அரிய வகைப் பறவையான Blu, குட்டியாக இருக்கும்போதே ப்ரேசிலிலிருந்து கடத்தி வரப்படுகிறது. மின்னர்சோட்டாவில் லிண்டா என்ற பெண்ணின் தோழனாக, domestic birdஆக வளர்க்கப்படுகிறது. ப்ரேசிலிலிருந்து வரும் ஆர்னிதாலஜிஸ்ட் Tulio, லிண்டாவிடம் Bluவின் இனம் அழியும் நிலையிலிருப்பதாகவும், அதே blue macaw வகையைச் சேர்ந்த jewel என்றழைக்கப்படும் பெண் பறவை ஒன்றை கண்டுபிடித்திருப்பதாகவும், இனப்பெருக்கத்திற்காக Bluவை ப்ரேசிலிற்கு அழைத்து வரவேண்டுமென கோரிக்கை விடுக்கிறார். முதலில் மறுக்கும் லிண்டா, பின்னர் மனது மாறி bluவை அழைத்துக்கொண்டு ப்ரேசில் வந்து சேர்கிறார்.
வீட்டுப்பறவையாக, பறக்கத் தெரியாமல் வளர்ந்த blu, சுதந்திரமாக காற்றில் பறந்து திரிந்த jewelஐ கூண்டில் சந்திக்கிறது. தப்பிக்கும் முயற்சியில் ஈடுப்பட்டிருக்கும் ஜ்வெல்லிற்கும் ப்ளூவிற்கும் செட்டாகவில்லை. இதனிடையே பறவைகளை திருடி விற்கும் கும்பல், இந்த ஜோடியையும் திருடுகிறது. இவர்களிடமிருந்து முதல் முறை தப்பிக்க முயற்சிக்கும்போது பிடிபட்டு, காலில் சங்கிலியால இந்த ஜோடி பிணைக்கப்படுகிறது. Blu & jewel கடத்தல் கும்பலிடமிருந்து தப்பித்தார்களா? ஒன்று சேர்ந்தார்களா? Blu லிண்டாவிடம் சென்றடைந்ததா? போன்ற கேள்விகளுக்கான விடை மீதிப் படம்.
அழகான, மனதைக் கொள்ளை கொள்ளும் வண்ணங்களுடனான பறவைகள் கண்களுக்கு விருந்தளிக்கின்றன. அங்கங்கே 3D காட்சிகள் தேவையில்லை எனத் தோன்றினாலும், படத்தில் வரும் சேஸிங் காட்சிகளும், ப்ரேசிலின் ஏரியல் வீயூ காட்சிகளும் 3Dயில் அட்டகாசமாக இருக்கின்றன. Blu, jewel, rafael, pedro, nico, luiz ஆகிய பறவைகளிடையேயான காட்சிகள் நகைச்சுவையாகவும், க்ளைமேக்சில் வரும் ப்ரேசிலில் நடக்கும் கார்னிவல் காட்சிகள் பிரமிப்பையும் அளிக்கிறது. நட்பு, தன்னம்பிக்கை, காதல், பிரிவு, ஆக்ஷன், த்ரில்லர், காமெடி என அனைத்து உணர்வுகளும் கலந்த கலக்கலான எண்டெர்டெயினராக அமைந்துள்ளது. தொடக்கம் முதல் முடிவு வரை கலர் கலரான் காட்சியமைப்பாலும், 3D எஃபெக்ட்ஸாலும் குழந்தைகளையும், விறுவுறுப்பான திரைக்கதையால் பெரியவர்களையும் கட்டிப் போடுகிறது.
Rio Trailer
RIO - அருமையான சம்மர் எண்டெர்டெயினர். Must watch movie for all age groups.
