December 10, 2008

49ஓ

உங்கள் தொகுதியில் தேர்தலுக்கு போட்டியிடும் வேட்பாளர்கள் யாருமே தகுதியற்றவர்கள் என்று நினைக்கிறீர்களா? நீங்கள் தேர்தலை புறக்கணிக்க வேண்டும் அதே சமயம் உங்கள் வாக்கினையும் பதிவு செய்ய வேண்டும் என்று நினைக்கிறீர்களா? அதற்கான வழி தான் இந்த 49ஓ.


49ஓ என்பது தேர்தல் விதிமுறைகளில் ஒன்று. ஓட்டுச் சீட்டு முறைப்படி வாக்களிக்கும்போது, யாருக்குமே வாக்களிக்க விருப்பம்யில்லையெனில், செல்லா வோட்டு போடுவார்கள். ஆனால் இய்ந்திரத்தின் மூலம் வாக்கைப் பதியும்போது அப்படி செய்ய முடியாது. கண்டிப்பாக யாருக்காவது வோட்டு போட்டுத்தான் ஆகவேண்டும். இந்த இடத்தில் தான் 49ஓ காட்சிக்கு வருது (வாக்குச்சீட்டு முறையின்போதும் இந்த விதி அமலில் இருந்தது). வோட்டுச்சாவடிக்கு சென்று உங்கள் identification சரிபார்த்த பின், அங்கு இருக்கும் ஆபிஸரிடம் (presiding) சென்று என் வாக்கினை 49ஓவாகப் பதிவு செய்ய விரும்புகிறேன் என்று சொன்னால் அவர் ஒரு படிவம் தருவார். அந்த படிவத்தை பூர்த்தி செய்து, உங்கள் பெருவிரல் ரேகையை அதில் இட்டு, ஆபிஸரும் கையெழுத்து போட்டால் முடிந்தது. நீங்கள் யாருக்கும் வாக்களிக்கவில்லை. அதே சமயம் உங்கள் வோட்டும் misuse செய்யப்படவில்லை என நீங்கள் உறுதிபடுத்திக்கொள்ளலாம்.


இதனால் என்ன பயன் என்கிறீர்களா? ஒன்றுமில்லை. உங்கள் வோட்டு கள்ளவோட்டாக மாறவில்லை. அவ்வளவே. நிறைய பேரிடம் ஒரு தப்பான தகவல் பரவி வருகிறது. அதென்னவென்றால் "ஒரு தொகுதியில் வெற்றி பெற்ற வாக்காளருக்கு கிடைத்த ஓட்டு எண்ணிக்கையைவிட அந்த தொகுதியில் பதிவான 49ஓ வாக்குகள் அதிகமாக இருக்கும்பட்சத்தில் அந்த தொகுதிக்கு மறுதேர்தல் அறிவக்கப்படும். ஏற்கனவே போட்டியிட்ட வேட்பாளர்கள் எவரும் மறுபடியும் களத்தில் இறங்கக்கூடாது. கட்சிகள் அனைத்தும் புது வேட்பாளர்களை அறிவிக்க வேண்டும்." ஆனால் இதுபோல் தேர்தல் கமிஷனின் விதியில் குறிப்பிடப்படவில்லை. ஹூம் இது மட்டும் நடைமுறைக்கு வருமேயானால், அரசியல்வாதிகளின் குடுமி மக்கள் கையில்.


நான் இரு முறை முயற்சி செய்து ஒரு முறை 49ஓ முறைப்படி என் வாக்கினைப் பதிந்தேன். முதல் தடவை காலேஜ் படிக்கும்போது பூத் ஆபிஸரிடம் சென்று படிவம் கேட்டதுக்கு என்னை ஒரு மாதிரியாகப் பார்த்தார். form இல்லை போ என்றார். கொஞ்சம் நேரம் நின்றுவிட்டு, அப்புறம் போய் ஒரு சுயேச்சைக்கு வோட்டுப் போட்டுட்டு வந்தேன். அடுத்த தடவை விடக்கூடாது என்று, ஆபிசரை மிரட்டி (form தரலைன்னா chief election commissionerக்கு புகார் அனுப்புவேன் என்று) கடமையை நிறைவேத்தினேன்.


மக்களுக்கு வோட்டு போடாமல் (எந்த வேட்பாளருக்கும்) இருக்கும் உரிமையை 49ஓ விதி வழங்குகிறது.


டிஸ்கி : என்னோட முந்தைய பதிவின் பின்னூட்டத்தில ஜீவன், ஜமால், அமித்து அம்மா, பூர்ணிமா போன்றோர் 49ஓவப் பத்தி கேட்ருந்தாங்க. அவங்க நிஜமாவே தெரியாமா கேட்ருந்தா இது விளக்கப் பதிவு. சும்மானாச்சுக்கும் விளையாட்டுக்கு கேட்ருந்தாலும், பதிவு எண்ணிக்கைல ஒன்னு கூடிடுச்சேன்னு நான் சந்தோஷப்படுவேன்:)

19 comments:

புதுகை.அப்துல்லா said...

//விளையாட்டுக்கு கேட்ருந்தாலும், பதிவு எண்ணிக்கைல ஒன்னு கூடிடுச்சேன்னு நான் சந்தோஷப்படுவேன்:)
//

அட நம்ப பார்ட்டியா நீங்க :))

புதுகை.அப்துல்லா said...

ஹை மீ த ஃபர்ஸ்டு :)

நட்புடன் ஜமால் said...

உண்மையிலேயே தெரியாம தான் கேட்டிருந்தோம்.

