October 7, 2009

விண்வெளியில் விசயகாந்த்

டிஸ்கி 1 : இது முழுக்க முழுக்க நகைச்சுவைக்காக எழுதப்பட்டது. யார் மனது புண்படுமேயானால் கம்பேனி பொறுப்பேற்றுக்கொள்வதைப் பற்றி அப்பாலிக்கா யோசிக்கும்.

டிஸ்கி 2 : இந்தக் கதை நான் மூன்றாம் ஆண்டு பொறியியல் படிக்கும்போது சென்ற சுற்றுலாவின்போது உருவாக்கப்பட்டது. RT & SCR ராயல்டி என ஏதும் கிடைச்சால் ஷேர் பண்ணிக்கலாம். தர்ம அடின்னா அட்ரஸ் குடுங்க. அனுப்பி வைக்கிறேன்.

டிஸ்கி 3 : கதை எழுதும்போது??!! ரகுவரன் உயிருடன் இருந்ததால் அவரைத் தான் வில்லனாக்கினோம். இப்போது அந்த கேரக்டருக்கு மாற்றாக யாரையும் யோசிக்க முடியவில்லை:(

மஞ்சள் காமாலை புரொடெக்ஷ்ன்ஸ்
பெருமையுடன் வழங்கும்


CABTUN IN & AS

விண்ணரசு
- Saviour of earth.

கேப்டனுக்கு அப்பா மகன் என இரட்டை வேடம். இந்திய சினிமா வரலாற்றில் முதல் முறையாக ஜெனிபர் லோபஸ் ஹீரோயினாக நடிக்கிறார். மேற்கொண்டு கதைக்கு போவோம்.

நாசாவில் வேலை பார்க்கும் விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் எல்லாம் கான்பரன்ஸ் ஹாலில் குழுமியிருக்கிறார்கள். எல்லோர் முகத்திலும் பதற்றம். பிரச்சனை இதுதான். செவ்வாய் கிரகத்திலிருக்கும் இரு வேற்றுகிரகவாசிகளின் சம்பாஷணையை ஒட்டுக் கேட்டபோது, அவர்கள் பூமியை அழிக்க திட்டமிட்டிருப்பது தெரிய வருகிறது. என்ன செய்வது என எல்லாரும் மண்டையப் பிச்சிக்கும்போது டீ சப்ளை பண்ற பையன் சொல்றான் "ஹ்ம்ம்ம்ம். இந்த உலகத்தை காப்பாத்த ஒருத்தரால தான் முடியும். அவர்தான் மண்ணரசு" (அப்பா கேப்டன்). எல்லாரும் ஏகமனதாக மண்ணரசுவை செவ்வாய்க்கு அனுப்ப முடிவு செய்து நாசா தலைம விஞ்ஞானி ரகுவரனை அணுகுகிறார்கள் (ரகுவரன் வில்லன் என சொல்லத் தேவையில்லை). ரகுவரனிடம் மண்ணரசுவின் வீர தீர பராக்கிரம செயல்களை சொல்லி சம்மதமும் வாங்குகிறார்கள்.

இப்போதான் அப்பா கேப்டனின் இண்ட்ரோ.

பேரரசுவின் பொன்னான வரிகளில், கண்ணம்மாபேட்டையில் ரிகார்டிங் செய்யும் ஸ்ரீகாந் தேவாவின் காதுக்கினிய இசையில் அட்டகாசமான இண்ட்ரோ சாங் வைக்கிறோம். மறக்காம கேப்டனின் கட்சி கொடியை க்ளோஸப்பில் காட்டுறோம். பாட்டு முடிஞ்சவுடனே பேமிலி செண்டிமெண்ட். மண்ணரசுக்கு ஏற்ற ஜோடியா அம்பிகா (முந்தைய படத்தில் இவங்க ஜோடிப் பொருத்தம் இன்னும் என் கண்ணுலயே நிக்குது). இவர்களின் மகனாக விண்ணரசு. வாரணம் ஆயிரம் சூர்யா மாதிரி உடம்பெல்லாம் இளைக்க முடியாததனால வேற பையன நடிக்க வைக்கிறோம். இங்க ஒரு பேமிலி சாங். ஒரே இளநீர்ல ஸ்ட்ரா போட்டு குடிக்கறது மாதிரியான புதுமையான நிறைய காட்சிகள் இருக்கு.