April 25, 2011
April 19, 2011
வீடு...தேடு...இண்டர்வ்யூ படுத்திய பாடு
ஆபிஸில் இரண்டுமணிநேரம் பெர்மிஷன் கேட்டு கிடைக்காததால், பெரிய ப்ரோக்ராம் ஒன்றை இரண்டு மணிநேரம் ஒடும்படி டேட்டா செட் பண்ணிவிட்டு, கொலீக்கிடம் பார்த்துக்கொள்ளும்படி தாஜா பண்ணி, டேமேஜர் பார்க்காத மாதிரி, கேபினிலிருந்து எஸ்ஸாகி போய் முதல் முதல் வீடு பார்த்த அனுபவம் இன்னும் நினைவில். அதிர்ஷ்டவசமாக ஒரு மணிநேரத்திலேயே அற்புதமான வீடு அமைந்தது. கிட்டத்தட்ட இருபது மாதங்கள் கழித்து அடுத்த வீடு தேடும் படலம். இந்த முறை பொறுப்பு என்னிடம் மட்டும். ரொம்ப சிரமப்படவில்லையென்றாலும் இரண்டு மூன்று முறை அலைய வேண்டியிருந்தது. மறுபடியும் பதினைந்து மாதங்கள் கழித்து அடுத்த வீடு பார்க்கவேண்டிய கட்டாயம். இந்தமுறை நாக்கு வெளியே தள்ளிவிட்டது. அந்தளவுக்கு கஷ்டம்.
வேலைக்கு சேரக்கூட இந்தளவுக்கு இண்டர்வ்யூ செய்ய மாட்டார்கள். கன்சல்டன்ஸி நிறுவனங்களைப் போல ப்ரோக்கர்கள். எம்ளாயரை மீட் பண்ணுவதற்க்கு முன் இவர்களிடம் உங்கள் தேவைகளை சொல்லி ஒரு மினி இண்டர்வ்யூ அட்டெண்ட் செய்ய வேண்டும்.
"சார். என்ன பட்ஜெட்டில் பார்க்கறீங்க? (நாம சொல்றதை விட 3000 அதிகமாதான் வீடு கிடைக்கும் என்பார்கள்) எந்த ஏரியாவுல சார் வேணும்? (ஏரியா சொன்னதும் அங்க இந்த ரேஞ்சுக்கு சான்ஸே இல்ல சார். நீங்க பேசாம இந்த ஏரியாவுல பாருங்களேன் என்பார்கள்) கார் பார்க்கிங்கோடவா? அட்வான்ஸ் பத்து மாசம் சார். சூப்பர் வீடு. அருமையான லொக்கேஷன். மெயின் ரோட்டில் இருந்து 5 நிமிஷ நடை தான்."
சார் முதல்ல வீட்டை காட்டுங்க.
வாராய் நீ வாராய்ங்கற ரேஞ்சுக்கு வண்டில போகவே 20 நிமிஷம் ஆச்சு. ஒரு நேரத்துல ஒரு ஆள் தான் நடக்க முடியும்ங்கற மாதிரி ஒரு தெரு (அப்படி சொல்றதே பாவம்). நுழையறதுக்கு முன்னமே முடிஞ்சு போற ஹால். வெளிச்சம்னா என்னன்னே தெரியாத ரூம்கள். ஸ்ஸ்ஸப்பா.
"25 சொல்றாங்க மேடம். பேசி 24ல வந்து நிக்கலாம்".
"வீடு வாங்கற ஐடியா எல்லாம் இல்ல சார். வாடகை எவ்வளவுன்னு மட்டும் சொல்லுங்க"
"என்ன விளையாடறீங்களா? நான் வாடகையத்தாங்க சொன்னேன். விலைக்குன்னா 87 இலட்சம் ஆகும்."
கிர்ர்ரடித்தது எனக்கு. யோவ் ஒன்றரை வருஷத்துக்கு முன்னால மெயின்ல 7500க்கு குடியிருந்தோம்யா.
நீங்க போன ஜென்மத்துல புண்ணியம் ஏதாவது பண்ணிருப்பீங்க மேடம். (ஹுக்கும்)
ஒரு வழியா வீடு சுமாரா இருந்தா எம்ப்ளாயரிடம் டெலிபோனிக் இண்டர்வ்யூ.
"வீடு பார்த்தோம் சார். எங்களுக்கு ஓகே. வாடகை மட்டும்..."
"அதிருக்கட்டும். முதல்ல நீங்க எங்க வேலை செய்யறீங்க?"
"#$##@@%^& கம்பெனில"
"அப்படி ஒரு கம்பெனி கேள்விப்பட்டதே இல்லையே?"
"???!!!"
"ம்ம் நீங்க எத்தனை பேரு?"
