April 19, 2011

வீடு...தேடு...இண்டர்வ்யூ படுத்திய பாடு

ஆபிஸில் இரண்டுமணிநேரம் பெர்மிஷன் கேட்டு கிடைக்காததால், பெரிய ப்ரோக்ராம் ஒன்றை இரண்டு மணிநேரம் ஒடும்படி டேட்டா செட் பண்ணிவிட்டு, கொலீக்கிடம் பார்த்துக்கொள்ளும்படி தாஜா பண்ணி, டேமேஜர் பார்க்காத மாதிரி, கேபினிலிருந்து எஸ்ஸாகி போய் முதல் முதல் வீடு பார்த்த அனுபவம் இன்னும் நினைவில். அதிர்ஷ்டவசமாக ஒரு மணிநேரத்திலேயே அற்புதமான வீடு அமைந்தது. கிட்டத்தட்ட இருபது மாதங்கள் கழித்து அடுத்த வீடு தேடும் படலம். இந்த முறை பொறுப்பு என்னிடம் மட்டும். ரொம்ப சிரமப்படவில்லையென்றாலும் இரண்டு மூன்று முறை அலைய வேண்டியிருந்தது. மறுபடியும் பதினைந்து மாதங்கள் கழித்து அடுத்த வீடு பார்க்கவேண்டிய கட்டாயம். இந்தமுறை நாக்கு வெளியே தள்ளிவிட்டது. அந்தளவுக்கு கஷ்டம்.

வேலைக்கு சேரக்கூட இந்தளவுக்கு இண்டர்வ்யூ செய்ய மாட்டார்கள். கன்சல்டன்ஸி நிறுவனங்களைப் போல ப்ரோக்கர்கள். எம்ளாயரை மீட் பண்ணுவதற்க்கு முன் இவர்களிடம் உங்கள் தேவைகளை சொல்லி ஒரு மினி இண்டர்வ்யூ அட்டெண்ட் செய்ய வேண்டும்.
"சார். என்ன பட்ஜெட்டில் பார்க்கறீங்க? (நாம சொல்றதை விட 3000 அதிகமாதான் வீடு கிடைக்கும் என்பார்கள்) எந்த ஏரியாவுல சார் வேணும்? (ஏரியா சொன்னதும் அங்க இந்த ரேஞ்சுக்கு சான்ஸே இல்ல சார். நீங்க பேசாம இந்த ஏரியாவுல பாருங்களேன் என்பார்கள்) கார் பார்க்கிங்கோடவா? அட்வான்ஸ் பத்து மாசம் சார். சூப்பர் வீடு. அருமையான லொக்கேஷன். மெயின் ரோட்டில் இருந்து 5 நிமிஷ நடை தான்."

சார் முதல்ல வீட்டை காட்டுங்க.

வாராய் நீ வாராய்ங்கற ரேஞ்சுக்கு வண்டில போகவே 20 நிமிஷம் ஆச்சு. ஒரு நேரத்துல ஒரு ஆள் தான் நடக்க முடியும்ங்கற மாதிரி ஒரு தெரு (அப்படி சொல்றதே பாவம்). நுழையறதுக்கு முன்னமே முடிஞ்சு போற ஹால். வெளிச்சம்னா என்னன்னே தெரியாத ரூம்கள். ஸ்ஸ்ஸப்பா.

"25 சொல்றாங்க மேடம். பேசி 24ல வந்து நிக்கலாம்".
"வீடு வாங்கற ஐடியா எல்லாம் இல்ல சார். வாடகை எவ்வளவுன்னு மட்டும் சொல்லுங்க"
"என்ன விளையாடறீங்களா? நான் வாடகையத்தாங்க சொன்னேன். விலைக்குன்னா 87 இலட்சம் ஆகும்."
கிர்ர்ரடித்தது எனக்கு. யோவ் ஒன்றரை வருஷத்துக்கு முன்னால மெயின்ல 7500க்கு குடியிருந்தோம்யா.
நீங்க போன ஜென்மத்துல புண்ணியம் ஏதாவது பண்ணிருப்பீங்க மேடம். (ஹுக்கும்)

ஒரு வழியா வீடு சுமாரா இருந்தா எம்ப்ளாயரிடம் டெலிபோனிக் இண்டர்வ்யூ.

