August 27, 2010

மூன்றெழுத்து பயம்...

பதிவைத் தாண்டி பஸ்ஸிலும் கவிஞர்களின் ஆதிக்கம் நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டே போகிறது. இவ்வேளையில் கவிதையைப் புரிந்துக்கொள்வதும், எண்ணங்களை கவிதையாய் வடிப்பதும் எப்படி என தெரிந்துக்கொள்வது மிகவும் அவசியமாகிறது (ஆமாம். எத்தனை நாள்தான் புரியற மாதிரியே சீன் போடறது). முதலில் கவிதை என்றால் என்ன என்று பார்ப்போம். கவிதை ஒன்றும் பெரிய கம்பசூத்திரம் அல்ல (அப்படியா?). எழுதுவது எளிது (பார்றா). புரிந்துக்கொள்வது அதை விட எளிது (மறுபடியும் பார்றா). தினம் எவ்வளவோ விஷயங்களை பார்க்கிறோம். சில விஷயங்கள் நம்மை பாதிக்கின்றன (நீ எழுதுற பதிவு மாதிரின்னு யாராவது சொன்னீங்க பிச்சு பிச்சு). அதை வார்த்தைகளாய் விவரிக்கும்போது கவிதை பிறக்கிறது (டேட் ஆஃப் பர்த் நோட் பண்ணிக்கனும்).

கவிதை எழுதுவதற்கும் சரி. புரிந்துக்கொள்ளவும் சரி. முக்கியமாய் தேவைப்படும் ஒன்று. எனக்கு எல்லாம் தெரியும் என்ற நினைப்பு. இப்பப் பாருங்க. நீங்க ஒரு கவிதை படிக்கறீங்க (படிச்சு முடிச்சதும் பாயப் பிராண்டாம இருந்தீங்கன்னா நீங்க பெரிய கவுஞ்சரா வருவீங்க). அந்த கவிதைக்கு இதுதான் அர்த்தம்ன்னு பின்னூட்டம் போடறீங்க. ஆனா அத எழுதினவரு “அடேய் வெண்ண. உண்மையான அர்த்தம் வேறுடா”ன்னு சொன்னார்னா என்ன பண்ணுவீங்க? அசட்டுத்தனமா அப்படியான்னு கேக்கப்பிடாது. இந்தக் கவிதையை இப்படியும் பொருள்படுத்தலாம்ன்னு எல்லாம் தெரிஞ்ச ஏகாம்பரம் மாதிரி அடிச்சு விடனும். இன்னும் கொஞ்சம் துணிஞ்சு இந்த அர்த்தம்தான் சரின்னு ஸ்ட்ராங்கா அடிக்கனும். ஒரு படி மேலே போய் என்னய்யா விளக்குறே? என்ன எழுதறோம்னே தெரியாமல் எழுதலன்னு யார் அழுதான்னு கேக்கனும். இப்ப எழுதின பார்ட்டி கொஞ்சம் பம்மும். நிஜமாகவே இவனுக்கு புத்தி இருக்கோன்னு நினைக்கும். அப்படி ஒரு நினைப்பை உண்டு பண்றதே பெரும் வெற்றிதான். இப்படியே கொஞ்சம் கொஞ்சமா டெவலப் ஆகி கவிதை விமர்சகர்ன்னு பெரிய பேர் வாங்கிடலாம்.

இப்ப சாம்பிளுக்கு வேப்பம்பூ உதிரும் வாசல்கள் அப்படிங்கற கவிதையை எடுத்துக்கிட்டு பிரிச்சு மேயலாம்.

யாருமற்ற நிலையங்களில்
எனக்கான இரயில்கள்
வருமுன்பே சென்று விடுகின்றன
இதுவரை சென்றேயிராத
சில நகரங்களின் வீதிகளில்
மிதிவண்டியிலிருந்து விழுகிறேன்
முற்றத்துச் சருகுகளின் தனிமை மீது
இளநீல வண்ணங்கொண்ட
மாடியிலிருந்து குதிக்கிறேன்
கனவுகளை அறியுங்கள் என்ற
புத்தகத்தின் பக்கங்கள் கிழிந்து
காற்றில் பறக்கின்றன
கனவுகளில் எப்போது(ம்) வரும்
வேப்பம்பூ உதிரும் வாசல்கள்

இது ஒரு கவிதை (சாமி சத்தியமா நான் எழுதல). இப்ப நம்ம லைன் பை லைன் விளக்கம் பார்க்கலாமா (கோணார் நோட்ஸ் கம்பெனில வேலை காலியா இருக்கா?).
\\எனக்கான இரயில்கள்
வருமுன்பே சென்று விடுகின்றன\\
கவுஞ்சருக்கு (இந்தக் கவிதையின் நாயகன்/யகி) பங்குசுவாலிட்டி கிடையாது. ஏன்? ஆயிரம் காரணங்கள் இருக்கலாம். தூங்குமூஞ்சி, சோம்பேறி எனப் பல. ஒரு சிலவற்றை நீங்கள் யூகித்தாலும் போதுமானது.

