June 29, 2009

தருமன் மாமா

சிலசமயங்களில் ஒருவருடைய சரித்திரத்தை சொன்னால கூட அவரைப் பார்த்ததாய் நினைவிருக்காது. வெகுசிலரை நினைவுப்படுத்த ஒரிரு வார்த்தைகளை போதும். சமீபத்தில் ஒரு பதிவால் சடாரென நினைவுக்கு வந்தவர் தருமன் மாமா. பதினெட்டு வருடங்களுக்கு முன் நடந்த சம்பவங்கள் என்றாலும் துளிக்கூட மங்காமல் புதிதாய் ப்ரிண்ட் போட்ட போட்டோ ஆல்பம் போல் தெளிவாய் நினைவுக்கு வருகின்றன. தருமன் மாமா பேசியவை, அவரைப் பற்றி அப்பாவும் ரவி அங்கிளும் சொன்னவை என எல்லாம் ஞாபகமிருக்கிறது.

காஞ்சிபுரத்தில் சுமார் ஏழு ஆண்டுகள் இருந்தோம். நியூ ஹவுஸிங் போர்டில் குடியிருந்தபோது தான் தர்மன் மாமாவைத் தெரியும். அப்பாவிடம் பணிபுரிந்தவர். ஐந்தே முக்கால் அடி உயரம், கறுப்பு நிறம் எப்பவுமே (அ) நான் பார்க்கும் போதெல்லாம் சந்தனக் கலர் அல்லது லைட் வுட் கலரில் சஃபாரியும், கறுப்பு ஷூவும், தங்கக் கலரில் வாட்சும் அணிந்திருப்பார். அப்பாவிடம் வேலை செய்தவர்களில் பாதிப் பேரை மாமா என்றுதான் அழைப்போம். ரவி அங்கிள் மட்டும் விதிவிலக்கு. கொஞ்சம் விவரம் தெரிய ஆரம்பித்த பிறகு ஸார் என்றழைக்க பழகிவிட்டது.

ஒவ்வொரு மாதமும் 15 தேதிக்கு மேல் மாமாவுக்கு நைட் ட்யூட்டி வரும். சாயந்திரம் மாமா வீட்டுக்கு வந்தாலே தெரியும் அன்று மாமாவுக்கு நைட் ட்யூட்டியென. வரும்போது முகம் கொள்ளா சிரிப்பும் கைக்கொள்ளா இனிப்புமாக தான் உள்ளே வருவார். மாமா வாங்கி வரும் இனிப்புகள் ரேவல்கானின் பான்பசந்த் சாக்லேட்டும், மேங்கோ பைட் சாக்லேட்டும். ஒன்னு ரெண்டு இல்ல. ஒரு பாக்கெட் வாங்கிட்டு வருவார். அது எப்படின்னு தெரியாது. கரெக்டா அந்தக் கவரிலுள்ள சாக்லேட்டுகள் முடியும் தருவாயில் மாமாவிடமிருந்து அடுத்த பாக்கெட் வந்துவிடும் (இத்தனைக்கும் ஒரு நாளைக்கு இவ்ளோதான் என்ற அம்மாவின் கணக்கை எப்பவாவது தான் ஃபாலோ பண்ணுவோம். அம்மாக்குத் தெரிந்து ஒன்னு, தெரியாம பல என்றுதான் போய்க்கொண்டிருந்தது). மாமாவின் அந்த பளீர் சிரிப்பும் "என்ன பாப்பா நல்லா படிக்கிறயா?" என்ற சிரிப்பினூடே விசாரிக்கும் அக்கறையும் இன்னும் நினைவிலிருக்கிறது.

