March 8, 2011

தோத்துப் போனப்புறம்

இங்கு சிறந்த முறையில் ப்ரோகிதம் நடத்திதரப்படும் (திருமணங்களுக்கு மட்டும்)

-கலைஞர்
அறிவாலயம்
***************

இங்கு குறைந்த விலையில், 365 நாட்களும் ஓய்வுச் சுற்றுலா ஏற்பாடு செய்யப்படும்.

-செல்வி. ஜெயலலிதா
ஜெஜெ டூர்ஸ் அண்ட் ட்ராவல்ஸ்
போயஸ் கார்டன், கொடநாடு, சிறுதாவூர்
(எங்களுக்கு வேறெங்கும் கிளைகள் இல்லை)
***************

இங்கு சிறந்த முறையில் ஹை ஜம்ப், லாங் ஜம்ப் பயிற்சி அளிக்கப்படும். இருபது வருட அனுபவம் ஆய்ந்த ஆசிரியரின் மேற்பார்வையில் வகுப்புகள் எடுக்கப்படும்

-டாக்டர் இராமதாசு
தைலாபுரம் தோட்டம்
****************

ஆசைப்பட்ட பொருள் கிடைக்காமல் கை நழுவிப் போகும்போது ஏற்படும் ஏமாற்றத்தை தாங்கிக்கொள்ளும் மனப்பக்குவத்தை பெற இங்கு வகுப்புகள் எடுக்கப்படும். அதோடு அண்ணனை சமாளிப்பது எப்படி என்ற கோர்சும் இலவசமாக கற்றுத்தரப்படும்.

இலவுக் காத்த கிளி ஸ்டாலின்
முன்னாள் மேயர், எதிர்கால முதலமைச்சர்
ஆயிரம் விளக்கு
*****************

மீசையில் மண் ஓட்டினால் மீசைக்கு பாதிப்பு வராமல் துடைப்பது, மடக்கி முறுக்கு மீசை வளர்ப்பது முதல் மீசைக்கென்றே தனித்துவமாக ஆரம்பிக்கப்பட்ட பயிற்சி பட்டறை.

திருமாவளவன்
சிறுத்தைக்குட்டி பயிற்சி பட்டறை
கொழும்பு ஏர்போர்ட்
******************

இங்கு சுத்தமான, சுவையான கூட்டு வகைகள் சப்ளை செய்யப்படும்

கேப்டன் கேட்டரிங் சர்வீஸ்
******************

அமைதியான குளத்தில் குவா குவா எனக் கத்தியபடியே தவளைக்கல் எறிவது எப்படி, வாயாலேயே வடை சுடுவது எப்படி போன்ற பராம்பரியமிக்க விளையாட்டுகள் இங்கு பயிற்றுவிக்கப்படும்

-ஈ.வி.கேஸ் இளங்கோவன் & கோ
- யுவராஜா & கோ

பி.கு : மேற்குறிப்பிட்டுள்ள இரு கம்பேனிகளுக்கும் தலைவர் ஒருவர்தான். ஆனால் கம்பேனி வேற வேற.
***************

வெறிச்சோவென்றிருக்கும் ஆஃபிஸில், பயமில்லாமல் தைரியமாய் உட்கார்ந்து ஈ ஓட்டுவது எப்படி என்ற கலை இங்கு பயிற்றுவிக்கப்படும். பயிற்சிக்கு பணம் கட்டுபவர்களுக்கு கால் கிலோ விபூதியும், குங்குமமும் இனாமாக வழங்கப்படும்.

-கமலாலயம்
***************

எங்கள் கார்டனில் தோப்பைப் போல காட்சியளிக்கும் ஒத்தை மரம், ஒரு இலை கூட இல்லாத மரம், கண்ணீர் வடிக்கும் மரம், போன்ற அரிய வகை மரங்கள் விற்பனைக்கு

வைகோ
தாயகம்
***************

பிஸினசில் நன்றாக லாபம் பார்த்த பின்னர், குடைச்சல் கொடுத்து, பார்ட்னரே தங்களை வெளியே துரத்துவது எப்படி? தகுதிக்கு மீறி ஆசைப்படுவது எப்படி? போன்ற வாழ்க்கைக்கு உபயோகமான பயிற்சிகள் அளிக்கப்படும்.