\\இதுவரை சென்றேயிராத
சில நகரங்களின் வீதிகளில்
மிதிவண்டியிலிருந்து விழுகிறேன்\\

சைக்கிளில் கூட ஃபுட்போர்ட் அடிக்க முடியும்ங்கற மிகப்பெரிய கண்டுபிடிப்பை ரொம்ப சாதாரணமா சொல்றாங்க கவுஞ்சர். இந்த மாதிரி கண்டுபிடிப்புகளைக் கண்டுக்க தவற வேண்டாம்.

\\முற்றத்துச் சருகுகளின் தனிமை மீது
இளநீல வண்ணங்கொண்ட
மாடியிலிருந்து குதிக்கிறேன்\\

உயரம் கம்மியாய் வைத்து கட்டப்படும் சுவர்களால் குழந்தைகளுக்கு மட்டுமல்ல பெரியவர்களுக்கு ஆபத்துதான் என்ற சமூக விழிப்புணர்வை ஏற்படுத்த முயல்கிறார் கவுஞ்சர்.

\\கனவுகளை அறியுங்கள் என்ற
புத்தகத்தின் பக்கங்கள் கிழிந்து
காற்றில் பறக்கின்றன\\

புத்தகத்தைப் பார்த்தாலே கிழித்து பார்சல் கட்ட நினைக்கும் மளிகைக் கடை ஆளை கண் முன் நிறுத்துகிறார் கவுஞ்சர்.

\\கனவுகளில் எப்போது(ம்) வரும்
வேப்பம்பூ உதிரும் வாசல்கள்\\

ஆடியில் மட்டுமல்ல எப்போதும் ஏழைகளுக்கு கூழாவது கிடைக்க வேண்டும் என்ற சிந்தனையை வேப்பமரத்தை குறியீடாக்கி வெளிப்படுத்துகிறார்.

இந்தக் கவிதைக்கு வேறு அர்த்தங்களும் வரவேற்கப்படுகின்றன். இம்மாதிரி வரிகளை மட்டுமல்லாமல் வரிகளுக்கிடையேயும் படிக்க வேண்டும். சிறந்த விமர்சகர் ஆகிவிடலாம். அடுத்த பதிவில் அசத்தலாய் (முக்கியமாய் அடுத்தவருக்குப் புரியாத மாதிரி) கவிதை எழுதுவது எப்படி என பார்க்கலாம்.

28 comments:

Vidhoosh said...

அடையோயவிலோஸ்கி சொய்ன்னு கவிதை படிச்சிருக்கீங்களா..

Vidhoosh said...

ஒரு கண்டைனர் லாரி நடுரோடில் நின்று விட்டதால் வரலாறு காணாத போக்குவரத்து நெரிசலில் நீந்துவதால், அலுவலகம் காத்தாடுகிறது.

Vidhoosh said...

பிறந்தநாள் எல்லாம் கொண்டாட வாணாமா..

Cable சங்கர் said...

உங்கள் பயம் போக உடனடியாய் என்னுடய எண்டர் கவிதைகள் படிக்கவும்.:)

Vidhoosh said...

கவிதையைப் புரிந்துக்கொள்வதும் எண்ணங்களை கவிதையாய் வடிப்பதும் எப்படி:-- முதல்ல கிட்னி இருக்கான்னு செக் பண்ணுங்க.. அது இல்லாம எப்டின்னு கேட்டா மட்டும் போறாது

நர்சிம் said...

ரைட்டு.

அமுதா கிருஷ்ணா said...

அருமையான புரிதலும் பின்னே விமர்சனமும்..

Chitra said...

அடுத்த பதிவில் அசத்தலாய் (முக்கியமாய் அடுத்தவருக்குப் புரியாத மாதிரி) கவிதை எழுதுவது எப்படி என பார்க்கலாம்.


.... இந்த பாடத்துக்கு எனக்கு நோட்ஸ்ல ஒரு copy எடுத்து வச்சுருங்க. :-)

Rajalakshmi Pakkirisamy said...

puriyira mathiri pesunga

CS. Mohan Kumar said...

//அடுத்த பதிவில் அசத்தலாய் (முக்கியமாய் அடுத்தவருக்குப் புரியாத மாதிரி) கவிதை எழுதுவது எப்படி என பார்க்கலாம். //

இப்படி வேற பயமுறுத்தணுமா ?

பின்னோக்கி said...

மிகக் கடுமையான கண்டனங்களை ஒரு கவிதை எழுதுவதன் மூலம் தெரியப்படுத்த விரும்புகிறேன்..