"ரெண்டு பேர் தான் சார். இரண்டு வயசுல ஒரு குழந்தை இருக்கு"
"அப்படியா சரி நேர்ல வாங்க பேசுவோம்"
"வீக்கெண்ட் ஓக்கேவா சார்"
"வீக்கெண்டா. நாளைக்கு காலைல பத்து மணிக்கு வாங்க. வீட்டுக்கு ஏகப்பட்ட டிமாண்ட் இருக்கு."
"சார் ஆபிஸ் இருக்கு சார்"
"அப்படியா. அப்ப உங்க இஷ்டம்"
டொக்..
ஒரு நாலு வீட கட்டிவிட்டுட்டு இவங்க பண்ற அளப்பறை இருக்கே. 3BR வீட்டுக்குண்டானா வாடகையாம். ஆனால் ஒரு ரூமைப் பூட்டி தான் வைத்திருப்பார்களாம். வீட்டுச் சாவி ஒன்றும் அவர்களிடம் இருக்குமாம். எப்ப வேணாலும் வந்து போவார்களாம். இந்த கஷ்டங்களை தாண்டி ஏரியா, வீடு செட்டாகி, டெலிபோனிக் இண்டர்வ்யூவை ஒரளவுக்கு தேத்தினா அடுத்தது நேர்முகத் தேர்வு.
வீட்டு ஓனர் அட்ரஸ மட்டும் தந்துட்டு இந்த டைமுக்கு வந்துடுங்க. ஏன்னா நான் இன்னிக்கு நைட்டே ஓபாமாவோட ஒரு கான்பரன்ஸ்ல கலந்துக்கப் போறேன்னு பில்டப்பு பண்ணுவாங்க. எங்கனோ மூலைல ஒளிஞ்சிட்டிருக்கிற அந்த வீட்ட கண்டுபிடிக்கறதுக்கு கொலம்பஸ் கிட்ட ட்ரெய்னிங் எடுத்துகிட்டா தான் உண்டு. ஒரு வழியா ரோட்டுல போறவன் வர்றவனயெல்லாம் மடக்கி, அட்ரஸ் கேட்டு, கண்டேன் சீதையைங்கற கணக்கா வீட்டு வாசல்ல போய் பெல் அடிப்போம். கதவத் திறந்து நம்மள கேவலமா ஒரு லுக் விடுவாங்க. நாம யாருங்கறதை விளக்கினப்புறம் உள்ள வர சொல்லூவாங்க. மம்மிய பார்த்த ரத்தத்தின் ரத்தம் மாதிரி பம்மி பம்மி அவங்க காட்ற சோஃபால உட்காராம உட்கார்ந்த அப்புறம் ஆரம்பிக்கும் அக்கப்போரு.
"சொல்லுங்க. வீடெல்லாம் ஒகேவா?"
"வீடு பிடிச்சிருக்கு சார். ஆனா வாடகை தான்......"
"நீங்க ரெண்டு பேர்ங்கறதால தான் சார் உங்களுக்கு தர்றேன். இதைவிட அதிக வாடகை குடுத்து எடுத்துக்க ஆள் ரெடியா இருக்காங்க."
"அப்படியா சார். வாடகை மட்டும் கொஞ்சம் குறைச்சுக்கோங்களேன்"
"சரிங்க. நீங்க ரொம்ப வற்புறுத்தி கேட்கறதால ஒரு 500 ரூபிஸ் குறைச்சுகிறேன். ஆனா அட்வான்ஸ் பத்து மாசம் வாடகை. ஓக்கேவா"
"(அடப்பாவி அதுக்கு வாடகைய நீ குறைச்சிருக்கவே வேண்டாமே)இல்ல சார் பழைய வாடகையே ஒக்கே"
"ஆணியெல்லாம் அடிக்கக்கூடாது"
"ஹி ஹி. ஆணியப் புடுங்கிதான் சார் பழக்கம்"
"மறந்துட்டேனே நாந்வெஜ் சமைக்கக்கூடாது"
"நாங்க சுத்த சைவம் சார் (முட்டைய சைவம்ன்னு சொல்லியாச்சு. கூடிய சீக்கிரமே சிக்கனையும் சைவ லிஸ்டில் சேர்க்க போராட்டம் பண்ணனும்)"
"தண்னியெல்லாம் அநாவசியமா செலவு பண்ணக்கூடாது"
"ச்சே ச்சே. தண்ணி செலவே ஆகாது சார். நாங்க குளிக்கறதுகூட குறைச்சுக்குவோம்"
"மாசம் பொறந்து 4 தேதிக்குள்ள வாடகை குடுத்தடனும்."