இப்போ கதைய அடுத்த கட்டதுக்கு கிரேன் வச்சு தூக்குறோம் (கதையும் வெயிட்டு, கேப்டனும் வெயிட்டு. அடுத்த கட்டதுக்கு நகர்த்த முடியாதுல்ல. லாஜிக்! லாஜிக்!)

மண்ணரசு, ரகுவரன் மற்ற விஞ்ஞானிகளெல்லாம் கூடி கும்மியடிச்சு ஒரு முடிவுக்கு வர்றாங்க. மண்ணரசுவே செவ்வாய் கிரகத்துக்கு போய், ஸ்பெஷலா ப்ரோகிராம் செய்யப்பட்ட லேசர் கன்னை வச்சு ஏலியன்ஸை அழிக்கறதுன்னு முடிவு செய்யறாங்க. உடனே நம்ம கேப்டன் ஜிப் வச்ச ஷூவும், டார்ச் வச்ச தொப்பியும்(ஸ்பேஸ் டார்க்கா இருக்கும்ல. லாஜிக் இல்லன்னு யாரும் சொல்லிடக்கூடாது பாருங்க) போட்டுகிட்டு கிளம்புறாரு. போறதுக்கு முன்னாடி தாய்மார்களை கவரும் விதமா செண்டிமெண்ட் காட்சி. பொண்டாட்டியா பார்த்து இவர் கண் கலங்க அவிங்க அழ, படம் பார்க்குறவங்களும் கண்டிப்பா அழுவாங்க. இவர் கிளம்புறது தீபாவளி சீசன். அதனால புள்ளையாண்டானுக்கு லாரி லாரியா வெடி வாங்கிக் கொடுக்கிறாரு. அப்படியே ஷட்டில்ல கிளம்புறாரு. அங்க போய் லேண்ட் ஆனவுடனே அந்த லேசர் கன் தப்பா ப்ரோகிராம் பண்ணிருக்கறத நினைச்சு அதிர்ச்சியானலும், மேற்கொண்டு மெர்சிலாவாம அவருடைய ரிவர்ஸ் கிக்கினால் ஒரு 100 ஏலியன்ஸையும், மூஞ்சிய க்ளோஸப்ல காமிச்சு ஒரு 1000 ஏலியன்ஸையும், தேசபக்தி உபதேசத்தால ஒரு 10,000 ஏலியன்ஸையும் சாவடிக்கிறாரு. அவர் பேசிக்கிட்டிருக்கும்போது இரண்டு ஏலியன்ஸ் அவர பின்மண்டைல அடிச்சு ஒரு ஜெயில்ல அடைச்சு வக்கிறாங்க. அந்த ஜெயிலுக்கு கதவு கிடையாது. ஆனா வெளியே போகவோ, உள்ளே வரவோ முயற்சி செஞ்சா ஷாக்கடிச்சு சாவாங்க (Technology has improved so much u know).