"உனக்கெதுக்குயா இந்த தேவையில்லாத வேலை?" என ஆரம்பிக்கும் அட்வைஸ்களை அடிக்கடி ரவி அங்கிள் தர்மன் மாமாவிடம் சொல்லக் கேட்டிருக்கேன். அப்போதிருந்த வயதில் ஏன் அப்படிப் பேசுகிறார்கள் என புரிந்துகொள்ள இயலவில்லை. பின்னர் அப்பாவுடன் பேசிக்கொண்டிருக்கையில் மாமா கொஞ்சம் விளம்பரப் பிரியர் எனத் தெரிந்தது. வேலையை சரியாக செய்துவிடுவார். அடிக்கடி மாமா செய்திதாள்களைக் கொண்டு வந்து மூலையில் அவர் நிற்கும் போட்டோவை காமிப்பார். "பாரு பாப்பா. மாமா போட்டோ பேப்பர்ல வந்திருக்கு". கடைசியாக மாமா வந்துபோனதிலிருந்து இரு வாரம் கழித்து அம்மா தான் எழுப்பி சொன்னார்கள். "வித்யா. தர்மன் மாமா செத்துப்போய்ட்டார்டி. பேப்பர்ல அவர் போட்டோ வந்திருக்குப் பார்" என்று. தனியாக இறந்து போனவர்கள் பட்டியலிலும், பிணக்குவியலுக்கிடையிலும் என இரண்டு போட்டோவாக வந்தது. அப்போதைக்கு இறப்பின் வலியை நான் உணர்ந்திருக்கவில்லை. அந்தநொடி என் கவலையெல்லாம் இனிமே யார் பான்பசந்த் சாக்லேட் வாங்கித்தருவார்கள் என்பதுதான். சிறிது சிறிதாக தெளிவு வர வர தர்மன் மாமாவின் மறைவுக்கு ரொம்ப வருந்தினேன். அநியாயமாக போட்டோக்கு ஆசைப்பட்டு உயிரவிட்டான் என அப்பா ரொம்ப வருத்தப்பட்டு கூறுவார்.

பான்பசந்த் சாக்லேட்டுகள் வருவதேயில்லையென்றாலும், உங்கள் நினைவுகள் மட்டும் வரத்தவறுவதில்லை மாமா. உங்களை ரொம்ப மிஸ் செய்தேன். ஒருவேளை நீங்கள் இப்போது உயிரோடிருந்தால் ஜூனியரையும் கைநிறைய சாக்லேட்டுகளுடன் தான் பார்க்க வருவீர்கள் என்றே தோன்றுகிறது.

22 comments:

க.பாலாசி said...

முதலில் கண்டவன் நானே!

க.பாலாசி said...

இப்போது படித்துவிட்டேன். வருகிறேன்.

அமிர்தவர்ஷினி அம்மா said...

:(

வெகுசிலரை நினைவுப்படுத்த ஒரிரு வார்த்தைகளை போதும். //

கண்டிப்பா வித்யா. சட்டென நினைவுக்கு வந்துவிடுவார்கள்.

நர்சிம் said...

//அநியாயமாக போட்டோக்கு ஆசைப்பட்டு உயிரவிட்டான் என அப்பா ரொம்ப வருத்தப்பட்டு கூறுவார்.//

ப்ச்..சில வார்த்தைகள் பளீரென விழுந்துவிடும்.

R.Gopi said...

//மாமாவின் அந்த பளீர் சிரிப்பும் "என்ன பாப்பா நல்லா படிக்கிறயா?" என்ற சிரிப்பினூடே விசாரிக்கும் அக்கறையும் இன்னும் நினைவிலிருக்கிறது.//

*********

It is very much visible that you are missing your UNCLE from the above.........

//உங்கள் நினைவுகள் மட்டும் வரத்தவறுவதில்லை மாமா. உங்களை ரொம்ப மிஸ் செய்தேன். ஒருவேளை நீங்கள் இப்போது உயிரோடிருந்தால் ஜூனியரையும் கைநிறைய சாக்லேட்டுகளுடன் தான் பார்க்க வருவீர்கள் என்றே தோன்றுகிறது.//

Very painful........

Cable சங்கர் said...

