November 7, 2011

இம்சை விளம்பரம்

டிவில அரை மணிநேரம் ப்ரோக்ராம்ல 20 நிமிஷம் விளம்பரம் தான் வருது. அதுல பாதிக்கு பாதி மொக்கை விளம்பரங்கள். இருக்கறதுலேயே கொடுமையான விளம்பரம் டாய்லெட் க்ளீனர் விளம்பரங்கள் தான்.

தட்டு நிறைய சுவையான உணவை எடுத்துக்கிட்டு வந்து டிவிய ஆன் பண்ணா பாகவதர் காலத்துல சுத்தம் செய்த டாய்லெட்ட காட்டுவாங்க. அதப் பார்த்த அடுத்த நிமிஷம் வாந்தி வந்துரும். ஒரு வேளை சாப்பிடறதுக்கு முன்னமே பார்த்து தொலைச்சிட்டீங்கன்னா ரெண்டு மணி நேரத்துக்கு சாப்பாடே இறங்காது. இதுல இன்னொரு கொடுமை என்னன்னா அத zoom பண்ணி க்ளோசப்ல காட்டுவானுங்க (அவ்ளோ க்ளோசப்ல பார்க்க அது என்ன ஏமி ஜாக்சன் மூஞ்சா?). அப்படிக் காமிக்கும்போது அதுல தெரியுற பூச்சிங்க இருக்கே. கடவுளே. இப்படியொரு உருவத்துல பூச்சிய ஹாலிவுட் ஏலியன் மூவிலக் கூட காட்டிருக்க மாட்டாங்க. அப்புறம் அந்த டாய்லெட் கீளினரால சுத்தம் செய்யப்பட்ட டாய்லெட்ட ஜூம் பண்ணி (மறுபடியும் அடக் கடவுளே) காட்டுவாங்க. இதுல கழுவறதுக்கு முன் கழுவின பின் கம்பேரிஷன் வேற.

ஒரு டிவி பெர்சானிலிட்டிய புடிச்சாந்து அந்தாளு கைல ஒரு மைக்கையும் கொடுத்து பாத்ரூம் பாத்ரூமா டூர் அடிப்பாங்க.

இந்தம்மா : ஹாய் நீங்களா? வாங்க. என்ன சாப்டறீங்க?
அந்தாளு : முதல்ல உங்க டாய்லெட்ட காட்டுங்க (ஏன் அங்கதான் உக்காந்து சாப்பிடப் போறியா?)

இந்தம்மா : ஓ. நீங்க அந்த க்ளீன் டாய்லெட் சேலஞ்சுக்கு வந்திருக்கீங்களா?
அந்தாளு : ஆமாம். இந்த டாய்லெட்டப் பத்தி என்ன நினைக்கறீங்க? (கட்டி முடிச்ச நாள்லருந்து க்ளீன் பண்ணலைன்னு நல்லாவே தெரியுது)

இந்தம்மா : கொஞ்சம் கறை இருக்கு. (கொஞ்சமா? அடிப்பாவி)
அந்தாளு : இந்தக் கறை போகும்ன்னு நினைக்கறீங்களா?

இந்தம்மா : கண்டிப்பா போகாது. நான் நிறைய ட்ரை பண்ணி பார்த்துட்டேன்.
அந்தாளு : ஒக்கே. இப்போ நம்ம இந்த லிக்விட ஊத்தி பதினைஞ்சு நிமிஷம் கழிச்சு வாஷ் பண்றோம். இப்போ பாருங்க.

இந்தம்மா : வாவ்..எவ்ளோ அழகாயிருச்சு. வாசனை கூட நல்லா இருக்கு (கருமம். வாசனை வருதுங்கறதுக்காக அத லிவ்விங் ரூமா மாத்த முடியுமா?)

இந்த மாதிரி மட்டுமில்ல, கல்யாணமாகி வீட்டுக்கு வர்ற மருமக சீதனமா டாய்லெட் க்ளீனர் கொண்டு வர்றாங்களாம். (எப்படி இப்படியெல்லாம் யோசிக்கறீங்க?).

கொஞ்சம் பிஸியா இருக்க பட்சத்துல, கம்பேனிக்கு சொல்லிவிட்டீங்கன்னா, டிவி செலிப்ரிட்டியே உங்க டாய்லெட்ட க்ளீன் பண்ணிடுவார். டாய்லெட்டும் சுத்தமாகும். டிவிலயும் வந்த மாதிரி இருக்கும். என்ன நாஞ்சொல்றது?

#ரெண்டு வருஷத்துக்கு முன்னால எழுதின பதிவு. ட்ராஃப்ட்ட சுத்தப்படுத்தும்போது கிடைச்சது:)

7 comments:

விஜி said...

இன்னும் அந்த வெளம்பரம் வருதே :)))

pudugaithendral said...

கொடுமையான விளம்பரம் இது. அதுலயும் சுத்தத்தை உறுதிப்படுத்த ஒரு அம்மா கை வெச்சு தொட்டு பாக்கற மாதிரி காட்டுவாங்க பாருங்க.


அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

CS. Mohan Kumar said...

கடைசி வரி வரை சிரிப்போடு வாசிக்க முடிந்தது

'பரிவை' சே.குமார் said...

இதுபோல நிறைய விளம்பரங்கள்...
எல்லாம் ரசிக்க முடியாதவையாக...

Raghu said...

கொட்டிக்க‌லாம் வாங்க‌ அடுத்த‌துல‌ இன்னும் Crimson Chakraவே இருக்கு பாருங்க‌.

ச்சே! எந்த‌ போஸ்ட்ல‌ என்ன‌ க‌மெண்ட் போட‌றேன்?!

Vidhya Chandrasekaran said...

நன்றி விஜி.
நன்றி கலா அக்கா.
நன்றி மோகன் குமார்.
நன்றி குமார்.

நன்றி ர‌கு (அவ்வ்வ். Why this kolaiveri?)

ஹுஸைனம்மா said...

//ரெண்டு வருஷத்துக்கு முன்னால எழுதின பதிவு. ட்ராஃப்ட்ட சுத்தப்படுத்தும்போது கிடைச்சது//

இந்த வரி படிச்சதும்,

//கொஞ்சம் பிஸியா இருக்க பட்சத்துல, கம்பேனிக்கு சொல்லிவிட்டீங்கன்னா, டிவி செலிப்ரிட்டியே உங்க டாய்லெட்ட க்ளீன் பண்ணிடுவார்//

டைமிங்கா இந்த வரி நாவகம் வருது. யேஏஏஏன்??!! ;-))))))))))