January 5, 2011

ராஜ்தானி

சென்னையில் ஆம்பா ஸ்கை வாக் மாலிலும், ராயப்பேட்டை எக்ஸ்பிரஸ் அவென்யூ மாலிலும் செயல்பட்டுக்கொண்டிருக்கும் சைவ தாலி (thali) உணவகம் ராஜ்தானி. இருபதாயிரத்திற்கும் மேற்பட்ட ராஜஸ்தானி மற்றும் குஜராத்தி உணவுகளை எழுபதிற்கும் மேற்பட்ட காம்பினேஷனில் தருகிறார்கள்.

உட்கார்ந்தவுடனே எவர்சில்வர் தட்டில் குட்டி குட்டி கிண்ணங்களை வைத்துவிட்டுப் போகிறார்கள். 4 வகையான சப்ஜி (ஒரு பனீர் ஐட்டத்துடன்), ஸ்வீட் தால், ஸ்பைசி தால், ஸ்வீட் கடி, ஸ்பைசி கடி, சாலட், க்ரீன் சட்னி, இம்லி சட்னி, மூன்று விதமான ஸ்டார்டர்கள், ஃபுல்கா, பூரி, ஸ்பெஷல் ரொட்டி, கிச்சடி, தயிர் சாதம், ஊறுகாய், ஸ்வீட் என இருபதிற்கு மேற்பட்ட ஐட்டங்கள் அன்லிமிடெடாக வழங்கப்படுகின்றன (ஸ்வீட்டில் மூன்று வகை இருக்கிறது. ஏதாவது ஒன்று மட்டுமே தேர்ந்தெடுக்க முடியும்).

நாங்கள் சென்றிருந்தபோது ஸ்டார்டராக தயிர்வடை, கட்லட் மாதிரி ஒன்று மற்றும் பொரித்த அப்பளத்தை நொறுக்கி, வேர்க்கடலை இன்னபிற பொடிகள் போட்டு ஒரு ஐட்டம் தந்தார்கள். தயிர்வடை அட்டகாசமாய் இருந்தது. வழக்கமாய் நம்மூர் ஸ்டைலில் இல்லாமல், புளிப்பும் இனிப்புமாய் ரொம்பவே நன்றாக இருந்தது.


ஃபுல்கா, பூரியோடு பக்ரி (bhakri) என்ற பெயரில் பிஸ்கட் மாதிரி ஒரு வஸ்து கொடுத்தார்கள். ஃபுல்கா சாஃப்டாக நன்றாக இருந்தது. வேண்டுமெனில் தனியாக ஃபுல்காவின் மேல் நெய் தடவிக்கொள்ளலாம். நெய் இல்லாமலேயே நன்றாக இருந்தது. சப்ஜிகளில் வெண்டைக்காய், உருளை, மொச்சை மற்றும் பனீர் சப்ஜி இருந்தது. எல்லாமே above average. கடி சுமார் தான். இரண்டு ரவுண்ட் முடிந்தப்புறம் கிச்சடி கொண்டுவந்தார். வேண்டாம் என சொன்னதற்கு “கொஞ்சம் ட்ரை பண்ணி பாருங்க” என ஹிந்தியில் சொன்னதோடு சாப்பிட்டப்புறம் இன்னும் கொஞ்சம் கேப்பீங்க என்றார் சிரித்துக்கொண்டே. கிச்சடி நம்மூர் வெண்பொங்கல் டேஸ்டிலிருக்கிறது. நல்ல குழைவாக வாயில் தள்ளியவுடன் வழுக்கிக் கொண்டு போகிறது. தயிர் சாதம் சுமார் ரகம் தான் (இதுல நம்மாளுங்கள அடிச்சுக்கவே முடியாது). ஊறுகாயும் ராஜஸ்தானி/குஜராத்தி ஸ்டைலில் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். ஆந்திரா ஆவக்காய்:(


டெசர்ட்டில் ஃப்ரூட் ஷ்ரிகந்த், ஸ்ட்ராபெர்ரி கேசரி மற்றும் காஜர் ஹல்வா. நான் ஃப்ரூட் ஷ்ரிகந்த் சாப்பிட்டேன். டிவைன். அவ்வளவு க்ரீமியாக ரியல் ஃப்ரூட்ஸோடு அட்டகாசமாய் இருந்தது. மொத்த மெனுவிலேயே நான் அதிகம் ரிப்பீட்டடித்தது இதுதான். மூன்று முறை:))

