January 20, 2010

அளவுக்கு மீறினால்...

இப்போதைய பரபரப்பான காலத்தில் குண்டூசி விற்கக்கூட அட்ராக்டிவான விளம்பரம் தேவைப்படுகிறது. டிவி, பத்திரிக்கை, ஹோர்டிங் போர்டுகள், ஆஃபர், ஸ்டால்கள், ஸ்பான்சர் என பல வகையில் விளம்பரங்கள் செய்யப்படுகின்றன. இது நுகர்வோர் பொருட்களுக்கு மட்டும்தான் என்ற நிலை மாறி அனைத்து துறைகளும் தத்தம் இருப்பைக் காட்டிக்கொள்ள விளம்பரம் தர ஆரம்பித்துவிட்டன.

தினசரிகளிலும் டிவி சேனல்களிலும் இப்போது நுகர்வோர் பொருட்களுக்கான விளம்பரங்களை விட சினிமா படங்களுக்கான விளம்பரங்கள் தான் ஜாஸ்தி. விளம்பரங்கள் மட்டுமில்லாமல் படத்தின் மீதான் எதிர்பார்ப்பை க்ரியேட் பண்ண/கூடச் செய்ய டாக் ஷோ, கெஸ்ட் ஷோ என நிறைய ப்ரோமோ நிகழ்ச்சிகள் நடத்துகிறார்கள். இந்த ப்ரோமோ நிகழ்ச்சிகளின் நோக்கமான க்ரியேட்டிங்க் எக்ஸ்பெக்டேஷன் சில/பல சமயங்களில் எதிர்மறையாய் போய்விடுகிறது.

முதலில் டிவி விளம்பரங்களுக்கு வருவோம். சன் டிவியை இந்த ஆட்டத்தில் சேர்த்துக்க வேண்டாம். சன் குழும சேனல்களில் சோப் விளம்பரத்தைவிட அதிக தடவை விஜய் தான் வருகிறார். திரும்ப திரும்ப காட்டும்போது அடப்போங்கடா என்ற ஃபீலிங் வருகிறது. இது இல்லாமல் கலைஞர், விஜய், ஜெயா போன்ற சேனல்களில் ஒளிபரப்பப்படும் ட்ரெய்லர்கள் அடுத்த ரகம். இதில் சில ட்ரெய்லர்களைப் பார்த்தாலே படத்தை பார்க்கும் ஆர்வம் ஏற்படும். சில சமயங்களில் ட்ரெய்லரே இப்படின்னா படம் எப்புடி இருக்கும் என்ற பீதி ஏற்படும்.

அடுத்து ரிலீசான படங்களிலிருந்து சில சுவாரஸ்யமான சீன்கள் போடுவார்கள். சில சீன்கள் நிஜமாவே சூப்பராக இருக்கும். சில சீன்களை பார்த்தால் அஞ்சு நிமிஷ சீனையே பார்க்க முடியலயே. இரண்டரை மணி நேரம் படம் எப்படி பார்ப்பது என்ற பயம் ஏற்படும். பாடல்கள் ஒளிபரப்பப்படுவது இன்னொரு வகையான விளம்பரம். இது ஒரு பெரிய ப்ளஸ் பாயிண்ட். இன்பாஃக்ட் விஜய் படங்கள் கொஞ்சம் ஓடுவது இதனால்தான்.

