February 6, 2012

Scribblings 06-02-2012

இணைய நண்பர்கள் சிலர் சேர்ந்து கல்வி சம்பந்தமான உதவிகளை செய்யத் திட்டமிட்டு, என்ன செய்யலாம் என்று குழுமம் ஆரம்பித்து உதவி செய்ய ஆரம்பித்தோம். அதன் ஒரு அங்கமாக புற்றுநோய் விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்த நேசம் என்றொரு அமைப்பு தொடங்கப்பட்டுள்ளது. அதற்காக தொடங்கப்பட்ட தளம் இங்கே

போட்டிக்காக அல்லாமல் புற்றுநோய் குறித்த ஒரு கட்டுரையும், அனுபவப் பகிர்வு ஒன்றும் எழுத வேண்டுமென்ற எண்ணம் இருந்துகொண்டே இருக்கிறது. நேரமின்மையோடு என் சோம்பேறித்தனமும் சேர்ந்து அதற்கான முயற்சிகளை மேற்கொள்ளாமலேயே இருக்கின்றேன். கூடிய விரைவில் எழுதி வலையேற்ற வேண்டும்.
********************

இரு வாரங்களுக்கு முன்பு வண்டலூர் சென்றிருந்தோம். பேட்டரி காரில் சுற்றிப் பார்க்க போனபோது கூட வந்த ஒரு குடும்பத்தின் செய்கைகள் எரிச்சலைடைய செய்வதாக இருந்தது. ப்ளாஸ்டிக் பாட்டில்களை வண்டியிலிருந்து தூக்கி எறிவதும், மிருகங்களின் கூண்டருகே செல்லும்போது கத்தி கூச்சல் போடுவதும் (கவனத்தை ஈர்க்கறாங்களாமாம்) என இம்சை பண்ணிக்கொண்டிருந்தார்கள். உச்சபட்சமாக சில இடங்களில் (மான், வெள்ளைபுலி, சிறுத்தை) மிருகங்களை நோக்கி சிப்ஸ், பிஸ்கெட் போன்றவற்றை தூக்கியெறிந்தனர். இந்த மாதிரி உணவுகளை மிருகங்களுக்கு கொடுக்காதீங்க என சொன்னபோது வழக்கமான “உன் வேலையப் பார்த்துகிட்டு போ”ங்கற பதில் தான் கிடைச்சது. எங்களுடன் வந்த இன்னொருவர், இப்ப நீங்க அமைதியா வரலன்னா, நான் போய் இன்சார்ஜ்கிட்ட கம்ப்ளெய்ண்ட் பண்ணிடுவேன் என சொன்னதும் தான் அமைதியானார்கள். இதை முதல்லயே செஞ்சிருக்கலாமோன்னு பேசிகிட்டு வந்தோம். இன்னொரு குடும்பம் செம்ம ஜாலியாக கமெண்ட் பாஸ் பண்ணிக்கொண்டு வந்தார்கள். குறிப்பாக, யானைகள் பகுதியை கடந்து ஓரிரு நிமிடங்கள் வண்டியை நிறுத்தினர். திரும்ப அனைவரும் வண்டியில் ஏறும்போது குடும்பத் தலைவர் குடும்பத்தினரிடம், “சின்ன யானை வருது பாருங்க” என்றார். எல்லோரும் ஆர்வமாய் எங்கே எனப் பார்க்க, அவரோ “குட்டியானை வண்டில ஏறி உட்கார்ந்திருச்சு” என்றார். அவர் மனைவியைத்தான் குறிப்பிட்டார் என பின்னர் தான் புரிந்தது. எல்லாரும் சிரிப்பை அடக்கிக்கொண்டாலும், அவருக்கு கிடைக்கவேண்டியது கிடைத்தது:)
***************