அவர் விளம்பர பிரியர் என்பதை எப்படி பேப்பரில் அவர் படத்தை வரவழைத்தார் என்பதையும். எவ்வாறு பிணக்குவியலில் அவர் போட்டோ வந்தது என்பதையும் சொல்லியிருந்தால் இன்னும் சூப்பராய் இருந்திருக்கும் வித்யா..

Anonymous said...

நல்ல இருக்கு வித்யா

அ.மு.செய்யது said...

பதிவு பல தருமன் மாமாக்களின் நினைவை தூண்டி விட்டது.

நல்லா எழுதியிருக்கீங்க வித்யா.

Vidhya Chandrasekaran said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
பாலாஜி.
அமித்து அம்மா.
நர்சிம்.
கோபி.
கேபிள் சங்கர் (சில விஷயங்களை தவிர்ப்பது நலம் எனப் பட்டது. இது புனைவு அல்ல)
மயில்.
அ.மு.செய்யது.

Deepa said...

நெகிழ்வான பதிவு. :-(

அபி அப்பா said...

தருமன் மாமா சாக்லெட்டால சப் கொட்ட வச்சாலும் கடைசியா உச் கொட்ட வச்சுட்டார்:-((

துபாய் ராஜா said...

//"தனியாக இறந்து போனவர்கள் பட்டியலிலும், பிணக்குவியலுக்கிடையிலும் என இரண்டு போட்டோவாக வந்தது"//

தருமன் மாமாவுக்கு என்ன ஆச்சு ??

ஜானி வாக்கர் said...

ஒரு சிலர் இது போல் இருக்கிறார்கள், ஓரளவு தெரிந்தவர் வீட்டில் குழந்தைகள் இருந்தால் நிச்சயம் வெறும் கையோடு போகமாட்டார்கள். குழந்தைகளும் அவர்களிடம் கூடுதல் பிடிப்புடன் இருப்பர்.

அனைவர்க்கும் இந்த மனது வருவதில்லை. உங்கள் தருமன் மாமா உங்கள் மனத்தில் இன்னும் இருப்பதே அதற்கு சாட்சி.

pudugaithendral said...

நெகிழவைத்த பதிவு

jothi said...

//ஒருவேளை நீங்கள் இப்போது உயிரோடிருந்தால் ஜூனியரையும் கைநிறைய சாக்லேட்டுகளுடன் தான் பார்க்க வருவீர்கள் என்றே தோன்றுகிறது. //

உண்மைதான். ஒரு சிலர் எந்த மோசமான சூழ்னிலையிலும் தங்களுக்கிருக்கும் நல்ல பழக்கங்களை மாற்றிக்கொள்வதில்லை,

Truth said...

:( வெகு சிலரால் மட்டுமே இப்படி மனதில் என்றும் நிற்க முடியும். நெகிழ வைத்த பதிவு.

சந்தனமுல்லை said...

மிகவும் நெகிழ்ச்சியாக இருந்தது வித்யா..சில மனிதர்கள் நினைவுகளை விட்டலகலுவதில்லை!பகிர்வுக்கு நன்றி!

"உழவன்" "Uzhavan" said...

:-((

விக்னேஷ்வரி said...

Very touching post. Feeling heavy after reading.

Vidhya Chandrasekaran said...

வருகைக்கு நன்றி

தீபா.
அபி அப்பா.
துபாய் ராஜா (விரும்பத்தகாத விபத்தில் உயிரிழந்து விட்டார்)
ஜானி வாக்கர்.
கலா அக்கா.
ஜோதி.
ட்ரூத்.
முல்லை.
உழவன்.
விக்னேஷ்வரி.

Unknown said...

//அநியாயமாக போட்டோக்கு ஆசைப்பட்டு உயிரவிட்டான் என அப்பா ரொம்ப வருத்தப்பட்டு கூறுவார்.//

Sriperumputhur?

touching one...

Arun Kumar said...

சில விஷயங்கள் நாம் விரும்பியும் விரும்பாமலும் தொடர்ந்தே வரும் :(