January 24, 2012

கடவுளுக்கு ஒரு கடிதம்

அன்பின் கடவுளுக்கு,

என்னைத் தெரியும்ன்னு நினைக்கிறேன். கண்டிப்பா தெரிஞ்சிருக்கும். ஏன்னா உன்னை அடிக்கடி கூப்பிடற ஆளுங்கள்ல நானும் ஒருத்தி. என்ன, கூப்பிடற தொனி கொஞ்சம் மாறிக்கிட்டேயிருக்கும். கீழ்வீட்டு அங்கிள் மொக்கை போட ஆரம்பிக்கும்போது ரொம்ப சன்னமான குரல்ல “கடவுளே என்னைக் காப்பாத்து” என் மென்மையாய் கெஞ்சுவது எனக்கே கூட கேக்கலைன்னாலும், உனக்கு கண்டிப்பா கேட்டிருக்கும். ஏன்னா நீ கடவுளாச்சே. அதே மாதிரி மாங்குமாங்குன்னு சாயம் போற துணியெல்லாம் மிஷின்ல போடாம கையால துவைச்சு போட்டு மூச்சிரைக்க ரெண்டு மாடி ஏறி காயவச்சிட்டு வரும்போது, உன்னோட இன்னொரு ஆல்டர் மேலருந்து தண்ணி ஊத்துவாரு பாரு அப்ப “கடவுளே என் மேல கருணையேயில்லையா” எனக் கோவப்படுவேன். உன்கிட்ட கோச்சுக்கிற உரிமை எனக்கில்லையா என்ன? ரொம்ப அசதியாருக்கே, பத்து நிமிஷம் படுத்துட்டு வரலாம்ன்னு போயிட்டு வர்ற கேப்புல, சமைக்கிறேன் பேர்வழின்னு எண்ணைய்/நெய்யெல்லாம் ஒன்னாக்கொட்டி, பத்து நிமிஷம் படுத்ததுக்கு தண்டனையா ஒரு மணி நேரம் வேலை வைக்கும் என் புள்ளையாண்டானைப் பார்த்து கோபத்துல “கட்ட்ட்ட்டவுளேஏஏஏஏ”ன்னு கத்துவேன். அவன் செஞ்சதுக்கு என்னைய ஏன் திட்றன்னு கேக்கறியா? குழந்தையும், தெய்வமும் ஒன்னில்லையா? அதான். நான் மட்டுமில்ல, சிலசமயம் என் ரங்ஸும் உன்னை கூப்பிடுவார். எப்பல்லாம் சாப்பாட்டு தட்டுல சப்பாத்தி விழுதோ அப்பல்லாம் “கடவுளே..மறுபடியும் சப்பாத்தியா” என்று அலுத்துக்கொள்வார். அதோடில்லாம உனக்கு படைக்கிற உணவெல்லாம் வீணாப் போயிருச்சுன்னா, சாப்பாட்ட பாழ்பண்ணிட்டானேன்னு உன்னை எல்லாரும் திட்டுவாங்கன்னு கர்ம சிரத்தையா அத்தனை பிரசாதத்தையும் சாப்பிட்டு உனக்கு நல்ல பேர் வாங்கிக் கொடுக்கிறேன். இந்த அறிமுகம் போதும்ன்னு நினைக்கிறேன். அதுவும் கடைசி ஒரு வரியிலயே நீ என்னை அடையாளம் கண்டிருப்ப. சரி இப்ப எதுக்கு இந்த சுய அறிமுகம்ன்னு கேட்கறியா? அது வேறொன்னுமில்ல கடவுளே. எனக்கு சில பல பிரச்சனைகளிருக்கு. அப்பப்ப அத உன் காதுல போட முயற்சிபண்ணாலும், நீ கண்டுக்கவே மாட்டேங்கற. அதான் ஒரு கடுதாசியப் போட்டு வைப்போம்ன்னு.

