March 14, 2011

வித்யா ரம்பம் கரிஷ்யாமி

பெயர்க்காரணம் பற்றிய தொடர்பதிவிற்கு கோபி அழைப்பு விடுத்திருந்தார். என்னுடைய பெயருக்கான காரணம் பெரிய வரலாற்றுச் சம்பவமா இல்லைன்னாலும் தொடர்பதிவு எழுதி ரொம்ப நாளாச்சே. இத சாக்கா வச்சி மொக்கையப் போடலாமேன்னு எழுதறேன். என்னையும் மதிச்சு எழுதச் சொன்னதுக்கு நன்றி கோபி:)

எனக்கு வித்யான்னு பெயர் வச்சது என் அத்தைதானாம். பெரிய பெரியப்பா/பெரியம்மா டீச்சர். ரெண்டாவது பெரியப்பா மிலிட்டரில இருந்தாரு. அவருக்கும் கிட்டத்தட்ட டீச்சர் போஸ்ட்தானாம். அத்தையும் மாமாவும் டீச்சர்ஸ். எங்கப்பாவும், சித்தப்பாவும் தான் டீச்சர் உத்யோகம் பார்க்காம வேற லைனுக்கு போனது. குடும்பத்துல பாதி பேர் பயிற்றுவிக்கும் பணில இருந்ததால் எனக்கு படிப்புக் கடவுளான சரஸ்வதியின் பெயரையே வச்சிட்டாங்க. சின்ன வயசில அம்மா சொல்லிக்கொடுத்த ஸ்லோகமான ”நமஸ்துப்யம் வரதே”வில் என் பெயரும் வருதேன்னு ரொம்ப பெருமையா இருக்கும். பெயருக்கேத்த மாதிரி படிப்புல நான் சூப்பர்ங்கறது இந்தப் பதிவுக்கு தேவையில்லாத விஷயம்:)

என்னுடையது unique பெயரெல்லாம் கிடையாது. தெருவுக்கு தெரு வித்யாங்கற பேர்ல யாராவது இருப்பாங்க. ஆனா இன்னைக்கு வரைக்கும் இன்னொரு வித்யாவால பெயர்க்குழப்பம் வந்ததேயில்லை. பள்ளியில், என் வகுப்பில் நான் ஒருத்திதான் வித்யா. கல்லூரியில் நிறைய வித்யாக்கள் இருந்தாலும் எல்லோரும் வேற வேற டிபார்ட்மெண்ட். அதனால் நோ ப்ராப்ளம். வேலைக்குப் போகும்போது ட்ரெய்னிங்கில் இன்னொரு வித்யா இருந்தாள். அவள் வித்யாலக்‌ஷ்மி. அதனால் அங்கேயும் குழப்பம் லேது.

பேரென்ன?

வித்யா

இனிஷியல்?

C

ஓஹ். ஸ்ரீ வித்யாவா?

இல்லைங்க C.வித்யா

அதான்மா ஸ்ரீ வித்யா தான நானும் சொல்றேன்.

ஐய்யோ சார். ஸ்ரீ இல்ல சார். C. C. இது வேலைக்காவது. நீங்க வித்யா சந்திரசேகரன்னே ரெஜிஸ்டர் பண்ணுங்க.

இப்படித்தான் C.Vidhyaவாக இருந்த நான் வித்யா சந்திரசேகரனானேன். அன்றிலிருந்து இன்று வரை, இனிமேலும் நான் வித்யா சந்திரசேகரன் தான். கல்யாணமான பின்பு நிறைய பெண்கள் கணவர் பெயரை சேர்த்துக்கொள்வதைப் பார்த்திருக்கிறேன். என் அம்மா உட்பட. என் மாமியார் வீட்டில் கூட “என்ன அப்பா பேரை எழுதற. ஹஸ்பெண்ட் பேர்தான எழுதனும்?” அப்படின்னு சொன்னாங்க. அப்படியெதுவும் ரூல் இருக்கா என்ன எனத் திருப்பிக் கேட்டேன். அதோடில்லாம ஜஸ்ட் லைக் தட் பெயரெல்லாம் மாத்திக்கமுடியாது. கெஸட்ல பதியனும். சர்ட்டிஃபிக்கேட்ல எல்லாம் என்ன பெயர் இருக்கோ அதுதான் கடைசி வரைக்கும் யூஸ் பண்ணனும். அதான் நல்லதுன்னு சொல்லி ஒரு வழியா சமாளிச்சேன்.

அவ்ளோதான் பெயர்காரணம், புராணமெல்லாம். எல்லாரும் வரிசைல வந்து என்கிட்ட ஆசிர்வாதம் வாங்கிட்டுப் போங்க. படிப்பு நல்லா வரும்:)

17 comments:

R. Gopi said...

\\இத சாக்கா வச்சி மொக்கையப் போடலாமேன்னு எழுதறேன். \\

:-)

\\பெயருக்கேத்த மாதிரி படிப்புல நான் சூப்பர்ங்கறது இந்தப் பதிவுக்கு தேவையில்லாத விஷயம்:)\\

மெய்யாலுமா? அப்போ நல்லா படிக்கிறது பத்தி ஒரு போஸ்ட் போடுங்க.

