October 1, 2009

நளா'ஸ்

டிஸ்கி 1 : பசி நேரத்தில் பதிவைப் படித்து வயிற்றெரிச்சல் பட்டால் கம்பேனி பொறுப்பாகாது.
டிஸ்கி 2 : இடுகை முழுக்க முழுக்க பெர்சனல் எக்ஸ்பீரியன்ஸை பேஸ் பண்ணி எழுதப்பட்டது. உங்களுக்கு மாற்று அனுபவம் ஏற்படுமெனில் அதற்கும் கம்பேனி பொறுப்பாகாது:)


CTSல் வேலை செய்தபோதே இந்த ரெஸ்டாரெண்டைப் பார்த்திருக்கிறேன். சரியான செட் அமையாததால் போகவில்லை. தாம்பரத்திலிருந்தபோது குரோம்பேட்டையில் உள்ள கிளைக்குப் போகணும்னு நானும் ரகுவும் நிறைய தடவை ட்ரை பண்ணி தள்ளிப் போச்சு. இந்த முறை வேளச்சேரியில் இதைப் பார்த்தவுடன் முதல்ல இங்கதான் போகனும்ன்னு முடிவு செய்தோம்.

இரவு உணவுக்கு சென்றோம். கூட்டம் அம்முகிறது. இத்தனைக்கும் வார நாட்களில். ஒரு பத்து நிமிட காத்திருப்பிற்கு பின் டேபிள் கிடைத்தது. Ambience ஒன்றும் ஆஹா ஒஹோ இல்லை. சமையல்கட்டும், டைனிங் ஒரே இடத்தில். காமா சோமாவென ஒரே சத்தம். சரி மெயின் மேட்டருக்கு வருவோம். அளவான அடக்கமான மெனு. முருங்கைக்காய் சூப்பும், வெண்டைக்காய் பக்கோடாவும், சைனீஸ் பொட்டேட்டோவும் ஆர்டர் செய்தோம். சூப்பும் வெண்டைக்காய் ப்ரையும் அட்டகாசம். சைனீஸ் ஐட்டம் ரொம்பக் கேவலமாய் இருந்தது.


பத்து பதினைந்து வெரைட்டி ஆப்பங்கள் இருக்கு. பிளையின் ஆரம்பித்து மட்டன் ஆப்பம் வரை. நாங்கள் பனீர் சீஸ் ஆப்பம், Gingely ஆப்பம், முட்டை மசாலா ஆப்பம் ஆகியவை ஆர்டர் செய்தோம். எல்லாமே சூப்பர்ப். சைட் டிஷ்ஷாக ஆர்டர் செய்த கடலைக் கறி ஓகேவாக இருந்தது (நான் செய்வதை விட சுமார் தான் என ரகு சொன்னது இங்கு அநாவசியம்:)).


ஸ்வீட் மெனுவிலிருந்து நான் அடைபிரதமனும், அவர் கேரட் அல்வாவும் சாப்பிட்டார். ரெண்டுமே சூப்பர். Authentic கேரள உணவகத்தின் அடைபிரதமனை விட இங்கு டக்கராக இருந்தது.

மேலதிக தகவல்கள்

உணவகம் - நளாஸ் ஆப்பக்கடை
இடம் - வேளச்சேரி விஜய நகர் பேருந்து நிலையம் அருகில். சதர்லேண்ட் எதிர்புறம். குரோம்பேட்டையிலும் ஒரு கிளை இருக்கிறது.
டப்பு - இரண்டு மாதங்கள் ஆனதால் சரியாக நினைவில்லை. ஆனால் பர்ஸை பதம் பார்க்கவில்லை.

பரிந்துரை - தாரளமாக போகலாம். Worth a try:)

13 comments:

pudugaithendral said...

தாங்கஸ். மைண்ட்ல வெச்சு சென்னை ட்ரிப் அடிக்கும்போது போய் பாக்கறேன்.

