September 6, 2010

பஸீரா - Baseera

சோம்பலான சனி/ஞாயிறு. அதைவிடச் சோம்பலாய் வேலையே செய்யப் பிடிக்காமல் சூரியன் ரெஸ்ட் எடுத்துக்கப் போயாச்சு. மழையும் நான் பெய்ய மாட்டேன் என அடம்பிடித்துக்கொண்டு கண்ணாமூச்சி ஆடுகிறது. மந்தமான வானிலை. ஈசிஆரில் ஒரு ட்ரைவ். இந்த க்ளைமேட்டை அனுபவித்துக்கொண்டே சுடச்சுட உணவு சாப்பிட்டால் எப்படியிருக்கும்? நினைக்கும்போதே நல்லாருக்கா? அப்பக் கிளம்புங்க பசீராவிற்கு. ஏற்கனவே வேலை செய்தபோது நண்பர்களின் பிறந்தநாள் ட்ரீட்டிற்காக ஒரு முறையும் டீம் லஞ்சிற்காக ஒரு முறையும், கல்யாணமான புதிதில் ரங்க்ஸோடு ஒரு முறையும் சென்றிருக்கிறேன். இது நான்காவது முறை. இம்முறையும் உணவும், க்ளைமேட்டும் ஏமாற்றவில்லை.

ஈசிஆரில் ப்ரார்த்தனா ட்ரைவ் இன் தாண்டி வெட்டுவாங்கேனியில் இடதுப்புறமே இருக்கிறது. Ample and neat parking space. நுழைந்தவுடனே ஜூனியர் கண்ணில் பட்டுத் தொலைத்தது சில்ட்ரன் ப்ளே ஏரியா. ”சாப்டு விளையாடலாம்டா” என முடிக்கும் முன்னர் அவன் சறுக்குமரத்தில் ஏறத்தொடங்கியிருந்தான். உணவருந்தும் இடத்திற்கு மூன்று ஆப்ஷன்கள் இருக்கின்றன. மரத்தடியில் மரங்களையே சேராகாவும், டேபிளாகவும் கொண்ட அமைப்பு, மரத்தின் மேலே கட்டப்பட்டுள்ள ரூஃபுடன் கூடிய இடம் மற்றும் ஏர்கண்டிஷண்டு ஹால்.

உட்கார இடம் பார்த்தாச்சா. இப்போ மெனு. பெரிய்ய்ய மெனு. நார்த் இண்டியன் என்கிற பேரில் பஞ்சாபி (போற போக்க பார்த்தா பஞ்சாபி மட்டும் தான் நார்த் இண்டியன்னு சொல்லிடுவாங்க), சைனீஸ் (சத்தியமா இப்படி எழுத பிடிக்கல), காண்டினெண்டல் (திரும்பவும்) உணவுகள் மெனு கார்ட் முழுவதும் விரவிக் கிடக்கின்றன. பரவாயில்ல பிழைச்சுப் போ என்ற பரிதாபப்பட்டு கொஞ்சம் சைவமும், நிறைய்ய்ய்ய்ய அசைவமும்.

நார்த் இண்டியன் உணவு பரிமாறும் பெரும்பான்மையான உணவகங்களைப் போல இங்கும் ஆர்டருக்கு முன்னரே மிளகு அப்பளம் (பப்பட்) சர்வ் செய்யப்படுகிறது. நாங்கள் சென்ற அன்று மழை வருவதுப் போன்று வானம் இருண்டு, குளிர்ந்த காற்று வீசியது. சுடச்சுட வெஜ் க்ளியர் சூப் (சூப்பில் நிறைய க்ரன்ச்சி காய்கறிகள்), வெஜ் ட்ராகன் ரோல் (பொரித்த ஸ்ப்ரிங் ரோல்ஸ்) மற்றும் வெஜ் ஷீக் கெபாப் ஆர்டர் செய்தோம். மூன்றுமே மிக நன்று (Both quantity and quality).

மெயின் கோர்ஸிற்கு கார்லிக் நான், பட்டர் நான் மற்றும் தால் மக்கனி ஆர்டர் செய்தோம். ரொம்ப நேரம் வெயிட் பண்ண வேண்டியிருந்தது. நடுவில் ஒரு பூனைக்குட்டி வந்து எண்டெர்டெயின் செய்தது. ஜூனியருக்கு பூனைக்கு அப்பளம் குடுக்கவேண்டுமென ஆசை. முயற்சி செய்தும் பார்த்தான். ஓடிவிட்டது. Back to food. தால் மக்கனி மிக மிக அருமையாக இருந்தது. Bread இரண்டுமே நன்றாக இருந்தது. டெசர்டில் காரமல் கஸ்டர்டும் கேரட் அல்வாவும் சாப்பிட்டோம். இரண்டுமே ஆவரேஜ்.

