August 14, 2009

என் ராசி அப்படி...

ஒருவழியாக தாம்பரத்திற்க்கு டாட்டா காட்டிவிட்டு புது வீட்டில் குடியேறியாச்சு. இந்த இரண்டு வாரங்களும் வேலை. ஸ்ஸப்பா. புது வீடை செட் பண்ணும் வரையில் ஜூனியர் எங்களுடன் இருக்கட்டும் என பெற்றோர் அழைத்து சென்றுவிட்டனர். ஒரு வழியாக வீட்டை செட் பண்ணி சென்ற வியாழன் அவனை அழைத்து வந்தேன். நான்கே நாட்களில் இந்தப் பாழாய்ப்போன பன்றிக்காய்ச்சல் பீதியால் திரும்பவும் அண்ணாநகர் போய்விட்டார் துரை. நீ அங்கே நான் இங்கே என சோக கீதம் இசைத்துக் கொண்டிருக்கிறேன்:(
***********

இரண்டு நாட்களுக்கு முன்னர் தான் இணைய இணைப்பு கிடைத்தது. வேலைப் பளு கொஞ்சம் குறைந்தாற்போல் தெரிந்ததில் கொஞ்சூண்டு ஆனந்தப்பட்டேன். மடேர் மடேர் என அடிக்க வரிசையாக க்யூ கட்டி நிற்கின்றன. மாமனாருக்கு அடுத்த வாரம் ஒரு ஆப்ரேஷன். அது முடிந்ததும் அண்ணாவின் கல்யாணத்துக்கு போகனும்.அது முடிச்சு இன்னொரு பங்கஷன். கவுண்டமனி ஸ்டைலில் "ஆமாமா. நான் ரொம்ப பிஸி." என அலுத்துக்க வேண்டியுள்ளது.
************

Its raining food in anna nagar. மெக்டொனால்ட்ஸை தொடர்ந்து கேஎஃப்சி கடை பரப்புகிறார்கள். சிக்கன் பழக்கப்படுத்தறேன்னு தம்பி அங்க அழைச்சுட்டுப் போனான். சப்புக் கொட்டிக் கொண்டு போனால் இன்னும் ஸ்டரக்ச்சரிங் வொர்க் இருக்கு சார். வீ ஆர் யெட் டு ஓபன் என்றான். யோவ் வேலை முடியலன்னா ஒரு தட்டிய போட்டு கடைய மறைங்கய்யா. நல்லா லைட்டெல்லாம் போட்டுட்டு சின்னப்பசங்கள ஏமாத்தாதீங்க.
************

பாண்டி பஜாரில் உள்ள சரவண பவனிற்கு சென்றோம். அப்பாக்கு அங்கு மட்டும் தான் நல்ல சாப்பாடு கிடைக்குதென்ற நினைப்பு (சுமார் பத்து வருஷமாக ஹோட்டல் என்றால் அங்குதான்). கீழே பயங்கர கும்பல் என மாடியில் உள்ள ஹாலுக்கு போனோம். மீல்ஸ் 185 ரூபாய் என போட்டிருந்தது. சர்வரைக் கூப்பிட்டு ஏன் எனக் கேட்டதுக்கு வெள்ளிப் பாத்திரத்தில் உணவு பரிமாறப்படும் என்றார். "இந்த விலைக்கு சாப்பிட்டுட்டு பாத்திரத்தையும் கையோடு கொண்டுபோய்டலாம் போலிருக்கே" என நான் சொன்னதை அவர் ரசிக்கவில்லை.
"சார் நான் தக்காளி சூப் கேட்டேன். மாத்தி சாஸ் வெச்சிருக்கீங்க பாருங்க" என நான் சொன்னதும் முறைத்தார். ஹும். நாளுக்கு நாள் சரவண பவனில் விலை அதிகரித்துக் கொண்டேஇருக்கிறது. சர்வீசும், குவாலிட்டியும் பாதாளத்துக்கு போய்க்கொண்டிருக்கின்றன.
************

பெற்றோரின் திருமண நாளுக்காக அவர்களுக்கு ட்ரெஸ் எடுக்க போயிருந்தோம். வேண்டாமென சொல்ல சொல்ல அப்பா ஒரு புடவையும், தம்பி இரண்டு சல்வாரும் எடுத்துக்கொடுத்தார்கள். ப்ளீஸ் புடவை வேண்டாமெனக் கெஞ்சியும் கேக்கவில்லை. வீட்டிற்க்கு வந்துப் பார்த்தால் அம்மாவின் புடைவையைவிட என்னுடையது காஸ்ட்லி. உனக்கு மட்டும் எப்படிடி இப்படி அமையுது என அண்ணா கேட்க "என் ராசி அப்படி" என்றேன்.
************