அம்பிகா மண்ணரசு திரும்பி வருவாருன்னு காத்துக்கிட்டிருக்காங்க. வருஷங்கள் உருண்டோடுகின்றன. விண்ணரசு பெரிய்ய்ய்ய ஆளாகிறார். "அப்பா எங்கம்மா?" என அவரின் கேள்விக்கு அம்பிகா நடந்தவற்றை கூற தன் தந்தையை தேடி நாஸா செல்கிறார் (குருவில விஜய் மலேஷியா போவாரே. அது மாதிரி). ரகுவரனிடம் சென்று தந்தையை மீட்டு வர தன்னை செவ்வாய்க்கு அனுப்புமாறு கேட்க ரகுவரன் மறுத்துவிடுகிறார். ரகுவரனின் புது செகரட்ரியான ஜெ.லோ விண்ணரசுவின் அழகில் மயங்கி (வடிவேலு ஸ்டைலில் அல்ல), தன் பாஸ் தான் வில்லன் என்ற உண்மையை அவரிடம் சொல்கிறார். சினங்கொண்ட விண்ணரசு கண்கள் சிவக்க, கன்னத்து சதை துடிக்க தாயிடன் தானே செவ்வாய் கிரகத்துக்கு சென்று அப்பாவை கூட்டிவருகிறேன் என சபதம் செய்கிறார். செவ்வாய் கிரகத்துக்கு போவதற்கான ஏற்பாடுகளை செய்ய ஆரம்பிக்கிறார். ஹெல்ப் பண்ண ஜெ.லோவும் வர்றாங்க. இப்ப ஒரு டூயட் சாங். "காதல் ஆராரோ"ன்னு நரசிம்மா படத்துல ரொமான்ஸ் பண்ணுவாரே அந்த மாதிரி ஒரு பாட்டு. கண்டிப்பா நாக்க மடிச்சு ஆடற சீன் உண்டு. பாட்டு முடிஞ்சவுடனே ஒரு ராக்கெட்ட காட்றோம். கேப்டன் அத எப்படி செஞ்சாருங்கறதையும் காட்றோம். அவங்க அப்பா தீபாவளிக்கு வாங்கிக் கொடுத்த பட்டாசில் இருக்கும் வெடி மருந்தெல்லாம் சேர்த்து வச்சு ராக்கெட் பண்றாரு (எப்பூடி).

விண்ணரசு ஜெ.லோவுடன் செவ்வாய் கிரகத்துக்கு போறாரு. அங்க இறங்கி யார் கண்ணுலயும் படாம ராக்கெட்ட ஒளிச்சு வெக்கிறாரு. அப்படியே ஒரு ஏலியன ஃபாலோ பண்ணி அப்பாவை அடைச்சு வச்சிருக்க ஜெயில கண்டுபிடிக்கிறாரு. மண்ணரசு ஜெயில் கதவ பத்தின மேட்டர சொன்னதும் விண்ணரசு அலட்டிக்காம அந்த ஜெயில் சுவற்றை ரெண்டு கையாலையும் பிடிச்சு உடம்ப ஷேக் பண்றாரு. கேப்டன் உடம்புல பாயற மின்சாரம் ஷார்ட் சர்க்யூட் ஆகி, மண்ணரசு தப்பிச்சிடறாரு. ரெண்டு பேரும் சேர்ந்து செவ்வாய் கிரகத்துல எல்லா இடத்திலயும் பாம் வைக்கிறாங்க. அது வரைக்கும் ஏலியன்ஸ் என்ன பண்ணாங்கன்னு யாரும் கேக்கக்கூடாதுல்ல. அதனால அப்ப ஜெ.லோவோட அயிட்டம் நம்பர் ஒன்னு இருக்கு (லாஜிக் மிக முக்கியம் அமைச்சரே). ஏலியன்ஸ் தாங்கள் முட்டாளக்கப்பட்டதை உணருவதற்குள் மூவரும் ராக்கெட் ஏறி தப்பிக்கிறாங்க. செவ்வாய் கிரகமும் வெடித்து சிதறுகிறது.

மண்ணரசு நேரா யு.எஸ் பிரசிடெண்ட் கிட்ட ரகுவரனப் பத்தி சொல்லி அவருக்கு தண்டனை வாங்கி கொடுக்கிறாரு. விண்ணரசு நாசாவோட புது தலைவராகறாரு. And they lived happily forever:)

37 comments:

S.A. நவாஸுதீன் said...

செமையா இருக்குங்க வித்யா.

Unknown said...

I am new to blogging world.

I think you wrote this in english long back.

Anyway thanks for the transalation.


Regards,
Priyan

butterfly Surya said...

hahaha...

ரசித்தேன்..

சென்ஷி said...

//(ஸ்பேஸ் டார்க்கா இருக்கும்ல. லாஜிக் இல்லன்னு யாரும் சொல்லிடக்கூடாது பாருங்க) //

LOL

:-))

ரசித்து சிரித்தேன்..

chandru / RVC said...

u got good flow. நல்லா இருக்குங்க. நீங்க ஏன் இந்த கதையை கோடம்பாக்கத்துல உலாவவிடக்கூடாது? !!!!!! :)

ᾋƈђἷłłἔṩ/அக்கில்லீஸ் said...