சென்னையிலிருந்து, திருவள்ளூர் வழியாக திருத்தணி செல்லும்போது கனகம்மாசத்திரம் என்ற ஒரு ஊர் வரும். அந்த ஊரின் மெயின் ரோட், ஒருபுறம் ஆந்திரா மாநில எல்லைக்குட்பட்டதாகவும், மறுபுறம் தமிழ்நாடு எல்லைக்குட்பட்டதாகவுமிருக்கிறது. ஆந்திர எல்லைக்குட்பட்டு வரும் பக்கத்தில், ப்ரைவேட் ஒயின்ஷாப் கடைகள் வரிசைகட்டி நிற்கின்றன. விலையும் மலிவாம். உதாரணத்திற்கு டாஸ்மாக்கில் குவார்ட்டர் 65ரூபாய் என்றால், இங்குள்ள கடைகளில் 25ரூபாய்க்கி கிடைக்கிறதாம். விலைமலிவாக இருப்பதால், இந்த ஊரின் டாஸ்மாக்கில் சேல்ஸ் இல்லையென்கிறார்கள். இம்மாதிரியாய் தமிழ்நாடு - ஆந்திரா பார்டர்கள் அருகருகே இருக்கும் மற்றொரு இடம் ஆர்கேபட்டு - பள்ளிபட்டு இடையே இருக்கிறதாம். இப்ப எதுக்கு இந்த தகவல் என்கிறீர்களா? சும்மா குடிமகன்களின் ஜெனரல் நாலேட்ஜை வளர்ப்பதற்காக. சீப்பான சரக்கிற்காக பாண்டி வரைக்கும் போகவேண்டாம் பாருங்கள்:):)
***************

அப்பா ரிட்டையராகி நான்கு மாதங்களாகிறது. நான்கு வருடங்களுக்கு முன்னர் அப்பா வேலை செய்த ஊரிற்கு ஒரு பெர்சனல் வேலையாக செல்லவேண்டியிருந்தது. அப்பாவிடம் வேலை செய்த ஒருவரை அழைத்து சில விவரங்கள் கேட்டார் அப்பா. அங்கு சென்றபோது, அந்தநபர் அத்தனை முன்னேற்பாடுகளையும் செய்ததோடில்லாமல், வேலை முடியும்வரை கூடவே இருந்தார். உங்களுக்குத்தான் சிரமம் என்றதும், அப்பாவிற்காக இதைக்கூட செய்யலைன்னா எப்படி என சொல்லியதோடில்லாமல், அப்பாவிடம் வேலை பார்த்த அனுபவங்களை பெருமையாக கூறினார். அப்பாவை போல ஒரு அதிகாரியை பார்த்ததில்லை என சொன்னபோது எங்களுக்கு பெருமையாக இருந்தது. நான்கு வருடங்களுக்கும் முன்னர் அதிகாரியாய் இருந்தவருக்கு, அதுவும் இப்போது பணிஓய்வு பெற்றவருக்கு உதவ வேண்டுமென்ற அவசியம் அவருக்கு இல்லை. அப்பாவை சம்பாதிக்க தெரியாதவர் என உறவுகளும், சுற்றத்தாரும் சொல்லக்கேட்டிருக்கேன். இன்று அவர்களையெல்லாம் அழைத்து எங்க அப்பா சம்பாதிச்சிருக்கறத பாருங்க என காட்ட வேண்டும்போலிருந்தது. I'm proud of you dad. Love you.
************

ட்விட்டர் கார்னர்

கேப்டனின் அந்நியன் அவதாரம் நிகழ்ந்த மறுநாள், என் ட்விட்ஸ் சில

ஸ்டாலின் டு விஜயகாந்த் : மாமா நோட்ஸ் எடுத்துக்கோ. அப்படியே கையில சரக்கு எடுத்துக்கோ. இப்ப சரியா வாசி. பப்பாம் பப்பாம் பப்பாம் பபபாம்.

நல்லவேளை கேப்டனுக்கு சுவத்தோரமா சீட் குடுக்கல. இல்லாட்டி லெஃப்ட் லெக்க சுவத்துல கொடுத்து சுழட்டி சுழட்டி அடிச்சிருப்பாரு.

கேப்டன் ஸ்டேடஸ் மெசேஜ் : ஒவ்வொரு பொண்ணுக்கும் ஒவ்வொரு ஃபீலிங்ஸ். மச்சி ஒரு குவாட்டர் சொல்லேன்.

17 comments:

ராம்ஜி_யாஹூ said...

maturity improveness

சி.பி.செந்தில்குமார் said...

அடடா!!

சி.பி.செந்தில்குமார் said...

>>Your comment has been saved and will be visible after blog owner approval.

ஹி ஹி பிரபல பதிவர் போல!!

சி.பி.செந்தில்குமார் said...

>>சென்னையிலிருந்து, திருவள்ளூர் வழியாக திருத்தணி செல்லும்போது கனகம்மாசத்திரம் என்ற ஒரு ஊர் வரும்.