அன்றெழுந்த ஃபீனிக்ஸ்
பறவைக் கொடுத்துச்
சென்ற சிறகை
மூன்றாம் கரமென நினைத்தேன்
மீண்டெழுந்து
திரும்பக்கேட்டது
எரிய முடியவில்லையாம்

இனிமே கவித எழுதுறவங்களப் பத்தி தப்பா எழுதுனீங்கன்னா இன்னொரு கவிதை சொல்லவேண்டி வரும் ஆமாம்...

அன்பரசன் said...

கவிதை வரிகளுக்கு விளக்கம் தந்து கலக்கிட்டீங்க

Vidhoosh said...

இப்டி கம்மென்ட் மாடரேட் பண்ணி வச்சிருந்தா எப்டி கும்மறது? நூறு அடிக்க வாணாவா....

அப்துல்லா, எறும்பு, மற்றும் பலர் கூட்டணி அமைக்கலாம் என்று இருந்தோம்.. சொன்ன பேச்சை கேட்டு மருவாதியா நாளைக்கு மாடரேஷன எடுத்துடனும்.. நாளைக்கு சனிக்கிழமை... நேத்திக்கு வியாழக் கிழமை...

Vidhoosh said...

மைக் டெஸ்டிங் ஒன் டூ த்ரீ...

Vidhoosh said...

சரி... சரி... நாளைக்குத்தான் சனிக்கிழமை... ;))))

எறும்பு said...

//யாருமற்ற நிலையங்களில்//

ஆள் இல்லாத கடைக்கு இவனாக எதுக்கு டீ ஆத்த போனாங்க?

எறும்பு said...

அந்த கவுஞர் இன்னும் கூட அந்த கவுஜையை செதில் செதிலா செதுக்கி இருக்கலாம்

எறும்பு said...

//\\முற்றத்துச் சருகுகளின் தனிமை மீது
இளநீல வண்ணங்கொண்ட
மாடியிலிருந்து குதிக்கிறேன்\\

அவங்க குதிச்சப்பிறகு அந்த வீடு எப்படி இருந்தது?

எறும்பு said...

//எனக்கான இரயில்கள்
வருமுன்பே சென்று விடுகின்றன//

ரயில் வரதுக்கு முன்னாடியே எப்படி செல்லும்?வந்த பிறகுதானே செல்லும். படிக்கிற வாசகனை கிறுகாக்க முயலும் போக்கினை கண்டிக்கிறேன்.

பவள சங்கரி said...

நல்லா சொன்னீங்க போங்க.....

ஜெய்லானி said...

அட இப்புடியுமா இருக்கு நானே பயந்துட்டேன் கிளாஸ் சூப்பர்...!!

'பரிவை' சே.குமார் said...

அதுசரி...
இப்படியும் எழுதலாம் கவிதை...
எப்படியும் கொள்ளலாம் பொருளை..
அப்படின்னு விளக்க 'வித்யா'சமான
விளக்க உரை..!

T.V.ராதாகிருஷ்ணன் said...

OK ..OK..

ஹுஸைனம்மா said...

//இப்படியே கொஞ்சம் கொஞ்சமா டெவலப் ஆகி கவிதை விமர்சகர்ன்னு பெரிய பேர் வாங்கிடலாம்.//

ஐடியா புரியுது!!

R. Gopi said...

அழகிய தமிழ் மகன் படத்துல விஜய் சொல்ற கவிதைக்கு (?!) பாம்பே ஞானம் கொடுத்த விளக்கத்தை விட நீங்க சிறப்பா விளக்கிட்டீங்க:)

கோனார் நோட்செல்லாம் உங்க விளக்கத்துக்கு உறை போடக் காணாது:)

இந்நேரம் ஜலதோஷம் புடிச்சிருக்கனுமே:)

எனக்கு ஒரு ஜோக் ஞாபகம் வருது. ஒரு நல்ல படிக்கிற பையனும், நானும் (நல்லா படிக்காத பையன்னு தனியா சொல்ல வேண்டாம்னு நெனைக்கிறேன்) பரீட்சை முடிஞ்சதுக்கப்புறம் பேசிக்கிறோம்.

அவன்: எப்படி எழுதி இருக்க?
நான்: நீ வழக்கம் போலக் கொன்னுருப்ப, நான் கொலை பண்ணிட்டேன்

நீங்க கவிதைக்கு விளக்கம் தரேன்னு சொல்லிட்டு அதைக் கொலை பண்ணிட்டு எங்களைக் கொன்னுட்டீங்க:)

R. Gopi said...

\\ Vidhoosh said... .. நாளைக்கு சனிக்கிழமை... நேத்திக்கு வியாழக் கிழமை...\\

எனக்கு நினைவு தெரிஞ்ச வரைக்கும் அப்படித்தான். அடுத்த வாரத்தில் இருந்து மாத்துறாங்களா என்ன:)

Vidhya Chandrasekaran said...

கும்மிய அனைவருக்கும் நன்றி. விரைவில் இதன் தொடர்ச்சி வெளியாகும்:))

விக்னேஷ்வரி said...

ஸ்ஸப்பா... முடியல. பாவம் கவிதாயினி.