"சரி சார். உங்க பேங்க் அக்கவுண்ட் நம்பர் சொல்லுங்க. அதுக்கு நெட் ட்ரான்ஸ்பர் பண்ணிடறோம்"
"அதெல்லாம் ரிஸ்க்குங்க. நீங்க வீட்டுக்கே வந்து கொடுத்துடுங்க. அப்புறம் கேஷாவே குடுத்துடுங்க. செக் வேண்டாம். ஆங் சொல்ல மறந்துட்டேனே. வாடகை இல்லாம மெயிண்டனென்ஸ்க்கு தனியா சார்ஜ். அதோட தண்ணிக்குன்னு காமன் மோட்டார் இருக்கு. அதுக்கு தனியா சார்ஜ். நான் சொல்ற எலக்ட்ரீஷியனை தான் கூப்பிடனும். வீட்ல எதுனாச்சும் பிரச்சனைன்னா என்கிட்ட சொல்லாம நீங்களே சரி செய்யக்கூடாது. டாய்லெட்ட ஹார்பிக் மட்டும் தான் போட்டு க்ளீன் பண்ணனும்??!! நீங்க ஊருக்கு எங்கயாவது போற மாதிரி இருந்தா சொல்லிட்டு போகனும். நானும் வீட்ட எப்படி வச்சிருக்கீங்கன்னு பார்க்க அடிக்கடி வருவேன். சொந்தக்காரங்க வந்தா ரெண்டு நாளுக்கு மேல தங்கக் கூடாது. வீடு நாஸ்தியாகிடும் பாருங்க. அப்புறம் ...................................................."
"அய்யோ வீடே வேணாம். ஆள விடுங்க"
#மீள்பதிவு

Labels:
மீள்பதிவு
April 7, 2011
April 6, 2011
துணுக்ஸ் 06-04-2011
28 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா கிரிக்கெட் உலகக்கோப்பையை கைப்பற்றியிருக்கிறது. வாழ்த்துகள் தோனி அண்ட் கோவிற்கு. எப்பவுமே என்னுடைய ஃபேவரைட் ப்ளேயர் கங்குலி தான். ஒரு சராசரி ரசிகையாய், டெக்னிகல் அறிவெல்லாம் இல்லாதவளாய், கங்குலி போன பின்பு கிரிக்கெட் பார்ப்பதையே நிறுத்திவிட்டேன்;) இந்த உலகக்கோப்பைத் தொடரிலும் இந்தியா விளையாடிய போட்டிகளை மட்டுமே பார்த்தேன்.
”கடங்காராப் பாவி. லட்டு மாதிரி வந்த கேட்ச வுட்டுட்டானே.”
“வெளம்பரத்துல மட்டும் நன்னா ஜிங்கு ஜிங்குன்னு ஆடுங்கடா.”
“குருட்டுக் கண்ணாடியப் போட்டுண்டு புல்லப் புடுங்கறது பாரு பிரகஸ்பதி”
”செத்த வேகமா ஓடப்பிடாது. நெடுஞ்சாங்கிடையா விழுந்து கிடக்கிறான் பாரு”
“ஏன் நம்மாளுங்க யூனிஃபார்ம் கலர மாத்தினாங்க? இது கண்றாவியான்னா கண்ண உறுத்தறது?”
இதெல்லாம் சென்ற வேர்ல்ட் கப்பின் போது என் பாட்டி அடித்த கமெண்ட். 87 வயதில் பாட்டிக்கு அபார ஞாபக சக்தி. யூனிஃபார்ம் கலரை வைத்தே எந்த டீம் என சொல்லுமளவிற்கு. அண்ணாக்கள் யாரும் பாட்டியை மேட்ச் பார்க்க விடவே மாட்டார்கள். குறிப்பாக டெண்டுல்கர் விளையாடும்போது. டெண்டுல்கர் ஃபேஸ் பண்ணும் ஒவ்வொரு பாலின் போது பாட்டி கேட்டுக்கொண்டேயிருப்பார் “டெண்டுல்கர் அவுட ஆயிட்டானா?”. இந்த வேர்ல்ட் கப்பின் போது பாட்டியில்லை:(
****************
வெயில் வாட்டி வதைக்கிறது. பத்து நிமிடங்கள் மாடிக்கு சென்று துணி காயவைத்துவிட்டு வருவதற்குள் கண்கள் இருட்டி, தலைவலியே வந்துவிடுகிறது. கத்திரியை நினைத்தால் இப்பவே கண்ணக்கட்டுது. சன்ஸ்க்ரீன், கூலர்ஸ், பானைத் தண்ணீர், பழங்கள், மோர், கூழ் போன்றவை என்னுடைய சாய்ஸ். சூரிய பகவானே கொஞ்சம் கருணைக் காட்டு.