இப்போ தான் இருக்கு பாடாவதி பிரச்சனை. ஒரு படம் ரிலீசாவதற்கு முன்னால் அதில் நடித்த நடிகர்கள், இயக்குனர், தயாரிப்பாளர், இசையமைப்பாளர் என அத்தனை பேரையும் சோபாவில் உட்கார வைத்தோ அல்லது முளைப்பாரி சுற்றி கும்மியடிப்பதுபோல் செமி சர்க்கிளாக நிற்க வைத்தோ பேட்டி/கல்ந்துரையாடல் என்ற பெயரில் உளறவிடுவது. அந்த மாதிரி நிகழ்ச்சியில் சம்பந்தப்பட்ட நடிகர்/நடிகை இந்தப் படத்துக்காக உசிர கொடுத்து நடிச்சோம். எட்டாவது வார்டுல ஷூட்டிங் நடந்தபோது ஒரு பெரிய கொசு கடிச்சுது. அந்தளவுக்கு கஷ்டப்பட்டோம் என்பார்கள். பேட்டி எடுக்குற பிரகஸ்பதி கண்ண சிமிட்டிக்கிட்டே ஹீரோயின் கிட்ட ஹீரோவப் பத்தியும், ஹீரோகிட்ட ஹீரோயினோட பெர்பாஃமன்ஸ் பத்தியும் கேணத்தனமா ஏதாவது கேட்டு வைக்கும். முக்கியமா ஹீரோக்கோ இல்ல ஹீரோயினுக்கோ ஏதாவது டான்ஸ் சீக்வென்ஸ் ஷூட் பண்னும்போது கண்டிப்பா 108 டிகிரி ஜுரம் இருந்திருக்கும். அதையும் தாண்டி ஆடிருப்பாங்க. கேக்கறவனெல்லாரும் கேணைங்க தான்.

அடுத்ததா நம்ம கிரியேட்டிவ் மண்டை வருவாரு. பேட்டி எடுக்கறவங்க தன் இண்டலிஜன்ஸ் காமிக்க இது அந்தப் படத்தோட காப்பியாம்பாங்க. இவரும் சிரிச்சுக்கிட்டே அப்படி ஒரு படம் வந்துதாம்பாரு (முடிஞ்சா இந்த சுஹாசினிய நாடு கடத்த முடியுமான்னு பாருங்கப்பா. அவங்களும் அவிங்க டிரெஸ்சும்). அதெப்பெடி எல்லா டைரக்டர்களும் சொல்லி வச்சா மாதிரி "வித்யாசமான சப்ஜெக்ட்"ன்னு சொல்றாங்கன்னு தெரியல. ஹீரோ செட்டுல காமன் மேன் மாதிரி நடந்துகிட்டார். டீ தான் சாப்பிட்டார். ரிக்ஷாவுல தான் வந்தார்ன்னு ஹீரோக்கு ஜைன் ஜக் போடுவாங்க (அசல் வரட்டும். சரணுக்கு இருக்கு). இதெல்லாம் செஞ்சாரே கொஞ்சமாச்சும் நடிச்சாரான்னு கேளுங்க. ம்ஹூம். ஏதாவது எக்குத்தப்பா சொன்னா அடுத்த படத்துக்கு கால்ஷீட் கிடைக்காதுல்ல.

படத்திற்கு பிரமாண்டம் அவசியம் தான். சில சமயங்களில் மட்டும். பெரிய மாளிகை போன்ற செட்டோ, வெளிநாட்டு பாடலோ பார்க்கும்போது மக்கள் தங்கள் ஏக்கங்களை தீர்த்துக் கொள்வார்கள். அதுவும் அவசியமென்றால் செய்யலாம். அதை விடுத்து ஹீரோ போட்ட கண்ணாடி 4 கோடி, ஷூவுக்கு 3 கோடி என்றெல்லாம் செலவு செய்வது எதற்கு (செல்வா ஆயிரத்தில் ஒருவன் ஆப்பு வச்சிருச்சு. அடுத்த படத்துலயாவது பார்த்து பண்ணுங்க)? சன் ரைஸ் காமிக்கிறதுக்கு ரொம்ப மெனெக்கெட்டோம். அதுக்கே ஒரு 4 கோடி போச்சும்பார்கள். எவன் அப்பன் வூட்டு காசோதானே?