1. வர வர க்ளைமேட் ஜெயலலிதா மேடம் மூட் மாதிரி ஆகிட்டு வருது. வெயில் கொளுத்துது. அதே சமயம் வண்டில போனா சில்லுன்னு காத்தடிக்குது. திடீர் திடீர்ன்னு மழை பெய்யுது. முடியல கடவுளே. சிம்பிளா நான் துணி துவைக்கறன்னிக்கு மட்டும் ஒரு ரெண்டு மணி நேரத்துக்கு சுள்ளுன்னு வெயிலடிச்சா போதும். மத்த டைம்ல, கருகருன்னு மேகமூட்டமா இருந்தா எவ்ளோ நல்லாருக்கும்.

2. மேகமூட்டமா இருந்தாலும், பக்கோடா சாப்பிடனும்ன்னு தோணக்கூடாது. அப்படியே தோணி சாப்பிட்டாலும் வெயிட் போடக்கூடாது. முதல்ல சாப்பிட்டா வெயிட் போடும்ங்கற கான்செப்ட்ட மாத்தனும் கடவுளே. சாப்பிடலைன்னா தான் கன்னாபின்னான்னு வெயிட் போடனும். நீ மட்டும் வேளாவேளைக்கு நெய்ல செஞ்ச நெய்வேத்யத்த முழுங்கிட்டு இன்ஸ்டால் பண்ணும்போது இருந்தா மாதிரியே ஷேப் மெயிண்டெய்ன் செய்வ. நாங்க மட்டும் இத்தூனூண்டு ஸ்வீட் சாப்பிட்டாலே காத்தடிச்ச பலூன் மாதிரி ஊதிப்போகனுமா? என்ன நியாயம் இது? நானும் எத்தனை நாளைக்கு தான் பயந்து பயந்து சாக்லேட் கேக்க சாப்பிடறது. இந்த விஷயத்த உடனடியா கவனி. அடுத்த தபா இடுப்பு சதை பத்தின கவலை இல்லாம சாக்லேட் கேக்/ஐஸ்க்ரீம் சாப்பிடற மாதிரி வகை செய். சரியா?

3. இந்த இலக்கியவாதிங்க கையையும் வாயையும் கொஞ்சம் கட்டிடு தலைவா. தொல்லை தாங்க முடியல. மொக்கை போடக்கூடாதுங்கறாங்க. ஆக்கப்பூர்வமா இணையத்த பயன்படுத்தனுமாம். வெட்டி அரட்டை பண்ணக்கூடாதாம். ப்ரொடெக்டிவா இருக்கனுமாம். ஆஃபிஸ்லயே உருப்படியா வேலை செய்யமுடியலைன்னு தானே இங்க வந்து மொக்கை போடறோம். அதுவும் கூடாதுன்னா எப்படி?

4. அப்புறம் எல்லாம் குடும்ப இஸ்த்ரிகள் சார்பாவும் வழக்கமா வைக்கிற கோரிக்கை தான். கை சொடுக்கினா சமையல் முடிஞ்சிரனும். நறுக்கறது, தாளிக்கறது, வறுக்கறதுன்னு நாங்க வறுபடக்கூடாது. அதுக்கு ஏதாவது ஏற்பாடு செய். என்ன? அதுக்குதான் ரங்ஸ் இருக்காங்கங்கறியா? எங்க? வாயால தான் வடை சுடறாங்க.

இன்னும் கேக்க வேண்டியது எவ்ளோ இருக்கு. ஆனா பாரு அந்த வார்த்தைதான் கிடைக்க மாட்டேங்குது. ஆங். கடைசி விஷ்ஷா, பதிவெழுத மேட்டர் கிடைச்சவுடனேயே, மொத்த பதிவும் ஆட்டோமேட்டிக்கா தன்னைத் தானே எழுதிக்கனும். என்ன மாதிரி இந்த ஒரு பதிவ ஒரு மாசமா முக்கி முக்கி எழுதக்கூடாது. சரியா? இப்போதைக்கு இது போதும். அடுத்த கடுதாசில மீட் பண்றேன். வர்ட்டா?

19 comments:

CS. Mohan Kumar said...

Liked these two. They are too good.

