November 1, 2008

வார்த்தை ஒன்னு வார்த்தை ஒன்னு

காலிங் பெல் சத்தம் கேட்டு கதவை திறந்தேன். இரண்டாவது மாடியில் தங்கியிருக்கும் பெண் நின்றுகொண்டிருந்தாள். அவளிடமோ அவள்கூட தங்கியிருக்கும் மற்ற பெண்களிடமோ இதுவரை பேசியதில்லை. என்ன வேண்டும் என்று கேட்பதற்க்கு முன் அவளே பேச ஆரம்பித்தாள். முதல் வார்த்தைக்குப்பிறகு எனக்கு எதுவுமே காதில் விழவில்லை. எதுவுமே சொல்லாமல் பேயறைந்தால்போல் நான் வாசலிலேயே நின்றுக் கொண்டிருந்தது அவளுக்குக் குழப்பத்தை தந்திருக்கக்கூடும். என்ன செய்வதென்று தெரியாமல் சிறிது நேரம் நின்றுவிட்டு அவள் மறைந்தாள்.



பொத்தென்று சோபாவில் அமர்ந்த போது லேப்டாப்பில் தலையை புதைத்து வைத்திருந்த லைசன்ஸ் ஹோல்டர் என்னாச்சுன்னு கேட்டார். பதில் வாராதிருக்கவே திரும்பவும் அதே கேள்வி. இம்முறையும் நோ ரெஸ்பான்ஸ் என்பதால் லேப்டாப் மடி சிறையிலிருந்து விடுதலை ஆனது. நேரே கண்ணாடி முன் சென்று நின்றேன். தலைமுடியை சரி செய்துக்கொண்டேன். எனது செய்கைகள் அவருக்கு கவலை அளித்திருக்கக்கூடும். என்னதான் ஆச்சு ஏன் இப்படி நடந்துக்குற எனக் கேட்டார். பதில் சொல்லவே பிடிக்கலை. இது வேலைக்கு ஆகாது என்று திரும்பவும் லேப்டாப் சிறை சென்றது. இதற்கு மேலும் ரெஸ்பான்ஸ் வரலைன்னா மனுசன் எஸ்ஸாயிடுவார்ங்கற பயத்துல வாயைத் தொறந்தேன்.



"கல்யாணம் ஆனபோது எப்படி இருந்தேனோ அப்படியே தானே இப்பவும் இருக்கேன்?"



"உம்"



"கேட்டதுக்கு பதில் சொல்லு"



"உம் உம்"



"என்னைப் பார்த்தா மிடில் ஏஜ்டு லேடி மாதிரி தெரியுதா?"



"என்னக் கேட்ட?"



"என்னப் பார்த்தா என்ன ஏஜ்னு சொல்லலாம்"



குழப்பமாய் "இப்போ எதுக்கு இந்த கேள்வி?"



"அவ என்ன வாடி போடின்னு கூட சொல்லிருக்கலாம்."



"சரி விடு. இதெல்லாமா சீரியஸா எடுத்துப்பங்க??"



"அதெப்படி. எனக்கு இன்னும் 25 வயசுகூட ஆகல. ஒரு குழந்தை இருந்தா அப்படி சொல்லிடறதா?"



(இதுக்குமேல போச்சுன்னா நம்ம தலை உருள ஆரம்பிச்சிடும்னு ஆள் எஸ்கேப்).



சாயந்திரம் அவளைப் பார்த்தா தெளிவா சொல்லிடனும். இன்னொரு தடவை அப்படி சொல்லாதேன்னு. என் பேரை சொல்லியே கூப்பிடு. ஆண்ட்டின்னு கூப்பிடாத.



டிஸ்கி : சத்தியமா இது என்னோட சொந்த அனுபவம் இல்லைன்னு நான் சொன்னா நீங்க நம்பித்தான் ஆகனும்.

9 comments:

குசும்பன் said...

//: சத்தியமா இது என்னோட சொந்த அனுபவம் இல்லைன்னு நான் சொன்னா நீங்க நம்பித்தான் ஆகனும்.//

கண்டிப்பா நம்பிட்டேன் ஆண்டி!!!:))

Vidhya Chandrasekaran said...

நம்புனதுக்கு ரொம்ப நன்றி குசும்பன் அங்கிள்:)

Sanjai Gandhi said...

ஹய்யோ.. ஹய்யோ... என்ன ஆண்டி நீங்க இதுக்குப் போய் அங்கிளை இப்டி பயமுறுத்தி இருக்கிங்களே.. விடுங்க ஆண்டி.. இந்த சின்ன பசங்களே இப்படித் தான்.. கல்யாணம் ஆய்ட்டா 13 வயசு பொண்ணா இருந்தாலும் ஆண்டி தான். 12 வயசு பய்யனா இருந்தலும் அங்கிள் தான். இவங்களுக்கு குழந்தையும் பொறந்துட்டான். பாட்டின்னு கூப்டலையேன்னு சந்தோஷப் படுவிங்களா.. அத விட்டு.. என்ன ஆண்டி நீங்க.. சின்ன புள்ளத் தனமா? :)))

.... ஹப்பாடா.. இப்போ நிம்மதியா சாப்ட போறேன். :))

Vidhya Chandrasekaran said...

டிஸ்கி படிங்க ஸார். பை தி வே என் வீட்டு பொடியன் பேரும் சஞ்சய் தான்:)

Arun Kumar said...

ஹா ஹா ஹா என்னை அடிக்கடி அங்கிள் என்று கூப்பிடும் ground floor மாக்கான் களிடமும் இனி மே என் பேரை சொல்லி கூப்பிட சொல்ல வேண்டும்

Sanjai Gandhi said...

மம்மீஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈ :))

Vidhya Chandrasekaran said...

@ arun
why blood same blood:)

ச.பிரேம்குமார் said...

ஹா ஹா ஹா.... பாதி படிச்சவுடன் நினைச்சேன்... அந்த வார்த்தை 'ஆண்ட்டி'யா தான் இருக்கும் என்று :)

'அண்ணா', 'அக்கா' இப்படியெல்லாம் வார்த்தை இருக்குறதே சின்ன புள்ளைங்களுக்கு தெரிய மாட்டேங்குது. எல்லாம் uncle, aunty தான்....

A N A N T H E N said...

//லைசன்ஸ் ஹோல்டர் என்னாச்சுன்னு கேட்டார்.//
இந்த லைசன்ஸ் வருடா வருடம் புதுப்பிக்க வேண்டியதில்லையா?

//ஆண்ட்டின்னு கூப்பிடாத.//
அதானே.. நேனி இல்ல தமுல்ல பாட்டின்னே கூப்பிடும்மான்னு சொல்லி வையுங்க...!