"வீடு பார்த்தோம் சார். எங்களுக்கு ஓகே. வாடகை மட்டும்..."
"அதிருக்கட்டும். முதல்ல நீங்க எங்க வேலை செய்யறீங்க?"
"#$##@@%^& கம்பெனில"
"அப்படி ஒரு கம்பெனி கேள்விப்பட்டதே இல்லையே?"
"???!!!"
"ம்ம் நீங்க எத்தனை பேரு?"
"ரெண்டு பேர் தான் சார். இரண்டு வயசுல ஒரு குழந்தை இருக்கு"
"அப்படியா சரி நேர்ல வாங்க பேசுவோம்"
"வீக்கெண்ட் ஓக்கேவா சார்"
"வீக்கெண்டா. நாளைக்கு காலைல பத்து மணிக்கு வாங்க. வீட்டுக்கு ஏகப்பட்ட டிமாண்ட் இருக்கு."
"சார் ஆபிஸ் இருக்கு சார்"
"அப்படியா. அப்ப உங்க இஷ்டம்"
டொக்..

ஒரு நாலு வீட கட்டிவிட்டுட்டு இவங்க பண்ற அளப்பறை இருக்கே. 3BR வீட்டுக்குண்டானா வாடகையாம். ஆனால் ஒரு ரூமைப் பூட்டி தான் வைத்திருப்பார்களாம். வீட்டுச் சாவி ஒன்றும் அவர்களிடம் இருக்குமாம். எப்ப வேணாலும் வந்து போவார்களாம். இந்த கஷ்டங்களை தாண்டி ஏரியா, வீடு செட்டாகி, டெலிபோனிக் இண்டர்வ்யூவை ஒரளவுக்கு தேத்தினா அடுத்தது நேர்முகத் தேர்வு.

வீட்டு ஓனர் அட்ரஸ மட்டும் தந்துட்டு இந்த டைமுக்கு வந்துடுங்க. ஏன்னா நான் இன்னிக்கு நைட்டே ஓபாமாவோட ஒரு கான்பரன்ஸ்ல கலந்துக்கப் போறேன்னு பில்டப்பு பண்ணுவாங்க. எங்கனோ மூலைல ஒளிஞ்சிட்டிருக்கிற அந்த வீட்ட கண்டுபிடிக்கறதுக்கு கொலம்பஸ் கிட்ட ட்ரெய்னிங் எடுத்துகிட்டா தான் உண்டு. ஒரு வழியா ரோட்டுல போறவன் வர்றவனயெல்லாம் மடக்கி, அட்ரஸ் கேட்டு, கண்டேன் சீதையைங்கற கணக்கா வீட்டு வாசல்ல போய் பெல் அடிப்போம். கதவத் திறந்து நம்மள கேவலமா ஒரு லுக் விடுவாங்க. நாம யாருங்கறதை விளக்கினப்புறம் உள்ள வர சொல்லூவாங்க. மம்மிய பார்த்த ரத்தத்தின் ரத்தம் மாதிரி பம்மி பம்மி அவங்க காட்ற சோஃபால உட்காராம உட்கார்ந்த அப்புறம் ஆரம்பிக்கும் அக்கப்போரு.

