June 28, 2010

கள்ளத்தனமாய் கண்கள் பேச..

தமிழ் கம்ப்யூட்டர் இதழில் என் வலைத்தளத்தை(யும்) பற்றி குறிப்பிட்ட கட்டுரையை பார்த்ததும் மகிழ்வாய் இருந்தது. வலைத்தளத்தின் ஸ்க்ரீன்ஷாட்டும் போட்டிருந்தனர். கமெண்ட், ஹிட், பரிந்துரை போன்ற எதிர்பார்க்காத விஷயங்களைத் தாண்டி இம்மாதிரியான Recognition கிடைக்கும்போது உற்சாகமாய் இருக்கிறது. வீட்டில் காமித்து பீற்றிக்கொண்டது வேறு. மாமனார் வேறு வலைத்தள முகவரியை டைரியில் குறித்துவைத்திருக்கிறார். ஜாக்கிரதையாய் எழுதவேண்டும். தொடர்ந்து உற்சாகப்படுத்தும் சகபதிவர்களுக்கு நன்றி (விக்கிக்கு ஸ்பெஷல் தேங்க்ஸ்). ஆக ஒருவழியா பத்திரிக்கைல வர ஆரம்பிச்சாச்சு. அப்படியே ஆ.வி, உயிர்மையோ கிழக்கோ ஒரு பத்து பதினஞ்சு புக்கு, அப்படியே அரசியல், ஸ்ட்ரெய்ட்டா 2016ல் முதல்வர்ன்னு பயணத்த கண்டினுயூ பண்ணனும் (2011 ஏன் இல்லன்னு கேக்குறவங்களுக்கு டஃப் காம்படீஷன்ங்க). கட்சி பதவிகளுக்கும், அமைச்சரைவை இலாக்காக்களுக்கும் விண்ணப்பங்களோடு அதிமுக்கியமாய் வி.ஐ.பி/சாம்சனைட் சூட்கேஸ்களும் வரவேற்கப்படுகின்றன.
**************

லிம்கா வி்ளம்பரங்களில் எப்போதுமே ஒரு ப்ரெஷ்னஸ் இருக்கும். தண்ணீரை ஸ்ப்லாஷ் செய்யும் உத்தி ரொம்பவே நன்றாக இருக்கும். இப்போது காட்டப்படும் விளம்பரத்தில் இசையும் சிறப்பாக இருக்கிறது. அந்த குரல் அவ்வளவு மெஸ்மரைசி்ங்காக இருக்கிறது. அதுவும் அந்தப் பெண் கேட்டிலிருந்து கொண்டு பாட்டிலை உயர்த்திக் காட்டும்போது கொடுக்கும் எக்ஸ்ப்ரஷன் சிம்ப்ளி சூப்பர்ப்.

*************

ஏர்டெல் சூப்பர் சிங்கர் பைனல் போட்டி பார்க்க நேர்ந்தது. இதற்கு முன் ஒன்றிரண்டு ஷோக்கள் பார்த்ததுண்டு. பைனலில் அல்காவின் பெர்பாமன்ஸ் டக்கராக இருந்தது. அதோடு கார்த்திக் மற்றும் ஆண்ட்ரியாவின் குரல்களில் கேட்ட “உறவுகள் தொடர்கதை” பாடல் இன்னமும் காதில் ரீங்காரமிட்டுக்கொண்டிருக்கிறது. கார்த்திக் ராக்ஸ்:)
*************

நான் பாண்டிச்சேரி போனாலோ இல்லை மாமியார் இங்கு வந்தாலோ வேறு வழியில்லாமல் சில சீரியல்களை பார்த்தோ/கேட்டோ தொலைக்க வேண்டியிருக்கிறது. அப்படி ஒரு சீரியல் 8 மணிக்கு வரும் திருமதி செல்வம். என்ன ஒரு சிறப்புன்னா ஒரு மாசம் கழிச்சி பார்த்தாலும் என்ன நடந்திருக்கும்ன்னு யூகிக்க முடியும். அந்தளவுக்கு வேகமா நகர்ற கதை??!! அதோடில்லாம நான் என்னிக்கெல்லாம் பார்க்கறேனோ அன்னிக்கு கரெக்டா வடிவுக்கரசிக்கு ஹார்ட் அட்டாக் வந்து ஹாஸ்பிட்டல்ல சேர்ப்பாங்க. உயிருக்கு போராடிக்கிட்டு இருப்பாங்க. எத்தனை தடவை ஹார்ட் அட்டாக் வந்தாலும் தாங்கும் நெஞ்சம் போல. அன்லிமிடட் அட்டாக்ஸ் வரம் வாங்கிருக்காங்களோ என்னவோ. நல்லவேளை அம்மாவிற்கு சீரியல் பார்க்கும் பழக்கமில்லாததால் நானும் கூடவே அப்பாவும் தப்பித்தோம்:)
**************

