February 22, 2010

ரத்தக் கறை

பரந்து விரிந்து கிளை பரப்பிய ஆலமரத்தை கவுத்து வைத்தால் எப்படியிருக்கும்? அப்படி இருந்தது அந்த மெழுகுவர்த்தி. உருக்குலைந்து, உயரம் குறைந்து, உடம்பு பெருத்து, அகல் விளக்கில் நிற்கவைக்கப்பட்டிருந்த மெழுகுவர்த்தி தன்னால் இயன்றளவு வெளிச்சத்தை கொடுத்துக் கொண்டிருந்தது. அந்த மெல்லிய வெளிச்சத்திலும் அவள் உடல் எனக்குத் தெரிந்தது. தெளிவாய். சமீபத்தில் தான் உயிரை விட்டிருந்தால். என்னால். ஆம் நான் தான் அவளைக் கொன்றேன். இதோ என் கைகளில் இன்னும் உலர ஆரம்பிக்காத ரத்தம். அடர்சிவப்பு ரத்தம். கறைபடிந்த என் கரத்தையே பார்த்துக்கொண்டிருந்தேன். நான் செய்தது சரியா தவறா என்ற விவாதத்தை என் மனமும் மூளையும் ஆரம்பிக்கவில்லை. இன்னும் இல்லை. ஏனென்றால் இப்பொழுதுதான் அவளைக் கொன்றேன்.


எந்த சலனமும் இல்லாமல் அவள் உடலைப் பார்த்தேன். ப்ச். அநியாயமாய் உயிரை விட்டிருந்தாள். திரும்பவும் என் கைகளைப் பார்த்தேன். ரத்தம் மெதுவாய் உலர ஆரம்பித்திருந்தது. அங்கங்கே கொஞ்சம் கருஞ்சிவப்பாய் மாற ஆரம்பித்தது. இவள் ரத்தம் எந்த குரூப்பாய் இருக்கும். தெரியவில்லை. தெரிந்துகொள்வதிலும் ஆர்வமில்லை. ஒன்று மட்டும் நிச்சயமாய் தெரியும். இந்த ரத்தம் உழைப்பை உறிஞ்சி எடுத்த ரத்தம். உடல் கிழித்து வெளியேற்றப்பட வேண்டிய ரத்தம். அசுத்தமான ரத்தம்.

அவள் குடும்பத்தைப் பத்தி நினைத்தேன். எத்தனைப் பேர் இவளை நம்பியிருப்பார்கள்? அம்மா, அப்பா, அண்ணா, தம்பி என யாராவது? கல்யாணம் ஆனவளா? குழந்தை இருக்குமா? அவளுடம்பில் எந்த அடையாளமும் இல்லை. இவள் வீடு திரும்புவாள் என எத்தனைப் பேர் எதிர்பார்த்து காத்திருக்கின்றனரோ? இன்று வரவில்லையென அச்சம் கொள்வனரோ? இனி வரவேமாட்டாள் எனத் தெரிந்தால் அவர்கள் என்ன ஆவார்கள்? எப்படி நடந்துக்கொள்வார்கள்? சர்வ நிச்சயமாய் எனக்குத் தெரியாது. கொன்றது நானெனத் தெரிந்தால் என்னை சபிப்பார்களோ? என் மீது வன்மம் கொண்டு என் உயிரெடுக்க முயற்சிப்பார்களோ? பழிக்குப் பழி? தெரியவில்லை.

அவளின் இறப்பிற்கு நான் காரணமாவேனா? இல்லவே இல்லை. அவளேதான் காரணம். ஆம். அவளேதான். எனக்கு அவளைப் ஆரம்பத்திலிருந்தே பிடிக்கவில்லை. என்னையே சுற்றி சுற்றி வந்தாள். அலட்சியம் செய்தேன். விடவில்லை. ஒரு கட்டத்தில் எரிச்சல் கோபமாய் மாறியது. விளைவு என் கண் முன் கிடக்கிறது அவளது உடல். ரொம்ப மூர்க்கத்தனமாய் நடந்துகொண்டேனோ எனத் தோன்றுகிறது. ம்ம்ம். கோபத்தைக் கட்டுப்படுத்தியிருக்கலாம். ப்ச். முடிந்துவிட்டது. இனி நடக்கவேண்டியதை மட்டுமே யோசிக்கனும். இந்த உடலை என்ன செய்வது? தெரியவில்லை. எப்படி டிஸ்போஸ் செய்வது? தெரியவில்லை. கூறு போட்டு மூலைக்கொன்றாய் வீசிவிடலாமா? நினைக்கும்போதே குமட்டிக் கொண்டு வந்தது. சகல மரியாதையுடன், தப்படித்து நாக்கை மடித்து ஆடிக்கொண்டு இவளை இடுகாட்டில் எரிக்கவோ புதைக்கவோ முடியுமா? முடியவே முடியாது. எனினும் அப்படி நடந்தால்? நினைத்துப் பார்த்தேன். சிரிப்பு வந்தது. ஒரு கொலையை செய்துவிட்டு கவலையேப் படாமல் சிரித்துக்கொண்டிருக்க என்னால் தான் முடியும்.

