February 18, 2010

தீரா அவப்பெயர்

ஒவ்வொரு முறை நான் மறுக்கும்போதெல்லாம் நான் செய்த அந்த வரலாற்றுப் பிழையை சுட்டிக்காட்டி அவமானப்படுத்தப்படுகின்றேன். அப்படி என்ன பிழைன்னு கேக்கறீங்களா? இருங்க சொல்றேன். அது தெரிஞ்சுக்க நீங்க கொஞ்சம் என்னோட கால இயந்திரத்தில் ஏறி பின்னோக்கி ட்ராவல் பண்ணனும். சுமார் 8 வருடங்களுக்கு முன் நிகழ்ந்த "துயர" சம்பவம்.

2001ஆம் ஆண்டு (வரலாறு மிக முக்கியம்) பிளஸ் டூ முடித்து ரிசல்ட் பற்றிய கவலையில்லாமல் எண்டரன்ஸ் எக்ஸாம் தலைவலிகளுடன் போராடிக்கொண்டிருந்தோம். வாரம் மூன்று நாட்கள் குரூப் ஸ்டடி. அப்புறம் ஒரு நாள் முழுவதுமாய் ரிலாக்சேஷன் (அபிஷியலாய்). இந்த ரிலாக்சேஷன் நாளன்று யாராவது ஒரு நண்பர் வீட்டில் கூடி கும்மியடிப்போம். மோஸ்ட்லி ஒரு படம் பார்த்துவிடுவோம். சிடியோ இல்லை டிவியோ. அப்படி ஒரு முறை நாங்கள் படித்துக்கொண்டிருந்தபோது (அல்லது பாவ்லா பண்ணிக்கொண்டிருந்தபோது) கவிதா அந்த யோசனையை சொன்னாள் (நாங்கள் என்பது நான், கவிதா, ஜெயா, பவி, பிரபா). வரலாற்றுப் பிழைக்கான முதல் விதை. என்ன யோசனையென்றால் அப்போது ரிலிசாகி ஒ(ட்)டிக்கொண்டிருந்த அந்த படத்தை தியேட்டரில் போய் பார்ப்பதென்று. சாம்பிள் பேப்பருள் புதையுண்டிருந்த நாங்கள் கொஞ்சம் நிமிர்ந்து உட்கார்ந்தோம். Movie in theatre. That too with friends. Sounded great. ஆனால் வீட்டில் பர்மிஷன் வாங்குவது கொஞ்சம் கஷ்டமாய் தோன்றியது. யார் யார் பெற்றோரிடம் பரிந்து பேசி ஓகே பெறுவது என சார்ட் போடப்பட்டது. பிரபா வீட்டில் அவள் கசின் கல்யாணத்தை காரணம் காட்டி கறாராய் அனுமதி மறுக்கப்பட்டது (தப்பித்துவிட்டாள்).

அப்பவே அண்ணா அந்தப் படமா என இழுத்தார்கள். எனக்கு அந்த நடிகர் மீது பெரிய அபிமானம் ஏதுமில்லை. எனக்கு எப்பவுமே கமல்ஹாசன் தான். எப்பவாவது ஆமிர்கான். அப்போதெல்லாம் பத்திரிகைகளில் வரும் ரிவ்யூக்களை பெரிதாய் மதிப்பதில்லை/படிப்பதில்லை. அந்த கறுப்பு ஞாயிறு இன்னும் நினைவில். தனித்தனியாய் போனால் வெயிட்டிங் பிராப்ளம் வருமென்பதாலும், தியேட்டரில் மற்றவர்களின் பார்வையை சமாளிக்க வேண்டியும் நால்வரும் முத்துக்கடையில் சந்தித்துவிட்டு சேர்ந்தே தியேட்டருக்கு போவதென்றும் முடிவாகியது. பஸ்சில் கண்டக்டர் சில்லறை இல்லைன்னா இறங்கிடுங்க என்று முதல் பிரச்சனையை துவக்கினார். முதல் கோணல் முற்றிலும் கோணல் என புரிந்து அப்போதே அப்பீட் ஆகியிருக்கனும். விதி யாரைவிட்டது. வாங்கடி வாங்க என வலைவிரித்தது தெரியாமல் போய்விட்டது.