இந்த அலப்பறை பண்றானுவளேன்னு தியேட்டர் போனா கிர்ர்ர்ர்ர். ஹீரோ சுழட்டி சுழட்டி அடிக்கும்போதே நமக்கும் தலைவலி வந்துருது. இவ்ளோ கோவம் ஏன்னு யோசிப்பீங்கதானே. போன வாரம் ஒரு கருமத்த பார்த்து தொலச்சேன். இத்தனைக்கும் பாதி படம் கூட பார்க்கல. ரெண்டு வருஷம் எடுக்க இந்தப் படத்துல என்ன இருக்கு (சீயான் இப்படியே தேடிப்போய் மாட்டுங்க. விளங்கிரும்)? ஹீரோயின் ஒரு பாட்டுல போட்ட செருப்பு 3 கோடியாமாம். படதுவக்க விழா அழைப்பிதழ் 15,000 ரூபாய். படத்த ஒழுங்கா எடுங்கப்பு. கிராமத்தயெல்லாம் அப்புறம் தத்து எடுக்கலாம்.

28 comments:

Anonymous said...

//ஷூட்டிங் நடந்தபோது ஒரு பெரிய கொசு கடிச்சுது.//

ஹஹா, காபி வித் அனுல இந்தமாதிரிதான் கொஞ்சநாள் கேட்டுக்கிட்டு இருந்தது. நல்லவேளை நிறுத்திட்டாங்க :)

Chitra said...

why blood? Same blood.

Vidhoosh said...

இத்தனைக்கு அப்புறம், இத்தனை நாள் கழிச்சு கந்தசாமி பாக்க வேண்டிய தேவை என்ன??? ////இப்படியே தேடிப்போய் மாட்டுங்க. விளங்கிரும்)? //// ரிப்பீட்டு :))

Anonymous said...

சுஹாசினிய நாடு கடத்த முடியுமான்னு பாருங்கப்பா. அவங்களும் அவிங்க டிரெஸ்சும்). //

over to vikky :)

டிவி மட்டும் இல்லை, விகடன் போன்ற பத்திரிக்கைகளும் அப்படித்தான்.. வித்தியாசம், ஆஅவ்வ்வ்வ்
கவுண்டமணி மாதிரி : வித்துவான் வித்துவானு சொல்றாங்க.. என்னத்த வித்தாணோ :))

pudugaithendral said...

நஞ்சாத்தான் போச்சு.
:(((

Vidhya Chandrasekaran said...

நன்றி அம்மிணி.
நன்றி சித்ரா.
நன்றி விதூஷ் (விதி வலியது)
நன்றி மயில்.
நன்றி கலா அக்கா.

sathishsangkavi.blogspot.com said...

தமிழ் சேனலில் விளம்பரம் அதிகம் இல்லாத ஒரே சேனல் டிஸ்கவரி தான் அதைப்பாருங்க...

Unknown said...

தமிழ் படம் ப்ரோமோ பாத்திங்களா..., இவுங்க எல்லாத்தையும் ஓட்டி இருப்பாங்க...

S.A. நவாஸுதீன் said...

///எட்டாவது வார்டுல ஷூட்டிங் நடந்தபோது ஒரு பெரிய கொசு கடிச்சுது. அந்தளவுக்கு கஷ்டப்பட்டோம் என்பார்கள்.///

///கண்டிப்பா 108 டிகிரி ஜுரம் இருந்திருக்கும். அதையும் தாண்டி ஆடிருப்பாங்க. கேக்கறவனெல்லாரும் கேணைங்க தான்///

///(முடிஞ்சா இந்த சுஹாசினிய நாடு கடத்த முடியுமான்னு பாருங்கப்பா. அவங்களும் அவிங்க டிரெஸ்சும்).///

கலக்கிட்டிங்க வித்யா. ரொம்ப நாள் ஆச்சு உங்களை இந்த ஃபார்ம்ல பார்த்து. இடுகை முழுவதையும் ரொம்ப ரசிச்சு படிச்சேன்.

ஊரே கிழிச்சு நந்தலாக்கி தொங்கவிட்டதுக்கப்புறம் ஏன் நீங்க ரிஸ்க் எடுத்தீங்க. (அதுவும் நல்லதுக்குதான். இல்லேன்னா இப்படி சூடா எங்களுக்கு ஒரு ஸ்பெஷல் இடுகை கிடைச்சிருக்காதே)

S.A. நவாஸுதீன் said...