மேலதிக தகவல்கள்

உணவகம் - Baseera
உணவு - North Indian/Chinese/Continental - Veg & Non-Veg
இடம் - ECR, ப்ரார்த்தனா ட்ரைவ் இன் தாண்டி, வெட்டுவாங்கனி
டப்பு - ஆவரேஜை விட கொஞ்சம் அதிகம். ஆனால் உணவின் சுவை, லொகேஷ்னுக்கே கொடுக்கலாம். (A complete meal (veg) for 2 costs 700+taxes)

Spoilers : வாரயிறுதியில் ரொம்பக் கூட்டம். சர்வீஸ் கொஞ்சம் ஸ்லோ. வருண பகவானின் கருணை கண்டிப்பாய் தேவை.

பரிந்துரை - கண்டிப்பாக ட்ரை பண்ணலாம்
.

14 comments:

T.V.ராதாகிருஷ்ணன் said...

//பரிந்துரை - கண்டிப்பாக ட்ரை பண்ணலாம்.//

பண்ணலாம்

Rajalakshmi Pakkirisamy said...

இப்பொழுது இருக்கிறதா என்று தெரியவில்லை.. பெயரும் சரியாக நியாபகம் இல்லை.. நிக்கர் பக்கர் க்ளோரி? ice cream ithu.. இதை தவிர மீதி அனைத்தும் நல்லா இருந்தது. We always prefer Basera :)

ராஜ நடராஜன் said...

தால் மக்னி,பட்டர் நான் மெயின் கோர்ஸா?விலைப்பட்டியலில் மூலையில் ஒளிந்து கொண்டிருக்கும் ஐட்டங்கள்:)

விக்னேஷ்வரி said...

ரொம்ப ப்ரொஃபஷனல் ரைட்டிங்கா ஆரம்பமாகியிருக்கு வித்யா. சூப்பர்.

ஜெய்லானி said...

சரி இதை வீட்டில செஞ்சா சர்விஸ் சார்ஜ் இருக்கா.. :-))

Chitra said...

Looks good. Thank you for the review and recommendation. :-)

ஹுஸைனம்மா said...

பஸீரான்னு பேரப்பாத்து ஏதோ உலகப்பட விமர்சனம்போலன்னு இந்தப் பக்கம் வராம இருந்தேன் ரெண்டு நாளா. இன்னிக்குத் துணிஞ்சு வந்துபாப்போம்னு வந்தா...

'பரிவை' சே.குமார் said...

சூப்பர்.

sakthi said...

போட்டோ பார்த்ததும் சாப்பிட ஆவல் எழுகின்றது!!!

Vidhya Chandrasekaran said...

நன்றி டிவிஆர் சார்.
நன்றி ராஜி.

நன்றி ராஜ நடராஜன் (எனக்கு அதான்)

நன்றி விக்னேஷ்வரி (அப்படியா??).

Vidhya Chandrasekaran said...

நன்றி ஜெய்லானி (ஹாஸ்பிட்டல் சார்ஜும் இருக்கும்).

நன்றி சித்ரா.

நன்றி ஹுஸைனம்மா (பார்த்துட்டாலும்).

நன்றி குமார்.
நன்றி சக்தி.

vinu said...

ippo ennoda jagaavum inga Tiruvanmiyur thaan so exactaa konjam adress sonna naan try panni paarkka konjam vasathiyaa irrukkum appuram "naan maan alla"vai patri ennudaiya paarvayum pagirnthu irrukkaen

மரா said...

செஞ்சு வெச்சுட்டு மெயிலப்புனீன்கன்னா நானு,விதூஷ் மேடம்,எறும்பு அல்லாரும் வந்து சாப்பிட்டுட்டு கருத்து சொல்லுவோம் :)

goma said...

இன்னைக்கே போய்ட மாட்டேன் பஸீராவுக்கு..நல்லா பசிக்கட்டும் அப்புறமா போகணும் அப்பதானே நல்லா கொட்டிக்கலாம்