April 23, 2009

அடுத்தது என்ன?

ராஜினாமா டிராமா முடிஞ்சுது. உண்ணாவிரதம் நல்லபடியா போச்சு. கடிதம் எழுதியாச்சு. அதவிட வேகமா போகனும்னு தந்தியும் அடிச்சாச்சு. பேரணி நடத்திக் காமிச்சாச்சு. இப்போ பொது வேலை நிறுத்தம்.அடுத்தது என்ன? சவ ஊர்வலம் தான? எது பண்றதாருந்தாலும் முன்னாடியே சொல்லிடுங்க. அடிக்கடி உங்களையெல்லாம் திட்டி திட்டி வாய் வலிக்கறது தான் மிச்சம். அதுசரி. மனுஷனா இருந்தா உரைக்கும். தெருத் தெருவா ஒட்டு பொறுக்குற நாய்ங்களுக்கு (நாய்கள் சங்கம் மன்னிக்கவும்) எப்படி உரைக்கும்?

அப்புறம். ஊர்வலத்தின் போது தாரை தப்பட்டைக்கு பதிலா ஜால்ரா அடிக்கனும்னா செலவே இல்லாம நிறைய பேர் வருவாங்க. தாரை தப்பட்டை செலவ மிச்சம் பிடிச்சு அதுல ஏதாவது புதுசா சேனல் ஆரம்பிச்சு உங்க மகத்தான சேவையை தொடருங்க.

கடைசியா வயித்தெரிச்சலுடன் ஒரு சாபம் - உங்க யாருக்கும் நல்ல சாவே வராது.

அளவில்லா எரிச்சலுடன்
தமிழன் என சொல்லிக்கொள்ள வெட்கப்படுபவன்.

34 comments:

கவிதா | Kavitha said...

அரசியல்.. :(((

கார்க்கிபவா said...

:((

T.V.ராதாகிருஷ்ணன் said...

:-(((

Cable சங்கர் said...

என்ன எழவுக்கு இந்த பந்த்..?

Vidhya Chandrasekaran said...

வருகைக்கு நன்றி
கவிதா
கார்க்கி
ராதாகிருஷ்ணன்

சங்கர்ஜி அது செத்து மடியற ஈழத்தமிழர்களுக்குக் கூட தெரியாது.

அப்துல்மாலிக் said...

இன்னும் எத்தனை நாடகம் அரங்கேற்றம் இருக்கோ தெரியலே????

SK said...

அவசர பட்டு கோவ படாதீங்க. இன்னும் தேர்தலுக்கு இருபது நாள் இருக்கு... இன்னும் அய்யா எழுத வேண்டிய திரைக்கதை நிறைய இருக்கு

அம்மா நடிக்க வேண்டிய நாகங்கள் நிறைய இருக்கு..

ஊர் ஊரா போய் பேசி பேசி ஏமாத்த வேண்டியது நிறைய இருக்கு..

நீங்க உங்க எனெர்ஜி எல்லாம் இப்போவே செலவு பண்ணிட்டா .. இன்னும் அடிக்க போற கூத்த பக்க நாமலே இருக்க மாட்டோம் :( :(

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ஓ :(

Vidhya Chandrasekaran said...

வருகைக்கு நன்றி

அபுஅஃப்ஸர்.
SK.
முத்துலக்ஷ்மி

Sasirekha Ramachandran said...

//அளவில்லா எரிச்சலுடன்
தமிழன் என சொல்லிக்கொள்ள வெட்கப்படுபவன். //


:(((((

அ.மு.செய்யது said...

//அளவில்லா எரிச்சலுடன்
தமிழன் என சொல்லிக்கொள்ள வெட்கப்படுபவன்.//

உங்கள் கோபத்தில் நியாமிருக்கிறது.

தமிழன் என்று சொல்லடா..............??????

தராசு said...

வித்யா,

கோபம் வர வேண்டியதுதான், அதற்காக இப்படியா???

கொஞ்சம் கூலா இருங்க.

நாகை சிவா said...

:)

வாங்க வாங்க!

குடிமகன் களுக்கு வேலை நிறுத்தம் இல்ல போல ;)))

YUVA said...

evlo thitnalum, intha pannadaigalluku ellam soranaye varathu. why time waste, energy waste. leave it.

zara said...

///மனுஷனா இருந்தா உரைக்கும். தெருத் தெருவா ஒட்டு பொறுக்குற நாய்ங்களுக்கு (நாய்கள் சங்கம் மன்னிக்கவும்) எப்படி உரைக்கும்?///
-----
(உச்ச பட்ச கோபம். நம்மால் முடிந்தது.) அதோடு உங்களை போல் எல்லோரும் 49-O ற்கு வாக்களிக்க வேண்டும் எனவும் ,உங்களுக்கு எவ்வளவு முடியுமோ அவ்வளவு தூரம் 49-ஒ பற்றிய விழிப்புணர்வை மக்களிடம் எடுத்து செல்லவும். நாங்கள் எங்கள் நண்பர்களுடன் இணைந்து T-Shirt பிரசாரம் செய்ய முடிவு செய்துள்ளோம்.
---------
எல்லாமும் நாய்கள் என்று முடிவாகி விட்டது. நாம் இனிமேல் உருவாக்க வேண்டியது நாய்கள் இல்லாத தலைமையைத்தான். தமிழனுக்கான அந்த தலைமை இடம் இன்னமும் காலியாகத்தான் உள்ளது. நம்மால் இன்றுவரை ஈழத்திற்கு நல்ல தீர்வு காணமுடியாமல் போனதே நல்ல தலைமை தமிழுக்கு இல்லாமல் போனதுதான் என நினைக்கிறேன்.

