August 11, 2010

பாணா காத்தாடி

இந்த வாரம் எதுவும் பார்க்கறமாதிரி தமிழ்படம் இல்ல. தில்லாலங்கடி நான் வரலை. பஞ்ச் டயலாக் பேச வராதுன்னு ஜெயம் ரவி சொல்ற ஒரு சீனேயே பார்க்க முடியல. பாணா காத்தாடியா? முரளி பையன் நடிச்சது. பிரசன்னாவும் உண்டு.

பிரசன்னாவா? அப்படின்னா புக் பண்ணிடு. போவோம்.
***********

3.15க்கு பிவிஆரில் படம். 2.30 மணிக்கு டெக்சாஸ் பியஸ்டாவில் சிம்மி சான்ஙாஸ் மற்றும் பில்லுக்கு வெயிட்டிங். சார் நாங்க படத்துக்குப் போகனும். கொஞ்சம் சீக்கிரம் ப்ளீஸ் என்று கெஞ்சி கூத்தாடி ஒரு வழியாய் படம் ஆரம்பிக்கும் முன்னரே போயாச்சு.

குப்பத்தில் காத்தாடி விட்டுக்கொண்டு, அப்படியே (எப்பவாவது) பள்ளிக்கூடம் போய்க்கொண்டு இருக்கும் அதர்வாவிற்கும், பேஷன் டெக்னாலஜி படிக்கும் சமந்தாவிற்கும் பென் ட்ரைவில் ஆரம்பிக்கும் சண்டை எப்படி காதலாகிறது, என்ன இடையூறுகள் வருகிறது, இருவரும் ஒன்று சேர்ந்தார்களா என்பதே பாணா காத்தாடி கதை.

எந்த எதிர்பார்ப்புமில்லாமல் போனதால் கொஞ்சம் பிடித்தது. குப்பத்து பசங்க, காத்தாடி என வித்யாசமான கதைக் களத்தை தேர்வு செய்த இயக்குனர், இன்னும் கொஞ்சம் திரைக்கதையை செதுக்கியிருந்தால் நிஜமாகவே பாணா காத்தாடியாகியிருக்கும். அதர்வா அறிமுக நாயகனுக்கே உண்டான அசட்டுச் சிரிப்பு, எப்படி ரியாக்ட் பண்ணனும்ங்கற தயக்கத்தோடு வலம் வருகிறார். குப்பத்துப் பையனுக்கான வாய்ஸ் பொருந்தவில்லை. ஆனால் நல்ல அட்டெம்ப்ட்.

விண்ணைத் தாண்டி வருவாயா தெலுங்கு வெர்ஷனை எட்டு முறை பார்த்ததாக சொன்னான் நண்பன். சமந்தாவுக்காக என்று வேறு எக்ஸ்ட்ரா பிட். படத்தைப் பார்த்தால் பார்க்கலாமென்று தான் தோணுகிறது. நடிப்பு??? சுமார் தான். இவர்தான் மாஸ்கோவில் காவிரி படத்தின் ஹீரோயினா? மௌனிகா பொளந்து கட்டுகிறார். ஒரு கட்டத்தில் இவர் எத்தனை தடவை “பொறம்போக்கு” சொல்கிறார் என எண்ணிச் சொன்னால் 100ரூபாய் காசு என்று பெட் கட்டி அவர் முடியலை என்றதால் 100 ரூபாய் ஜெயிச்சேன்:) நிறைவாக இருக்கும் கதாபாத்திரத்தில் இவருடையதும் ஒன்று. சன் டிவியில் ஒரு விஜே வருவார். மகேஷ்வரி. அவர் எதற்கு இந்தப் படத்தில்? நோ ஐடியா.

ரொம்பவும் எதிர்பார்த்து போனது பிரசன்னாவைதான். அசத்தலான பாடி லேங்குவேஜ். தண்ணியடித்துவிட்டு புலம்புவது, அதர்வாவின் மேல் பரிவுகாட்டும்போது, பின்னர் அவரைக் கொல்ல முடியாமல் தவிக்கும்போது அசத்துகிறார். கண்களே பாதி ரியாக்‌ஷனை காட்டிவிடுகின்றன. இன்னொரு ப்ளஸ் பாயிண்ட் கருணாஸ் & டைரக்டர் டி.பி.கஜேந்திரனுடைய காமெடி. சில இடங்களில் கருணாஸ் கடுப்படித்தாலும், மற்ற படங்களை விட இதில் கொஞ்சம் பெட்டராக பெர்ஃபார்ம் பண்ணிருக்கார். அதிலும் பென் ட்ரைவிற்காக சமந்தாவிடம் பேசும்போதும், அப்பா சட்டையில் பணம் மறைவதைப் பற்றி புலம்பும்போதும் நைஸ். அதேபோல் முரளி வரும் அந்த சீன்கள் தியேட்டரில் செம க்ளாப்ஸ்:) யுவன் இசையில் தாக்குதே பாடல் க்ளாஸ். மற்றவை சுமார் ரகத்திலும், மொக்கை ரகத்திலும் சேர்க்கலாம். சில பாடல்கள் மெதுவாய் போகும் படத்தை இன்னும் ஊர்ந்து போகச் செய்கிறது. பிண்ணனி இசை ஒகே.