சில்லறை மாற்றிக்கொண்டு அடுத்த பஸ் பிடித்து தியேட்டருக்குள் நுழைவதற்குள் டிக்கெட் கொடுக்க ஆரம்பித்துவிட்டார்கள். யார் க்யூவில் நின்று டிக்கெட் வாங்குவதென்ற பெருங்குழப்பத்தை நொடியில் தீர்த்து பவி டிக்கெட் வாங்கினாள். இரண்டாவது பல்பாக வந்திருந்த கொஞ்ச நஞ்ச பெண்களில் தனியாக வந்தது நாங்கள் நால்வர் தான். மொத்த தியேட்டரில் பெண்கள் எண்ணிக்கை ஆறோ ஏழோ தான். We didnt bother though. உள்ளே சென்று வரிசை தொடக்கத்திலிருந்து அமர்ந்தோம். ஜெயாவின் பக்கத்தில் ஒரு சீட் காலியாகவே இருந்தது. ஜெயா என்னை என்ன என்பது போல் பார்த்தாள். நான் ரியாக்ட் செய்வதற்குள் படம் போட ஆரம்பித்துவிட்டார்கள். எனக்கு படத்தை சென்சார் சர்ட்டிபிகேட்டிலிருந்து பார்த்தால் தான் திருப்தியாகிறது.

ஆரம்பமே திகிலாயிருந்தது. படத்தின் முதல் நொடியிலிருந்து ஆரம்பித்த அதிர்ச்சி படம் முடியுறவரைக்கும் தொடருமாறு டைரக்டர் பார்த்துக்கொண்டார். ஹீரோவுக்கு அப்பா மகன் (மாக்கான்) என இரட்டை வேடங்கள். இண்டர்வெலில் போய்விடலாம் என்ற என் கோரிக்கை டிக்கெட் விலையையும், மற்ற நண்பர்களின் கேலிப்பேச்சுக்கு (குறிப்பாய் பசங்க. கலாட்டா பண்ணிவிடுவார்கள்) ஆளாவோம் என்ற அபத்த காரணத்தையும் காட்டி ரிஜெக்ட் செய்யப்பட்டது. ஹீரோவின் மீதான கோவத்தை பாப்கார்ன், குட்டி சமோசா, வீல் சிப்ஸ் மற்றும் கோக் சாப்பிட்டு தீர்த்தோம். செகண்ட் ஹாஃப்பில் அப்பா கேரக்டர் சூப்பராய் எழவைக் கூட்டினார். அதைவிட அவர் ஜோடி. மேக்கப் போட்டாலே அவிங்க ஆண்ட்டி மாதிரி தான் இருப்பாங்க. இதில மேக்கப் இல்லாம வேற க்ளோசப்லலாம் வந்து கலங்கடிச்சாங்க. ஒவ்வொரு பாடலின்போது பேய் படம் பார்ப்பது மாதிரி கையால் முகத்தை மூடி விரலிடுக்கு வழியாகவே பார்த்தேன்(தோம்). க்ளைமேக்ஸ் வந்தப்புறமும் ஒரு டூயட் பாட்டு. எக்ஸ்ட்ரா லார்ஜ் வயிறோடு ஹீரோ ஹீரோயின் ஆடியபோது அழுவதா சிரிப்பதா எனத் தெரியாத பரவச நிலையில் இருந்தோம். கோர்ட்டில் ஹீரோ பேசும் வசனங்கள். முடியலடா சாமீ.

மூன்று விஷயங்கள் தெளிவாய்த் தெரிந்தன. ஒன்று தலைவலிக்கு குறைந்தது 2 சாரிடானாவது வேண்டும். ரெண்டு தெரிஞ்சவங்க எல்லாம் கிண்டல் பண்ணியே சாவடிக்கப்போறாங்க. மூன்றாவது இந்தப் படம் என சஜெஸ்ட் செய்த கவிதா மரண அடி வாங்கப்போவது. மூன்றுமே கனஜோராய் நடந்தது. "வெற்றிப் படம் பார்த்த வீராங்கனைகள் பராக் பராக் பராக்" என கோச்சிங் கிளாசில் நுழைந்தபோது கத்தி கலாட்டா பண்ணார்கள். படம் பார்த்த எஃபெக்ட் மூன்று நாள் குரூப் ஸ்டடியைத் தவிர்த்தோம். உறவுகள் நட்புகள் என அனைவரின் கேலிப்பேச்சுக்கும் ஆளானோம். என்னை கிண்டல் செய்தவர்கள் எல்லாரும் அந்தப் படத்தை ட்ரேய்லரோடு நிறுத்திவிட்டார்கள் என்பது கூடுதல் செய்தி.

