July 1, 2009

செத்தவனை சாவடிக்கறது

ரொம்ம்ம்ம்ப நாள் பிளானாகவே இருந்த சந்திப்பு சென்ற ஞாயிறு சாத்தியமாயிற்று. பேமஸ் கிட்ஸ் ஆஃப் பிளாக்டம் எல்லாரும் கிண்டி சிறுவர் பூங்காவில் சந்தித்தார்கள். நந்தினி, யாழினி, பப்பு, சஞ்சய், அமிர்தவர்ஷினி, நேஹா என குழந்தைகள் தத்தம் அம்மாக்களோடு வந்திருந்தார்கள். நைஸ் ஈவ்னிங். முல்லை சொன்னது உண்மை தான். எங்களுக்கு பேச நேரம் கிடைக்கவில்லை. குழந்தைகள் பின்னால ஓடவே நேரம் சரியாக இருந்தது. தேங்கஸ் அமுதா அந்த க்யூட்டான தட்டிற்க்கு. இதிலாவது ஜூனியர் ஒழுங்கா சாப்பிடறாரான்னு பார்க்கலாம்:)
***********

ரகுவுக்கு ஆபிஸ் ஷிப்ட் ஆவதால் மறுபடியும் வீடு மாற்ற வேண்டிய கட்டாயம். இதில் ஆடி மாதம் வேற வருவதால் இன்னும் பதினைந்து நாட்களுக்குள் வீடு மாற்ற சொல்லி ஏகப்பட்ட பிரஷர். இந்தக் காரணத்தால் ஜூனியர் ஸ்கூலுக்கு போவதிலிருந்து தற்காலிகமாக தப்பித்துள்ளார். இன்னும் பத்து நாளில் வீடு தேடி, பால் காய்ச்சி, ஷிப்ட் பண்ணி, இப்பவே கண்ண கட்டுதே:(
***********

1000 கோடி ரூபாய் செலவழித்து தன் முழு உருவ சிலைகளைத் திறந்து வைத்திருக்கிறார் உத்திர பிரதேச முதலமைச்சர் மாயாவதி. இத்தனைக்கும் இந்த மாநிலத்தில் தான் வறுமைக் கோட்டுக்கு கீழ் இருக்கும் மக்களின் எண்ணிக்கை ஜாஸ்தி. உள்துறை அமைச்சரும் மாயாவதியின் இந்த செயலை ஒரு காட்டு காட்டியுள்ளார். இன்னொரு கொடுமையான விஷயம் இந்த சிலைகளைப் பராமரிக்க ஒதுக்கப்பட்டுள்ள தொகை 270 கோடி. மாயா இது தேவையா??
***********

மைக்கேல் ஜாக்சனின் மறைவு இசைப் பிரியர்களுக்கு பேரிடி. நானும் அண்ணாவும் வாலாஜாவில் இருந்தபோது Beat it பாட்டைப் போட்டு தெருவையே கலங்கடிப்போம். வெறித்தனமான ரசிகர்கள் நாங்கள். பாட்டிக்கு இந்தப் பாட்டு ஆகவே ஆகாது. "என்னடா? எப்ப பாரு பீடை பீடைன்னு பாட்டு கேட்டுகிட்டிருக்கீங்க"ன்னு திட்டுவாங்க. அவர் மறைவை விட மிகவும் வருத்தம் தரும் விஷயம் மீடியாக்கள் நடந்து கொள்ளும் விதம் தான். "ஹார்ட் அட்டாக்கில் தான் செத்தாரா? சாவில் மர்மம்? அவரின் மனைவியின் குழந்தைகள் அவருக்குத்தான் பிறந்ததா? என நித்தம் கேரக்டர் அஸாசினேஷன். செத்தவனக் கூட நிம்மதியா இருக்கவிடமாட்டேங்கறாங்க. செத்தவனே வந்து நான் இப்படித்தான் செத்தேன்னு சொன்னாதான் விடுவாங்க போலிருக்கு:(
************

