March 19, 2010

தேசி ரசோய்

டிஸ்கி 1 : பசி நேரத்தில் பதிவைப் படித்து வயிற்றெரிச்சல் பட்டால் கம்பேனி பொறுப்பாகாது.
டிஸ்கி 2 : இடுகை முழுக்க முழுக்க பெர்சனல் எக்ஸ்பீரியன்ஸை பேஸ் பண்ணி எழுதப்பட்டது. உங்களுக்கு மாற்று அனுபவம் ஏற்படுமெனில் அதற்கும் கம்பேனி பொறுப்பாகாது:)


பஞ்சாப் - பாலும் தேனும் ஓடுவதாக சொல்லப்படும் மாநிலம். பஞ்சாப் என்றதுமே நினைவுக்கு வருவது சிங்கின் டர்பன், மஞ்சள் பூக்கள் பூக்கும் கடுகுத் தோட்டங்கள் (thanks to yash chopra and Raj aka SRK) மறக்காமல் அவர்களின் உணவு வகைகள். இந்தியாவிலேயே உணவைக் கொண்டாடுபவர்கள் பஞ்சாபிகளாகத்தான் இருக்க முடியும். சைவம் அசைவம் என அனைத்து உணவையும் ரசித்து செய்வார்கள். ருசித்து உண்பார்கள். ரொட்டி, முழங்கை அளவுடைய டம்ளரில் (லோட்டா???!!) லஸ்ஸி, பனீர், தால் இல்லாமல் உணவே இறங்காது. வெண்ணையும், நெய்யும் சாப்பாட்டில் கரை புரண்டு ஓடும். அவ்வளவு ரிச்சாக இருக்கும் அவர்கள் சமையல். ஸ்பெஷல் ஐட்டங்களாக சொல்லவேண்டுமெனில் சைவத்தில் பனீர் பட்டர் மசாலா, பனீர் பசந்தா, தால் மக்கனி, மக்கி ரொட்டி, சர்சோன் கா சாக், ஆலு பராத்தா என அடுக்கிக்கொண்டே போகலாம்.

வேலூரில் சிஎம்சி எதிரிலிருக்கும் இருக்கும் வைஷ்ணவ் க்யான் தாபாவில் சாப்பிட்டிருக்கிறீர்களா? காலேஜ் நாட்களில் சில நாட்கள் பாக்கெட் மணி மிச்சப்படுத்தி இங்கு சென்று சாப்பிடுவோம். டிபிகல் பஞ்சாபி என நார்த் இண்டியன் நண்பர்கள் சர்ட்டிபிகேட் கொடுக்கும் அளவுக்கு ஏ கிளாஸ். இதன் கிளை மவுண்ட் ரோடிலிருக்கிறது. அதே பேரில். டி.நகரில் இருக்கும் மற்றொரு கிளைதான் தேசி ரசோய். சுத்தமான நெய்யினால் தயாராகும் பஞ்சாபி சைவ உணவுகள். அக்மார்க் தாபாக்களிலுள்ள கயித்து கட்டில் மட்டும் தான் இங்கு மிஸ்ஸிங். சுவை அபாரம்.

மிகவும் சின்ன ஹோட்டல். தரை தளம் மற்றும் முதல் தளம். கிளாசிக் ஆம்பியன்ஸோ, அலங்காரங்களோ இல்லை. Food speaks. மெனுவைப் பார்த்து சட்டென முடிவெடுப்பது கொஞ்சம் கடினம். நாங்களும் ரொம்ப குழம்பிப்போய் தாலி ஆர்டர் செய்யலாம் என முடிவு செய்தோம். லிமிடட்/அன்லிமிடட் என இருவகை இருக்கிறது. அன்லிமிடட் தாலியில் சூப், நான்/ரொட்டி/மக்கி ரொட்டி/பஜ்ரா ரொட்டி/ பட்டர் நான்/ஆலு பராத்தா/மூளி பராத்தா/கோபி பராத்தா வகைகளுடன் ஒரு தால் ப்ரை, சென்னா மசாலா, சில்லி பனீர், ஷாஹி பனீர், பைங்கன் பர்த்தா, பூந்தி ரைத்தா, சாலட், ஜீரா ரைஸ்/புலாவ், ஒரு ஸ்வீட். அத்தனையும் அன்லிமிடட்.