-காங்கிரஸ் தலைமை
*****************

எல்லாவிதமான பக்கவாத்தியங்களும் இங்கு சிறந்த முறையில் பயிற்றுவிக்கப்படும். ஸ்ருதி சுத்தமாய் ஜால்ரா அடிப்பதில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களால் நடத்தப்படும் வகுப்புகள்.

வீரமணி, சுப.வீ, தங்கபாலு
********************

18 comments:

Raju said...

கடைசி மையத்தில் நிறைய தலைகள் மிஸ்ஸிங்!

Anonymous said...

ஹா ஹா.. எல்லாமே உள்குத்தெல்லாம் இல்ல, டைரெக்டா வெளிக்குத்து தான்! :))

CS. Mohan Kumar said...

அப்ப யாரு தான் ஜெயிபாங்கன்னு சொல்றீங்க?

R. Gopi said...

சென்னையில் இன்று ஆட்டோ கிடைக்காது:-)

விஜி said...

:)))))))))))))))))))))))

'பரிவை' சே.குமார் said...

இன்னும் சில தலைகள் காணாமல் போய்விட்டார்கள்...
சு.சாமிய காணோம்?

இருந்தும் சிரிக்க வைத்த பதிவு.

ஹுஸைனம்மா said...

தேர்தல் முடிஞ்சதும், சம்பந்தப்பட்டவங்ககிட்ட கன்ஸல்டிங் ஃபீஸ் வாங்க மறக்காதீங்க!! (ஃபீஸ் ருபீயிலயும் கிடைக்கலாம், டாலர்லயும் கிடைக்கலாம், இல்ல கடப்பாரை கம்புலயும் கிடைக்கலாம்..) :-)))))

தினேஷ் said...

good one :))

Chitra said...

எப்பா... ஒரு முடிவோடு தான் களத்தில் இறங்கி இருக்கீங்க... கலக்கல்!

Raghu said...

ஸ்டாலின், இளங்கோவன் & கோ கமெண்ட் சூப்பர் :))

தக்குடு said...

டாடா சுமோவிலும் ஆட்டோவிலும் ஆட்கள் துரத்தும் போது கையில் சிக்காமல் சந்து பொந்துகளில் புகுந்து ஓடுவதற்கான பயிற்சி பதிவர் வித்யாவால் வெகுவிரைவில் வழங்கப்படும்....;)

"உழவன்" "Uzhavan" said...

இந்த பக்கவாத்தியங்க இல்லாத ஏரியாவே இல்ல :-)

RVS said...

அதென்ன காமடி மாதிரின்னு லேபல் போட்ருக்கீங்க.... அடிதடின்னு போடுங்க.. பிரமாதமா இருக்கும். இருந்தது..

யார் யார் எப்படி எப்படி பஞ்சம் பிழைக்கலாம் என்பதற்கு இங்கு இலவச ஆலோசனைகள் வழங்கப்படும். அணுக வேண்டிய முகவரி...
வித்யா ஸ்க்ரிப்பில்ஸ்,
ப்ளாக் நகர்,
கூகிள் போஸ்ட்,
இந்தியா இணையம்.

jayakumar said...

nice...plz visit my blog also

அமுதா கிருஷ்ணா said...

நச்..

DINESH said...

ஹ்ம்ம்ம்ம்.....கலக்குங்க....யாரயும் விடுரதில்ல போல...

விக்னேஷ்வரி said...

செம லொள்ளு.

Anisha Yunus said...

தானைத்தலைவர் சுப்பிரமணிய ஸ்வாமியைப் பற்றி எதுவுமே எழுதாததால் வெளிநடப்பு செய்கிறேன்

ஹி ஹி ஹி :))