செம காமெடி.. :))

Truth said...

கொய்யாலே! :-) சிரிச்சு மாளலேங்க.
நேத்து நான் ஒரு கதை எழுத ஆரம்பிச்சேன். எல்லோருக்கும் தெரிந்த கதை தான். எழுதி முடிச்சுட்டு ஒன்னா பப்லிஷ் பண்றேன்.

இன்னும் சிரிச்சுகிட்டு தாங்க இருக்கேன். :))

கார்ல்ஸ்பெர்க் said...

//கதையும் வெயிட்டு, கேப்டனும் வெயிட்டு. அடுத்த கட்டதுக்கு நகர்த்த முடியாதுல்ல.//

//அவருடைய ரிவர்ஸ் கிக்கினால் ஒரு 100 ஏலியன்ஸையும், மூஞ்சிய க்ளோஸப்ல காமிச்சு ஒரு 1000 ஏலியன்ஸையும், தேசபக்தி உபதேசத்தால ஒரு 10,000 ஏலியன்ஸையும் சாவடிக்கிறாரு.//

- வாய்ப்பே இல்லங்க.. செம காமெடி.. :)

//கண்கள் சிவக்க, கன்னத்து சதை துடிக்க//

- :))

//குருவில விஜய் மலேஷியா போவாரே. அது மாதிரி//

- இது மட்டும் தான் கொஞ்சம் ஓவர்..

//படம் பார்க்குறவங்களும் கண்டிப்பா அழுவாங்க//

- இந்தக் கதைய படிச்சதுக்கே அழுகையா வருதே :(

//And they lived happily forever//

- But what about us??? :)

விக்னேஷ்வரி said...

உங்க மொத்த லாஜிக்சையும் படிச்சு வாய் வலிக்க சிரிச்சேன். ச்சே, இதை விட பிரமாதமான ஸ்க்ரிப்ட்டை கேப்டனுக்கு யார் குடுக்க முடியும்... கலக்குறீங்க வித்யா. :)

Unknown said...

கலக்கல்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்

Vidhya Chandrasekaran said...

நன்றி நவாஸுதீன்.
நன்றி பிரியன் (நல்ல ஞாபக சக்தி. தங்லீஷ்ல எழுதினது).
நன்றி சூர்யா.
நன்றி சென்ஷி.
நன்றி RVC.

Vidhya Chandrasekaran said...

நன்றி அக்கிலீஸ்.
நன்றி கார்ல்ஸ்பெர்க்.
நன்றி ட்ருத்.
நன்றி விக்கி.
நன்றி ராஜா.

நர்சிம் said...

நல்லா எழுதி இருக்கீங்க.

Rajalakshmi Pakkirisamy said...

ha ha ha... en ippidi?

க.பாலாசி said...

கதையில் இழைந்தோடும் நகைச்சுவை அருமை....கதையின் ஓட்டமும் நல்லாருக்கு....

இருங்க எங்க கேப்டன்ட சொல்லி உங்க மேல கேஸ் போட சொல்றேன்...

ILA (a) இளா said...

கலக்கல்ஸ்

Unknown said...

super super super

Unknown said...

super super super

Anonymous said...

ஹி..ஹி..ஹி..



அன்புடன்,

அம்மு.

கவிதா | Kavitha said...

வித்யா... எப்பூடீஈஈ..இப்பூடீஈஈஈஈ... முடியல... !! :)))))))))

pudugaithendral said...

:)

Vidhya Chandrasekaran said...

நன்றி நர்சிம்.
நன்றி இராஜலெட்சுமி.
நன்றி பாலாஜி.
நன்றி இளா.
நன்றி ராம்.
நன்றி அம்மு.
நன்றி கவிதா.
நன்றி அக்கா.

☀நான் ஆதவன்☀ said...

அடைப்பு குறியில இருக்குற எல்லாமே டாப்பு :)

தராசு said...

நல்ல நகைச்சுவை

பின்னோக்கி said...

