February 8, 2011

நான் அப்படி என்ன தப்பா சொல்லிட்டேன்?

பொங்கல் எங்கடி வைக்கப் போற?

வெண்கலப் பானைலதான்.

##%^&*டொக்

#பொங்கலுக்கு ஊருக்குப் போறியான்னு கேக்காம என்னாதிது சின்னப்புள்ளத்தனமா.
*******************

அதான் குழந்தை ஸ்கூல் போக ஆரம்பிச்சுட்டானே? எப்ப வேலைக்குப் போகப் போற?

வேலைக்குப் போயி?

நாலு காசு சம்பாதிக்கலாம்ல

நாலு காசு சம்பாதிச்சு (இந்த நாலு காசை ஏன் விடமாட்டேங்கறாங்க?)?

இல்ல. புள்ளைய நல்ல படிப்பு படிக்க வெக்கலாம்ல

படிக்க வெச்சி?

இல்ல உனக்கு ஒரு தெகிரியமா இருக்கும்ல?

தைகிரியம் வந்து?

லைஃப ஒரு தெம்பா ஃபேஸ் பண்ணலாம்ல

ஃபேஸ் பண்ணி?

நாலு பேர் மத்தில கௌரவமா இருக்கும்ல

இருந்து?

இல்ல சந்தோஷமா இருக்கலாம்ல

இப்பவும் சந்தோஷமத்தானே இருக்கேன்.

டொக்
*****************

அம்மா ஃபோன் செய்து, வழக்கமான விசாரிப்புகளுக்குப் பிறகு

ஹேய் உன் மாமனார் மாமியார் ஃபோன் பண்ணாங்க.

என்னம்மா சொன்னாங்க?

ம்ம்ம்ம் நீ ரொம்ப நல்லவன்னு சொன்னாங்க.

(இன்னுமா இந்த உலகம் என்னை நம்பிகிட்டிருக்கு) அதான் எனக்கே தெரியுமே. மேல சொல்லு?

வெங்காய சாம்பார் செஞ்சியாமே. அவ்ளோ நல்லாருந்துதாமே. எங்கவீட்டு சமையலுக்கு நல்லா பழகிட்டான்னு உன் மாமியார் ஒரே புகழாரம் தான் போ. அதோட உன் மாமனார் மெட்ராஸ் வந்து தங்கி ரெஸ்ட் எடுத்துட்டு போகச் சொன்னேன்னு பெருமையா சொன்னார்.

விடு விடு. நல்ல விஷயங்களைப் பத்தி ரொம்ப நாள் பேசாம இருக்க முடியாது. அப்புறம் உனக்கு வெங்காய சாம்பார் ரெசிபி வேணுமா?

டொக்
********************

தோழிக்கு நான் எழுதிய கதையை??!! மெயிலில் அனுப்பி வைத்தேன்.

பத்தே நிமிடத்தில் கால் பண்ணி

சூப்பர்டி

நிஜமாத்தான் சொல்றியா?

சத்தியமாடி. அதுவும் அந்த சப்ஜெக்ட் சான்ஸே இல்லை

என் கதைல சப்ஜெக்டா? என்னடி உளர்ற?

இல்லடி சிறுகதைன்னு சப்ஜெக்ட் போட்டு அனுப்பினியே. அதுமட்டுமில்லன்னா இது கதைன்னே நான் நம்பிருக்கமாட்டேண்டி. என்கிட்டருந்து எடுத்துட்டு போன புக்கெல்லாம் நீயே வச்சுக்கோ. ஆனா தயவுசெஞ்சு இப்படி கதை எழுதறன்னு என் உயிர எடுக்காத.

ஹூம்ம். உனக்குப் பொறாமைடி. எங்க நான் பெரிய எழுத்தாளர் ஆயிடுவேனோன்னு பொறாமை.

$$##%% டொக்.
**************

பொறந்த நாளைக்கு கோயிலுக்குப் போனியா இல்லையா?

இல்லம்மா.

ஏண்டி நாளும் கிழமையுமா கோவிலுக்குப் போய் சாமியப் பார்த்து ஒரு அர்ச்சனைப் பண்ணிட்டு வரவேண்டியதுதான?

வீடே கோவில். கணவனே கண்கண்ட தெய்வம். தெய்வத்துக்கு தெனம் அர்ச்சனை நடக்குது.

டொக்.

டிஸ்கி : கூகிள் பஸ்ஸில் நான் போட்ட மொக்கை:))

23 comments:

எல் கே said...

நல்ல சமையலைப் பத்தி பேச்சு வந்தவுடன் தெரிந்து விட்டது இது உங்க சரக்கு இல்லைன்னு

R. Gopi said...

:-)

விஜி said...

பொறந்த நாளைக்கு கோயிலுக்குப் போனியா இல்லையா?

இல்லம்மா.

ஏண்டி நாளும் கிழமையுமா கோவிலுக்குப் போய் சாமியப் பார்த்து ஒரு அர்ச்சனைப் பண்ணிட்டு வரவேண்டியதுதான?

வீடே கோவில். கணவனே கண்கண்ட தெய்வம். தெய்வத்துக்கு தெனம் அர்ச்சனை நடக்குது.