சில வாரங்களுக்கு முன்னால் பைக்கில் சென்ற தம்பி சில்லறை பொறுக்கிவிட்டு வந்தான்.
"ஏண்டா சில்லறை பொறுக்கின?"
"ரெண்டு எருமைமாடுங்க ராங் சைடுல வந்திடுச்சுடி".
"எருமைமாடுக்கு எப்படிடா ரைட்டு ராங்குன்னு தெரியும்?"
"காலேஜ் போற எருமைங்களுக்கு அதுகூட தெரியலன்னா எப்படி?"
***********

இந்த முறை கிருஷ்ண ஜெயந்திக்கு எங்க வீட்டு கிருஷ்ணருக்கு அலங்காரம் பண்ண அம்மாவும் மாமியாரும் தடை விதித்துவிட்டார்கள். காரணம் நான்கு மாதமாக இருந்தபோது கிருஷ்ண அலங்காரம் பண்ணி போட்டோ எடுத்த அடுத்த வாரம் உடல்நிலை மோசமாகி ஆஸ்பிட்டலில் 3 நாள் இருக்க வேண்டியதாய்போச்சு. பட்டதே போதுமென்றார்கள்.ஆசையில் மண் விழுந்த சோகத்தில் நான்.
***********

வழக்கம்போல் பதிவுலகில் இயங்க இன்னும் கொஞ்ச நாள் ஆகும். அடுத்து கண்டிப்பாக ரெஸ்டாரெண்ட் ரிவ்யூ தான். கேஸ்கேடை தொடர்ந்து நளாஸ் ஆப்பக் கடை, BBQ Nation என வரிசையாக வயிறெரிய வைக்கப் போகிறேன் என்பதை அளவில்லா ஆனந்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன். பொறுப்புகளை எல்லாம் நல்லபடியாக முடித்து திரும்பும் வரையில் கடைய பத்திரமா பார்த்துக்கோங்க. என் கடைக்கு வரலயேன்னு கவுத்துடாதீங்க.
***********

ரொம்ப முக்கியமாக பதிவர் சிங்கைநாதனின் உடல்நிலை குறித்த நர்சிம் மற்றும் கேவிஆரின் பதிவுகளை பார்த்தேன். என்னால் இயன்றதை செய்துவிட்டேன். அவர் விரைவில் பூரண நலன் அடைய என் பிரார்த்தனைகள்.

நீங்களும் உதவ நினைத்தால்

ICICI Account Details
Account Number: 612801076559
Name: M.KARUNANITHI
Branch: Tanjore

Singapore Account Details
Account Number: 130-42549-6
Name: Muthaiyan Karunanithi
Bank: DBS - POSB Savings

ராஜாவின் தொலைபேசி : +966 508296293
நண்பர் கருணாநிதி செல்பேசி எண் : +65 93856261

23 comments:

கார்க்கிபவா said...

வெல்கம் பேக்.. ஜூனிய்ர பத்திரமா பார்த்துக்கொங்க..

யாசவி said...

what meals 185?

I fear to settle back india. singapore is cheap.

// joke about the accident is nice//

:-)

யாசவி said...

anyway try KFC crispy chicken and popcorn chicken it is very nie

Raju said...

Come Back Soon.

R.Gopi said...

Welcome Back Vidya.....

Saravana Bhavan - பேரை கேட்டாலும், பில்லை பார்த்தாலும் சும்மா அதிருதுல்ல... (துபாயிலும் கொள்ளை விலை.... ஆனால், சர்வீஸும், குவாலிட்டியும் பரவாயில்லை ரகம்...)

குட்டீஸ் பத்திரமா பார்த்துக்கோங்க...

சீக்கிரம் நிறைய எழுதணும்னு சொன்னதை எழுதுங்க...

வாழ்த்துக்கள் வித்யா...

Arun Kumar said...

welcome back vidya

Arun Kumar said...

சரவணபவன் என்றால் பகல் கொள்ளை என்று தமிழ் அகராதியில் அர்த்தம் கொடுக்கலாம்.

தில்லி கரோல்பாக்கில் 3 வருடத்துக்கு முன்னரே ஒரு meals 350ரூபா இப்ப எப்படியோ

பின்னோக்கி said...

