May 18, 2009

ஆலம்பறை கோட்டை

பொங்கல் விடுமுறையின் போது குடும்பமாய் சின்ன ட்ரிப் அடித்தால் நன்றாக இருக்குமென தோன்றியது. வழக்கம்போல் அப்பா வேலையிருக்கென ஜகா வாங்கிவிட்டார். அம்மாவும் வரவில்லையென கூறிவிட (இந்த அம்மாக்களே இப்படித்தான்) ரகு, நான், என் தம்பி மூவரும் மட்டும் கிளம்பினோம். மகாபலிபுரம் பார்த்தாச்சு. எத்தனை தடவை தான் தூங்கிட்டிருக்கிற முதலையையே பார்க்கிறது. அப்பா கடப்பாக்கம் போய்ட்டு வாங்களேன்னு சொல்ல விடு ஜூட்.

கிழக்கு கடற்கரை சாலை வழியாக பாண்டிச்சேரி செல்லும் வழியில் கடப்பாக்கம் என்ற இடத்திலிருந்து மூன்று கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது ஆலம்பறை கோட்டை. கோட்டைன்னவுடனே ரொம்ப பெருசா எதிர்பார்த்தீங்கன்னா என்னை மாதிரி ஏமாந்து தான் போவீங்க. நுழையும்போதே தென்படும் தமிழ்நாடு தொல்பொருள் துறையின் அறிவிப்பு பலகையை பார்க்கும்போதே கோட்டையின் பராமரிப்பு லட்சணம் தெரிந்துவிடுகிறது. அந்த இத்துப்போன பலகையில கோட்டையின் (ஆக்சுவலா அப்படி சொல்றதே ரொம்ப தப்பு. குட்டி சுவர்ன்னு வேணா சொல்லலாம்) வரலாறு போட்டிருந்தாங்க. கி.பி 1735 ஆம் ஆண்டு, நவாப் தோஸ்த் அலிகான் இந்த கோட்டையை ஆண்டு கொண்டிருந்தார்! கி.பி 1750 இல் ஆங்கிலேயர்களை எதிர்க்க உதவிய ஃபிரெஞ்சு தளபதி ட்யூப்ளக்ஸுக்கு இந்த கோட்டையை அப்போதைய நவாப் சுபேதார் முசாஃபர்ஜங் பரிசளித்தார்! பின்னர் கி.பி. 1760 ஆம் ஆண்டு இக்கோட்டையை கைப்பற்றிய ஆங்கிலேயர் அதை சேதப்படுத்தினர். வெள்ளைக்காரன் விட்டுட்டுப் போன கொஞ்ச நஞ்ச சுவத்தையும் 2004 வருடம் வந்த சுனாமி வழிச்சிட்டு போயிடுச்சு.

மேல படத்துல இருக்கிற மாதிரி அங்கங்க நீளமான சுவர்களே எஞ்சியிருக்கின்றன.



இந்த இடிபாடிகளின் மேலேறி பார்க்கும்போது தெரியும் கடல். வாவ். சிம்ப்ளி சூப்பர். மொட்டை வெயிலையும் மீறி கடலின் அழகு கண்களுக்கு குளிர்ச்சியாய் இருக்கிறது.

கிட்டத்தட்ட முக்கால் மணிநேரம் கடலின் அழகை ரசித்து முடித்துவிட்டு உள்ளூர் மீனவர்கள் உடன்வர மோட்டார் படகில் பயணம் ஆரம்பம். ஆர்பரிக்கும் அலையை எதிர்த்து படகு போகும்போது வரும் ஃபீலிங் ரொம்பவே த்ரில்லிங்காய் இருந்தது. எங்கள் மூவரையும் சேர்த்து 7 பேர் இருந்தோம் படகில். ரொம்ப நன்றாகப் பேசினார்கள். எல்லாத்துக்குமே நகைச்சுவை தான். சோகத்தைக் கூட சிரிப்போடு தான் பகிர்ந்தார்கள். அவர்களின் வாழ்க்கை முறை, தொழில் பற்றியெல்லாம் பேசிக்கொண்டிருந்தோம். சுனாமி பற்றிய பேச்செடுத்தவுடன் அனைவருமே அமைதியாகிவிட்டார்கள். யாருக்கும் அந்நிகழ்வினைப் பற்றி பேசக்கூட விருப்பமில்லை. ஒரு ஐந்து நிமிட பயணத்திற்க்குப் பின் கரைக்கு திரும்ப யத்தனித்தவர்களை "இன்னும் கொஞ்சம் தூரம் போலாம்ணா" என்றேன். சிரித்துக்கொண்டே "கரை தெரியுற வரைக்கும் தான்மா உங்களுக்கெல்லாம் சேஃப்டி. கரை மறைஞ்சுதுன்னா தலை சுத்தலும் வாந்தியும் வரும்" என்றார். "பரவால்லணே. கஷ்டமா இருந்ததுன்னா உடனே திரும்பிடலாம்" என்றேன். அரை மனதோடு மிக மெதுவாகத் தான் படகை செலுத்தினார். கொஞ்சம் தூரம் தான் போயிருப்போம். பெரிய அலையை எதிர்த்து படகு போனபோது மேட்ரிக்ஸ் படத்துல அப்படியே அந்தரத்துல ஃபீரிஸாகி நிப்பாங்களே அந்த மாதிரி படகு ஏர்லயே இருந்த மாதிரி ஒரு உணர்வு. அலையைப் பார்த்தவுடனே குலதெய்வம் பேரு கூட மறந்துபோச்சு. இன்னும் ஒரு செகண்ட் விட்டிருந்தா ரகுவுக்கு மொட்டை அடிச்சு அலகு குத்துற அளவுக்குப் போயிருக்கும் என் வேண்டுதல்.

