November 15, 2008

வாரணம் ஆயிரம்

220 ரூபாய் கொடுத்து டிக்கெட் புக் பண்ணிட்டோமேங்கற குற்ற உணர்ச்சியும், பப்பு @ சஞ்சய் இல்லாம போறோமேங்கற பீலிங் ஒரு பக்கம். காலைல வேற அதிஷா பிளாக்ல நல்லால்லைன்னும், அருண் ஒகேங்கற மாதிரியும் எழுதிருந்தாங்க. எனக்கென்னவோ படம் நல்லாருக்குன்னு சொல்ல முடியல. ஆனா கண்டிப்பா நல்லாயில்லைன்னு சொல்லமாட்டேன். மூணே வார்த்தைக் கதையை (அப்பா மகன் உறவு) மூணு மணிநேரம் சொல்லியிருக்காங்க. சில இடங்களைத் தவிர படம் பார்க்குற மாதிரி தான் இருக்கு.




#டில்லியில் ஆங்கிலமும் ஹிந்தியும் பேசுவதை ஒற்றுக்கொள்ள முடிகிறது. ஆனால் தேவையில்லாத இடங்களிலும் ஆங்கில வசனங்கள். அப்பா சூர்யாவும் தங்கை கேரக்டரில் வருபவரும் பீட்டரில் புரள்கிறார்கள். அதுவும் தங்கச்சி ஓவர் டோஸ். நைனா செத்துட்டாருன்னு சொல்லாம "he is no more" ன்னு சொல்லும்போது செவில்ல அடிக்கனும் போல் இருந்தது.


#டில்லிக் காட்சிகள் சவசவன்னு இருக்கு.


#சூர்யா திவ்யா ரொமான்ஸ் காட்சிகளும் திராபை. கிளைமாக்ஸ்க்கு வாங்கடான்னு கத்தனும் போல இருந்தது.


முதல்பாதி சூப்பர். இரண்டாவது பாதியில் யானை அங்கங்கு நொண்டுகிறது.


சூர்யா, பாடல்கள் மற்றும் ஒளிப்பதிவு தான் பலம்.


மொத்தத்தில் வாரணம் ஆயிரம் - பலம் போதவில்லை.

7 comments:

Arun Kumar said...

படத்தில் நிறைய ஆங்கில வசனங்கள். ஏதோ படத்தின் சில இடங்களில் என் முடிந்த போன சில நாட்க்கள் ஞாபகத்துக்கு வந்தது.

பெங்களூரில் புது தமிழ்படத்துக்கு இப்போ சனி ஞாயிறுகளில் 200 ரூபாய்க்கு குறையாமல் டிக்கேட் படம் பார்க்க முடியவில்லை. :(

Arun Kumar said...

நல்ல விமர்சனம். நன்றி

படத்தில் நிறைய ஆங்கில வசனங்கள். ஏதோ படத்தின் சில இடங்களில் என் முடிந்த போன சில நாட்க்கள் ஞாபகத்துக்கு வந்தது.

பெங்களூரில் புது தமிழ்படத்துக்கு இப்போ சனி ஞாயிறுகளில் 200 ரூபாய்க்கு குறையாமல் டிக்கேட் படம் பார்க்க முடியவில்லை. :(

Vidhya Chandrasekaran said...

அதே மாதிரி எரிச்சல பண்ண இன்னொரு விஷயம் டாடி என்ற வார்த்தை. வாரணம் ஆயிரம்னு வெச்சதுக்கு பதிலா டாடி கோடின்னு வெச்சிருக்கலாம்.

நந்து f/o நிலா said...

//டில்லியில் ஆங்கிலமும் ஹிந்தியும் பேசுவதை ஒற்றுக்கொள்ள முடிகிறது. ஆனால் தேவையில்லாத இடங்களிலும் ஆங்கில வசனங்கள். அப்பா சூர்யாவும் தங்கை கேரக்டரில் வருபவரும் பீட்டரில் புரள்கிறார்கள். அதுவும் தங்கச்சி ஓவர் டோஸ். நைனா செத்துட்டாருன்னு சொல்லாம "he is no more" ன்னு சொல்லும்போது செவில்ல அடிக்கனும் போல் இருந்தது.//

ஹா ஹா
சூப்பர் சூப்பர்

Vidhya Chandrasekaran said...

வாங்க நிலா அப்பா..

பின்னோக்கி said...

இந்திரலோகத்தில் நா.அழகப்பன் - விமர்சனம். - இந்த படம் பரவாயில்லை என்கிறீர்கள்.

வாரணம் ஆயிரம் - சுமார் என்கிறீர்கள். அப்பா சூர்யா, தன் பேரனை பற்றி சொல்லும் வசனம். top class. இதே வசனம் என் அம்மா சொல்ல கேட்டிருக்கிறேன் :-(, தன் மரணத்தை எதிர் நோக்கி இருக்கும் போது.

May be Gautham Menon, அப்பா இறக்கும் போது இதயே சொல்லி இருக்கலாம்.

பின்னோக்கி said...

"daddy is no more" என்றதை ப்ற்றி திட்டி இருக்கிறீர்கள்.
கதைப் படி, சூர்யாவுக்கு புற்றுநோய். ஆதனால், இறப்பை அனைவரும் உணர்ந்து இருப்பார்கள்.
புற்றுநோய் நோயாளிகள் படும் கஷ்டம் அருகில் இருந்து பார்ப்பவர்களுக்கு மட்டுமே தெரியும்.
அதுவும், கீமோ தெரபி என்ற விஷம், கொடுக்கபட்டவுடன், பக்கவிளைவுகள் கொடூரமானவை.
இதை பார்க்கும், குடும்பத்தினர்க்கு, நோயாளி இறப்பதற்கு முன்பே அழுது அழுது, கண்ணீர் தீர்ந்துவிடும்.
மரணம் சம்பவிக்கும் போது, ஒரு மவுனம் மட்டுமே மிஞ்சும். இந்த காரணத்தினால், அப்படி பட்ட வசனம் எழுதியிருக்கலாம்.
மேலும், English பேசுவதை பற்றி கிண்டல் செய்திருக்கிறீர்கள். படத்தின் ஆரம்பத்திலிருந்து பல காட்சிகளில், அந்த குடும்பம், metropolitan city களில் வசித்திருப்பதை இயக்குனர், வசனம் + காட்சிகளில் காட்டியிருப்பார். இந்த கதை ஒரு taminglish பேசும், குடும்பத்தை பற்றி என நினைக்கலாம் இல்லயா ?. சற்று யோசியுங்கள், நீங்கள், உங்கள் பெற்றோரிடம் பேசியற்கும், நீங்கள், உங்கள் பிள்ளையிடம், பேசும் போது English வார்தைகள் அதிகம் உபயோகிப்பது இல்லயா ?