தாதாயிஸம் பேசுவதா, காதல் கதையாய் எடுப்பதா என டைரக்டர் தடுமாறியிருக்கிறார். சும்மா ப்ரெண்ட்ஸ் தான் என்பவர், அரிசில பேரெழுதி கிப்ட் கொடுக்க நினைச்சான் என கேள்விப்பட்டவுடனேயே விழுந்து விழுந்து/துரத்தி துரத்திக் காதலிப்பது, ஸ்கூல் படிக்கும் பசங்க தீடிர்ன்னு குஜராத் போவது என அங்கங்கே ஞே டைப் சீன்கள்.

படம் முடிந்த பின் எல்லோரும் எழுந்து நின்று கைதட்டினார்கள். ஏன்னு தெரியலை. நான் தட்டவில்லை. ஜூனியர் மடியில் தூங்கிக்கொண்டிருந்தார்.

படம் முடிந்த பின்னர் நாங்களிருவரும் பேசிக்கொண்டது

படம் சொல்லும் நீதி?
படியில் பயணம் செய்யாதீர்கள்:)))))))

பாணா காத்தாடி - ஆங். ம்ம்ம்ம்ம். ப்ச்ச். பஞ்ச் எதுவும் தோணல. படம் பார்த்துட்டு உங்களுக்கு ஏதாச்சு தோணிச்சுன்னா சொல்லுங்க.

14 comments:

எறும்பு said...

//படம் பார்த்துட்டு உங்களுக்கு ஏதாச்சு தோணிச்சுன்னா சொல்லுங்க.//

இந்த பதிவ படிச்சே ஒண்ணும் தோணலை படத்த பார்த்தா என்ன தோனப்போகுது?!

தாரணி பிரியா said...

ஹி ஹி நானும் இந்த படத்தை பிரசன்னாவுக்காக தான் பாக்கணுமுன்னு நினைச்சு இருக்கேன் :)

☀நான் ஆதவன்☀ said...

//நான் தட்டவில்லை. ஜூனியர் மடியில் தூங்கிக்கொண்டிருந்தார்.//

:)))))))))

ஒரு பக்க விமர்சனமா?

T.V.ராதாகிருஷ்ணன் said...

//படம் பார்த்துட்டு உங்களுக்கு ஏதாச்சு தோணிச்சுன்னா சொல்லுங்க.//

எதுவும் தோணாதுன்னே தோணுது :))

Mohan said...

எப்பவும் பின்பக்க படிக்கெட்டில் பயணம் செய்யும் அதர்வா, காதலிக்காக அன்று முன்பக்க படிக்கெட்டில் பயணம் செய்கிறார். அதனால் படம் சொல்லும் நீதியாக காதலிக்க்கும்போது படிக்கெட்டில் பயணம் செய்யாதீர்கள் என்பதாக வைத்துக்கொள்ளலாம்!

Vijay said...

இதையெல்லாம் திருட்டு விசிடி’ல பார்த்துக்கலாம்’னு பாஸ்’ல விட்டுட்டேன் :)

மங்குனி அமைச்சர் said...

ஆஜர் போட்டுகிர்றேன்

Thamira said...

நம்புங்க.. டைடில் பிடிக்காமல் போனதுக்காக படம் பார்க்கக்கூடாதுன்னு ரொம்ப ரேரா முடிவு பண்ணுவேன். அதில் இதுவும் ஒண்ணு.

Raghu said...

சிடில‌ பாக்க‌ற‌ ஐடியா கூட‌ இல்ல‌ங்க‌

Anonymous said...

//டம் பார்த்துட்டு உங்களுக்கு ஏதாச்சு தோணிச்சுன்னா சொல்லுங்க//

படம் பாக்கலாம்கறீங்களா வேணம்கறீகளா?

Vidhya Chandrasekaran said...

நன்றி எறும்பு (சூப்பரா எழுதிருக்கறதப் படிச்சு வாயடைச்சு போய்ட்டீங்களா).

நன்றி தாரணி பிரியா.
நன்றி நான் ஆதவன்.
நன்றி டிவிஆர் சார்.
நன்றி மோகன்.

Vidhya Chandrasekaran said...

நன்றி விஜய்.
நன்றி மங்குனி அமைச்சர்.
நன்றி ஆதி.
நன்றி ர‌கு.

நன்றி சின்ன அம்மிணி (வெட்டியா இருந்தீங்கன்னா போங்க).

விக்னேஷ்வரி said...

படம் சொல்லும் நீதி?
படியில் பயணம் செய்யாதீர்கள்:)))))))//
இது என்னது?

ஆமா வித்யா, பாணா காத்தாடின்னா என்ன?

எறும்பு said...

// (சூப்பரா எழுதிருக்கறதப் படிச்சு வாயடைச்சு போய்ட்டீங்களா).//

இது வேறயா.நல்லவேளை எங்க பதிவோட கடைசி பத்திய மட்டும் படிச்சுட்டு கமெண்ட் போட்டதை கண்டுபிடிச்சிடுவீங்கலோன்னு நினைச்சேன்.
:)