March 24, 2010

பஸ் நம்பர் 1

பள்ளி, கல்லூரி, அலுவலகம் என மூன்று கட்டங்களில் பேருந்து என்பது எனக்கு தவிர்க்க இயலாத ஒரு விஷயமாகவே இருந்தது. எந்தக் காலத்திலும் பேருந்து பயணத்தில் காதல் வயப்படவில்லை (சத்தியமா. நம்புங்க). பள்ளியின் போது பொறுப்பான ரெப்ரசெண்டேடிவாய் ஜூனியர்களை ஒழுங்குப்படுத்தி அமர வைப்பது, யாரும் கூச்சலிடாமல் பார்த்துக்கொள்வது என பல வேலைகள். பொறுப்பு நம்மிடமிருக்கும்போது நாமளே அடாவடித்தனம் செய்யலாமா (க.க.க)? அதனால் சேட்டைகளை மூட்டைக்கட்டி வைத்துவிட்டு நல்ல பெண்ணாய் நடித்துக்கொண்டிருந்தேன். பற்றாக்குறைக்கு பள்ளி ஆசிரியர்கள் வேறு உடன் வருவார்கள். அதனால் நோ சேட்டை.

காலேஜுக்கு 45 நிமிட பேருந்து பயணம். அதுவும் நான் படித்த காலேஜ் டைமிங் 7.30 முதல் 3 மணி வரை. சரியாக 5.45 மணிக்கு காலேஜ் பஸ் வந்துவிடும். வீட்டிலிருந்து பத்து நிமிடங்கள் நடக்கனும் ஸ்டாப்பிங்குக்கு. நாய்த் தொல்லை வேற (நிஜமான நாலு கால் நாய்). இது வேலைக்காகது. பொண்ணு கஷ்டப்படக்கூடாதுன்னு வீட்டை/ஊரை மாற்றினார் அப்பா. 5 கி.மீ தள்ளி ராணிப்பேட்டைக்கு குடிபோனோம் இங்கு வீட்டை விட்டு இறங்கி நடந்தால் பஸ் ஸ்டாப். 6 மணிக்கு பஸ் வரும். வீடு மாறியும் காலைல சீக்கிரம் எழுந்திருக்கனும்ங்கற என்னோட கஷ்டத்தை யாருமே புரிஞ்சுக்கல. எங்கள் பஸ் நம்பர் 1. வாலாஜாவில் ஆரம்பிக்கும் வண்டி, ஆற்காடு, ராணிப்பேட்டை, பாரதி நகர், சிப்காட், BHEL என காட்பாடி போய் சேர முக்கால் மணி நேரமாகும். ஆரம்பத்தில் பெண்கள் ஒரு கேங்காகவும், பசங்க ஒரு கேங்காகவும் இருந்தோம். இதில் சீனியர்ஸ் வேறு. கொஞ்ச நாட்கள் ராகிங் இருந்தது. பாட்டு பாடு, அந்தப் பையன் பேர் கேட்டுட்டு வா, ட்ரைவர் கிட்ட போய் பாட்ட மாத்த சொல்லுன்னு. அப்புறம் அவங்க வேலையப் பார்க்க ஆரம்பிச்சிட்டாங்க. அந்தாண்டு தான் நிகர்நிலை அந்தஸ்து பெற்றிருந்ததாலும், கல்லூரியிலிருந்து தூரம் அதிகமென்பதாலும் பஸ்சில் ஆட்கள் மிகக் குறைவு. இருந்தாலும் பஸ்சின் கடைசி இருக்கைகளை ஆக்கிரமிப்பதில் பாய்ஸுக்கும் கேர்ள்சுக்கும் கடும் போட்டி இருந்தது. அங்கிருந்துதானே அனைவரையும் கண்கானிக்க???!! முடியும். பஸ்ஸில் வரும் ஒரு சீனியர் ஜோடி பயங்கர லவ்ஸில் இருந்தார்கள். ஒரு த்ரீ சீட்டர அண்ணன் ஆக்குபய் பண்ணிடுவாரு. அக்கா ஏறி நேரா அந்த சீட்டுக்கு போய்டுவாங்க. கைய கோர்த்துகிட்டு உட்கார்ந்துகிட்டே இருப்பாங்க. ஒரு வார்த்தை பேசனுமே. உஹூம். கண்ணு மட்டும் அங்க இங்க நகராது. இதுல சில சமயம் சிச்சுவேஷன் சாங் வேற ஒடும் பஸ்ஸுல. 'கண்ணாலே காதல் கடிதம் சொன்னாலே எனக்காக'ன்னு. நாங்க எல்லாம் ஹேன்னு கத்துனா அந்தக்கா ரொம்ப வெட்கப்பட்டுகிட்டே மூஞ்ச மூடிப்பாங்க. ஆரம்பத்தில் அவங்க என்ன பண்றாங்க என நோட்டம் விடுவதற்காகவே பின்னாலிருந்து எழுந்து போய் ட்ரைவர் தாத்தாவிடம் பாட்டை மாற்ற சொல்லிவிட்டு வருவோம். 'ஹே கையக் கோத்துக்கிட்டிருக்காங்கப்பா. தோள்ல சாஞ்சிகிட்டிருக்காங்கப்பா' என கமெண்ட்கள் கிடைக்கும்.