என்ன ... இதைப்பற்றி விக்கிபீடியால படிச்சி ஒரு பதிவா போடலாமுன்னு யோசிட்டிருந்தோம்...

நீங்களே ... சரி சரி - இந்த அளவுக்கு தெளிவா என்னால சொல்லியிருக்க முடியாது.

நட்புடன் ஜமால் said...

\\ஹூம் இது மட்டும் நடைமுறைக்கு வருமேயானால், அரசியல்வாதிகளின் குடுமி மக்கள் கையில்.\\

நல்ல விஷயம்தான்.

------------------------

ஆமா குடுமி இல்லாங்காட்டி (இப்படியெல்லாம் இங்கே லொள்ளு பன்னலாமான்னு தெரியலை - தப்புன்னா டெலீட்டிரவும்)

SUREஷ்(பழனியிலிருந்து) said...

அடுத்த தடவை விடக்கூடாது என்று, ஆபிசரை மிரட்டி (form தரலைன்னா chief election commissionerக்கு புகார் அனுப்புவேன் என்று) கடமையை நிறைவேத்தினேன்.//



பிண்ணூட்டம் போடக் கூடக் கொஞ்சம் பயமாத்தாணுங்க இருக்குது

தமிழ் அமுதன் said...

தகவல் அளித்தமைக்கு நன்றி!

(நிஜமா தெரியாமத்தான் கேட்டேன்)

அவ்ளோ நேரம் வரிசையில நின்னு
யாருக்கும் ஓட்டு போடாம வர்றதுக்கு
''ஐயோ பாவம்'' ன்னு சில சுயட்சே நிப்பாங்க
இல்லையா?அவங்களுக்கு போடலாம் ஓட்டு!

அமிர்தவர்ஷினி அம்மா said...

நான் நெசமாவே தான் கேட்டேன், ஆனா நேத்து ஜமால் லின்க் கொடுத்தப்புறம் விக்கிபீடியால தெரிஞ்சிக்கிட்டேன்.
அதுக்கப்புறம் இங்க வந்து ஒரு கூடுதல் செய்தியும் தெரிஞ்சிக்கிட்டேன்.

//ஆபிசரை மிரட்டி (form தரலைன்னா chief election commissionerக்கு புகார் அனுப்புவேன் என்று) கடமையை நிறைவேத்தினேன்.//

ஹி ஹி
அடிச்சா தான் அம்மி கூட நகருதுல்ல
என்ன கொடுமை சரவணா இது!
கடமைய செய்ய விட மாட்டேங்கறாங்க.

Vidhya Chandrasekaran said...

அப்துல் அண்ணே மீ த ஃபர்ஸ்ட்டுக்கு நன்றி:)
நல்லா ஊர சுத்திப்பார்த்துட்டு போட்டோ போடுங்க:)

Vidhya Chandrasekaran said...

\\ஆமா குடுமி இல்லாங்காட்டி (இப்படியெல்லாம் இங்கே லொள்ளு பன்னலாமான்னு தெரியலை - தப்புன்னா டெலீட்டிரவும்)\\

wat nonsense u talking? கும்மி அடிக்கத்தானே பொட்டிய open பண்ணி வெச்சிருக்கேன்.

Vidhya Chandrasekaran said...

சுரேஷ்
பயப்படாதீங்க. வூட்டுக்கு ஆட்டோல்லாம் வராது.
****************************
நன்றி ஜீவன்.

நன்றி அமித்து அம்மா

புதுகை.அப்துல்லா said...

எனக்கு ஒரு டவுட்.... நம்ப தலைவன் எலிக்‌ஷன்ல நின்னாலும் 49ஓ தான் போடுவீங்களா??

:))))

RAMYA said...

தகவலுக்கு நன்றி
ஆனால் இதெல்லாம்
கொடுமைய இருக்குப்பா
இப்படியெல்லாம் செய்வாங்களா?

சந்தனமுல்லை said...

நல்ல செய்தி!

✨முருகு தமிழ் அறிவன்✨ said...

புதிய அறிந்து கொள்ள வேண்டிய செய்தி!நன்றி..

Arun Kumar said...

ம் நானும் ஓ போட்டாச்சு..
http://thamizthoughts.blogspot.com/2008/12/49.html படிச்சு பாருங்க. ஆனா எனக்கு உங்கள் கருத்தில் உடன்பாடு இல்லை.. வீட்டுக்கு ஆட்டோ அனுப்பிடாதீங்க :)))

Vidhya Chandrasekaran said...

என்ன அப்துல் அண்ணே இப்படி கேட்டுட்டீங்க. என் ஓட்டு தலைவருக்கெ:)

Vidhya Chandrasekaran said...

நன்றி ரம்யா.

நன்றி முல்லை.

நன்றி அறிவன்.

நட்புடன் ஜமால் said...

\\ வித்யா said...

\\ஆமா குடுமி இல்லாங்காட்டி (இப்படியெல்லாம் இங்கே லொள்ளு பன்னலாமான்னு தெரியலை - தப்புன்னா டெலீட்டிரவும்)\\

wat nonsense u talking? கும்மி அடிக்கத்தானே பொட்டிய open பண்ணி வெச்சிருக்கேன்.\\

அன்பா சொன்னதுக்கு நன்றிங்கோ

सुREஷ் कुMAர் said...

ஓஓஓஓஓஓஓஓஓஓஓஓ....

ஆனாலும் சொல்லக்கூடாதுதுது..
மெய்யாலுமே சோக்கான மேட்டருதா..
(sollakoodaadhunu solliputtu sollitane.. அவ்வ்வ்வ்வ்..)