"சொல்லுங்க. வீடெல்லாம் ஒகேவா?"
"வீடு பிடிச்சிருக்கு சார். ஆனா வாடகை தான்......"
"நீங்க ரெண்டு பேர்ங்கறதால தான் சார் உங்களுக்கு தர்றேன். இதைவிட அதிக வாடகை குடுத்து எடுத்துக்க ஆள் ரெடியா இருக்காங்க."
"அப்படியா சார். வாடகை மட்டும் கொஞ்சம் குறைச்சுக்கோங்களேன்"
"சரிங்க. நீங்க ரொம்ப வற்புறுத்தி கேட்கறதால ஒரு 500 ரூபிஸ் குறைச்சுகிறேன். ஆனா அட்வான்ஸ் பத்து மாசம் வாடகை. ஓக்கேவா"
"(அடப்பாவி அதுக்கு வாடகைய நீ குறைச்சிருக்கவே வேண்டாமே)இல்ல சார் பழைய வாடகையே ஒக்கே"
"ஆணியெல்லாம் அடிக்கக்கூடாது"
"ஹி ஹி. ஆணியப் புடுங்கிதான் சார் பழக்கம்"
"மறந்துட்டேனே நாந்வெஜ் சமைக்கக்கூடாது"
"நாங்க சுத்த சைவம் சார் (முட்டைய சைவம்ன்னு சொல்லியாச்சு. கூடிய சீக்கிரமே சிக்கனையும் சைவ லிஸ்டில் சேர்க்க போராட்டம் பண்ணனும்)"
"தண்னியெல்லாம் அநாவசியமா செலவு பண்ணக்கூடாது"
"ச்சே ச்சே. தண்ணி செலவே ஆகாது சார். நாங்க குளிக்கறதுகூட குறைச்சுக்குவோம்"
"மாசம் பொறந்து 4 தேதிக்குள்ள வாடகை குடுத்தடனும்."
"சரி சார். உங்க பேங்க் அக்கவுண்ட் நம்பர் சொல்லுங்க. அதுக்கு நெட் ட்ரான்ஸ்பர் பண்ணிடறோம்"
"அதெல்லாம் ரிஸ்க்குங்க. நீங்க வீட்டுக்கே வந்து கொடுத்துடுங்க. அப்புறம் கேஷாவே குடுத்துடுங்க. செக் வேண்டாம். ஆங் சொல்ல மறந்துட்டேனே. வாடகை இல்லாம மெயிண்டனென்ஸ்க்கு தனியா சார்ஜ். அதோட தண்ணிக்குன்னு காமன் மோட்டார் இருக்கு. அதுக்கு தனியா சார்ஜ். நான் சொல்ற எலக்ட்ரீஷியனை தான் கூப்பிடனும். வீட்ல எதுனாச்சும் பிரச்சனைன்னா என்கிட்ட சொல்லாம நீங்களே சரி செய்யக்கூடாது. டாய்லெட்ட ஹார்பிக் மட்டும் தான் போட்டு க்ளீன் பண்ணனும்??!! நீங்க ஊருக்கு எங்கயாவது போற மாதிரி இருந்தா சொல்லிட்டு போகனும். நானும் வீட்ட எப்படி வச்சிருக்கீங்கன்னு பார்க்க அடிக்கடி வருவேன். சொந்தக்காரங்க வந்தா ரெண்டு நாளுக்கு மேல தங்கக் கூடாது. வீடு நாஸ்தியாகிடும் பாருங்க. அப்புறம் ...................................................."
"அய்யோ வீடே வேணாம். ஆள விடுங்க"


#மீள்பதிவு

11 comments:

Paleo God said...

ஒரு வோல்வோ ஏசி பஸ் வாங்கி இண்டீரியர் பண்ணி குடிபோயிடுங்க!:))

அமுதா கிருஷ்ணா said...

எதற்கு இந்த மீள்? திரும்ப வீடா?

எல் கே said...

இதை விட கொடுமை எல்லாம் இருக்கு . கல்யாணம் ஆன புதிதில் வீடு தேடிய பொழுது , ஒரு ஓனர் சொன்னது , குழந்தை இருந்தா வீடு தர மாட்டேன். எண்ணெய் புகை வராமல் சமைக்கணும் .