*****************
குழந்தைகளுக்கு நல்லது கெட்டது ஆகியவற்றை பெற்றோர் தான் சொல்லித்தரனும். சென்ற ஞாயிறு அண்ணா நகர் டவர் பார்க்கில் குழந்தைகளுக்கான விளையாட்டுத் திடலில் சறுக்கு மரத்தில் ஏறி விளையாட குழந்தைகள் வரிசையில் நின்றுக்கொண்டிருந்தார்கள். ஒரு ஆறு வயது வாண்டு வரிசையில் நின்றது. எங்கிருந்தோ ஒருவர் (அப்பாவாகத்தான் இருக்கனும்) வந்து குழந்தையிடம் “இங்க ஏண்டா நின்னுகிட்டிருக்க? முன்னாடி போய் ஏறிச் சறுக்க வேண்டியதுதானே” எனக் கடிந்துக்கொண்டே அந்தப் பையனை முன்னாடி இழுத்துச்சென்றார். மற்ற பெற்றோர்களுக்கெல்லாம் அதிர்ச்சியாக இருந்தது. “ஏன் சார் எல்லா குழந்தைகளும் வெயிட் பண்ணித்தானே சார் போறாங்க?” என்று கேட்டதற்கு உன் வேலையப் பார்த்துகிட்டுப் போ என ஏகவசனத்தில் திட்டினார். பின்னர் அந்தப் பையனை தரதரவென இழுத்துக்கொண்டு போய்விட்டார். வருத்தமாக இருந்தது. நல்வழிக் காட்ட வேண்டியவர்களே, குறுக்குவழியை அதுவும் சின்ன வயதிலேயே போதிப்பது அந்தக் குழந்தைக்கும் நல்லதல்ல. நாட்டுக்கும் நல்லதல்ல:(
********************
மருத்துவமனைக்கு சென்றிருந்தபோது, வாக்கிங் ஸ்டிக், காலில் மாவுக்கட்டு சகிதமிருந்த ஒரு சின்னப் பெண்ணை அழைத்துச் செல்ல அப்பெண்ணின் அம்மா கஷ்டப்பட்டுக்கொண்டிருந்தார். அவர்களுக்கு உதவி செய்யும்போது அந்தப்பெண்ணின் அம்மா சொன்னது அதிர்ச்சியாக இருந்தது. ஹை ஹீல்ஸ் போட்டுக்கொண்டு ஓடும்போது, ஹீல் உடைந்து anklet fracture ஏற்பட்டுவிட்டதாம். இன்னும் 6 மாதங்களுக்கு ஓடவோ குதிக்கவோ கூடாது என டாக்டர் சொல்லியிருக்கிறாராம். குழந்தை எப்படிங்க ஓடியாடி விளையாடாம இருக்குமென்றார் என்னிடம். குழந்தை என்ற நினைப்பு உங்களுக்கிருந்திருந்தா ஹீல்ஸ் போட அனுமதிச்சிருப்பீங்களான்னு கேக்க நினைச்சேன். வெந்தப் புண்ணில் வேலப் பாய்ச்ச வேண்டாமேன்னு அமைதியா இருந்துட்டேன். பெரியவங்களையே ஹீல்ஸ் அவாய்ட் பண்ணச்சொல்றாங்க. இவங்க என்னடான்னா குழந்தைக்கெல்லாம் ஹீல்ஸ் போட்டு அழகுப் பார்க்கறாங்க:(
*********************
அதீதம் இணைய இதழில் என் வலைப்பக்கத்தை அறிமுகப்படுத்தியிருக்கிறார்கள். நன்றி அதீதம் ஆசிரியர் குழுவினருக்கு.

துணுக்ஸ்
Subscribe to:
Posts (Atom)