யப்பா யாராவது புண்ணியவன்கள் கவர்மெண்ட்கிட்ட சொல்லி இந்த ஆட்டோ கட்டணங்களை ஸ்ட்ரிக்ட்டா கடைபிடிக்க ஏதாவது சட்டம் இயற்ற சொல்லுங்க சாமீ. முடியல. கோயேம்பேடிலிருந்து அண்ணா நகர் செல்ல, 80, 70 , 60, 40 என சினிமா டிக்கெட் ரேஞ்சுக்கு இஷ்டத்துக்கு வசூல் பண்றாங்க. ஒரு தடவை ஆட்டோ ஓட்டுனரிடம் எவ்வளவு என கேட்டதுக்கு 40 ரூவா கொடுங்க என்றார். நம்பமுடியாமல் திரும்ப இரண்டு தடவை கேட்க பாஃர்ட்டி ரூபிஸ் கொடுங்க என்றார். உள்ளே உட்கார்ந்தவுடன் "சொந்த ஆட்டோவா சார்?" என்றேன். சிரித்துக்கொண்டே "ஏன் கேக்கறீங்கன்னு தெரியுது மேடம். சேட்டுகிட்ட மாசத்துக்கு ஓட்றேன். 40 ரூவா வாங்கினாலே எனக்கு கொஞ்சம் லாபம் தான் மேடம். அநியாயமா எதுக்கு வாங்கனும் சொல்லுங்க" என்றார். உண்மைதான். எல்லாரும் உணர்ந்தால் நல்லாதான் இருக்கும்.
************

2007ஆம் வருடம் ஜூலை மாதம் எழுத ஆரம்பித்தது. 2 வருடம் ஆகிவிட்டது. ஒன்னும் உருப்படியா எழுதிக்கிழிக்கலைங்கறது வேற விஷயம். பதிவுலகம் மூலமா கத்துக்கிட்டது ஏராளம் (தனியா பதிவே போடற அளவுக்கு). Hope the road further is smooth:)

45 comments:

Anonymous said...

மைக்கேல் மட்டும் ப்ளாஸ்டிக் சர்ஜரி பண்ணாமல் , வலி நிவாரணிகள் அதிகம் உண்ணாமல் இருந்திருந்தால் இன்னும் எவ்வளவு சாதனைகள் செய்திருப்பார் :)

தராசு said...

மாயாவதி எளிமை விரும்பிங்க, அதனால தான் 1000 கோடியோட நிறுத்திகிட்டாங்க, எப்படித்தான் இப்படிஎல்லாம் சுய விளம்பரம் பண்ணிக்கறாங்களோ,

அப்புறம் அந்த MJ மேட்டரு, வேதனைதான், ஆனால் இந்திய ஊடகங்களுக்கு கடிவாளம் போடத்தான் யாருமே இல்லையே, இதுவும் கடந்து போகும்னு விட்ற வேண்டியதுதான்.

☀நான் ஆதவன்☀ said...

சில ஆட்டோகாரர்களும் இந்த மாதிரி இருக்கத்தான் செய்கிறார்கள்..

வீடு கிடைச்சு மாத்துறதுக்குள்ளே உயிரே போயிடுறாப்பல இருக்குமே!!!

இரண்டு வருஷம் ஆச்சா!!!க்ரேட் வாழ்த்துகள் வித்யா

கார்க்கிபவா said...

ரைட்டு.. கொஞ்ச நாளைக்கு பதிவு போட மாட்டிங்க.. நிம்மதியா இருக்கலாம்.. :))))

R.Gopi said...

//இதிலாவது ஜூனியர் ஒழுங்கா சாப்பிடறாரான்னு பார்க்கலாம்:)//

Junior ozhungaa saappiduvaar. Kavalaiya vidungo..

//இன்னும் பத்து நாளில் வீடு தேடி, பால் காய்ச்சி, ஷிப்ட் பண்ணி, இப்பவே கண்ண கட்டுதே:(
***********
Yes, Shifting the house is really tiresome....

//1000 கோடி ரூபாய் செலவழித்து தன் முழு உருவ சிலைகளைத் திறந்து வைத்திருக்கிறார் உத்திர பிரதேச முதலமைச்சர் மாயாவதி//

*******

JJ kaadhula innum vizhaliyaa?

//செத்தவனே வந்து நான் இப்படித்தான் செத்தேன்னு சொன்னாதான் விடுவாங்க போலிருக்கு:(//
************
Sariyaa sonnenga..... Indha mediavin attakaasam thaanga mudiyala....

//எல்லாரும் உணர்ந்தால் நல்லாதான் இருக்கும்.//
************

Ivlo nyayamaanavaraa? Eppadiyo oruththar, rendu per indha madhiri irukkanga....

//2007ஆம் வருடம் ஜூலை மாதம் எழுத ஆரம்பித்தது. 2 வருடம் ஆகிவிட்டது. //

Oh appadiyaa, en manamaarndha vaazhththukkal.

Innum niraiya ezhudhungal.....

jothi said...