இயல்பு நிலைக்குத் திரும்ப கொஞ்ச நேரம் பிடித்தது. பேஸ்தடித்திருந்த எங்கள் மூஞ்சிகளைப் பார்த்து "என்ன இன்னும் கொஞ்சம் தூரம் போலாமா?" என நக்கலாக கேட்டவரிடம் காலில் விழாத குறையாக கரைக்கு திருப்ப சொன்னேன். ரெண்டு நிமிஷத்துல செத்துப் போன தாத்தா, பெரியப்பா, சித்தப்பா எல்லாம் வந்து வா வான்னு கூப்பிட்ட மாதிரியே இருந்தது. அங்கிருந்து கரையில் தெரிந்த கோட்டையை??!! கொஞ்சம் போட்டோ எடுத்துகிட்டு கரைக்கு வந்ததும் அவர்கள் குடுத்த இளநீர், நுங்கு எல்லாத்தையும் முழுங்கிட்டு தக்ஷின்சித்ரா நோக்கி பயணப்பட்டோம். தக்ஷின்சித்ராவில் அதிகம் நேரம் இருக்கமுடியவில்லை. அரை மணி நேரத்திலேயே கிளம்பியாச்சு.




மேலதிக தகவல்கள்

இடம் - ஆலம்பறை கோட்டை
எங்கிருக்கிறது - மகாபலிபுரத்திலிருந்து 50 கி.மீ தொலைவில் கடப்பாக்கம் என்ற ஊரிலிருந்து 5 கி.மீ.
போக்குவரத்து வசதி - சென்னையிலிருந்து ECR வழியாக பாண்டிச்சேரி செல்லும் அனைத்து பேருந்துகளும் கடப்பாக்கத்தில் நிற்கும். அங்கிருந்து ஷேர் ஆட்டோ மூலமாக ஆலம்பறை செல்லலாம்.

குறைந்த செலவில் (போக்குவரத்து மற்றும் கொரிக்க தான் செலவு) நல்ல ஆட்டம் போடலாம். அதுவும் குழுவாக சென்றால் நல்ல ஜாலியாக இருக்கும். தனிமையில் செல்வதை தவிர்ப்பது நலம் (மீனவர்கள் சொன்னதுங்கோ.)

டிஸ்கி 1 : இது 2008 பொங்கல் விடுமுறையின்போது சென்றது. இப்போ அதே நிலைமையான்னு தெரியல.
டிஸ்கி 2 : நானும் போட்டோ எடுக்கிறேன் பேர்வழின்னு நான் பண்ண ரப்சர காமிரா காதலர் ஆதி (தாமிரான்னு வந்திருந்தா ரைமிங்கா இருந்திருக்கும்) மன்னித்தருள்வாராக.

30 comments:

நட்புடன் ஜமால் said...

பக்கத்தில சாப்பிட என்ன கிடைக்குமுன்னு எழுதலையே!

நலம் தானே!

நட்புடன் ஜமால் said...

\\சோகத்தைக் கூட சிரிப்போடு தான் பகிர்ந்தார்கள்\\

பழகியிருக்கும்

Truth said...

நல்லா என்சாய் பண்ணியிருக்கீங்க போல. எனக்கும் ஊரு சுத்த ரொம்ப பிடிக்கும். ஆனா கூப்டா ஒருத்தனும் வரமாட்டனுங்க.

