October 23, 2009

தப்பாத தாளங்கள்

தப்பின் தாளத்துக்கு தப்பாமல் ஆடுபவனுக்கு
தீச்சட்டி தூக்குபவனின் இழப்பு வலி தெரியுமா??



சாலை விபத்தில் இறந்தவனின்
சவ ஊர்வலத்தில்
வாரி இறைக்கப்பட்ட
பூக்களும்
செத்துக்கொண்டிருந்தன
அதே சாலை விபத்தில்..



டிஸ்கி 1: திட்றதுக்கு முன்னால லேபிள பார்த்துடுங்க.
டிஸ்கி 2: லேபிள பார்த்தப்புறமும் யாராச்சும் திட்டினீங்கன்னா அடுத்த இடுகையும் கவுஜயே எழுதுவேன். பீ கேர்புல்.

12 comments:

Unknown said...

கலக்குரீங்க போங்க.. ஆனா கவிதை தான் எங்கயோ படிச்சா மாதிரி இருக்கு.
ஜூனியர் பத்தி கொஞ்சம் எழுதுங்களேன்..
அது தான் நல்ல இருக்கு.

பிரியன்

Anonymous said...

இன்னைக்கு ராசி பலனில் சோதனையை சந்திப்பீர்கள்ன்னு இருந்தது. இப்ப நம்பறேன். லாகூர் :)

பின்னோக்கி said...

//தீச்சட்டி தூக்குபவனின் இழப்பு

:((

Truth said...

நல்லா இருக்குங்க. எதுக்கு அந்த டிஸ்கிகள்?

மணிகண்டன் said...

***
தப்பின் தாளத்துக்கு தப்பாமல் ஆடுபவனுக்கு தீச்சட்டி தூக்குபவனின் இழப்பு வலி தெரியுமா?
***

இது எந்த வித கவுஜை / கவிதையுலும் வராது :)- அடுத்தப்பதிவில் மறுபடியும் முயற்சி செய்யுங்கள்.
நானும் கூட :)-

ரெண்டாவது - ஆரம்பமும்/முடிவும் ஒரே வார்த்தை..அதுனால கவுஜை தான் :)-

நேசமித்ரன் said...

மிக நல்ல வரிகளைக் கொண்ட கவிதைகள்
யாரும் கேலி செய்து விடுவார்களோ என்ற தயக்கம் உங்களை டிஸ்கியில் அப்படி கூற வைத்திருக்கலாம் எந்த தயக்கம் விட்டு இது போன்ற நல்ல கவிதைகளை தொடர்ந்து எழுதவும்

Rajalakshmi Pakkirisamy said...

//திட்றதுக்கு முன்னால லேபிள பார்த்துடுங்க.//

Paarthachu...

Aiyayo ivangalum aarambichitaangala...

Raghu said...

வாவ்! அருமை!! சூப்ப‌ர்!!! எக்ஸ‌ல‌ண்ட்!!!!

திட்ட‌ல‌, பாராட்டியாச்சு (வேற‌ வ‌ழி? டிஸ்கி 2 மெர‌ட்ட‌லா இருக்கே!), சோ நீங்க‌ளும் உங்க‌ வாக்கை (நீங்க‌ நாட்டாமை ப‌ர‌ம்ப‌ரையா இல்லாட்டாலும்) காப்பாத்த‌ணும்

R.Gopi said...

//சாலை விபத்தில் இறந்தவனின்
சவ ஊர்வலத்தில்
வாரி இறைக்கப்பட்ட
பூக்களும்
செத்துக்கொண்டிருந்தன
அதே சாலை விபத்தில்..//

அட்ட‌காச‌ம் வித்யா...

எப்டியெல்லாம் யோசிக்க‌றாய்ங்க‌ப்பா... ய‌ப்பா....

ப‌ட‌ம் அதைவிட‌ ப‌ட்டைய‌ கெள‌ப்புது...

Vidhya Chandrasekaran said...

நன்றி பிரியன்.

நன்றி மயில் (கிண்டல் பண்ணீட்டீங்கல்ல. அடுத்தத இன்னும் டெரரா எழுதறேன்).

நன்றி பின்னோக்கி.
நன்றி ட்ரூத் (கிர்ர்ர்ர்ர்)
நன்றி மணிகண்டன் (நெக்ஸ்ட் கவுஜல மீட் பண்றேன்)

Vidhya Chandrasekaran said...

நன்றி நேசமித்ரன் (வேணாம்.அவ்வ்வ்வ்வ்வ்)

நன்றி இராஜலெட்சுமி.

நன்றி குறும்பன் (பாராட்டினா எழுத மாட்டேன்னு நான் சொல்லவேயில்லையே).

நன்றி கோபி.

Thamira said...

இரண்டாவது கவிதை உண்மையில் நல்லாயிருந்தது. முதல் கவிதை புரியலை. புரியாத கவிதை எழுதினதால நீங்களும் பின்நவீனக்கவிஞரா என்பது தெரியவில்லை.!