January 28, 2011

White Pepper

ரொம்ப நாட்களாக ரீசனபிள் விலையில், அட்டகாசமான சுவையில் உணவளிக்கும் சைனீஸ் உணவகத்தை தேடிக்கொண்டிருந்தோம். ஒரு சுபயோக சுபதினத்தில் (ஹி ஹி என் பொறந்தநாளு) எங்கள் தேடுதல் நிறைவுற்றது. திருவான்மியூரிலிருக்கும் White Pepper Dim Sum Delicacy Restaurant எங்களை அன்புடன் வரவேற்றது.


குறைவான வெளிச்சத்தில் நீட்டான இண்டீரியர். ஆளே இல்லை:( ரொம்பவே கனிவான உபசரிப்பு. Veg Hot & Sour Soup, Veg Dim Sums Assorted இரண்டும் ஆர்டர் செய்தோம். ஜூனியருக்கு கொஞ்சம் மைல்ட் ஸ்பைசியான ஸ்டார்டர் தேடிக்கொண்டிருந்தபோது ஆர்டர் எடுக்க வந்தவரே ஸ்பைசி பொட்டேட்டோ ஃபிங்கர்சை காரம் கம்மியாக போட்டு செய்து தருவதாக சொன்னார். பெரிய தேங்க்ஸ் சொல்லிவிட்டு அப்படியே சூப்பில் கொஞ்சம் நிறைய காய்கறிகள் சேர்க்க சொன்னோம்.

அருமையான சூப். Loads of mushrooms & broccoli. Clear Soup with crunchy veggies:)

ஜூனியருக்காக பிரத்யோகமாய் தயாரான Spicy Potato fingers

திம்சும்ஸுடன் பரிமாறப்பட்ட நான்கு வகை டிப்ஸ். திம்சும்கள் அருமையாக இருந்ததால் உடனுக்குடன் காலி. ஃபோட்டோ எடுக்கவில்லை. Yet another healthy dish:) Popiah எனப்படும் மலேசியன் ஃப்ரைட் ஸ்ப்ரிங் ரோல் காம்ப்ளிமெண்டாக தந்தார்கள்.

Customized service மட்டுமல்லாமல் இந்த உணவகத்தில் ஹாஃப் போர்ஷன் ஆப்ஷனும் உண்டு. ரங்ஸ் ரைசிற்கு இழுக்க நான் நூடுல்ஸிற்கு ஃபேவராக இருக்கும் சமயங்களில் இந்த மாதிரி half portion கான்செப்ட் வரப்பிரசாதம். இம்முறை மூன்று பேர் சென்றிருந்ததால் இரண்டு நூடுல்ஸ் ஐட்டமும், ஒரு ரைஸ் ஐட்டமும், இரண்டு க்ரேவிகளும் ஆர்டர் செய்தோம். எல்லாமே ஹாஃப் போர்ஷன்ஸ். Kuai tiao (Flat rice noodles) மற்றும் Thai Spicy Noodles இரண்டுமே நன்றாக இருந்தது. முதல் ஐட்டம் கொஞ்சம் tangy சுவையிலும், இரண்டாவது roasted peanuts, sprouts எல்லாம் போட்டு காரமாக நன்றாக இருந்தது. Stuffed Eggplant in Schezwan sauce மற்றும் Five Spiced Vegetables இரண்டுமே மைல்ட் ஸ்பைஸியாக இருந்தது. Went well with Fried Rice.



And here comes the cherry on the cake:)

டெசர் ஆப்ஷன்ஸில் ஃப்ரைட் ஐஸ்க்ரீம் செட்டாகவில்லை என ஏமாற்றிவிட்டார்கள். Choco Coated lychees, Ice kachanga, mango cheese cake ஆகியவை ஆர்டர் செய்தோம். Delicious:)


மேலதிக தகவல்கள்

உணவகம் - White Pepper
உணவு - சைனீஸ் வெஜ் & நான் வெஜ்
இடம் - திருவான்மியூர் (ஜெயந்தி தியேட்டர் தாண்டியவுடன் இடதுபுறம் வரும் முதல் தெருவின் உள்ளே)
டப்பு - ரீசனபிள். கம்ப்ளீட் வெஜ் மீல் 300லிருந்து 350ற்குள்/ஒரு நபருக்கு.

பரிந்துரை - பெஸ்ட் சைனீஸ் @ சென்னை. பைசா வசூல்.

16 comments:

R. Gopi said...

நான் இந்தப் பதிவைப் பாக்கலை. அந்த ஐஸ் கிரீம் பாக்கவே இல்லை

எல் கே said...

ரைட்டு

கவிதா | Kavitha said...

கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்....

வேளச்சேரி யிலும் இருக்கா? எங்கயோ பார்த்த மாதிரி இருக்கு.. நீங்க சொல்லியிருக்க இடமா க்கூட இருக்கலாம்.. :))

Vidhya Chandrasekaran said...

@கவிதா : ஆமாம். வேளச்சேரியில் கிளை திறந்திருக்கிறார்கள்:)

Anonymous said...

சூப்பர்! ;)

Chitra said...

Really mouth-watering items... Enjoy!!!

பின்னோக்கி said...

போட்டாக்கள் மிக அருமையாக இருக்கிறது

CS. Mohan Kumar said...

பொறந்த நாளா? சொல்லவே இல்ல? வாழ்த்துகள் !!

மதிய நேரத்திலா இந்த படங்களை பாக்குறது!! தேவுடா!

நாங்க ஹாப் (Half ) போர்ஷனுக்காக காத்திருப்பதில்லை. வாங்கி பிச்சு share பண்ணிடுவோம். கல்லூரியில் நண்பரகளுடன் ஆரம்பித்த பழக்கம் இன்றும் தொடர்கிறது

வேளச்சேரியில் எங்க இருக்கு தெரிமா? தெரிஞ்சா .. Talk.. talk.. Talk me.

அமுதா கிருஷ்ணா said...

நடக்கட்டும் நடக்கட்டும்..

RVS said...

வலையிலேயே இலை விரிக்கிறீங்க வித்யா.. வர்ச்சுவலா சாப்படறோம்.. நன்றி ;-) ;-) ;-)

பவள சங்கரி said...

இதே வேலையாஆஆஆஅ இருக்காய்ங்கப்பா.........

விஜி said...

ச்ச்ச்சீ. இந்தப்பழம் புளிக்கும் :)))

DINESH said...
This comment has been removed by the author.
மதுரை சரவணன் said...

அருமை....வாழ்த்துக்கள்

Venkat Saran. said...

நீங்க சொன்னதெல்லாம் டிஷ்ஷஸ் பெயரா ? இல்ல ஹாலிவுட் படத்தோட டைட்டிலா ? படமே சூப்பரா இருக்கு .

'பரிவை' சே.குமார் said...

போட்டாக்கள் மிக அருமை.