அதற்கு அப்புறம் எவ்வளவோ சூரை மொக்கைப் படங்களை (இந்த லிஸ்டில் ஒண்டிப்புலியின் ஆதி. ஷப்பா. ஜுரமே வந்திருச்சு) நண்பர்களுடன் பார்த்துவிட்டேன். ஆனால் இந்தப் படத்தினால் ஏற்பட்ட தாக்கம் இன்றளவும் நீடிக்கிறது. இப்போது கூட அந்தப் படத்தின் காட்சியோ, பாடலோ டிவியில் பார்க்க நேரிட்டால் ரூமிற்கு சென்று ஒளிந்துகொள்கிறேன். ஹைலைட்டாக சென்ற வாரம் "The Curious Case of Benjamin Button" பார்க்க அமர்ந்தோம். அரைமணிநேரத்திற்கு மேல் முடியவில்லை. "சுத்த போர்ண்ணா. நான் தூங்கப் போறேன்" என்றவளைப் பார்த்து கோரசாக அண்ணாவும் தம்பியும் "சிட்டிசன் படத்தையே தியேட்டர்ல பார்த்தவ நீ. இது போரடிக்குதா" என்றார்கள்.

ஹூம். என்று தான் நீங்குமோ இந்த அவப்பெயர்:(

27 comments:

Unknown said...

நான் தான் பஸ்ட்டா

Vidhoosh said...

:)) சூப்பர்.

//ஹீரோவுக்கு அப்பா மகன் (மாக்கான்) என இரட்டை வேடங்கள்/// இங்கேஇருந்து கடைசி வரை வாரணம் ஆயிரமோன்னு நினைச்சு படிச்சேன்.

அப்புறம்தான் நீங்க அவ்ளோ 'சின்னப் பொண்ணு' இல்லையேன்னு நினைவு வந்தது. சிட்டிசன் அளவுக்கு கிழமா?:))

Chitra said...

You are a "poor citizen" -
பாவம்ங்க, நீங்க - அதைத்தான் அப்படி சொன்னேன். உங்களை கேலி பண்ண என்று நினைத்தால் .............. நான் பொறுப்பல்ல.

sathishsangkavi.blogspot.com said...

நிச்சயம் நீங்காதுங்க... ஏன்னா அவ்வளவு அழகான படம் இது.....

Anonymous said...

சிரிச்சுக்கிட்டே இருக்கேன் :))))

☀நான் ஆதவன்☀ said...

அஜித் அழகைப் பார்த்து பொறாமைங்க உங்களுக்கு.

ஹுஸைனம்மா said...

சிட்டிசனுக்கே இப்படியா? அப்படின்னா, கமலின் “மகராசன்” படத்தை (1993) இதே போல 4 பொண்ணுங்க போய், அதுவும் முழுசாப் பாத்தோமே,அத என்னச் சொல்வாங்க? (அதனாலத்தான் நாங்க அந்த ரகசியத்தை ஃப்ரண்ட்ஸ்கிட்ட சொல்லவேயில்ல!!)

அப்படியே டிட்டோங்க எங்க எக்ஸ்பீரியன்ஸும்!! சிட்டிஸனாவது நாலு பேருக்குத் தெரியும், இந்தப் படம் இப்பத்தான் நிறைய பேரு கேள்வியே படுவீங்க, அவ்வளவு சூப்பர் படம்!!

CS. Mohan Kumar said...

அது என்ன படம்ன்னு தெரிஞ்சிக்கிற ஆர்வத்திலேயே முழுசா படிக்க வச்சிடீங்க

T.V.ராதாகிருஷ்ணன் said...

//"The Curious Case of Benjamin Button" பார்க்க அமர்ந்தோம். //

நாளைக்கு நீங்க அண்ணனைக் கிண்டல் செய்யலாம்..இந்தப் படத்தையே பார்த்தேன்னு..அந்த அளவு போர்

Vidhya Chandrasekaran said...

நன்றி தாமோதர் சந்துரு.
நன்றி விதூஷ் (கிர்ர்ர்ர்ர்).
நன்றி சித்ரா (நம்பிட்டேன்).
நன்றி மயில்.
நன்றி சங்கவி.
நன்றி ஆதவன் (ஹுக்கும்).

நன்றி ஹுஸைனம்மா (இது சின்னதா இருக்க சொல்லோ உரிச்சதுன்னு ஒரு காமெடி வருமே. அந்தப் படம் தான? கமலப் பார்த்தாவது மனசத் தேத்திக்கலாம். எங்க நிலைமை??)