///எட்டாவது வார்டுல ஷூட்டிங் நடந்தபோது ஒரு பெரிய கொசு கடிச்சுது. அந்தளவுக்கு கஷ்டப்பட்டோம் என்பார்கள்.///

///கண்டிப்பா 108 டிகிரி ஜுரம் இருந்திருக்கும். அதையும் தாண்டி ஆடிருப்பாங்க. கேக்கறவனெல்லாரும் கேணைங்க தான்///

///(முடிஞ்சா இந்த சுஹாசினிய நாடு கடத்த முடியுமான்னு பாருங்கப்பா. அவங்களும் அவிங்க டிரெஸ்சும்).///

கலக்கிட்டிங்க வித்யா. ரொம்ப நாள் ஆச்சு உங்களை இந்த ஃபார்ம்ல பார்த்து. இடுகை முழுவதையும் ரொம்ப ரசிச்சு படிச்சேன்.

ஊரே கிழிச்சு கந்தலாக்கி தொங்கவிட்டதுக்கப்புறம் ஏன் நீங்க ரிஸ்க் எடுத்தீங்க. (அதுவும் நல்லதுக்குதான். இல்லேன்னா இப்படி சூடா எங்களுக்கு ஒரு ஸ்பெஷல் இடுகை கிடைச்சிருக்காதே)

"உழவன்" "Uzhavan" said...

//எட்டாவது வார்டுல ஷூட்டிங் நடந்தபோது ஒரு பெரிய கொசு கடிச்சுது. //

ஆபீசுல டீ குடிக்கும்போதா இந்த வரியைப் படிக்கனும்.. சிரிச்சுத் தொலைச்சதுல மானிட்டரிலும் டீ :-))

//போன வாரம் ஒரு கருமத்த பார்த்து தொலச்சேன். //

நல்ல வேளை நான் இன்னும் இந்தக் கருமத்த பார்த்துத் தொலைக்கல..

மாலோலன் said...

அருமையான பதிவு.வெகுவாக எழுதி இருக்கீறிர்கள்.முழுவதையும் ரொம்ப ரசித்து படித்தேன்.

///(முடிஞ்சா இந்த சுஹாசினிய நாடு கடத்த முடியுமான்னு பாருங்கப்பா. அவங்களும் அவிங்க டிரெஸ்சும்).///

உங்களுக்கு அப்படீ என்ன பெரிய காண்டு சுஹாசினி மீது ? ஒருவேளை
உங்களைவிட அழகாக இருக்கிறாறோ?

க ரா said...

நல்ல பதிவு

பழமைபேசி said...

:-0)

Rajalakshmi Pakkirisamy said...

//(அசல் வரட்டும். சரணுக்கு இருக்கு).//

Ajith a viturunga madam.

தாரணி பிரியா said...

//படத்த ஒழுங்கா எடுங்கப்பு. கிராமத்தயெல்லாம் அப்புறம் தத்து எடுக்கலாம்//

:)nalla irukku vidhya

Vidhya Chandrasekaran said...

நன்றி சங்கவி.
நன்றி பேநா மூடி.
நன்றி நவாஸுதீன்.
நன்றி உழவன்.
நன்றி சதீஷ் (ஹுக்கும்).
நன்றி ராமசாமி.
நன்றி பழமைபேசி.
நன்றி ராஜி (அது டிபால்டா நடக்கும்).
நன்றி தாரணி பிரியா.

Raghu said...