உச்ச நீதி மன்றம் மாயாவதிக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

ஆட்டோ கதை உண்மைதான். முறையான கட்டணம் இருந்தால் வண்டியில் போவதை தவிர்த்து ஆட்டோவிலேயே செல்லலாம். முதுகு வலியாவது வராமல் இருக்கும்.

துபாய் ராஜா said...

அம்மாக்கள் சந்திப்பு அடிக்கடி தொடரட்டும்.
------------
நல்ல வீடு கிடைக்க ஆண்டவன் அருள் புரிவார்.
------------------
மாயாவதி சிலை குறித்த எனது பதிவு
http://rajasabai.blogspot.com/2009/06/blog-post_30.html
--------------------------
சாதனையாளர்களுக்கு பின் பல வேதனைகள் என்பதற்கு MJவும் ஒரு உதா'ரணம்'
------------------------
ஆட்டோகாரர்களில் சில நல்லவர்களும் இருக்கிறார்கள்.
--------------------
பதிவுலகில் இந்த மூன்றாவது ஆண்டு முத்தானதாக அமைய வாழ்த்துக்கள்.

அ.மு.செய்யது said...

//1000 கோடி ரூபாய் செலவழித்து தன் முழு உருவ சிலைகளைத் திறந்து வைத்திருக்கிறார் உத்திர பிரதேச முதலமைச்சர் மாயாவதி//

அந்த சிலையில ஒரு விசயம் கவனிச்சிங்களா ??

கையில ஒரு ஹேண்ட் பேக் இருக்கும்..

நர்சிம் said...

இரண்டாண்டுக்கு வாழ்த்துக்கள்.

Anonymous said...

"என்னடா? எப்ப பாரு பீடை பீடைன்னு பாட்டு கேட்டுகிட்டிருக்கீங்க"ன்னு திட்டுவாங்க

செம பாட்டி போல இருக்காங்க..

இரண்டு வருஷம் ஆச்சா!!!
வாழ்த்துகள் வித்யா

சென்ஷி said...

வெற்றிகரமான இரண்டாம் வருடத்திற்கு வாழ்த்துக்கள்

Deepa said...

நல்ல தொகுப்பு.

//இந்த சிலைகளைப் பராமரிக்க ஒதுக்கப்பட்டுள்ள தொகை 270 கோடி. மாயா இது தேவையா??//

:-(( அநியாயம். எத்தனையோ கோடிக்குச் சொந்த விமானம் வேறு வாங்கி இருக்கிறாராம் இந்த ஏழைகளின் தலைவி.

Deepa said...
This comment has been removed by the author.
Deepa said...

//செத்தவனக் கூட நிம்மதியா இருக்கவிடமாட்டேங்கறாங்க. //

வலி மிகுந்த நிதர்சனம். அதீத புகழுக்குத் தரப்படும் அநியாய விலை அது.

Deepa said...

:-) மறந்துட்டேன். இரண்டாம் ஆண்டுக்கும் இன்னும் பல ஆண்டுகளுக்கும் வாழ்த்துக்கள்!

Vidhya Chandrasekaran said...

வருகைக்கும் கருத்துக்கும்

நன்றி சின்ன அம்மிணி.
நன்றி தராசு.
நன்றி ஆதவன்.
நன்றி கார்க்கி.
நன்றி கோபி.
நன்றி ஜோதி.
நன்றி துபாய் ராஜா.
நன்றி செய்யது.
நன்றி நர்சிம்.
நன்றி மயில்.
நன்றி சென்ஷி.
நன்றி தீபா.

அமுதா said...

/*அவர் மறைவை விட மிகவும் வருத்தம் தரும் விஷயம் மீடியாக்கள் நடந்து கொள்ளும் விதம் தான்*/
உண்மை. எரிச்சலாக இருக்கிறது. :-(

இரண்டு வருடத்திற்கு வாழ்த்துக்கள்.

Truth said...

இரண்டாண்டுக்கு வாழ்த்துக்கள் வித்யா. இம்முறை எல்லா துணுக்குகளும் நல்லா இருந்தது

நாகை சிவா said...

3ம் ஆண்டுக்கு வாழ்த்துக்கள் :)

இப்போ தான் தானை தலைவி சகோதிரி மாயாவதி பத்தி பேசிக்கிட்டு இருந்தோம் :) லக்னோவில் ஒவ்வொரு 500 மீட்டருக்கும் அவங்க சிலை, இல்லான யானை சிலை, அம்பேத்கார் பூங்கா, மாயாவதி பூங்கா னு இருக்காம்... நடத்தட்டும் நடத்தட்டும்.. நம்ம வூட்டு காசு தானே வாழ்ந்தட்டு போகட்டும் :)

ஆட்டோ வுக்கு சட்டம் எல்லாம் இருக்கு.. அதை நடைமுறை தான் படுத்தல... எவனுக்கு அதை பத்தி கவலை இருக்கு... குடும்ப பிரச்சனையும், பதவி பிரச்சனையுமே பெருசா இருக்க...