\\எல்லாரும் வரிசைல வந்து என்கிட்ட ஆசிர்வாதம் வாங்கிட்டுப் போங்க. படிப்பு நல்லா வரும்:)\\

செஞ்சுடறோம்:-)

விஜி said...

ம்ம்க்கும் :)))

CS. Mohan Kumar said...

Humorous.. as usual. Last para :)))

Yaathoramani.blogspot.com said...

படிப்புக்கு மட்டும் அல்ல
கலைக்கும் ஏன் பதிவுக்கும் கூட
அருளாசி வழங்கவேண்டியவள்
ஸ்ரீவித்யா தானே
சொல்லவேண்டியதை மிக அழகாக
சொல்லிப் போகும் உங்கள் பதிவு மிக அருமை
தொடர வாழ்த்துக்கள்

RVS said...

கையில வீணை வச்சுருப்பீங்களா? அட்லீஸ்ட் வாசிக்க தெரியுமா? இந்த ரெண்டில் ஒன்னு இர்ந்தாதான் உங்ககிட்ட ஆசீர்வாதம் வாங்கிப்போம். நன்றி. ;-))

cheena (சீனா) said...

இந்தப் பெயர் மாற்றம் படுத்தும் பாடு - எத்த்னை இடங்களீல் இடைஞ்சல்கள் - பெண்கள் இயன்ற வரை பெயர் மாற்றத்தினைத் தவிர்க்க வேண்டும்.

theja amma said...

பெயருக்கேத்த மாதிரி படிப்புல நான் சூப்பர்ங்கறது இந்தப் பதிவுக்கு தேவையில்லாத விஷயம்:) - சைக்கிள் கேப் ல ஆட்டோ ஓட்டிடீங்க போங்க , அருமை

எல் கே said...

//புராணமெல்லாம். எல்லாரும் வரிசைல வந்து என்கிட்ட ஆசிர்வாதம் வாங்கிட்டுப் போங்க. படிப்பு நல்லா வரும்://

ஆசிர்வாதம் பண்ணா நீங்க காசுத் தரணும். ஆயிரம் ரூபா நோட்டு எடுத்து வைத்துக்கொள்ளவும்.. மாலையில் வருகிறேன்

சாந்தி மாரியப்பன் said...

கலக்கல் :-))))

sakthi said...

குடும்பத்துல பாதி பேர் பயிற்றுவிக்கும் பணில இருந்ததால் எனக்கு படிப்புக் கடவுளான சரஸ்வதியின் பெயரையே வச்சிட்டாங்க

ஆஹா ::)))

'பரிவை' சே.குமார் said...

"வித்யா ரம்பம் கரிஷ்யாமி" - கலக்கல்

விக்னேஷ்வரி said...

தலைப்பை ரிப்பீட்டிக்கறேன்.

Raghu said...

//பெயருக்கேத்த மாதிரி படிப்புல நான் சூப்பர்ங்கறது இந்தப் பதிவுக்கு தேவையில்லாத விஷயம்//

அய்யய்ய! நீங்க படிப்ஸா? :)

அமுதா கிருஷ்ணா said...

அப்படியே என் பசங்களுக்கும் ஆசிர்வாதம் வேண்டும்.

Anonymous said...

//எல்லாரும் வரிசைல வந்து என்கிட்ட ஆசிர்வாதம் வாங்கிட்டுப் போங்க. படிப்பு நல்லா வரும்:)//

எனக்கு ரெண்டு "டிகிரி " பார்சல்! ;)

ஹுஸைனம்மா said...

//அப்படியெதுவும் ரூல் இருக்கா என்ன எனத் திருப்பிக் கேட்டேன். //

அதானே?

//வித்யா ரம்பம்//

அப்படின்னா என்ன?

Arul Miku Kollang Kondan Ayyanar kovilL.- said...

வித்ய ரம்பம் கரிஷ்யமே விக்திக் பஹது மேஷுதா.ஆரம்பமே நீ சரஸ்வதியின் அன்ஹரகும்பெற்றவள் என்பதை உணர்திவிட்டாய்.உண்மையில் உன்னிடம் ஆசீர்வாதம் வங்கதான் செய்யானும்,ஏன்ன உன்னுடைய எழுத்து நகச்சு வையுடன் எல்லாருக்கும் விரும்பும்படியாக இருக்கிறது.வாழ்க வளமுடன் மென் மேலும் நீண்ட ஆயுளுடன் எழுத்தில் சிறந்து வளர எல்லாம் வல்ல ஈசனை வேண்டுகிறேன் வாழ்த்துக்கள்
subburajpiramu@gmail.com