அமுதா கிருஷ்ணா said...

நான் ஒரு முறை போனேன். எனக்கு அவ்வளவாக பிடிக்கவில்லை. வெரைட்டி ஆப்பங்கள் ஒக்கே

கார்க்கிபவா said...

என்னுடைய ஃபேவரிட் கொ.ப.செ. எனக்கு என்னவோ விலை ரொம்ப நியாயமாத்தான் இருக்குன்னு தோணுது. கூட்டம் இருந்தால் மட்டுமே கடுபப இருக்கும். அதனால் வார நாட்களில் அல்லது எட்டு மணிக்கு முன்பு செல்வது நல்லது. bull's eye ஆப்பம் என் சாய்ஸ்..

நாகை சிவா said...

ஆப்பம்... போயிடுவோம்.

நீங்க சிம்ரன் ஆப்புக் கடை கேள்விப்பட்டு இருக்கீங்களா?

மணிஜி said...

நளாஸுக்கு நான் ரெகுலர் கஸ்டமர் வித்யா...சுவையோ சுவை...

Truth said...

முருங்கைக்கயில சூப்புமா செய்ய முடியும்? இது வரை கேள்விப்படாத ஒன்று. ஒரு வேளை முருங்கைக்காய் சாம்பாரா மேலோட்டமா எடுத்து தந்திருப்பாங்களா? :-)

வெண்டைக்காய் என்னோட பேவரேட். எப்படி இருந்தாலும் சாப்பிடுவேன்.

நல்லா இருக்குங்க பதிவு.

Vidhya Chandrasekaran said...

நன்றி அக்கா. (கண்டிப்பா ட்ரை பண்ணுங்க)
நன்றி அமுதா கிருஷ்ணா (ஸ்ட்ரிக்ட்லி நோ சைனீஸ்)
நன்றி கார்க்கி.
நன்றி தண்டோரா.
நன்றி சிவா.
நன்றி ட்ரூத்.

நர்சிம் said...

ம்

எனதுகுரல் said...

ஆனா அக்கா நீங்க பண்றது கொஞ்சம் கூட நல்ல இல்ல... தெரியாம மத்தியான நேரத்துல்ல blog மேயலாம்னு வந்தா...இப்படி photos போட்டு பசியெடுக்க வச்சிடீங்க. 2 வருஷமா சென்னைல இருக்கும்போது ஒரு தகவலும் இந்த மாதிரி இல்ல...
1 ஆ 2 ஆ ..ஒரு பெரிய list.... இனி எப்போ சென்னை வர்றது ..எப்போ வேளச்சேரி வர்றது... பாக்கலாம் :)

Thamira said...

காரப்பாக்கம் நளாஸ் டிரை பண்ணியிருக்கேன். மகா மட்டம்.!

ஏதோ சொல்றீங்க, ஒரு நாள் பாப்போம்.

அப்புறம் அடைமுதல்வன்னு ஏதோ இருக்குதாமே, சாப்பிட்டு இருக்கீங்களா? ஹிஹி..

Rajalakshmi Pakkirisamy said...

நான் வேளச்சேரில இருந்த 3 வருசத்துல மாசம் ஒரு தடவ இங்க சாப்பிடலன்னா எனக்கு மண்டை வெடிச்சிடும். இப்போ அத ரொம்ப மிஸ் பண்றேன்னு பொலம்பிட்டு இருக்கேன். இப்பிடி என் வயித்தெரிச்சல கிளப்புறீங்களே தாயீ

ஊர்சுற்றி said...

டப்பு கொஞ்சம் கம்மிதாங்கோ!
சாப்பிடலாம். நமக்கு இந்த ஏரியாதானுங்க.

Vidhya Chandrasekaran said...

நன்றி நர்சிம்.
நன்றி எனதுகுரல்.
நன்றி ஆதி.
நன்றி இராஜலெட்சுமி.
நன்றி ஊர்சுற்றி.