June 22, 2010

Wang's Kitchen

வாங்’ஸ் கிச்சன் - சிட்டி செண்டர், ஸ்பென்சர் ப்ளாஸா இன்ன பிற பெரிய மால்களிலுள்ள ஃபுட் கோர்ட்களில் கட்டாயம் ஒரு கவுண்டரை இந்த பெயர் பலகையோடு பார்த்திருப்பீர்கள். சைனீஸ் உணவுகளை பரிமாறும் உணவகம். To be more precise Indo chinese foods;)

பர்ஸ் அதிகம் பழுக்காமல், சைனீஸ் உணவுகளின் தூரத்து உறவு என சொல்லிக்கொள்ளும் அளவிற்கு இருக்கும் சைனீஸ் உணவுகளை ட்ரை பண்ண ஏதுவான இடம். தயவு செய்து மால்களில் ட்ரை செய்யாதீர்கள். தனியாக இருக்கும் ரெஸ்டாரெண்டுகள் பெட்டர்.

முதன் முதலில் டிபிக்கல் சைனீஸ் உணவு சாப்பிட்டது பெசண்ட் நகரில். ஸ்பென்சர்ஸ் டெய்லியின் மாடியில் ஷாங்கிரி லா என்றொரு ஹோட்டல் இருந்தது. நண்பனொருவனை ட்ரீட் என அழைத்துக்கொண்டு போய் பர்ஸை பழுக்க வைத்தோம். ஆனால் லவ்லி ஃபுட். ஓனரம்மாவிடம் கொஞ்ச நேரம் பேசிக்கொண்டிருக்கையில் அங்கு சர்வ் செய்யப்படும் அனைத்தும் உணவுகளும் ஒரிஜினல் சைனீிஸ் என்றும், இந்தியர்களின் டேஸ்ட்டிற்கேற்ப ரெசிபிகளை மாற்றவில்லை எனவும் கூறினார். இப்போது அந்த ரெஸ்டாரெண்ட் அங்கில்லை:(

சரி நம்ம வாங்’ஸ் கிச்சனுக்கு போவோம். Neat Menu. வழக்கம்போலவே வெஜ் ஆப்சன் கொஞ்சம் கம்மி. நண்பர்களோடு கெட் டு கெதர் போனோம். இரண்டு பேர் வெஜிடேரியன். இரண்டு பேர் நான் வெஜிடேரியன். இன்னொரு தோழியின் வருகைக்காக காத்திருக்கும் நேரத்தில் ஸ்டார்டர்ஸ் ஆர்டர் செய்தோம். செய்தோம். செய்துக்கொண்டே இருந்தோம். அவள் வருவதற்குள் மூன்று ஸ்டார்டர்களை முக்கிவிட்டார்கள். நானும் ஜூனியரும் ஒன்று. அவள் வந்த பின் அவளுக்காக ஒன்று. மக்கள் சாப்பிட்டவை பெப்பர் சிக்கன், ட்ராகன் சிக்கன் அப்புறம் ப்ரான் ஐட்டமொன்று. நாங்கள் மசாலா பொட்டேட்டோ மற்றும் கார்ன் ஃப்ரை சாப்பிடடோம். டாம் யும் சூப்பும் நன்றாக இருந்தது. ஸ்டார்டரிலேயே வயிறு முக்கால்வாசி நிறைந்துவிட்டது. மெயின் கோர்ஸிர்கு வெஜிடபிள் நூடுல்ஸும், schezwan ப்ரைட் ரைஸும், வெஜிடபிள் பால்ஸ் (க்ரேவி) ஆர்டர் செய்தோம். ஆவ்ரேஜ். டெசர்டிற்கு டேட் பான் கேக், லைம் சோடா. ரெண்டுமே சுமார்தான்.

குடும்பம்/நண்பர்களுடன் ஹாயாக பேசி உண்டு மகிழலாம் (எவ்வளவு நேரமானாலும் உட்கார விடுகிறார்கள்). வீக் எண்டுகளில் கூட்டம் கொஞ்சம் ஜாஸ்தி. மொத்ததில் இந்தியன் வெர்ஷன் ஆஃப் சைனீஸ் உணவுகளை சாப்பிடலாம்.

மேலதிக தகவல்கள்

உணவகம் - Wang's Kitchen
உணவு/cuisine - சைனீஸ் (Indo-Chinese) Veg/Non-veg
இடம் - நிறைய கிளைகள் உண்டு. நான் ட்ரை செய்தது வேளச்சேரி தரமணி லிங்க் ரோட் மற்றும் அடையார் கஸ்தூரிபாய் நகர்.
டப்பு - ஆவரேஜ். நான்கு பேருக்கான உணவு 700 ரூபாய். (2 பேர் அசைவம்)


பரிந்துரை - வொர்த் ட்ரையிங்.

8 comments:

Chitra said...

I liked their corn fry. Food was not bad. :-)

ஜெய்லானி said...

சைனீஸ்ல பேரு தெரியாம நிறைய சாப்பிட்டிருக்கேன்..

நமக்கு பேரா முக்கியம்...ஹி..ஹி..
படங்கள் சூப்பர்..

Raghu said...

'ச‌ட்'னு முடிஞ்சிட்ட‌ மாதிரியிருக்கு ப‌திவு

//வீக் எண்டுகளில் கூட்டம் கொஞ்சம் ஜாஸ்தி//

வேள‌ச்சேரியில் சாய‌ந்த‌ர‌த்துல‌ எப்ப‌வும் இப்ப‌டித்தாங்க‌ இருக்கு, ரெண்டு த‌ட‌வை போய் பார்த்துட்டு திரும்பி வ‌ந்துட்டேன் :(

Raghu said...

'Dosa Calling' - பேரே சூப்ப‌ர்...எங்கேங்க‌ இருக்கு?

யாசவி said...

schewan ஐட்டம்கள் எல்லாம் நல்லா ஆந்திர ஸ்டைலில் நன்றாக இருக்கும்.

ஸீ புட் என்றால் - டோம் யாம் சூப் சாப்பிட்டு பாருங்கள்

Vidhya Chandrasekaran said...

நன்றி சித்ரா.
நன்றி ஜெய்லானி (அதானே).

நன்றி ரகு (அடையார், கெல்லிஸ், அண்ணாநகர். அடையார் கஸ்தூரிபாய் நகர் தாண்டி லாரன்ஸ் மேயோ ஷோரூம் கீழே).

நன்றி யாசவி (நான் எக்கிடேரியன்).

விக்னேஷ்வரி said...

இப்படி ரெஸ்டாரண்ட் பதிவு எழுதுறதுக்கு முன்னாடி நான் அங்கே வந்தா எல்லா ரெஸ்டாரண்ட்டுக்கும் கூட்டிட்டுப் போகணும்ங்குறதை ஞாபகம் வெச்சுக்கீங்க வித்யா.

Vidhya Chandrasekaran said...

நன்றி விக்கி. எல்லா ரெஸ்டாரெண்டுக்கும் கூட்டிட்டு போறேன். பில்லை நீ செட்டில் பண்ணிடு.