சந்தனமுல்லை said...

வாழ்த்துகள் வித்யா....

//வர் மறைவை விட மிகவும் வருத்தம் தரும் விஷயம் மீடியாக்கள் நடந்து கொள்ளும் விதம் தான். //

:((

சந்தனமுல்லை said...

//இன்னும் பத்து நாளில் வீடு தேடி, பால் காய்ச்சி, ஷிப்ட் பண்ணி, இப்பவே கண்ண கட்டுதே:(//

சீக்கிரம் வீடு கிடைச்சுடும்...அட்வான்ஸ் வாழ்த்துகள்!

Arun Kumar said...

ஆடி மாதம் செண்டிமெண்டால் நிறைய லாபமும் இருக்கு. வீட்டு வாடகை நல்லா பேரம் பேசி குறைந்த விலைக்கு பிடிக்கலாம்..shifting செய்வதும் குறைந்த செலவில் முடிந்து விடலாம்.

மாயாவதிக்கு பல விஷயங்களில் தமிழ்நாடு தான் முன்மாதிரி.. இது கூட..

துணுக்ஸ் அருமை.. இரண்டு ஆண்டுக்கு வாழ்த்துக்கள்.

முரளிகண்ணன் said...

மூன்றாமாண்டு துவக்கத்துக்கு வாழ்த்துக்கள்

கவிதா | Kavitha said...

//செத்தவனக் கூட நிம்மதியா இருக்கவிடமாட்டேங்கறாங்க. செத்தவனே வந்து நான் இப்படித்தான் செத்தேன்னு சொன்னாதான் விடுவாங்க போலிருக்கு:(//

ம்ம்.. ரொம்பவே கஷ்டமா இருக்கு இது.. இதற்கு முன்ன கூட ஒரு முறை அவர் இறந்துவிட்டதாக செய்தி வந்து, பிறகு இல்லை என்றார்கள்..
இறந்தபிறகும்..உயிரை எடுக்காமல் விட மாட்டார்கள் போலவே.. :((

Vidhya Chandrasekaran said...

வருகைக்கும் கருத்துக்கும்

நன்றி அமுதா.
நன்றி ட்ரூத்.
நன்றி சிவா.
நன்றி முல்லை.
நன்றி அருண்குமார்.
நன்றி முரளிகண்ணன்.
நன்றி கவிதா.

"உழவன்" "Uzhavan" said...

இரண்டாவது ஆண்டா.. க்ரேட்.. வாழ்த்துக்கள்!

நானானி said...

வலைப்பூ அம்மாக்கள் சந்திப்பு மட்டும்தானா? ஆச்சிகள் சந்திப்பு இல்லையா? சொல்லியிருந்தால் நானும் என் பேரனோடு வந்திருப்பேனே?

Unknown said...

I live in Moscow and a regular reader of your postings. I really enjoy the humourous way you approach all topics/happenings, particularly your restaurant reviews.

Congrats for successful 2 years of blogging. Wish you luck and strength in finding a new abode for your lovely family.

Keep blogging.

Friendly,
Ramkumar

pudugaithendral said...

ஆட்டோ அண்னாத்தைங்களைப்பத்தி நானும் புலம்பிட்டேன்.

வீடு மாத்தப்போறதுக்கும், வலைப்பூ துவங்கி 2 வருடம் ஆனதுக்கும் வாழ்த்துக்கள்.

Vidhya Chandrasekaran said...

நன்றி உழவன்.
நன்றி நானானி. (முன்னமே பிளான் செய்யவில்லை. சனிக்கிழமை இரவுதான் முடிவானது)
நன்றி ராம்குமார்.
நன்றி கலா அக்கா.

சப்ராஸ் அபூ பக்கர் said...

தொடருங்கள்.............. வாழ்த்துக்கள்......

மணிநரேன் said...

நன்றாக இருந்தது தொகுப்பு.

2 வயது முடிந்துவிட்டதா?? வாழ்த்துக்கள்..:)

Vidhya Chandrasekaran said...

நன்றி அபூபக்கர்.
நன்றி மணிநரேன்.

மணிகண்டன் said...

