கீங்களே.
ம்ம் காலேஜ், டூர், பாட்டு அதெல்லாம் ஒரு காலம். கடைசியா ஒரு பயணத்தில் நான் பாடினது, என் கல்யாணம் முடிந்து திரும்பி ஊருக்கு வேனில் வந்து கொண்டிருந்தபோது தான். என்னருகில் காயத்ரிக்கு நான் கொடுத்த முதல் ஷாக், நான் பாடுவேன் என்பது. அன்று அவளுக்கு வந்த தலைவலி, இன்னமும் தொடர்கிறது.

Vidhya Chandrasekaran said...

ஏதோ சுமாரா பாடுவேன் விஜய்:)

மணிகண்டன் said...

அப்துல்லா சார், கலக்கறீங்க. எந்த படத்துல ? எப்போ பாட்டு ரிலீஸ் ? யாரு கூட டூயட் பாடினது ? எப்ப ட்ரீட் ?

வித்யா, எனக்கு பிடித்த பாடல்கள் குறித்த பதிவு ! ஒரு சில பாடல்களை மறுபடியும் கேட்டு பார்த்தேன்.

dondu(#11168674346665545885) said...

//உன் இசையென்னும் இன்ப வெள்ளத்தில் மூழ்க ஓடோடி வந்த என்னை ஏமாற்றாதே. பாடு சாந்தா. பாடு.
இது எந்த படம்ன்னு தெரியல.//
படத்தின் பெயர் கொஞ்சும் சலங்கை. பாடலின் முதல் அடி: சிங்கார வேலனே தேஏஏவா

சாவித்திரிக்கு குரல் கொடுத்தது எஸ். ஜானகி, ஜெமினி கணேசன் வாசித்தது போல போஸ் கொடுத்த நாதஸ்வரத்துக்கு ஓசை தந்தது காருக்குறிச்சி அருணாசலம்

படம் சமீபத்தில் 1962-ல் வெளியானது.

அன்புடன்,
டோண்டு ராகவப்

Vidhya Chandrasekaran said...

மணிகண்டன் சொல்ல சொல்ல இனிக்கும்ங்கற படத்துல. தென்றலக்கா அவங்க பதிவுல பாட்ட போட்டிருக்காங்க.

தகவல்களுக்கு நன்றி டோண்டு சார்.

தராசு said...

//கர்னாடக சங்கீதத்தை முறைப்படி பயிலாதவர்கள் நிறையப் பேருக்கு குரல் வளம் ரொம்ப நல்லாருக்கும்.//

எங்கியோ பிசிறடிக்குதே.

நல்ல பதிவு வித்யா, அண்ணனுக்கு பாராட்டு எத்தனை தடவைதான் போடறது, சலிச்சுருச்சுப்பா,

இருந்தாலும் அண்ணே, வாழ்த்துக்கள் அண்ணே.

Vidhya Chandrasekaran said...

நன்றி தராசு.

Deepa said...

நல்ல பதிவு. என்னை மாதிரி அசை போடறவங்களுக்காகவே வாரம் ரெண்டு பதிவாச்சும் இப்படிப் போட்டுடுங்க! இதை ரொம்பவே அசை போட்டேன். ஏன்னா நானும் எங்க காலெஜ் ஆர்க்கெஸ்ட்ராவில் இருந்திருக்கேன்.

Vidhya Chandrasekaran said...

நன்றி தீபா.

தமிழன்-கறுப்பி... said...

ஆமால்ல இந்த பாட்டும் கூத்தும் ஒரு உற்சாகம் தொற்றிக்கொள்கிற நிகழ்வும், நினைவுகளும்தான் இல்லையா...?

Vidhya Chandrasekaran said...

ஆமாம் தமிழன் - கறுப்பி. வருகைக்கு நன்றி.