ஏன் இப்படி எல்லாரையும் ஏமாத்துறீங்க ?

உங்களுக்கே நியாயமா இருக்கா ?

கேப்டனோட அடுத்த பட ஸ்கிரிப்ட்ட திருடி பதிவா மாத்திட்டிங்களே..

கேப்டன் உங்களை மன்னிக்க மாட்டார்.. :)

"உழவன்" "Uzhavan" said...

//மூஞ்சிய க்ளோஸப்ல காமிச்சு ஒரு 1000 ஏலியன்ஸையும்//
 
முடியல.. :-)))

Vidhya Chandrasekaran said...

நன்றி ஆதவன்.
நன்றி தராசு.
நன்றி பின்னோக்கி.
நன்றி உழவன்.

எனதுகுரல் said...

அக்கா நல்லா இருப்பீங்க கதைய வெளிய சொல்லிராதீங்க. அப்புறம் காப்டனோட அடுத்த படம்னு கதை வசனம்னு உங்க பேர போட்ருவாங்க [:)] .அப்புறம் வீடு தேடி வந்துடபோறாங்க. ஏற்கனவே அவரு அடுத்தபடம் டைரக்ட் பண்றாரு . என்ன நடக்கபோகுதோ தெரியல .ஒருவேளை அதுவும் உங்க கதை தானோ...

அரசூரான் said...

கதைல செம லாஜிக் & கண்டினியுட்டிங்க, தீவாளிக்கு லாரி லாரியா வெடி... அந்த வெடி மருந்த வெச்சி ராக்கெட்... ஸ்... எனக்கு இப்பவே கண்ண கட்டுதே... அருமைங்க... நல்ல வேலை தீவாளிக்குள்ள படத்த... ஹி...ஹி... பதிவ ரிலீஸ் பண்ணிட்டீங்க

முரளிகண்ணன் said...

:-)))))

கார்த்தி said...

'NASA'ma poachu... Gabutan Naalaiya Kuthalvar aana neenga thaan first target..hmmmmm

Vidhya Chandrasekaran said...

நன்றி எனதுகுரல்.
நன்றி அரசூரான்.
நன்றி முரளிகண்ணன்.
நன்றி கார்த்தி.

Thamira said...

மேற்கொண்டு மெர்சிலாவாம அவருடைய ரிவர்ஸ் கிக்கினால் ஒரு 100 ஏலியன்ஸையும், மூஞ்சிய க்ளோஸப்ல காமிச்சு ஒரு 1000 ஏலியன்ஸையும், தேசபக்தி உபதேசத்தால ஒரு 10,000 ஏலியன்ஸையும் சாவடிக்கிறாரு.

//இன்னும் சிரிச்சுக்கிட்டு இருக்கேன்.

அப்படியே விஜய்க்கு ஒரு கதை ரெடி பண்ணுங்களேன்.

ஷாகுல் said...

//ஆனா வெளியே போகவோ, உள்ளே வரவோ முயற்சி செஞ்சா ஷாக்கடிச்சு சாவாங்க//

கரண்டுக்கே கரண்ட் ஷாக்கா ம்

Super

நாஸியா said...

ஐ! செம்ம காமெடி..

Vidhya Chandrasekaran said...

நன்றி ஆதி.
நன்றி ஷாகுல்.
நன்றி நாஸியா.

மணிப்பயல் said...

//ரிவர்ஸ் கிக்கினால் ஒரு 100 ஏலியன்ஸையும், மூஞ்சிய க்ளோஸப்ல காமிச்சு ஒரு 1000 ஏலியன்ஸையும், தேசபக்தி உபதேசத்தால ஒரு 10,000 ஏலியன்ஸையும் சாவடிக்கிறாரு.//


இப்படி எழுதி எங்க தலைவரை கிண்டலடித்த உங்களை வன்மையாக பாராட்டுகிறோம்.

இப்படிக்கு : தே.மூ.தி.க மாவாட்ட செயலாளர் மணிப்பயல்.

(தே.மூ.தி.க - தேங்காய் மூடி திருடி கடிப்போர் சங்கம்).