பஸ் ட்ரைவர் ரொம்ப வயசானவர். பொறுமையா தான் ஓட்டுவார். க்ளீனர் அண்ணா தான் பாட்டு போடறது, கேசட் ரீவைண்ட் பண்றது எல்லாமே. சரியாக அரை வருடம் ஆனது கேர்ள்ஸ் அண்ட் பாய்ஸ் நட்பு பாராட்ட. தயக்கமென்றில்லை. அது ஏனோ பசங்க வந்து பேசட்டும் என நாங்களும், பொண்ணுங்க பேசட்டும் என பசங்களுன் இருந்துவிட்டோம். இத்தனைக்கும் சிலர் கிளாஸ்மேட்ஸ் வேறு. கிளாசில் பேசிக்கொண்டாலும் பஸ்சில் பேசுவது கிடையாது. பாரதி நகரோடு எங்கள் கேங் மெம்பர்கள் ஏறிவிடுவார்கள். சுகர் மில் ஸ்டாப்பிங்கில் ஏறும் ரேகாவை மட்டும் எங்கள் கேங்கில் சேர்த்துக்கொள்ளவில்லை. அல்லது சங்கத்தில் அவள் சேரவில்லை. முதல் இரண்டரை வருடங்கள் பேருந்து பயணம் சொர்க்கமாய் இருந்தது. மொத்தப் பேருந்துக்கும் 12 பேர்தான். ஆட்டம், பாட்டம் என கலகலப்பாய் இருக்கும். செட் வேலை செய்யாத நாட்களில் அந்தாக்ஷ்ரி நடக்கும். க்ரிஸ் மாம், க்ரிஸ் சைல்ட் போல நாங்கள் பொங்கலுக்கு இந்த விளையாட்டை விளையாடியிருக்கிறோம். இதுவும் எங்கள் நட்பு பாலம் உறுதிபெற உதவியது. சில நாட்களில் அத்தனை பேரும் காரணமேயில்லாமல் அமைதியாய் வருவோம். வாரத்தில் நான்கு முறையாவது பேருந்து ரெயில்வே கேட்டில் சிக்னலுக்கு ஐந்து நிமிடங்களாவது நிற்கும். விடியற்காலை சுத்தமான காற்றும், இளஞ்சிவப்பு நிற வானமும் பார்க்க இதமாய் இருக்கும். சரியாய் கல்லூரியை நெருங்கும்போது சொல்லிவைத்தார் போல் கிட்டத்தட அனைவருக்கும் கொட்டாவி வரும். கல்லூரியில் ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ் படிப்புகளும் ஆரம்பித்த பிறகு பீக் அவர் பீச் ரயில் மாதிரி ஆகிவிட்டது பஸ். ஒரே கும்பல் தான். கடுப்பாகிவிட்டது. எவ்வளவு பேர் ஏறினாலும் கடைசியிலிருக்கும் நான்கைந்து இருக்கைகளை விட்டுத் தருவதேயில்லை. கடைசி வருடம் ப்ராஜெக்ட்டில் பிஸியாக இருந்த சமயம் ஜூனியர்கள் பஸ்சில் பிழிய பிழிய காதலித்துக்கொண்டிருந்தார்கள். அவ்வப்போது கூப்பிட்டு ஓட்டுவோம். அதோடு சரி. கடைசி நாளன்று க்ளீனர் அண்ணாவிற்கு நல்லதாக ட்ரெஸ் எடுத்துக்கொடுத்தோம். அத்துடன் பஸ் நம்பர் 1 உடனான தொடர்பு அறுந்துபோனது. ஆனால் அந்த நட்பு இன்னமும் தொடர்கிறது (சங்கத்தில் ஒருத்தியின் கல்யாணத்துக்கு தான் நாகர்கோவில் சென்றுவந்தோம்). அடுத்தாண்டு வந்தால் பத்து வயதாகிறது எங்கள் நட்புக்கு.