மறுபடியும் கைகளைப் பார்த்தேன். ரத்தம் சுத்தமாய் உலர்ந்திருந்தது. மெதுவாய்ச் சுரண்டினேன். உதிர்ந்தது. மறுபடியும் சுரண்ட மீண்டும் கொஞ்சம் அடையாய் உதிர்ந்தது. சிறிது நேரம் விளையாடிக்கொண்டிருந்தேன் அவள் ரத்தத்துடன். தீடிரென அருவெறுப்பாய் உணர்ந்தேன். உடம்பெல்லாம் ஏதோ ஊர்வது போலிருந்தது. குளித்துவிடலாம் என முடிவு செய்தேன். குளித்தால் அழுக்குப் போகும். ஆனால் நான் செய்த பாவம்? ஒரு உயிரை எடுத்திருக்கிறேன். யார் தந்தது இந்த உரிமையை? ஆனால் அவள் செய்தது நியாயமாகுமா? அவள் என் உரிமையில் தலையிடப் பார்த்தாளே.

இப்படியே எவ்வளவு நேரம் யோசித்துக் கொண்டிருப்பது? தெரியவில்லை.
நான் செய்தது சரியா தவறா? தெரியவில்லை.
இவள் உடலை என்ன செய்ய வேண்டும். தெரியவில்லை?

மெல்லிய ஆரஞ்சு வெளிச்சத்தில் அவளின் உயிரற்ற உடல் நன்று தெரிந்தது...

சிறிது நேரம் கண்களை மூடிக்கொண்டு அமர்ந்திருந்தேன். எதைப் பற்றியும் நினைக்காமல். நினைக்கப் பிடிக்காமல். ஆனால் நினைக்காமலிருக்க முடியவில்லை. பலத்த சப்தத்துடன் அவள் வாங்கிய அடி. வலியால் கத்தக் கூட நேரமின்றி அவள் உயிரைவிட்ட அந்த நொடி. அவளிடத்தில் நானிருந்திருந்தால்?? நினைத்தவுடனேயே உடம்பு உதறியது. தலையைப் பிடித்துக்கொண்டு அமர்ந்தேன். மெல்லிய சத்தத்துடன் மின்சாரம் வந்தது. பெருத்த சப்தத்துடன் சுழலத் தொடங்கிய மின்விசிறி மெழுகுவர்த்தியின் வெளிச்சத்தை அணைத்தது. அவளுடனே அவள் நினைவுகளும் பறந்துப்போனது.

24 comments:

Rajalakshmi Pakkirisamy said...

Where s Vidhya? I thought vidhya writes only Comedy posts :)

Rajalakshmi Pakkirisamy said...

Sorry.. first time i missed to see the lable :)

Anonymous said...

பின்நவீனத்துவவாதி ஆகறதுன்னு முடிவு பண்ணிட்டீங்க

எறும்பு said...

:))
nallathu..

ஹுஸைனம்மா said...

பாதிலேயே புரிஞ்சுடுச்சு. ஆனாலும் ஏங்க எங்கமேல ஏங்க இந்த கொலவெறி? நாங்க உங்களை கடிக்கவே இல்லியே?

Vidhya Chandrasekaran said...

நன்றி ராஜி (முழுசா படிக்கனும் சரியா).

நன்றி அம்மிணி (நோஓஓ. போன பதிவோட தலைப்ப ஞாபகப்படுத்திக்கோங்க).

நன்றி எறும்பு.

நன்றி ஹுஸைனம்மா.

Raghu said...

ரெண்டு த‌ட‌வை ப‌டிச்ச‌துக்க‌ப்புற‌ம்தான் புரிஞ்சுது. அப்ப‌டின்னா இது க‌ண்டிப்பா பின்ந‌வீன‌.......ஓகே ஓகே, அடுத்த‌ எழுத்தாள‌ர் ரெடி, ஸ்டார்ட் மியூஜிக்:))

மங்குனி அமைச்சர் said...

மேடம் அருமையான சிந்தனை.
உங்க எழுத்த பார்த்து கொஞ்சம் யோசிட்டே கமெண்ட்ஸ் வந்தா பார்த்த பர்ஸ்ட் கமன்ட்லையே

//(Where s Vidhya? I thought vidhya writes only Comedy posts :))//

நீங்க நம்ம குரூப்ன்னு தெரிஞ்சுட்டேன். இன்னும் உன்ங்க ப்ளாக் புல்லா படிக்கல, இனி படிக்க ஆரம்பிக்க வேண்டியதுதான்

Unknown said...

நல்லவேளை, ”புத்தகத்தை மூடினேன், வியர்த்திருந்தது”ன்னு முடிக்கல :-)

Unknown said...

உங்க ஏரியால ஃபேன் ஓடலைன்னா ஒரே ஒரு கொசு தான் வருமா?

Thamira said...

கொலவெறிக் கவுஜைதான் கேள்விப்பட்டிருக்கோம். இதென்ன புதுமாடல் கொலவெறிக்கத.!