//முதல்ல சாப்பிட்டா வெயிட் போடும்ங்கற கான்செப்ட்ட மாத்தனும் கடவுளே. சாப்பிடலைன்னா தான் கன்னாபின்னான்னு வெயிட் போடனும்.//

//பதிவெழுத மேட்டர் கிடைச்சவுடனேயே, மொத்த பதிவும் ஆட்டோமேட்டிக்கா தன்னைத் தானே எழுதிக்கனும். //

Unknown said...

அந்த நாலாவது பாயின்ட் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு.கடவுள் இந்த கடிதத்தை பார்த்துட்டு ஏதாவது நல்லது பண்ணினா சரி.

Unknown said...

//கர்ம சிரத்தையா அத்தனை பிரசாதத்தையும் சாப்பிட்டு உனக்கு நல்ல பேர் வாங்கிக் கொடுக்கிறேன்.//

இதைக் கொஞ்சம் கொறைச்சு, மத்தவங்களுக்கும் கிடைக்கப் பண்ணினா, கடவுள் கடுதாசியப் படிக்க நெறைய சான்ஸ் இருக்கு :))

ஹுஸைனம்மா said...

அய்யோ வித்யா, கையைக் கொடுங்க. அப்படியே நான் சொல்லச் சொல்ல நீங்க எழுதுன மாதிரி இருக்கு!!

//சாயம் போற துணியெல்லாம் மிஷின்ல போடாம கையால துவைச்சு//

இந்தக் கொடுமையெல்லாம் யாருக்குத் தெரியுது சொல்லுங்க? ஆன்னா ஊன்னா, நீயென்ன கையாலயா துவைக்கிற, மெஷின்லதான துவக்கிற; அம்மியிலயா அரைக்கிற, மிக்ஸிதானேன்னு பின்பாட்டு மட்டும் நடக்கும்!! இதுக்காகவே துணிக்கடைக்குப் போனா டிஸைன் பத்திலாம் கவலைப்படுறது இல்ல. சாயம் போகுமான்னு முதல் கேள்வி!!

//முதல்ல சாப்பிட்டா வெயிட் போடும்ங்கற கான்செப்ட்ட மாத்தனும்//
சாப்பிடவா, சும்மா கண்ணாலப் பாத்தாலே அரைக் கிலோ கூடிடுதுங்க எங்களுக்கெல்லாம்!! (ஆனா, இதுல ஒரு நன்மை என்னன்னா, வெயிட் கூடும்னு சாக்கு சொல்லியே சமையல் வேலயக் குறைச்சுக்கலாம்.. :-))) )

//கை சொடுக்கினா சமையல் முடிஞ்சிரனும்//
உங்க கஷ்டம் புரியுது. பட்ஜெட்டைக் காட்டி, சாப்பாட்டுக் கடை பக்கமே போக முடியாமப் பண்ணிட்டாங்களே நம்மளை!!

CS. Mohan Kumar said...

தமிழ் மணத்தில் சேக்க கூட முடியாம எழுத்தாளர் பிசி. நான் தான் சேத்து ஓட்டெல்லாம் போட்டுருக்கேன்.

ஹுசைனமா: கலக்குறீங்க

Raghu said...

தலைப்பை பார்த்தவுடன் ஏதாவது செண்டியா இருக்கும்னு நினைச்சு பயந்துட்டேன். பட், பதிவு முழுக்க உங்க ஃப்ளோ!

//முதல்ல சாப்பிட்டா வெயிட் போடும்ங்கற கான்செப்ட்ட மாத்தனும் கடவுளே//

இந்த கோரிக்கையை நானும் ‘வயலண்ட்டா’ ஆதரிக்கிறேன். நமக்கு புடிச்ச அயிட்டத்தை, வெய்ட் போட்டுடுவோமோன்னு பயந்து பயந்தே சாப்பிடவேண்டியதாயிருக்கு. ஃப்ரெண்ட்ஸ்ல, பென்சில் சைஸ்ல இருக்கறவன்லாம், அதே அயிட்டத்தை வெளுத்து கட்டி............கடுப்பேத்தறாங்க மை லார்ட் :(

Yaathoramani.blogspot.com said...