:))) வீட்டுக்கு வீடு தெய்வம்

sathishsangkavi.blogspot.com said...

//வீடே கோவில். கணவனே கண்கண்ட தெய்வம். தெய்வத்துக்கு தெனம் அர்ச்சனை நடக்குது. //

உண்மைதான்...

CS. Mohan Kumar said...

//வீடே கோவில். கணவனே கண்கண்ட தெய்வம். தெய்வத்துக்கு தெனம் அர்ச்சனை நடக்குது //

பாவம் அவரு !

Chitra said...

பொறந்த நாளைக்கு கோயிலுக்குப் போனியா இல்லையா?

இல்லம்மா.

ஏண்டி நாளும் கிழமையுமா கோவிலுக்குப் போய் சாமியப் பார்த்து ஒரு அர்ச்சனைப் பண்ணிட்டு வரவேண்டியதுதான?

வீடே கோவில். கணவனே கண்கண்ட தெய்வம். தெய்வத்துக்கு தெனம் அர்ச்சனை நடக்குது.

......ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா... செமத்தியான கமென்ட்!

Anonymous said...

//எங்க நான் பெரிய எழுத்தாளர் ஆயிடுவேனோன்னு பொறாமை. //
ஹா ஹா.. நெசமாவா?!

ஹுஸைனம்மா said...

வேலைக்குப் போனாத்தான் செல்ஃப் கான்ஃபிடன்ஸ் வரும்; ஒலக அறிவு வளரும், வீட்டுக்காரரும், அவர் குடும்பத்தவங்களும் நமக்குப் பயப்படுவாங்க, இதெல்லாம் சொல்லலியா?

//வீட்டுக்கு விடு தெய்வம்//
ஸேம் பிளட்!! ஆமா, இது நல்ல விஷயம்தானே, இதுக்கேன் (ஆண்கள்)எல்லாரும் பின்னூட்டத்தில வருத்தப்படுறாங்க? அர்ச்சனை போதாதோ?

அமுதா கிருஷ்ணா said...

இனிமேல் அம்மா வெங்காய சாம்பார் வைப்பாங்க? வீட்டிலே அர்ச்சனை சூப்பர்..
வீட்லயே சந்தோஷம் யாருக்கு வரும். திருப்தியான மனசுப்பா..

sujatha said...

/*பொங்கல் எங்கடி வைக்கப் போற?

வெண்கலப் பானைலதான். */
Kalakkiteenga Vidya... nalla satham pottu sirichitten :D :D

தராசு said...

//வீடே கோவில். கணவனே கண்கண்ட தெய்வம். தெய்வத்துக்கு தெனம் அர்ச்சனை நடக்குது. //

ரங்கமணிகளே சிலிர்த்தெழுங்கள்.

பா.ராஜாராம் said...

//விடு விடு. நல்ல விஷயங்களைப் பத்தி ரொம்ப நாள் பேசாம இருக்க முடியாது. அப்புறம் உனக்கு வெங்காய சாம்பார் ரெசிபி வேணுமா?//

:-)

'பரிவை' சே.குமார் said...

கடைசி சூப்பருங்கோ.

Madhav said...

டொக்.

RVS said...

யப்பாடி! டொக்... ;-)

T.V.ராதாகிருஷ்ணன் said...

:)))

முத்துலெட்சுமி/muthuletchumi said...

:)))

ஆயிஷா said...

:)))

Anisha Yunus said...

//இல்லடி சிறுகதைன்னு சப்ஜெக்ட் போட்டு அனுப்பினியே. அதுமட்டுமில்லன்னா இது கதைன்னே நான் நம்பிருக்கமாட்டேண்டி.//

உண்மைலயே உங்க தோழிக்கு உங்க மேல பொறாமை வித்யாக்கா... அதாவது, அது கதையில்ல, காவியம்னுதேன் தோணியிருக்கும், பட் அதை உங்ககிட்ட சொன்னா எங்கே நீங்க சுஜாதா லெவலுக்கு போயிடுவீங்களோன்னு பொறாமை.. அஆங்..

:))

ராமச்சந்திரன் said...

Neenga yappo Google Busla poneenga

சி.பி.செந்தில்குமார் said...

>
இல்லடி சிறுகதைன்னு சப்ஜெக்ட் போட்டு அனுப்பினியே. அதுமட்டுமில்லன்னா இது கதைன்னே நான் நம்பிருக்கமாட்டேண்டி. என்கிட்டருந்து எடுத்துட்டு போன புக்கெல்லாம் நீயே வச்சுக்கோ. ஆனா தயவுசெஞ்சு இப்படி கதை எழுதறன்னு என் உயிர எடுக்காத.

ஹா ஹா ஓப்பனா சொல்லீட்டீங்க

சி.பி.செந்தில்குமார் said...

>>>
வீடே கோவில். கணவனே கண்கண்ட தெய்வம். தெய்வத்துக்கு தெனம் அர்ச்சனை நடக்குது.

டெயிலியுமா? பாவம்

விக்னேஷ்வரி said...

உங்களை சுத்தியிருக்கறவங்க ரொம்ப பொறுமைசாலிகள் முக்கியமா மாம்ஸ். :)