நன்றி மோகன்குமார்.
நன்றி டிவிஆர் சார் (அரை மணி நேரத்திலேயே நான் எஸ்கேப்பு)

Vijay said...

நான் அந்தப் படத்த பிளாக்குல டிக்கட் வாங்கிப் பார்த்தேன். அதுக்கப்புறம் இனி அஜீத் படத்தைத் தியேட்டரில் போய்ப் பார்க்கவே மாட்டேன் என்று முடிவு செய்து விட்டேன் :)

Raghu said...

எதிர்கால‌ அதிர்ச்சிக‌ளுக்கு (டாக்ட‌ரின் ப‌ட‌ங்க‌ள்) த‌யாராக‌ற‌துக்குத்தான் க‌ட‌வுள் இந்த‌ ப‌ட‌த்தை பாக்க‌ வெச்சிட்டாருன்னு நினைச்சு ம‌ன‌சை தேத்திக்குங்க‌:))

"உழவன்" "Uzhavan" said...

தல மேல எதாவது தனிப்பட்ட வெறுப்பு எதாவது இருக்கா? நீங்க சொல்ற அளவுக்கு அவ்வளவு சூரை மொக்கையா என்ன?!!
எழுதிய விதம் வழமைபோல சூப்பர் :-)

Arun Kumar said...

oops who you have insulted the great athhipatti..i dont know what will happen for this ..beware

Rajalakshmi Pakkirisamy said...

தலய பத்தி தப்பா பேசுறதே வேலையா போச்சு... போங்க போங்க...

முத்துலெட்சுமி/muthuletchumi said...

\Chitra said...
You are a "poor citizen" -
பாவம்ங்க, நீங்க - அதைத்தான் அப்படி சொன்னேன். உங்களை கேலி பண்ண என்று நினைத்தால் .............. நான் பொறுப்பல்ல.\//

:))

Sundar சுந்தர் said...

:) நல்லா சுவாரசியமா எழுதறிங்க!

விக்னேஷ்வரி said...

ஹாஹாஹா எக்ஸலண்ட் ரைட்டிங் வித்யா.

நீங்க ரொம்பப் பாவம். நான் விஜய் படமாக இருக்கும் என எதிர்பார்த்தேன்.

Vidhya Chandrasekaran said...

நன்றி விஜய் (பிளாக்கா. ஹுக்கும்)

நன்றி ரகு.
நன்றி உழவன்.
நன்றி அருண்குமார்.

நன்றி ராஜி (கவலைப்படாதீங்க. டாக்டரயும் கூடிய சீக்கிரம் டேமேஜ் பண்ணிடலாம்)

நன்றி முத்துலெட்சுமி (ஆஹா செட்டு சேர்ந்துட்டாங்கய்யா).

நன்றி சுந்தர்.
நன்றி விக்னேஷ்வரி.

மங்குனி அமைச்சர் said...

அப்ப நீங்க தியேட்டர்ல போயி படம் பாத்துருக்கிங்க (உலக அதிசயம்தான் )
இதுமாதிரி வெளியில யார்கிட்டையும் சொல்லிடாதிங்க ரூம் போட்டு சிரிப்பாங்க.
இப்ப நான் கூட மெரிடியன் - ல ரெண்டுநாள் ரூம் புக் பன்னியிருக்கேன். சிரிக்கத்தான்.

நாங்கல்லாம் citizen படம் ஓடின தியேட்டர் இருக்க ரோட்ல கூட போகல (என்னா எனக்கு முதலே நியூஸ் வந்திடுச்சு)

Krishnan said...

நானும் வேளச்சேரி வாசி தான், எங்கே McDonalds வருது ?

Anonymous said...

அசல் வர்ற நேரத்துல ஏன் இப்படி ஒரு பழைய படத்துக்கு :)
ஒகே நீங்க விஜய் ரசிகைதானெ

Vidhya Chandrasekaran said...

நன்றி அமைச்சர்.

நன்றி கிருஷ்ணன் (அடையார் ஆனந்த பவன் அருகில்).

நன்றி அம்மிணி (இதுக்கு நீங்க என்னை திட்டியிருக்கலாம்).

Thamira said...

ஹிஹி.. நல்லா வேணும்.!

Krishnan said...

Very true Vidya, just couple of years back there were hardly any options for eating out in Velachery, now it is raining restaurants. Velachery is indeed booming.

பின்னோக்கி said...

The Curious Case of Benjamin Button புடிக்கலையா ??.. க்ளைமேக்ஸ் ??

vaishu said...

ஹாஹாஹா !