Vidhya Chandrasekaran said...

வருகைக்கு நன்றி

சசிரேகா
அ.மு.செய்யது
தராசு
நாகை சிவா
யுவா

கண்டிப்பாக என்னால் முடிந்தளவு செய்கிறேன் zara

Arun Kumar said...

இவர்களோடு ஒப்பிட்டு நாய்களை கேவலபடுத்துவதை வன்மையாக கண்டிக்கிறேன் :)

பந்த் நடத்தி பல பேர் வயித்து எரிச்சலை கொட்டி கொண்டது தான் மிச்சம். இதனால் என்ன பலன் வந்தது என்று கருணாநிதி நாளை தனக்கு தானே கேள்வி பதிலில் சொல்வார்..

அதை கேட்டு விட்டு வழக்கம் போல தலையில் துண்டை போட்டு கொண்டு செல்ல வேண்டியது தான்.

Arun Kumar said...

இதோட விட்டாங்களேன்னு சந்தோச படவேண்டியது தான்.. நல்ல வேளை இலங்கை தமிழர் துயர் தீர்க்க மெகா ஹிட் சிறப்பு திரைபடம் திருடா திருடின்னு விளம்பரம் இது வரை செய்யவில்லை.. அதையும் கூடிய விரைவில் செய்வார்கள்

வெண்பூ said...

பந்த்னால நடந்த ஒரே விளைவு... நான் இன்னிக்கு வீட்ல ஒக்காந்து பதிவு படிச்சி பின்னூட்டம் போட்டுட்டு இருக்குறதுதான்... :(

Thamira said...

:-((

Naresh Kumar said...

அதுக்குள்ள ரொம்ப கோபப் படாதீங்க வித்யா!!!

இன்னும் நடத்த வேண்டிய நாடகங்கள் பல இருக்கும்!!!

நரேஷ்
www.nareshin.wordpress.com

மாதவராஜ் said...

இவ்வளவு கோபம் வருமா உங்களுக்கு!!!!

Vidhya Chandrasekaran said...

வருகைக்கு நன்றி

அருண்
வெண்பூ
ஆதி
நரேஷ்

என்ன பண்றது மாதவராஜ் கோபப்படக்கூடாதுன்னு பார்த்தா விடமாட்டேங்கறாங்களே.

மகேஷ் : ரசிகன் said...

இன்னும் எவ்வளவோ இருக்கு. என்ன செய்ய? சாபக்கேடு!
:(((((

விக்னேஷ்வரி said...

இன்னும் கொஞ்ச நாள் கழிச்சு இந்த பதிவைப் போட்டிருந்தீங்கன்னா, எழுத நிறைய விஷயம் கிடைக்கும் வித்யா. இன்னும் நம்மள எப்படி எல்லாம் கோமாளியாக்கப் போறாங்கன்னு பாருங்க. எல்லாம் கொடுமைங்க.

Vidhya Chandrasekaran said...

கருத்துப் பகிர்வுக்கு நன்றி
மகேஷ்
விக்னேஷ்வரி

Deepa said...

//உங்களையெல்லாம் திட்டி திட்டி வாய் வலிக்கறது தான் மிச்சம். அதுசரி. மனுஷனா இருந்தா உரைக்கும்.//
100/100

என்ன எழவுக்கு இந்த பந்த் என்பதற்கும் மேல் என்ன எழவுக்கு இந்த (போலி) ஜனநாயகம் என்றே தோன்றுகிறது.

:-(

Vidhya Chandrasekaran said...

தீபா :(

jothi said...

ரொம்பதான் தைரியம் உங்களுக்கு,...

Happy Smiles said...

Hello Friend, Hope everything is fine.
I am a researcher from psychology department. Interested in bloggers and their behavior. My research topic is "Improving self concept through blogging". In connection with my research I need your help. If you spare your mail Id, I will be sending the research questionnaire to your mail Id. You can give your responses to the questionnaire. It will take only ten minutes to complete the questionnaire. My mail Id is meharun@gmail.com. Kindly cooperate in this survey. Your response will be used only for research purpose. To end with friendly note, I am always ready to help you if you have any queries or doubts related to psychology. Thank you.
Regards
Meharunnisha
Doctoral Candidate
Dept of Psychology
Bharathiar University
Coimbatore - 641046
Tamil Nadu, India
meharun@gmail.com

jothi said...

சென்னையில் என்ன என்னமோ நடக்கிறது. பார்ப்போம் நிங்கள் சொன்னமாதிரி ஊர்வலம் ஏதாவது நடக்கிறதா என்று. அப்புறம் எங்கள் ரித்திஷ் தன் வருங்கால முதல்வர்.

Sanjai Gandhi said...

அய்யோ.. என்ன இது.. பயங்கர சூடா இருக்கு.. பொதுவா எல்லாரையுமே இப்டி திட்டக் கூடாது. கொஞ்சம் பொறுமை..:(

SUBBU said...

அராஜகம், அநியாயம், அக்கிரமம்

Vidhya Chandrasekaran said...

நன்றி ஜோதி.

வாங்க தொழிலதிபரே. என்ன பண்ண எல்லாரிம் ஒரே மாதிரி தானே இருக்காங்க.

ஆம் சுப்பு