//எட்டாவது வார்டுல ஷூட்டிங் நடந்தபோது ஒரு பெரிய கொசு கடிச்சுது. அந்தளவுக்கு கஷ்டப்பட்டோம் என்பார்கள்.//

//டான்ஸ் சீக்வென்ஸ் ஷூட் பண்னும்போது கண்டிப்பா 108 டிகிரி ஜுரம் இருந்திருக்கும். அதையும் தாண்டி ஆடிருப்பாங்க. கேக்கறவனெல்லாரும் கேணைங்க தான்//

ஹாஹ்ஹா...ஆஃபிஸ்ல‌ ப‌டிக்க‌ற‌துனால‌ ச‌த்த‌ம் போட்டு சிரிக்க‌முடிய‌லைங்க‌...எல்லாமே வித்யா ட‌ச்:)

//முடிஞ்சா இந்த சுஹாசினிய நாடு கடத்த முடியுமான்னு பாருங்கப்பா//

ஆமா, ச‌ரியா சொன்னீங்க‌, Bring Back பெப்ஸி உமா (ஆன்ட்டி):)

பாபு said...

//முடிஞ்சா இந்த சுஹாசினிய நாடு கடத்த முடியுமான்னு பாருங்கப்பா. அவங்களும் அவிங்க டிரெஸ்சும்). //

repeattu

தராசு said...

ஏன் இந்த மர்டர் வெறி???

விக்னேஷ்வரி said...

பாடல்கள் ஒளிபரப்பப்படுவது இன்னொரு வகையான விளம்பரம். இது ஒரு பெரிய ப்ளஸ் பாயிண்ட். இன்பாஃக்ட் விஜய் படங்கள் கொஞ்சம் ஓடுவது இதனால்தான். //
கார்க்கி கொஞ்சம் கேட்டுக்கப்பா...

முளைப்பாரி சுற்றி கும்மியடிப்பதுபோல் செமி சர்க்கிளாக நிற்க வைத்தோ பேட்டி/கல்ந்துரையாடல் என்ற பெயரில் உளறவிடுவது. //
ஹாஹாஹா... எப்படி வித்யா....

பேட்டி எடுக்குற பிரகஸ்பதி கண்ண சிமிட்டிக்கிட்டே ஹீரோயின் கிட்ட ஹீரோவப் பத்தியும், ஹீரோகிட்ட ஹீரோயினோட பெர்பாஃமன்ஸ் பத்தியும் கேணத்தனமா ஏதாவது கேட்டு வைக்கும். //
ஆஃபிஸ்ல எல்லாருக்கும் முன்னாடி சிரிச்சு தொலைஞ்சுட்டேன் வித்யா.

அக்மார்க் வித்யா பதிவு. முழுவதுமாய் ரசிக்க முடிந்தது.

விக்னேஷ்வரி said...

சுஹாசினிய நாடு கடத்த முடியுமான்னு பாருங்கப்பா. அவங்களும் அவிங்க டிரெஸ்சும்). //

over to vikky :) //

மயிலக்கா, நான் இல்லை அந்தம்மாவோட டிசைனர்.

Vidhya Chandrasekaran said...

நன்றி குறும்பன்.
நன்றி பாபு.
நன்றி தராசு.
நன்றி விக்கி:))

ஹுஸைனம்மா said...

//கேக்கறவனெல்லாரும் கேணைங்க தான்//

நல்லவேளை நான் இதெல்லாம் கேக்க/பாக்கிறதில்ல. ஆனா, உங்க பதிவு நல்ல சுவாரசியம்.... நல்லா சிரிச்சேன்..

Radhakrishnan said...

ஆமாமா, அளவுக்கு மீறினால்...

நல்லதொரு சுவாராஸ்யமான இடுகை.

Vidhya Chandrasekaran said...

நன்றி ஹூஸைனம்மா.
நன்றி இராதாகிருஷ்ணன்.

பின்னோக்கி said...

ஆமாங்க. நீங்க சொன்னது மாதிரி இந்த கொசுங்க தொல்லை தா....ங்கலை. நாளைக்கு ஒரு படம் வருது பாருங்க “தைரியம்”ன்னு பேரு. அட படத்து பேருங்க. விளம்பரம் போட்டுக் கொல்றானுங்க.

Thamira said...

பல இடங்களுக்காக :-)) அதுவும் சீயானுக்கான பஞ்ச் அட்டகாசம்.