//டிஸ்கி 2 : நானும் போட்டோ எடுக்கிறேன் பேர்வழின்னு நான் பண்ண ரப்சர காமிரா காதலர் ஆதி (தாமிரான்னு வந்திருந்தா ரைமிங்கா இருந்திருக்கும்) மன்னித்தருள்வாராக.
போட்டோக்கு என்ன குறைச்சல்? நல்லவே எடுத்திருக்கீங்க. :-)

Cable சங்கர் said...

அருமையான நகைச்சுவை இழையோடும் பதிவு..வித்யா..

அ.மு.செய்யது said...

கடைசில உங்க டூர் இப்படி ஆயிடுச்சே !!!

கடலை மட்டும் பாக்குறது நான் நீங்க பெசன்ட் நகருக்கு போயிட்டு வந்திருக்கலாமே...

என்ன கொடும இது ???

கார்க்கிபவா said...

ஆலம்பறை கோட்டையில் எங்கள் அலப்பறைன்னு தலைப்பு வச்சாக்கூடாத்தான் ரைமிங்கா இருக்கும்..

எப்படி டைமிங்கா சொன்னேன் பார்த்தீங்களா?

எம்.எம்.அப்துல்லா said...

//இன்னும் ஒரு செகண்ட் விட்டிருந்தா ரகுவுக்கு மொட்டை அடிச்சு அலகு குத்துற அளவுக்குப் போயிருக்கும் என் வேண்டுதல். //

என்ன இன்னைக்கி காமெடி பின்னுது???

:))

நர்சிம் said...

நல்லா எழுதியிருக்கீங்க வித்யா

Vidhya Chandrasekaran said...

நல்ல உணவு சாப்பிட mid-way என ஒரு ஹோட்டல் இருக்கிறது. கேள்விப்பட்டிருக்கிறேன் ஜமால்.

நன்றி ட்ரூத்.

நன்றி சங்கர்ஜி.

Vidhya Chandrasekaran said...

செய்யது ட்ரிப் ரொம்ப நன்றாகாவே இருந்தது. வித்தியாசமான அனுபவம்.

அலப்பாறையா? நானா? தப்பு கார்க்கி.

எல்லாம் உங்க ஆசிர்வாதம் அண்ணே.

நன்றி நர்சிம்.

சென்ஷி said...

:)))

அமிர்தவர்ஷினி அம்மா said...

:)-

நுழையும்போதே தென்படும் தமிழ்நாடு தொல்பொருள் துறையின் அறிவிப்பு பலகையை பார்க்கும்போதே கோட்டையின் பராமரிப்பு லட்சணம் தெரிந்துவிடுகிறது. அந்த இத்துப்போன பலகையில கோட்டையின் (ஆக்சுவலா அப்படி சொல்றதே ரொம்ப தப்பு. குட்டி சுவர்ன்னு வேணா சொல்லலாம்) //

வித்யா டச்...

Vidhya Chandrasekaran said...

நன்றி சென்ஷி.

நன்றி அமித்து அம்மா. அய்யோ இன்னும் அந்தளவுக்கெல்லாம் எழுத பழகலீங்கோ:)

Anonymous said...

//லையைப் பார்த்தவுடனே குலதெய்வம் பேரு கூட மறந்துபோச்சு. இன்னும் ஒரு செகண்ட் விட்டிருந்தா ரகுவுக்கு மொட்டை அடிச்சு அலகு குத்துற அளவுக்குப் போயிருக்கும் என் வேண்டுதல்.//

நானும் எப்பவும் ராம்க்கு முட்டை, காது குத்தல் இதுமாதிரி தான் வேண்டிப்பேன்.. ஹி..ஹி.. same blood.

Anonymous said...

என்னோட இந்த முதுமலை ட்ரிப் போட்டோ கூட, நான் எடுத்ததுதான். நல்லாருக்க? (அலையை போட்டோ எடுத்து இருக்கலாம்)

anujanya said...

Very interesting.

//அலையைப் பார்த்தவுடனே குலதெய்வம் பேரு கூட மறந்துபோச்சு.//

:))))

// இன்னும் ஒரு செகண்ட் விட்டிருந்தா ரகுவுக்கு மொட்டை அடிச்சு அலகு குத்துற அளவுக்குப் போயிருக்கும் என் வேண்டுதல்.// என்ன ஒரு வில்லித்தனம் !

அனுஜன்யா

Vidhya Chandrasekaran said...