வேலைக்கு செல்கையில் எங்களுக்கு ஒதுக்கப்பட்ட ப்ராஞ்ச் கதீட்ரல் ரோடில் இருந்த ஆபிஸ். மற்ற எல்லா கிளைகளுக்கும் கம்பெனி பேருந்து வசதி உண்டு. இந்தக் கிளையைத் தவிர. ஷட்டில் சர்வீஸ் கூட இல்லை. அப்போது நாங்கள் தங்கியிருந்தது பெசண்ட் நகர். அங்கிருந்து பெரம்பூர்/அயனாவரம் போகும் வண்டிகள் 29Cல் பயணம். டிப்போவில் ஏறுவதால் இடம் கிடைப்பதில் பிரச்சனை இருக்காது. ஆனால் வுட்லேண்ட்ஸில் இறங்குவதற்குள் போதும் போதுமென்றாகிவிடும். சரியாக மியூசிக் அகாடமி வரும்போதே எழுந்து நகர ஆரம்பித்தால் தான் வுட்லேண்ட்ஸில் இறங்க முடியும். எப்பவும் பிதுங்கி வழியும், வெயிலும், வாகனப் புகையும், வியர்வையினால் ஏற்படும் கசகசப்பும், பையை பாதுகாக்க வேண்டிய கட்டாயமும் (ஒரு முறை என் பர்ஸை ஆட்டையப் போட்டுட்டாங்க), இதற்கிடையில் வயதானவர்களுக்கோ/குழந்தையோடு நிற்பவர்களுக்கோ இடம் கொடுக்க வேண்டிய மனிதாபிமானம், பாக்கி சில்லறைக்காக கண்டக்டரை தேடுதல் என இருக்கும்போது காதலிக்க நேரமில்லை. ஆனால் எப்பவாவது அத்திப்பூ பூத்தாற் போல் அழகை ரசிக்கும் தருணங்கள் வாய்க்கப் பெறும். அதுவும் கொஞ்ச நேரம் தான். இறங்க வேண்டிய இடம் வந்துவிடும் இல்லையெனில் ரசித்த அழகு நொடியில் மறைந்துவிடும்