ஆம்பா ஸ்கை வாக் மால் மக்கள் வெள்ளத்தில் மிதக்கிறது. அண்ணா நகர், அந்தப்பக்கம் அமிஞ்சிக்கரை, கீழ்ப்பாக்கம், அம்பத்தூரிலிருந்து ஸ்பென்சர் போகும் மொத்த கூட்டமும் ஸ்கைவாக்கிற்கு டைவர்ட் ஆகிறது. சனி ஞாயிறுகளில் நிஜமாகவே மூச்சு திணறுகிறது. வீக்கெண்டுகளில் வரவே கூடாது என சபதமே மேற்கொண்டோம். நம்ம விஷயத்துக்கு வருவோம். பெரிய ஃபுட் கோர்ட். டைனிங் ஸ்பேசும் நிறைய இருக்கிறது. பாப்கார்ன் வயிற்றை நிரப்பியதால் ஃபுட்கோர்ட்டை பார்த்துவிட்டு மட்டும் வந்தேன். ஒரு பரிந்துரை. பூஸ்டர் ஜூசில் க்ரான்பெர்ரி ஜூஸ்கள் நன்றாக இருக்கின்றன. விலை யம்மாடியோவ் ரகம். எக்ஸ்பிரஸ் அவின்யூ மாலிலும் ஃபுட்கோர்ட் ஓரளவுக்கு பங்கஷனாக ஆரம்பித்துவிட்டதாக நண்பர்கள் சொன்னார்கள். இன்னும் பெரிசாக வரவிருக்கிறதாம். எப்படியோ ஃபுட்டிகளுக்கு கொண்டாட்டம் தான்.
*****************

பிவிஆரில் சிங்கம் பார்த்தோம். லவ்லி தியேட்டர். கொடுத்த காசிற்கு வஞ்சனையில்லாமல் இருந்தது இருக்கையும் சவுண்ட் சிஸ்டமும். “ஓங்கி அடிச்சா ஒன்னரை டன் வெயிட்டுடா” என சூர்யா எகிறி அடிக்கும்போதெல்லாம் என் மண்டையில் இறங்கின மாதிரியே ஒரு ஃபீலிங். டிபிக்கல் ஹரி மூவி. ஒன்னே ஒன்னு மட்டும் மிஸ்ஸிங். அனுஷ்கா தாவணியில் மலை/வயல்வெளியில் டூயட் பாடவில்லை. மற்றபடிக்கு பனைமரம்/தென்னைமரம், பொட்டல்காட்டில் ஒரு ஃபைட், டாடா சுமோ வெடித்து பறத்தல், மனோராமாவின் எமோஷன் என ஹரியின் அத்தனை டச்சும்.

21 comments:

pudugaithendral said...

தமிழ் கம்ப்யூட்டரில் உங்க வலைப்பூ வந்ததுக்கு வாழ்த்துக்கள்

Vijay said...

\\தமிழ் கம்ப்யூட்டர் இதழில் என் வலைத்தளத்தை(யும்) பற்றி குறிப்பிட்ட கட்டுரையை பார்த்ததும் மகிழ்வாய் இருந்தது. வலைத்தளத்தின் ஸ்க்ரீன்ஷாட்டும் போட்டிருந்தனர். \\
கோடானுகோடி வாழ்த்துக்கள் :)

\\நான் பாண்டிச்சேரி போனாலோ இல்லை மாமியார் இங்கு வந்தாலோ வேறு வழியில்லாமல் சில சீரியல்களை பார்த்தோ/கேட்டோ தொலைக்க வேண்டியிருக்கிறது. \\
அவங்க உங்க வலைத்தளத்த பார்ப்பதில்லை போலிருக்கு :)

\\ஆம்பா ஸ்கை வாக் மால்.....விலை யம்மாடியோவ் ரகம். \\
காசு பார்ப்பதற்காக ரூபாயாக வாங்காமல் எல்லா அவுட்லெட்டிலும் அவங்களே சப்ளை செய்யும் டெபிட் கார்ட் தான் வாங்குகிறார்கள். இதெல்லாம் ரொம்ப அக்ரமம். இதைப் பற்றியெல்லாம் ஒரு வரி எழுதக் கூடாதா? எல்லா ஊர்களிலும் உள்ள மால்களும் ஒரே மாதிரி தான் இருக்கின்றன. மால்களுக்கு இனி போகவே கூடாது முடிவெடுத்துள்ளோம்

PVR'ல பாதியிலயே குளிர்சாதனத்தை ஆஃப் பண்ணிடறாங்களாமே, அப்படியா?

Vidhya Chandrasekaran said...

நன்றி கலா அக்கா.

நன்றி விஜய். டெபிட் சிஸ்டம் இருக்கிறதா என தெரியவில்லை. நாங்கள் காசு கொடுத்து தான் வாங்கினோம். ஸ்பென்சரை விட இங்கு விலைகள் அதிகம். டூ வீலர் பார்க்கிங்கும் படுத்துகிறது. இரண்டு டிசைனர் ஷோரூம்கள் பார்த்தேன். எனக்கு மால்களில் ஷாப்பிங் அலர்ஜி. முக்கியமாக உடைகள். விலைக்கு வொர்த் இல்லை என்பது என் அபிப்ராயம். மற்றபடி மாலகளில் என்னை கவரும் ஒரே விஷயம் வெரைட்டி உணவுகள் ஒரே இடத்தில்.