வாங்க மயில். நான் வேண்டுதல் பிசினஸே வச்சிக்க மாட்டேன். அலையை போட்டோ எடுக்கற நிலைமல நான் இல்லீங்க. என் போட்டோவுக்கு மாலை போடப்போறாங்கன்னு தான் நினைச்சேன்.

நன்றி அனுஜன்யா.

jothi said...

// எத்தனை தடவை தான் தூங்கிட்டிருக்கிற முதலையையே பார்க்கிறது. //

யாரை சொல்றீங்க???

விக்னேஷ்வரி said...

ரெண்டு நிமிஷத்துல செத்துப் போன தாத்தா, பெரியப்பா, சித்தப்பா எல்லாம் வந்து வா வான்னு கூப்பிட்ட மாதிரியே இருந்தது. //

ஹிஹிஹி.... ரசித்து சிரித்தேன்.

ஒன்னரை வருஷம் கழிச்சு இந்த பதிவு எழுதனும்னு எப்படி தோணுச்சு வித்யா.

Thamira said...

// இன்னும் ஒரு செகண்ட் விட்டிருந்தா ரகுவுக்கு மொட்டை அடிச்சு அலகு குத்துற அளவுக்குப் போயிருக்கும் என் வேண்டுதல்.// என்ன ஒரு வில்லித்தனம் !

அனுஜன்யா//

ரிப்பீட்டு..

அப்புறம் இப்பிடி உசுப்பி உசுப்பியே உடம்ப ரணகளமா ஆக்கிடுங்க.. போட்டோக்கள் அழகு.! (இப்பல்லாம் நானும் போட்டோக்களை விமர்சிக்க ஆரம்பிச்சுட்டேன். நானும் எப்பதான் பெரியாளாவுறது.?)

Vidhya Chandrasekaran said...

மகாபலிபுர முதலைப் பண்ணை முதலைகளை சொன்னேன் ஜோதி.

நன்றி விக்னேஷ்வரி. இது எப்பவோ எழுதியது. தூசு தட்டி டிஸ்கி சேர்த்து இப்போ போடறேன்.

நன்றி ஆதி:) ஹி ஹி அப்போ இனி அடிக்கடி எல்லாரையும் டார்ச்சர் பண்ண வேண்டியது தான்.

ஆகாய நதி said...

அழிந்து வரும் அழகை அழகுடன் எழுதியுள்ளீர்கள்... ரங்கமணி ரிட்டர்ன் ஆனதும் அங்கலாம் கூட்டிட்டு போக சொல்லி ஸ்டிரைக் பண்ணிட வேண்டியது தான் :)

Deepa said...

Nice :-)

Arun Kumar said...

போட்டோ எல்லாம் சூப்பர்..
ஏதோ தமிழ் படத்தில் இந்த இடத்தை பார்த்தது போல ஞாபகம்

Vijay said...

உங்க பயணக் கட்டுரையைப் படித்த பிறகு எனக்கும் ஆலம்பறக் கோட்டையைப் போய்ப் பார்க்கணும் என்ற ஆசை வந்து விட்டது. தகவலுக்கு ரொம்ப நன்றி.

Vidhya Chandrasekaran said...

நன்றி ஆகாயநதி. கண்டிப்பா போய்ட்டு வாங்க. ஆனா பொழில்குட்டிய ரொம்ப ஜாக்கிறதையா பார்த்துக்கோங்க.

நன்றி தீபா.

நன்றி அருண்.

நன்றி விஜய்.

அமிர்தவர்ஷினி அம்மா said...

எப்பங்க கோட்டைய விட்டு வெளிய வரப்போறீங்க மேடம்

Anonymous said...

// அலையைப் பார்த்தவுடனே குலதெய்வம் பேரு கூட மறந்துபோச்சு. இன்னும் ஒரு செகண்ட் விட்டிருந்தா ரகுவுக்கு மொட்டை அடிச்சு அலகு குத்துற அளவுக்குப் போயிருக்கும் என் வேண்டுதல் //

நல்லா தமாஷா எழுதியிருக்கிறீர்கள், அருமை, I like it!

ஆகாய நதி said...

http://aagaayanathi.blogspot.com/2009/05/blog-post_26.html

இங்கே வந்து பாருங்க... உங்களை ஒரு தொடர் பதிவுக்கு அழைத்திருக்கிறேன் :))

SUFFIX said...

ஆலம்பறை கோட்டைக்கு போய் அலப்பறை பன்னிட்டு, ஒரு பதிவையும் போட்டுடீங்க..சூப்பரு.