பதிவர்களுக்கு இந்த மொக்கைகடிதம் பிடிக்குதோ இல்லையோ
கடவுளுக்கு நிச்சயம் பிடிக்கும்
அவரும் பாவம் சீரியசான பதிவாப்படிச்சு நொந்து போய் இருப்பார்
அடிக்கடி இப்படி எழுதுங்க
ரொம்பப் பிடிச்சிருக்கு

விஜி said...

ஜூப்பரு :))

முத்துலெட்சுமி/muthuletchumi said...

பதில் கிதில் வந்துச்சுன்னா சொல்லுங்க :)
லெட்டர் என்னவோ நல்லாத்தான் எழுதி இருக்கீங்க..அட்ரஸ் சரியா எழுதிப்போட்டீங்களா..

விச்சு said...

உங்க கஷ்டத்தை கடவுள்கிட்ட கொட்டிட்டீங்க. இது எல்லா பெண்களும் நினைக்ககூடியதுதான். நிச்சயம் மொக்கையல்ல.

சாந்தி மாரியப்பன் said...

ஜூப்பரு.. பதில் வந்தா சொல்லுங்க :-)))))

Chitra said...

மேகமூட்டமா இருந்தாலும், பக்கோடா சாப்பிடனும்ன்னு தோணக்கூடாது. அப்படியே தோணி சாப்பிட்டாலும் வெயிட் போடக்கூடாது. முதல்ல சாப்பிட்டா வெயிட் போடும்ங்கற கான்செப்ட்ட மாத்தனும் கடவுளே.


..... இதுக்கு எந்த Petition form ல கையெழுத்து போடணும் சொல்லுங்க, மேடம்? ஒரு கூட்டமே இந்த வரத்துக்காக காத்து நிற்குது.

Porkodi (பொற்கொடி) said...

ஹிஹிஹி ஹைய்யோ அம்மா சூப்பரு அழுதுகிட்டே சிரிச்சு மாளலை! அதுவும் சாப்பாடு.. ஒய் மை லார்ட் ஒய்ய்ய்ய்?

Vidhya Chandrasekaran said...

நன்றி மோகன் குமார்.
நன்றி ஜிஜி.
நன்றி ராஜா.

நன்றி ஹுஸைனம்மா (வாங்க வாங்க. நம்ம புரட்சி போராட்டம் நடத்தலாம்:))

நன்றி மோகன் குமார் (தமிழ்மணம் ஐடி மறந்துபோச்சு. ரெண்டாவது திரட்டி எதுலயும் இணைக்க வேண்டாம்ன்னு பார்க்கிறேன். இருந்தாலும் உங்க முயற்சிக்கு நன்றிகள்).

நன்றி ர‌கு (வெல்கம் டு தி கிளப்) .

Vidhya Chandrasekaran said...

நன்றி ரமணி.
நன்றி விஜி.
நன்றி முத்துலெட்சுமி.
நன்றி விச்சு.
நன்றி அமைதிச்சாரல்.
நன்றி சித்ரா.

நன்றி பொற்கொடி (யூ மீன் ஆனந்த கண்ணீர்?)

அமுதா கிருஷ்ணா said...

சேம் ப்ளட்.

பின்னோக்கி said...

கொஞ்சம் சீரியசா ஆரம்பித்து ஜோக்கான பதிவு. ஜெ உவமை அருமை. சாப்பிட்டாலும் வெயிட் போடாத வரம்.. ஒரு பார்சல்

Unknown said...

எங்கங்க மேடம் கடவுளுக்கு வயசாயிடுச்சு என நினைக்கிறேன்.கண்ணும் தெரியமாட்டேன் கிறது ,காதும் கேட்க மாட்டேன்கிறது ஆனாலும் உங்க லெட்டரை உதவியாளரை வச்சு படிச்சுக்குவார்.

Vidhya Chandrasekaran said...

நன்றி அமுதா கிருஷ்ணா.
நன்றி பின்னோக்கி.
நன்றி அலி அஹமது.