பராத்தாக்களில் ஆலு மட்டுமே நன்றாக இருந்தது. மற்றவை எல்லாம் ஆவரேஜ். மக்கி ரொட்டிக்கு நூற்றுக்கு நூறு தரலாம். இதில் ஸ்பெஷல் என்னவென்றால். நீங்கள் கேட்டவுடன் சுடச் சுட வருகிறது. பைங்கன் பர்த்தா அட்டகாசம். கத்திரிக்காய் பொதுவாக சப்ஜியில் சேர்த்துக்கொள்ளமாட்டேன். ஆனால் இங்கு நல்ல பிளண்ட் ஆகி பிரமாதமாக இருந்தது. புலாவும் அருமையாக இருந்தது. ஸ்வீட் ஆப்ஷனில் கீர்/ப்ரூட் சாலட் வித் ஐஸ்க்ரீம்/ லஸ்ஸி கொடுத்தார்கள். நான் உண்ட கீர் சூப்பர். ஆனால் முழுவதும் சாப்பிடமுடியவில்லை. திகட்டுகிறது. ப்ரூட் லஸ்ஸி ரொம்ப சுமார் என அண்ணா சொன்னார்.

மேலதிக தகவல்கள்

உணவகம் - தேசி ரசோய் - பஞ்சாபி தாபா
இடம் - டி.நகர் திருப்பதி தேவஸ்தானம் அருகில். ரத்னா கஃபேக்கும் தேவஸ்தானத்துக்கும் நடுவிலிருக்கிறது.
டப்பு - வெரி எக்கனாமிகல். பர்ஸ் பழுக்காது.

பரிந்துரை - பஞ்சாபி உணவு விரும்புபவர்கள் கட்டாயம் ட்ரை செய்யலாம்.

பஞ்சாபிகள் சாப்பிடப் பிறந்தவர்கள். நான் சமைத்துப் போடுவதை சாப்பிட்டு என்னவர் ஜம்முன்னு இருக்கார் என சொல்லும் விக்கியின் யோ சைனா என்ற சைனீஸ் ரெஸ்டாரெண்ட் ரிவ்யூ இங்கே. ஏன் அம்மிணி நீங்க சமைக்கறத சாப்பிட்டா அவர் நல்லாருக்கார் என கேட்க தோன்றி வாயை மூடிக்கொண்டேன்.

டிஸ்கி : சாப்பாட்டில் லயித்ததால் போட்டோ எடுக்க மறந்துவிட்டேன். மேலே போட்டிருக்கும் போட்டோ நெட்டில் சுட்டது.

14 comments:

pudugaithendral said...

ஓஹோ, சரி சரி மைண்ட்ல வெச்சுக்கறேன்

நேசமித்ரன் said...

:)

Vidhoosh said...

"டிரைவர்... பர்ஸ எடுத்துக்கிட்டு, வண்டிய எடுங்க.."

Unknown said...

நாங்களும் சென்னை வந்தால் சாப்புட்டு பாத்ருவமில்ல.

கார்க்கிபவா said...

கம்பேனி அப்போ எதுக்குதான் பொறுப்பு ஏற்கும்?

:))

எறும்பு said...

//Vidhoosh said...

"டிரைவர்... பர்ஸ எடுத்துக்கிட்டு, வண்டிய எடுங்க.."//

வித்யா எனக்கு ஒரு பார்சல்..

விக்னேஷ்வரி said...

நல்லா பஞ்சாபி சாப்பாடு கொட்டிக்கிட்டீங்கள்ல. அதான் கொழுப்பு. ;)

சென்னை வரும் போது கூட்டிட்டுப் போவீங்கள்ல.

SK said...

கொய்யால.. :) கூட்டணியா ரெண்டு பேரும்..

இங்கே ஒரே ஒரு ஆறுதல் டெர்ரர் படம் ஏதும் இல்லை.. :)

Raghu said...

ஷார்ட்டா முடிச்சுட்ட‌ மாதிரி ஒரு ஃபீல். இங்க‌ ஃபுட் வெரைட்டி ரொம்ப‌ க‌ம்மியாங்க‌?

Anonymous said...

என்ன இருந்தாலும் விக்கியோட சைனீஸ் மாதிரி இல்லைப்பா :)

sathishsangkavi.blogspot.com said...

வித்யா....

உங்களை என் தொடர்பதிவிற்கு அழைத்துள்ளேன். தொடர் பதிவை எழுத வேண்டுகிறேன்...

http://sangkavi.blogspot.com/2010/03/blog-post_19.html

Paleo God said...

வேலூர் தாபால நான் அடிக்கடி ரசிச்சு சாப்பிட்டது லஸ்ஸிதாங்க..:))

Vidhya Chandrasekaran said...

நன்றி கலா அக்கா.
நன்றி நேசமித்ரன்.
நன்றி விதூஷ்.
நன்றி தாமோதர் சந்ரு.

நன்றி கார்க்கி (இப்படி எதுவும் கேட்கக்கூடாது).

நன்றி எறும்பு

Vidhya Chandrasekaran said...

நன்றி விக்னேஷ்வரி.
நன்றி SK.
நன்றி ர‌கு.
நன்றி சின்ன அம்மிணி (ஹும் உள்ளூர் சரக்கே பிடிக்காதே:)))
நன்றி சங்கவி.
நன்றி ஷங்கர்.