இரண்டு இண்ட்ரெஸ்டிங்கான விஷயங்களை பார்த்தேன். ஒன்று கை கழுவ பெரிய பித்தளை சொம்பு/கூஜாவில் தண்ணீர் கொண்டு வந்து கொடுக்கிறார்கள். Gives a royal feel;)) இரண்டாவது சூப்பர்வைசர்கள் கிச்சனுக்கு கம்யூனிகேட் பண்ணும் சைகை மொழி. ஒவ்வொரு ஐட்டத்துக்கும் ஒவ்வொரு sign. சிக்னல் கொடுத்த சில நொடிகளில் ஐட்டம் டேபிளுக்கு வருகிறது.

+ அட்டகாசமான சர்வீஸ். பொறுமையாக கேட்டு கேட்டு பரிமாறுகிறார்கள்.

- லொக்கேஷன். இரண்டு கிளைகளுமே மாலில் அமைந்திருப்பதால் கூட்டம் அலைமோதுகிறது. வெயிட்டிங் டைம் ஒரு மணி நேரத்திற்கும் மேல். வாரயிறுதிகளில் டேபிள் ரிசர்வ் செய்யும் வசதியில்லை.

மேலதிக தகவல்கள்

உணவகம் - ராஜ்தானி
உணவு - ராஜஸ்தானி/குஜராத்தி சைவ உணவுகள் (Thali only)
இடம் - ஆம்பா ஸ்கை வாக் மால் மற்றும் எக்ஸ்பிரஸ் அவென்யூ மால் ஃபுட்கோர்ட்டில்
டப்பு - 225/thali including taxes

பரிந்துரை - கண்டிப்பாக முயற்சிக்கலாம். காரம் கம்மியான உணவுகள். நன்றாக இருந்தாலும் comparatively அண்ணா நகர் ஸ்ரீ ராஜஸ்தானி தாபா டேஸ்டில் நன்றாக இருக்கிறது.

23 comments:

ஜெய்லானி said...

//காரம் கம்மியான உணவுகள். //
இங்கேதான் (துபாய்) கம்மின்னா அங்கேயுமா..?!!!!! :-)

குடுகுடுப்பை said...

சாப்பாட்டைப்பார்த்தா எல்லாரும் வேட்டாமையா ஆயிடறோம். ஆனாலும் நீங்க சொம்ப பாத்தவுடன் நாட்டாமையானது கொஞ்சம் ஓவர்தான்

CS. Mohan Kumar said...

எக்ஸ்பிரஸ் அவென்யூ இன்னும் போகலை. போகணும்னு பிளான் பண்ணிக்கிட்டே இருக்கோம். போகும் போது ராஜ் தானி போயிட வேண்டியது தான்

Anonymous said...

ம்.. ஸ்லர்ப்.. :)

அமுதா கிருஷ்ணா said...

ஒரு மணிநேரம் வெயிட்டிங்கா..அப்ப வார நாட்களில் போகணும்.

CS. Mohan Kumar said...

ஹைதராபாத் போயிருந்த போது ஒரு நல்ல ஹோட்டலில் பிரியாணி சாப்பிட்டோம். அப்போது நான் பிரியாணியை போட்டோ எடுக்க போனேன். மனைவியும் பெண்ணும் இதை எல்லாமா போடோ எடுப்பாங்க என சிரிச்சிட்டு கேமராவை பிடுங்கி வச்சிகிட்டாங்க. வித்யான்னு ஒருத்தங்க இருக்காங்க அவங்க இதை எல்லாம் போட்டோ எடுத்து போடுவாங்க. வித்யா ஹோட்டல் போனா பர்ஸ் எடுத்திட்டு போவாங்களோ இல்லியோ கேமரா எடுத்து போவாங்க என்றேன். :)) கடைசி வரை பிரியாணி போட்டோ எடுக்கலை :((

Chitra said...

mouth-watering.....

'பரிவை' சே.குமார் said...

போட்டாவை போட்டு பசியக் கிளப்புறது நியாயமா அக்கா?

அன்புடன் மலிக்கா said...

//காரம் கம்மியான உணவுகள். //
இங்கேதான் (துபாய்) கம்மின்னா அங்கேயுமா..?!!!!! :-)//
அதானே

ஆனாலும் ராஜ்தானி வெகுசூப்பர்...

sakthi said...