என் அதிர்ஷ்டம் , முதல் வீட்டில் மூன்றரை வருடங்கள் ஓடியது. அப்புறம் கரென்ட் பில் யூனிட்டுக்கு அஞ்சு ரூபா கேட்டாங்க. சோ வீடு மாற முடிவு பண்ணப்ப , வீட்டு வாடகை எல்லாம் எகிறிடுச்சி. இப்பவும் ஒரு நல்ல ஓனர் கிடைத்து இருக்கார். பிரச்சனயே இல்லை

Chitra said...

"அதெல்லாம் ரிஸ்க்குங்க. நீங்க வீட்டுக்கே வந்து கொடுத்துடுங்க. அப்புறம் கேஷாவே குடுத்துடுங்க. செக் வேண்டாம். ஆங் சொல்ல மறந்துட்டேனே. வாடகை இல்லாம மெயிண்டனென்ஸ்க்கு தனியா சார்ஜ். அதோட தண்ணிக்குன்னு காமன் மோட்டார் இருக்கு. அதுக்கு தனியா சார்ஜ். நான் சொல்ற எலக்ட்ரீஷியனை தான் கூப்பிடனும். வீட்ல எதுனாச்சும் பிரச்சனைன்னா என்கிட்ட சொல்லாம நீங்களே சரி செய்யக்கூடாது. டாய்லெட்ட ஹார்பிக் மட்டும் தான் போட்டு க்ளீன் பண்ணனும்??!! நீங்க ஊருக்கு எங்கயாவது போற மாதிரி இருந்தா சொல்லிட்டு போகனும். நானும் வீட்ட எப்படி வச்சிருக்கீங்கன்னு பார்க்க அடிக்கடி வருவேன். சொந்தக்காரங்க வந்தா ரெண்டு நாளுக்கு மேல தங்கக் கூடாது. வீடு நாஸ்தியாகிடும் பாருங்க. அப்புறம்........ கண்டிஷன் பார்த்தா.....தலை சுத்துது...... யம்மாடி!

Porkodi (பொற்கொடி) said...

ஐயப்பா.. நல்ல வேளை அப்பாவுக்கு குவார்டர்ஸ் வாங்கி குடுத்ததுக்கும், எனக்கு மெட்ராஸ் இல்லா மாப்பிள்ளையை கல்யாணம் பண்ணி வெச்சதுக்கும் ரொம்ப நன்றிப்பா சாமீ.. :(

Porkodi (பொற்கொடி) said...

இத்தனை பரவலான பிரச்சினைக்கு ஏன் இன்னும் பொது மக்கள் கிட்டருந்து ஒரு எதிர்ப்பு வரலைன்னு புரியல.. இந்த கம்பெனிகள் எல்லாம் குவாடர்ஸ் கட்டவோ இல்ல ஹோல்சேலா லீஸ் எடுத்தாலோ நல்லாருக்கும்ல?

Anonymous said...

திருமணம் ஆனவங்களுக்கே இவ்வளவு பிரச்சனைனா பேச்சிலர் நிலைமைய சொல்லித் தெரிய வேண்டியதில்லை!
சென்னைல வீடு தேடுறபாடு, அய்யயய்யோ...

சாந்தி மாரியப்பன் said...

வீடுதேடுறதைவிட வரன் தேடுறது ரொம்ப ஈஸியா இருக்கும் போலிருக்கே :-)))

தக்குடு said...

//நீங்க போன ஜென்மத்துல புண்ணியம் ஏதாவது பண்ணிருப்பீங்க மேடம்//

//மம்மிய பார்த்த ரத்தத்தின் ரத்தம் மாதிரி பம்மி பம்மி அவங்க காட்ற சோஃபால உட்காராம உட்கார்ந்த அப்புறம் ஆரம்பிக்கும் அக்கப்போரு//

//டாய்லெட்ட ஹார்பிக் மட்டும் தான் போட்டு க்ளீன் பண்ணனும்??!! //

..:)))

sahana said...

buying a flat is cheaper...the EMI is not much compared to the rent ..why dont u try that?

Porkodi (பொற்கொடி) said...

vigneshwari blog ku saavi naan yaarai poi kekradhu? adhuku yaravadhu ennai sibarisu panna mudiyuma?? :-(