நான் வலை தளத்துக்கு புதியவன். தங்களின் அனைத்து ப்ளாக்ஸ் படித்தேன். எளிய நடையில், இயல்பாக எழுதுகுறீர்கள். தங்களை போன்றவர்களின் எழுத்துக்கள் படித்து நான் கற்க வேண்டும். வாழ்த்துக்கள்.

Cable சங்கர் said...

welcome back..

துபாய் ராஜா said...

நல்ல ராசி தான்.

//ஏண்டா சில்லறை பொறுக்கின?"
"ரெண்டு எருமைமாடுங்க ராங் சைடுல வந்திடுச்சுடி".
"எருமைமாடுக்கு எப்படிடா ரைட்டு ராங்குன்னு தெரியும்?"
"காலேஜ் போற எருமைங்களுக்கு அதுகூட தெரியலன்னா எப்படி?"//

மிகவும் ரசித்தேன். :))

ஆகாய நதி said...

Super updates :)

"உழவன்" "Uzhavan" said...

காசையும் வாங்கிட்டு காக்காய்க்கு சோறு வைக்கிற மாதிரி இத்தினியோண்டுதான் வைப்பாங்க.
சீக்கிரம் அடுத்த இடுகையைப் போடுங்க.

Vidhya Chandrasekaran said...

நன்றி கார்க்கி.
நன்றி யாசவி.
நன்றி டக்ளஸ்.
நன்றி கோபி.
நன்றி அருண்.
நன்றி பின்னோக்கி.
நன்றி சங்கர்ஜி.
நன்றி துபாய் ராஜா.
நன்றி ஆகாயநதி.
நன்றி உழவன்.

Unknown said...

//"காலேஜ் போற எருமைங்களுக்கு அதுகூட தெரியலன்னா எப்படி?"
//

:-))))))))))))))))))))))))

//ரொம்ப முக்கியமாக பதிவர் சிங்கைநாதனின் உடல்நிலை குறித்த நர்சிம் மற்றும் கேவிஆரின் பதிவுகளை பார்த்தேன். என்னால் இயன்றதை செய்துவிட்டேன். அவர் விரைவில் பூரண நலன் அடைய என் பிரார்த்தனைகள்.//

நன்றி வித்யா

Anonymous said...

எருமைமாடு சம்பவம் சூப்பர்

தாரணி பிரியா said...

வாங்க வித்யா நீங்க ஜூனியர் எல்லாரும் நலமா

தாரணி பிரியா said...

வாங்க வித்யா நீங்க ஜூனியர் எல்லாரும் நலமா

Vinitha said...

யாசவி, சிங்கப்பூருக்கு எனக்கு ஒரு விசா பார்சல்!

:-)

Vinitha said...

Where is the BBQ Nation? I have seen 2 in Bangalore (Koramangala, JP Nagar).

@ 275 plus taxes, the Non veg starters are the best and lovely! You also get good fish and biriyani too! A free mocktail drink is given too!

விக்னேஷ்வரி said...

Nice Come back Vidhya.

ஜூனியர் இல்லையா.... ரகு பாவம் உங்க கிட்ட மாட்டிக்கிட்டாரா....

நல்லா லைட்டெல்லாம் போட்டுட்டு சின்னப்பசங்கள ஏமாத்தாதீங்க //

:P

இங்கே கூட சரவண பவன் பரவாயில்லை போலவே.

நாம அடுத்தவங்களுக்கு ஒரு டிரஸ் வாங்கப் போறதே நமக்கு நாலு அள்ளிட்டு வர தானே.

எருமை மாடுகளுக்காக சில்லறை பொறுக்குரத்தில் தப்பில்லை வித்யா.

இந்த போட்டோ அழகு.

சீக்கிரம் வாங்க உங்க சாப்பாட்டுப் பதிவுகளோட.

நல்ல துணுக்ஸ் வித்யா.

Vidhya Chandrasekaran said...

நன்றி ராஜா.
நன்றி சின்ன அம்மிணி.
நன்றி தாரணி பிரியா.
நன்றி வினிதா. BBQ is in T.Nagar. They dont hv ala carte menu i guess. The buffet spread is 450 Rs with unlimited starters. BBQ @ the table is really awesome.
நன்றி விக்கி:)

☀நான் ஆதவன்☀ said...

welcome back :)

Gokul R said...

junior kku இடது தோல் பட்டையின் அருகே கொப்புளம் இருக்கே...enna aachu ???