வாவ் கண்டிப்பா சென்னை வரும்போது ராஜ்தானிக்கு போறேன் :)

விக்னேஷ்வரி said...

மும்பையில் சமீபத்தில் நானும் ஒரு குஜராத்தி உணவகம் ட்ரை செய்தேன். இதே மெனு, இதே விலை. ஒரே ரெஸ்டாரண்ட்டாக இருக்குமா எனத் தெரியவில்லை. நல்ல சர்வீஸ் நிஜமாவே.

பவள சங்கரி said...

ஆகா ...படம் பார்த்து நாக்கு சப்பு கொட்டுகிறது .....

Porkodi (பொற்கொடி) said...

உலகத்துலயே பெரிய்ய கொடுமை ஒரு ஊரை விட்டு வந்தப்புறம் அங்க இருக்க எல்லா ஜில்லாளி பில்லாளி மேட்டரும் தெரிய வர்றது தான். நல்லாருங்கம்மணி. :)

Anonymous said...

லேட்டாயிடுச்சுன்னு அரைகுறையா சாண்விச் சாப்பிட்டு வந்தா, இவங்க இப்படி எல்லாம் போட்டு வெறுப்பேத்தறாங்க. யாராவது என்னனு ஒரு வார்த்தை கேட்கமாட்டீங்களா. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

சாந்தி மாரியப்பன் said...

குஜராத்தி சமையல்ல காரம் குறைவா நல்லாவே இருக்கும். கிச்சடி நம்மூர் பொங்கலேதான், வித்தவுட் மிளகு,சீரகம்,முந்திரிப்பருப்பு. அதுதலையில கடியை ஊத்தி கொழப்பியடிச்சிருந்தீங்கன்னு வைங்க. இன்னும் இன்னும்ன்னு கேட்டுக்கிட்டே இருப்பீங்க.

அன்புடன் அருணா said...

அட!அங்கேயும் தாலி சிஸ்டம் இருக்கா???

RVS said...

//தயிர் சாதம் சுமார் ரகம் தான் (இதுல நம்மாளுங்கள அடிச்சுக்கவே முடியாது). //
செய்யறதிலேயும்... சாப்பிடறதுலேயும்.... கரெக்டா.. ;-)

எல் கே said...

நமக்கு சம்பந்தம் இல்லை

Vidhya Chandrasekaran said...

நன்றி ஜெய்லானி (இங்கேயும் சுர்ர் டைப் உணவுகள் கிடைக்குதுங்க).

நன்றி குடுகுடுப்பை (அதுக்கெல்லாம் தனித் தகுதி வேணுங்க).

நன்றி மோகன் குமார்.
நன்றி பாலாஜி.
நன்றி அமுதா கிருஷ்ணா.

Vidhya Chandrasekaran said...

நன்றி மோகன் குமார் (நாலு பேருக்கு நல்லதுன்னா எதுவுமே தப்பில்ல. டொண்ட டொண்ட டொண்டடைன்).

நன்றி சித்ரா.
நன்றி குமார்.
நன்றி மலிக்கா.
நன்றி சக்தி.

நன்றி விக்கி (ஒரு வேளை இதேவாகவும் இருக்கலாம். இது மும்பை பேஸ்ட் ரெஸ்டாரெண்டின் கிளைதான்).

Vidhya Chandrasekaran said...

நன்றி சங்கரி மேடம்.

நன்றி பொற்கொடி (இங்க வராமலா போய்டுவீங்க).

நன்றி அனாமிகா துவாரகன்.
நன்றி அமைதிச்சாரல்.
நன்றி அருணா மேடம்.
நன்றி RVS (அதே அதே).

நன்றி எல் கே (ஏன் ஹோட்டலே போகமாட்டீங்களா?)

Matangi Mawley said...

Superb Info!

Naan Express Avenue ponen.. but enakku intha edam kannula padave illa!! next time kandu pidichchu poganum...

Excellent! :D

nice blog...

RVS said...

ஒரு மணி நேரத்திற்கு மேல் துன்றதுக்கு வெயிட் பண்ணினால் நம்மளோட வண்டியும் அந்த சாப்பாட்டு காசுக்கு நிறுத்தக் கட்டணம் கொடுத்து நிறுத்தனுமே.. (எக்ஸ்பிரஸ் மாலில்)!!!! ;-)