கனகா அம்மா சத்திரம் = தேவிகா சத்திரம்? ஹி ஹி

Cable சங்கர் said...

சே.. என்ன இப்படி நினைச்சிட்டீங்க.. சீப்பா இருக்கிறதுக்காக பாண்டி போறதுல்ல.. நல்ல குவாலிட்டிக்காத்தான்.))

CS. Mohan Kumar said...

கனகம்மாசத்திரம் & Captain

:))))

Vetri said...

I like the post very much!

Porkodi (பொற்கொடி) said...

congratulations on the first point you've written :)

Porkodi (பொற்கொடி) said...

ட்வீட் எல்லாம் அதிபயங்கரமா இருக்கு..? நல்லவேளை நான் தப்பிச்சேன்!

Raghu said...

//நல்லவேளை கேப்டனுக்கு சுவத்தோரமா சீட் குடுக்கல. இல்லாட்டி லெஃப்ட் லெக்க சுவத்துல கொடுத்து சுழட்டி சுழட்டி அடிச்சிருப்பாரு//

சூப்பர் :)))))))))

வண்டலூர் - சில சமயம் பேருந்தில் போகும்போது, பக்கத்தில் உட்கார்ந்துகொண்டு மொபைலில் சத்தமாக பேசுபவர்களை நினைத்தால் எரிச்சலாக இருக்கும். நாமும் சும்மானாச்சுக்கும் மொபைல் எடுத்து அவர் டோனிலேயே கத்தலாமா என்று கூட தோன்றியிருக்கிறது.

pudugaithendral said...

வழக்கம்போல ரசித்தேன். :))

Bala said...

//நல்லவேளை கேப்டனுக்கு சுவத்தோரமா சீட் குடுக்கல. இல்லாட்டி லெஃப்ட் லெக்க சுவத்துல கொடுத்து சுழட்டி சுழட்டி அடிச்சிருப்பாரு//

சூப்பர் :))))))))) //

Repeat...... :)

Unknown said...

ட்வீட்டுகள் சூப்பர்

Vidhya Chandrasekaran said...

நன்றி ராம்ஜி_யாஹூ.
நன்றி செந்தில்குமார்.
நன்றி கேபிள் சங்கர்.
நன்றி மோகன் குமார்.
நன்றி வெற்றி.
நன்றி பொற்கொடி.
நன்றி ர‌கு.
நன்றி கலா அக்கா.
நன்றி முகில்.
நன்றி ஜிஜி.

ஹுஸைனம்மா said...

//புற்றுநோய் குறித்த ஒரு கட்டுரையும், அனுபவப் பகிர்வு ஒன்றும் //
சீக்கிரம்....

//அவர் மனைவியைத்தான் குறிப்பிட்டார் //

நமக்கு சிரிப்பு வருகிறது. அந்த மனைவி இடத்தில் நாம் இருந்தால்...? :-(((

//விலையும் மலிவாம்.//
அது இருக்கட்டும். க்வாலிட்டி எப்படி? ஐ மீன், எப்படியாம்?

//I'm proud of you dad//
அடிக்கடி நானும் சொல்லிக் கொள்வது. ஆனால், ஒருமுறையாவது என் அப்பாவை அல்லது மகனை ”I'm proud of you” என்று என்னைப் பார்த்துச் சொல்ல வைப்பேனா என்றுதான் தெரியவில்லை.... (ரொம்ப ஃபீலீங் ஆவுறேனோ?...)

//கேப்டனின் அந்நியன் அவதாரம்//
அவர் என்னிக்கு அம்பியா இருந்தார்? அப்படி அம்பி ”மாதிரி” இருக்கும்போதுகூட அந்நியனின் டூப் மாதிரிதான் இருப்பார்!! :-)))

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

அப்பாவை பற்றிய நெகிழ்வான விஷயம் சூப்பர்... எல்லா பொண்ணுங்களுக்கும் முதல் ஹீரோ அப்பா'தான்னு சொல்றது ரெம்ப கரெக்ட்...;)

Nice scribblings... enjoyed...;)

Vidhya Chandrasekaran said...

நன்றி ஹுஸைனம்மா (வாஸ்தவம்தான். நானருந்தா ருத்ரதாண்டவம் ஆடியிருப்பேன்.)

நன்றி அப்பாவி தங்கமணி.