January 31, 2011

கண்ணீரில் மிதக்க வைத்தான்:(

மானங்கெட்ட, ஓட்டுப் பொறுக்கி அரசியல்வாதிகளிருக்கும் நாட்டில் பிறந்ததைத் தவிர வேறென்ன பாவம் செய்தார்கள் மீனவர்கள்? ஒன்றல்ல இரண்டல்ல ஐநூற்றி சொச்சம் மீனவர்கள் இதுவரை இலங்கை கடற்படையினரால் கொல்லப்பட்டிருக்கிறார்கள். கடைசியாக (இதுவே கடைசியாக இருக்குமென வேண்டுகிறேன்) ஜெயக்குமார் என்ற மீனவரின் கழுத்தில் கயிற்றால் சுருக்கிட்டு கொடூரமான முறையில் சாகடித்துள்ளனர். ஐந்து லட்சமோ ஒரு லட்சமோ, அரசுப் பதவியோ, கட்சிப் பதவியோ எந்த விதத்திலும் அவரின் ஆன்மாவை அமைதிப்படுத்தாது. இணைய நண்பர்கள் தங்களால் இயன்றவரை உங்கள் நட்புலகத்திற்கும், உறவினர்களுக்கும் தமிழக மீனவர்களுக்கு இழைக்கப்படும் அநீதியை எடுத்துச்சொல்லுங்கள். http://www.savetnfisherman.org/ என்ற தளத்தினை பரவலாக அறியச்செய்யுங்கள். Lets make a difference.






12 comments:

கவிதா | Kavitha said...

:((

'பரிவை' சே.குமார் said...

போட்டோ கமெண்ட்ஸ் அருமை.

ஒன்று படுவோம்...
வெற்றி பெறுவோம்...

சங்கரியின் செய்திகள்.. said...

ம்ம்ம்.........

அமுதா கிருஷ்ணா said...

கடைசி ஃபோட்டாவை பார்த்த அப்படியே பத்திட்டு வருது.

Chitra said...

என்னத்த சொல்ல? :-(

pudugaithendral said...

சொல்லி ஆவப்போவது ஏதுமில்லை...
:((((

http://machamuni.blogspot.com/ said...

அன்பு நண்பரே உங்கள் எண்ணமே எமது எண்ணம்,இவ்வளவு ஆதரவு மீனவர்களுக்கு இருந்தும் ஏன் அலட்சியப் போக்கு அரசிடம்.எல்லோருக்கும் சுய தேவைகள் பூர்த்தி செய்யப்படவில்லை(COMMITMENTS)என்ற எண்ணம்.தனது வீட்டை யார் பார்ப்பார் என்ற எண்ணம்.இதற்கு சுயநலமில்லாது போராட நெஞ்சில் துணிவும் உதவும் தாகமும் கொண்ட ஒருவர் தலைமையேற்றால் போதும்.அந்த ஒருவர்????????
மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்

செ.சரவணக்குமார் said...

போட்டோ கமெண்ட்ஸ் அருமை வித்யா. மீனவ சகோதரர்களுக்காக இணையம் ஒன்றுபட்டு நிற்பது மகிழ்ச்சியளிக்கிறது.

R. Gopi said...

வெல் டன் வித்யா

T.V.ராதாகிருஷ்ணன் said...

போட்டோ கமெண்ட்ஸ் அருமை

ஆதி மனிதன் said...

போட்டோ கமெண்ட்டுகள் அனைத்தும் அட்டகாசம். கடைசியில் உள்ள போட்டோ தமிழகத்தில் எடுத்தது போல் உள்ளது. உலகத்தில் வேறு எந்த நாட்டிலாவது இப்படி (வரவேற்பு கொடுப்பார்களா) நடக்குமா?

Anisha Yunus said...

என்ன சொல்ல, ஃபோட்டோ கமெண்ட்ஸ் அத்தனையும் 100% உண்மையா பேசப்பட்டாலும் இப்போதைய நிலையில் ஆச்சர்யப்படுவதற்கில்லை

!!