பின்னர் கம்பெனி வோல்வோக்களில் (சில சமயங்களில் ஏசி பஸ்), புஷ் பேக் இருக்கைகளுடன், காலை மடக்கி வைக்க வேண்டிய அவசியமில்லாமல் நீட்டிக்கொண்டு, விருப்பமான இடத்திலமர்ந்துகொண்டு செல்லும் வாய்ப்பு கிடைத்தாலும், காதுக்கு ஐபாட், சுய முன்னேற்ற புத்தகங்களில் தலை புதைந்து, பல சமயங்களில் தூங்கிகொண்டும், அலுவலக நேரத்தில் புடுங்காத ஆணியை பேருந்தில் புடுங்கிக்கொண்டிருக்கும் தோலாலான இயந்திரங்களோடு பயணிப்பது பேரிம்சையாகவே இருந்தது. பஸ் நம்பர் 1 ரூட் நம்பர் 1ஆக மாறினாலும் அந்த நான்கு வருட பேருந்து பயணத்தின் ஹாரன் சத்தம் அடிக்கடி கேட்டுக்கொண்டுதான் இருக்கிறது.

பேருந்து காதல் என தொடர் பதிவிட அழைத்த சங்கவிக்கு நன்றி. காதல் அனுபவம் ஏதுமில்லாததால் பொதுவானவற்றைப் பகிர்ந்துகொண்டேன்.

தொடரை தொடர அழைக்க விரும்புவது

பதிவெழுத நாள் நட்சத்திரம் பார்த்துக்கொண்டிருக்கும்

விக்னேஷ்வரி.
ராஜி.
தாரணி பிரியா.
கேவிஆர்

அழைத்துள்ள நால்வரில் விக்கி மற்றும் ராஜியிடம் மட்டும் தான் டேக் செய்யவா என கேட்டேன். மற்ற இருவர் விருப்பமிருப்பின் தொடருங்கள்.

24 comments:

Rajalakshmi Pakkirisamy said...

okkkkkkkkkkkkk.......

Rajalakshmi Pakkirisamy said...

நாய்த் தொல்லை வேற (நிஜமான நாலு கால் நாய்).//

:)))))))))))))

sathishsangkavi.blogspot.com said...

Hi Me First........

அழைப்பை ஏற்று தொடர்பதிவை எழுதியதற்கு நன்றி வித்யா....

உங்கள் அனுபவம் சுவாரஸ்யமாகவும், இனிமையாகவும் இருந்தது......

Anonymous said...

:))செம கொசுவர்த்தியா இருக்கே :))

Gokul R said...

நல்லா இருந்தது வித்யா ...
இந்த கல்லூரி பேருந்து அனுபவத்தைத்தான் நான் முழுவதுமாக இழந்துவிட்டேன் ... வாய்க்காமலேயே போயிருச்சு ...

இந்த தொடர்பதிவு பிசினெஸ்கெல்லாம் முன்னாடியே இது தொடர்பா நான் ஒரு பதிவு எழுதினேன் ... அது இங்கே ... (விளம்பரம் பண்ணிக்கிறேன்)
http://gokul-r.blogspot.com/2010/02/blog-post.html

எறும்பு said...

//(நிஜமான நாலு கால் நாய்)//

நாய்க்கு நாலு கால் என்று அறிய செய்ததற்கு நன்றி
:)

Gokul R said...

நல்லா இருந்தது வித்யா ...
இந்த கல்லூரி பேருந்து அனுபவத்தைத்தான் நான் முழுவதுமாக இழந்துவிட்டேன் ... வாய்க்காமலேயே போயிருச்சு ...

இந்த தொடர்பதிவு பிசினெஸ்கெல்லாம் முன்னாடியே இது தொடர்பா நான் ஒரு பதிவு எழுதினேன் ... அது இங்கே ... (விளம்பரம் பண்ணிக்கிறேன்) :)

http://gokul-r.blogspot.com/2010/02/blog-post.html

எறும்பு said...

//தோலாலான இயந்திரங்களோடு பயணிப்பது//

Good.

Vidhya Chandrasekaran said...

நன்றி ராஜி.
நன்றி சங்கவி.
நன்றி மயில்.
நன்றி கோகுல்.
நன்றி எறும்பு.