Chitra said...

தமிழ் கம்ப்யூட்டர் - வாவ்! வாழ்த்துக்கள்!


About that Limca commercial - yes ...... including the song, the ad is cute and lovely. :-)

Ahamed irshad said...

தமிழ் கம்ப்யூட்டரில் உங்க வலைப்பூ வந்ததுக்கு வாழ்த்துக்கள்..

வேறு வழியில்லாமல் சில சீரியல்களை பார்த்தோ/கேட்டோ தொலைக்க வேண்டியிருக்கிறது. ///

இது என்ன வகை புலம்பல்ன்னு சொன்னா நல்லாயிருக்கும்..

துணுக்ஸ் மாதிரி எழுதியிருக்கீங்க.. அருமை...

Anonymous said...

வாழ்த்துக்கள் வித்யா :))

தராசு said...

இது என்ன தலைப்புன்னு மனசிலாயில்லல்லோ?????

Rajalakshmi Pakkirisamy said...

\\தமிழ் கம்ப்யூட்டர் இதழில் என் வலைத்தளத்தை(யும்) பற்றி குறிப்பிட்ட கட்டுரையை பார்த்ததும் மகிழ்வாய் இருந்தது. வலைத்தளத்தின் ஸ்க்ரீன்ஷாட்டும் போட்டிருந்தனர். \\

:) :) :)

T.V.ராதாகிருஷ்ணன் said...

தமிழ் கம்ப்யூட்டரில் உங்க வலைப்பூ வந்ததுக்கு வாழ்த்துகள்

அன்புடன் அருணா said...

தமிழ் கம்ப்யூட்டரில் வந்ததுக்கு பூங்கொத்துடன் வாழ்த்துக்கள்!

Raghu said...

த‌மிழ் க‌ம்ப்யூட்ட‌ர் க‌ட்டுரைக்கு வாழ்த்துக‌ள் :)

Thamira said...

வழக்கம் போல நல்ல பகிர்வுகள்.

நட்புடன் ஜமால் said...

தமிழ் கம்ப்யூட்டர் - ஆஹா! வாழ்த்துகள்!

எனக்கும் லிம்கா தான் :)

ஹுஸைனம்மா said...

வாழ்த்துகள்!!

அப்புறம்.. ஹி.. ஹி.. நானும் 2016ஐக் குறிவைச்சுதான்... ஹி..ஹி...

ஆனா, ஒருவேளை 2016ல நீங்க வந்தா மால்கள்ல ஃபுட் கோர்ட்களுக்கு இலவச கூப்பன்கள் கொடுப்பேன்னு வாக்குறுதி கொடுத்துட்டா, நான் அம்பேல்!!

Vidhya Chandrasekaran said...

நன்றி சித்ரா.
நன்றி அஹமது இர்ஷாத்.

நன்றி தராசு (லிம்கா அட்ண்ட ஸ்டார்டிங்கானு சேட்டா).

நன்றி மயில்.
நன்றி ராஜி.
நன்றி டிவிஆர் சார்.
நன்றி அருணா.
நன்றி ர‌கு.
நன்றி ஆதி.
நன்றி ஜமால்.

நன்றி ஹுஸைனம்மா (ஹை. அப்ப கூட்டணி வச்சுக்கலாம். ஆட்சிலயும் சமபங்கு. ஒகேவா).

vinu said...

மாமனார் வேறு வலைத்தள முகவரியை டைரியில் குறித்துவைத்திருக்கிறார். ஜாக்கிரதையாய் எழுதவேண்டும்.

he he he appo innimea yosichhu ellutheveeeenga right

"உழவன்" "Uzhavan" said...

//ஸ்ட்ரெய்ட்டா 2016ல் முதல்வர்ன்னு பயணத்த கண்டினுயூ பண்ணனும்//
 
கொபசெ பதவி காலியா இருக்கா? :-)
 
வாழ்த்துகள்!

Vidhya Chandrasekaran said...

நன்றி வினு.

நன்றி உழவன்.

விக்னேஷ்வரி said...

சூட்கேஸ் இல்லாமலே ஒரு சின்னப் பதவியாச்சும் குடுங்க மேடம் ப்ளீஸ்.

ஊர்சுற்றி said...

//அப்படியே ஆ.வி, உயிர்மையோ கிழக்கோ ஒரு பத்து பதினஞ்சு புக்கு, அப்படியே அரசியல், ஸ்ட்ரெய்ட்டா 2016ல் முதல்வர்ன்னு பயணத்த கண்டினுயூ பண்ணனும்// எ.கொ.இ.!!! :)

லிம்கா விளம்பரம் - உண்மையிலேயே அருமையான கிராஃபிக்ஸ்!

Vidhya Chandrasekaran said...

நன்றி விக்கி (நோ சிபாரிசு).

நன்றி ஊர்சுற்றி.