துணுக்ஸ் சூப்பர் வித்யா. நல்ல வீடு ப்ராப்தி ஹச்து.

விக்னேஷ்வரி said...

நீங்க என்கிட்ட சொல்லாம மீட் பண்ணது ரொம்ப தப்பு. சொல்லிருந்தா நானும் எங்கம்மா கூட வந்திருப்பேன்ல. :(

ஐயோ, இவ்வளவு ஷார்ட் டைம்ல சென்னைல வீடு தேடிட முடியுமா....

மாயா என்ன செய்தாலும் அடுத்த தேர்தலில் மீண்டும் நாடாள வருவது எளிதில் சாத்தியம்.

ஆமா, ஜேக்சனை வைத்து மீடியாக்கள் செய்யும் காமெடி ரொம்ப வேதனைக்குரியது.

சென்னையில் ஆட்டோ கட்டணம் குறைவு எனக் கேள்விப்பட்டுள்ளேன். இல்லையா....

வாழ்த்துக்கள் வித்யா.

அமிர்தவர்ஷினி அம்மா said...

சீக்கிரமே நல்ல வீடு கிடைக்கவும், குடியேறவும், மூன்றாவது ஆண்டில் சாதனைகள் படைக்கவும் (பதிவுலகத்துல), ( ரூ 40 மட்டும்) வாங்கும் ஆட்டோக்களில் மட்டுமே நீங்கள் பயணிக்கவும் வாழ்த்துக்கள் :)-

SK said...

அந்த ஆட்டோ காரருக்கு மொபைல் நம்பர் இருந்தா வாங்கி உங்க நண்பர்கள் கிட்டே கொடுத்து அவர்கள் பயணிக்கும் போது அவரை அழைக்கும் படி செய்தால் அவருக்கு ஒரு பரிசாக இருக்கும்.

வாழ்த்துக்கள். கலக்குங்கள்.

Vidhya Chandrasekaran said...

நன்றி மணிகண்டன்.
நன்றி விக்னேஷ்வரி.
நன்றி அமித்து அம்மா.
நன்றி SK.

நிஜாம் கான் said...

//1000 கோடி ரூபாய் செலவழித்து தன் முழு உருவ சிலைகளைத் திறந்து வைத்திருக்கிறார் உத்திர பிரதேச முதலமைச்சர் மாயாவதி. இத்தனைக்கும் இந்த மாநிலத்தில் தான் வறுமைக் கோட்டுக்கு கீழ் இருக்கும் மக்களின் எண்ணிக்கை ஜாஸ்தி. //
உத்திரபிரதேசத்தில் பெரியார் போல, தலைவர் கலைஞர் போல யாருமே கிடைக்கவில்லை. அதனால் தான் அங்கேயிருக்கும் மக்கள் இன்னமும் அறிவிலே முதிர்ச்சியில்லாதவர்களாக இருக்கிறார் எனபது என் கருத்து என் கருத்து சகோதரி

Thamira said...

அழகான அனுபவங்கள்..

ஆமா, என்னை தாம்பரம் வரவெச்சுட்டு நீங்க எங்கே போறீங்க.?

குசும்பன் said...

//இதிலாவது ஜூனியர் ஒழுங்கா சாப்பிடறாரான்னு பார்க்கலாம்:)//

தட்டில் மேட்டர் இல்லை, நாங்க சமைச்சா தட்டே வேண்டாம் அப்படியே சாப்பிடுவார்:))

//2007ஆம் வருடம் ஜூலை மாதம் எழுத ஆரம்பித்தது. 2 வருடம் ஆகிவிட்டது. //

வணக்கம் சீனியர் மேடம்!

குசும்பன் said...

அப்பாடா 41 அடிச்சு முதல் பக்கத்தில் இருந்து தூக்கியாச்சு , ஆதி பேசியபடி ட்ரீட் கொடுத்திடுங்க எனக்கு!

குசும்பன் said...

//லக்னோவில் ஒவ்வொரு 500 மீட்டருக்கும் அவங்க சிலை, இல்லான யானை சிலை,//

ரெண்டும் வேற வேறயா? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

Vidhya Chandrasekaran said...

நன்றி நிஜாம்.
நன்றி ஆதி.
நன்றி குசும்பன்.

நாகை சிவா said...

தம்பி சரவணா, அமீரகத்தில் இருக்கோம் னு சகோதிரி கிட்ட குசும்பு பண்ணக் கூடாது. தும்பிக்கையாலே அடிப்பாங்க சொல்லிட்டேன் ;)