Rangan Kandaswamy said...

நீங்க TCS / CTS ?

Unknown said...

நல்ல எழுத்து நடை , நல்லா இருந்தது வித்யா

நர்சிம் said...

//எறும்பு said...
//(நிஜமான நாலு கால் நாய்)//

நாய்க்கு நாலு கால் என்று அறிய செய்ததற்கு நன்றி

//

சிரிப்பு அடங்க வெகு நேரமானது..

நல்ல பதிவுங்க..

மங்குனி அமைச்சர் said...

இந்த பதிவுலிருந்து நமக்கு கிடைத்த கருத்து , "வித்யா மேடம் பஸ்ல போகும்போது லவ் பன்னவில்லை"
ரைட்டு ......
இதிலிருந்து கிடைக்கு உட்கருத்து ." அப்ப வேற எங்கயோ லவ் பன்னிருக்காக , எங்க ?"

T.V.ராதாகிருஷ்ணன் said...

nice post

"உழவன்" "Uzhavan" said...

ஆகா.. முத்துராமலிங்கம் பஸ் சர்வீசை ஞாபகப்படுத்திட்டீங்களே.. 
எழுத்தில் ஆங்காங்கே தலைகாட்டிய சென்டிமெண்ட் சூப்பர்.
தலைப்பை பார்த்தவுடன் ஏதோ தொடர் எழுதப் போறீங்களோனு பயந்திட்டேன்.. சீ .. நினைச்சிட்டேன். :-)
 
மற்றவர்களும் விரைவில் எழுதவும். வாழ்த்துகள்!

Unknown said...

தொடர்கிறேன் வித்யா

உங்க பஸ் அனுபவம் nice

Vidhya Chandrasekaran said...

நன்றி முரளி.

நன்றி ரங்கன் (CTS. இப்போ இல்லை).

நன்றி நர்சிம்.
நன்றி டிவிஆர் சார்.
நன்றி அமைச்சர்.
நன்றி உழவன்.

நன்றி கேவிஆர் (அழைப்பை ஏற்றமைக்கும்).

A Simple Man said...

btw, i'm a great fan of your hotel visit posts..
pls suggest any good arabian restaurants.

தாரணி பிரியா said...

நல்லாயிருக்கு வித்யா எழுதிடறேன். ஒரு வாரம் டைம் தாங்களேன். மார்சை முடிச்சுட்டு வந்துடறேன் :)

Raghu said...

//கடைசி நாளன்று க்ளீனர் அண்ணாவிற்கு நல்லதாக ட்ரெஸ் எடுத்துக்கொடுத்தோம்//

வெரி நைஸ் :)

//தோலாலான இயந்திரங்களோடு பயணிப்பது//

ஹும்..க‌ஷ்ட‌ம்தான்!

Vijay said...

கல்லூரி விடுதியில் தங்கிப் படிப்பது ஆனந்தமென்றால், கல்லூரிக்கு பஸ்ஸில் போய்ப் படிப்பது பேரானந்தம் :)

Vidhya Chandrasekaran said...

நன்றி சிம்பிள் மேன். (அராபியன் ஹட் ட்ரை செய்யவும் க்ரீம்ஸ் ரோடிலிருக்கிறதென நினைக்கிறேன்).

நன்றி தாரணி பிரியா.
நன்றி ரகு.
நன்றி விஜய்.

விக்னேஷ்வரி said...

வழக்கம் போல் கலக்கல். இருந்தாலும் சொந்த அனுபவம் இல்லைன்னு சொல்றதை நம்பத் தான் கஷ்டமா இருக்கு. அதென்ன, அடுத்தவங்க லவ்வைப் பார்த்து கலாய்க்குறது.... :)

Unknown said...

கொஞ்சம் மொக்கைத்தனமா தொடர்ந்துட்டேன் http://kvraja.blogspot.com/2010/03/blog-post_29.html