ப்ரியமுடன் வசந்த் said...

//சகல மரியாதையுடன், தப்படித்து நாக்கை மடித்து ஆடிக்கொண்டு இவளை இடுகாட்டில் எரிக்கவோ புதைக்கவோ முடியுமா? முடியவே முடியாது. எனினும் அப்படி நடந்தால்? நினைத்துப் பார்த்தேன். சிரிப்பு வந்தது//

எனக்கும்தான் அது ஒரு ஈஆகவோ இல்லை மஸ்க்யூட்டோவாகவோ நினைத்ததால்....

சூப்பர்ப் ரைட்டிங்...

Vidhya Chandrasekaran said...

நன்றி ரகு.
நன்றி அமைச்சர்.

நன்றி கேவிஆர் (ஒரு கொசுவுக்கே இப்படியான்னு கேக்கனும்)

நன்றி ஆதி (புது ட்ரெண்ட். பேடண்ட் அப்ளை பண்ணிருக்கேன்).

நன்றி வசந்த்.

Unknown said...

ஒரே ஒருத்திய கொலப் பண்ணிட்டு இவ்ளோ ஃபீலிங்க்ல இருந்திங்களே. வேற யாரும் வரலையான்னு லாஜிக்கலா யோசிச்சேன் :-).

இரத்தம் குடிப்பவர்கள் பெண்களாம் ;-) - விக்கிபீடியா சொல்லுது

T.V.ராதாகிருஷ்ணன் said...

:-)))

Chitra said...

தீடிரென அருவெறுப்பாய் உணர்ந்தேன். உடம்பெல்லாம் ஏதோ ஊர்வது போலிருந்தது. குளித்துவிடலாம் என முடிவு செய்தேன். குளித்தால் அழுக்குப் போகும். ஆனால் நான் செய்த பாவம்?


............வித்யா.......... கதை சொல்லிய விதம், நல்லா இருக்கு.

Rajalakshmi Pakkirisamy said...

//உங்க எழுத்த பார்த்து கொஞ்சம் யோசிட்டே கமெண்ட்ஸ் வந்தா பார்த்த பர்ஸ்ட் கமன்ட்லையே

//(Where s Vidhya? I thought vidhya writes only Comedy posts :))//

நீங்க நம்ம குரூப்ன்னு தெரிஞ்சுட்டேன். இன்னும் உன்ங்க ப்ளாக் புல்லா படிக்கல, இனி படிக்க ஆரம்பிக்க வேண்டியதுதான்//

hello mam, send me my share (Only in dollars not in rupees)

Vidhoosh said...

ஒரு கொசுவ அடிச்சதுக்கே இவ்ளோ பீலீங்க்ஸ் ஆப் இந்தியாவா.. .


///சின்ன அம்மிணி said...

பின்நவீனத்துவவாதி ஆகறதுன்னு முடிவு பண்ணிட்டீங்க///

இவர் புண்நவீனத்துவ-வியாதிங்க.. :))

☀நான் ஆதவன்☀ said...

கொசுவா? அவ்வ்வ்வ்

இந்த கொசுத்தொல்லை தாங்கமுடியல்டா நாராயரணா :)))))

"உழவன்" "Uzhavan" said...

ஏதோ ப்ளான் பண்ணியிருக்கீங்க. அது என்னனுதான் தெரியல :-)

Vidhya Chandrasekaran said...

மீள் வருகைக்கு நன்றி கேவிஆர்.

நன்றி சித்ரா.
நன்றி டிவிஆர் சார்.

நன்றி ராஜி (முருகன் டாலரா?பிள்ளையார் டாலரா?).

நன்றி விதூஷ் (நடத்துங்க).

நன்றி நான் ஆதவன்.
நன்றி உழவன்.

மங்குனி அமைச்சர் said...

//Rajalakshmi Pakkirisamy said...
உங்க எழுத்த பார்த்து கொஞ்சம் யோசிட்டே கமெண்ட்ஸ் வந்தா பார்த்த பர்ஸ்ட் கமன்ட்லையே

//(Where s Vidhya? I thought vidhya writes only Comedy posts :))//

நீங்க நம்ம குரூப்ன்னு தெரிஞ்சுட்டேன். இன்னும் உன்ங்க ப்ளாக் புல்லா படிக்கல, இனி படிக்க ஆரம்பிக்க வேண்டியதுதான்//

hello mam, send me my share (Only in dollars not in rupees)//

சரி சரி என் பங்க கரக்டா என் அக்கௌன்ட்-ல போட்ருங்க (நீங்க சொல்லித்தான் நான் அப்படி எளிதினேன்னு யார்டையும் சொல்லமாட்டேன் )

விக்னேஷ்வரி said...

செல்லம், என்னம்மா என்னாச்சு. சென்னைல வெயில் அதிகமாகிடுச்சா....

Vidhya Chandrasekaran said...

மீள் வருகைக்கு நன்றி அமைச்சர்.

நன்றி விக்கி (இல்ல ராசாத்தி. இன்னும் ஆரம்பிக்கவேயில்லை)