June 24, 2010

என்னை காதலித்தவன்..

நீ காதலை வெளிப்படுத்துவதைக் காட்டிலும்
கோபப்படுவது எவ்வளவோ மேல்
எரிமலையின் வெப்பத்தை வி்ட
பனிமலையின் குளிர்ச்சி
குத்திக் கொல்கிறது..
**************

அடித்தொண்டையில் கத்தியதும்
செல்போன் சிதறியதும்
பொங்கிப் பொங்கி அழுததும்
கனவே.
நினைத்ததை மறுத்தது
ஈரத் தலையணை..
*************

சாட் பாக்ஸை மூடும்போதும்
செல்பேசி அழைப்பை துண்டிக்கும்போதும்
சபித்திருப்பான் என்னை காதலித்தவன்.
அவனைப் பிரிந்த பின்னான வாழ்க்கையுடன் ஏற்பட்ட பிணக்கு
இன்னும் கூடாதிருக்கவே இத்தனையும்
என அவனுக்குத் தெரியாதிருக்கட்டும்.
***************

கரடி பொம்மை
சில்க் உறையிட்ட தலையணை
அம்மாவின் உள்ளங்கை
எதுவுமே தேவைப்படுவதில்லை.
உன் நினைவுகள் மட்டும் அதிகமாய் இருக்கிறது.
தூக்கத்தை காணவில்லை.
****************

மழை தொடரலாமா நின்றுவிடலாமா என யோசித்துக்கொண்டிருக்கிறது.
வேடிக்கை பார்க்க வந்தவள்
எல்லாவற்றிலும் உன்னைப் பார்க்கிறேன்.
என்னைச் சுற்றிலும் நீ.
என்னிலும் நீ.
‘டீல சர்க்கரை ஜாஸ்தியாயிடுச்சு. திகட்டுது இல்ல’ என்ற அம்மாவிற்கு
இல்லை என்ற என் பதில்
ஆச்சர்யமேற்படுத்தியதில் ஆச்சர்யமேது??!!
******************

19 comments:

Mohan said...

கவிதை நல்லாயிருக்கு!

Anonymous said...

கொலை வெறியாத்தான் இருக்கு. எல்லாமே புரியுது :)

Vijay said...

எண்ணங்கள் நல்லா இருக்கு.
ஆனா வசனங்களை மடித்து மடித்து எழுதினால் அது கவிதை என்று நிறைய நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த கோஷ்டியில் நீங்களும் சேர்ந்துட்டீங்களா :)

இந்த சிந்தனைச் சிதறலகளையெல்லாம் மடக்கி மடக்கி எழுதாமல் இருந்தாக் கூட நல்லாவே இருந்திருக்கும்.

“போடா வெண்ணெய், கஷ்டப்பட்டு கவிதை எழுதியிருகாங்க. அதைப் பாராட்டாம விட்டுட்டு என்னமோ பெனாத்துறியே”ன்னு மனசாட்சி சொல்லுது :)

அன்புடன் நான் said...

படைப்பில் காதை உணர்வுகள் கரை புரளுதுங்க....
வாழ்த்துக்கள்.

Vidhoosh said...

1 ஸ்வெட்டர் போட்டுக் கொல்லவும்....

2 தலகாணிக்கு ரப்பர் ஷீட் போடவும்

3 இன்டர்நெட் காசையும், ரோமிங் சார்ஜையும் மிச்சம் பண்ணதை பொதுவில் சொல்லினா நீங்க செஞ்ச இட்லிய சாப்ட சொல்லி வற்புறுத்துவீங்களா?

4 பகல்ல தூங்கினா இப்டித்தான். ராத்திரி தூக்கமே வராது

5 மூக்கு கண்ணாடிய என்காத்துலையே மறந்து வச்சுட்டு வந்துட்டேள். அந்த குடைய மறக்காம திருப்பி தந்துருங்கோ.

6 டீ போடத் தெரியாதுன்னு தெரியும், அதுல சக்கரை கூடாவா??? காலக் கேடுன்னா....

அமுதா கிருஷ்ணா said...

ஆச்சரியமே இல்லை காதலித்தவன் கொடுத்து வைத்தவன்(ர்) தான்...

CS. Mohan Kumar said...

Liked the first and last one. Nice.

VELU.G said...

அருமை super ரொம்ப நல்லாயிருக்குங்க

என்னது கொலைவெறியா(escape)

Ramesh said...

பிணக்கில் ஒரு காதல் (லன்) தான் சரியான தலைப்பு!

Guna said...

Nalla thaana iruntheenga, Yen intha kola veri?? Wangs Kitchen-la sapitathula irunthu ippadi aaiducha ??


Jokes Apart...Kavithai Super-a irukku.

ஜெய்லானி said...

நல்ல கவிதை

Chitra said...

கரடி பொம்மை
சில்க் உறையிட்ட தலையணை
அம்மாவின் உள்ளங்கை
எதுவுமே தேவைப்படுவதில்லை.
உன் நினைவுகள் மட்டும் அதிகமாய் இருக்கிறது.
தூக்கத்தை காணவில்லை.


... :-))

மங்குனி அமைச்சர் said...

நல்ல கவிதை மேடம்

Vidhya Chandrasekaran said...

நன்றி சி. கருணாகரசு.

நன்றி விதூஷ் (என்னுடைய கொலைவெறியை விட உங்கள்து நெம்ப டெரர்ர்ரா இருக்கு).

நன்றி அமுதா கிருஷ்ணா.
நன்றி மோகன் குமார்.

Vidhya Chandrasekaran said...

நன்றி வேலு.
நன்றி ரமேஷ்.
நன்றி குணா.
நன்றி ஜெய்லானி.
நன்றி சித்ரா.
நன்றி மங்குனி அமைச்சர்.

எறும்பு said...

I like the label..

:)

விக்னேஷ்வரி said...

ஹாஹாஹா... விதூஷ் கமெண்ட் சூப்பர்.

விக்னேஷ்வரி said...

வித்யா, நல்லாத்தானேடா போய்ட்டு இருந்தது. ஏண்டா இப்படி... வெயிலா...

பை த வே, ரெண்டாவது ரொம்பப் பிடிச்சிருக்கு.

Vidhya Chandrasekaran said...

நன்றி எறும்பு.
நன்றி விக்கி:)