March 5, 2012

வருது வருது...விருது விருது..

நித்திலம் சிப்பிக்குள் முத்து தளத்தில் எழுதி வரும் சங்கரி மேடம் ஏதோ பெரிய மனசு பண்ணி நம்மையும் ஒரு ஆளா மதிச்சுஎனக்கு Versatile Blogger விருது தந்திருக்காங்க. ரொம்ப நன்றி மேடம். சந்தோஷத்தை பகிர்ந்துக்கிறதுதானே முறை. அதன்படி இந்த விருதை நான் பகிர்ந்துக்கப்போற மக்கள் இதோ. (ஒரே ஒரு விருதுதாங்கறதால கொஞ்ச பேருக்கு தான் டிஸ்ட்ரிப்யூட் பண்ண முடியும்:))))

எப்படி இவரால மட்டும் இப்படி அசுரத்தனமா படிக்க இல்லல்ல வாசிக்க முடியுதுன்னு எனக்கு ரொம்ப நாளா சந்தேகம். கோபி ஆரம்பத்துல நல்ல புள்ளையா நம்மள மாதிரியே மொக்கை போட்டுக்கிட்டிருந்தாரு. அப்புறம் என்ன ஆச்சோ தெரியல. ஒரே இலக்கியமா போட்டு தாக்கறாரு. இவர் படிக்கறதோடில்லாம அந்த புத்தகத்துக்கெல்லாம் விமர்சனம் வேற எழுதறாரு. ஒருவேளை விமர்சனம் எழுதறதுக்குன்னே படிப்பாரா இருக்கும்:)

சயிண்டிஸ்ட் என்று ப்ளஸ்ர்களால் அழைக்கப்படும் முரளிகண்ணன். சினிமா முதற்கொண்டு இவரின் அநேக பதிவுகளிலும் ஒரு டீப் அனாலிஸிஸ் இருக்கும். சமீபத்தில் இவர் எழுதிய மதுரை ஏரியா பூக்காரர்களைப் பற்றிய பதிவைப் படித்து பாருங்கள்.

மனதில் பட்டதை பொதுவில் தயங்காமல் சொல்லுவதற்கு ஒரு கட்ஸ் வேண்டும். அது கவிதாவிற்கு நிறையவே இருக்கிறது. மல்ட்டிப்பிள் ஸ்ப்லிட் பெர்ஸனாலிட்டியால் பாதிக்கப்பட்டிருக்கும் இவரின் ஆல்டர்களில் அணில்குட்டி ரொம்பவே ஃபேமஸ்:)))) இந்த விருதுக்கு முக்கியமாய் இன்னொரு காரணமும் இருக்கிறது. ஹி ஹி. புள்ளையாண்டானிடம் பல்பு வாங்குவதில் எனக்கு சீனியர்:) இந்த விஷயத்தில் இன்னொரு சீனியரான விஜிக்கும் இந்த விருதில் தம்மாத்துண்டு பிச்சிக் கொடுக்கப்படுகிறது:)

நம்மளமாதிரியே ப்ளாக்ல கலந்து கட்டி பதிவு போடறதால ஹூஸைனம்மாக்கும் இந்த விருதுல கொஞ்சம் போய் சேருது. இவங்களோட சப்பாத்தி டேஸ், டிரங்கு பெட்டி சீரிஸ் எல்லாம் என்னோட ஃபேவரிட்.

ஏற்கனவே சொன்ன மாதிரி ஒரே ஒரு விருதுல இம்புட்டு தான் ஷேர் பண்ணிக்க முடியும். அடுத்த தபா, இன்னும் நிறைய ஆளுங்களுக்கு பகிர்ந்து கொடுக்கலாம்.

இப்போ எனக்கு பிடிச்ச ஏழு விஷயங்களை பட்டியலிடனுமாம்.

1. நான் - ஆமாங்க. எனக்கு என்னை ரொம்ப பிடிக்கும். எனக்கே என்னை பிடிக்கலைன்னா, வேற யாருக்கு பிடிக்கப்போவுது சொல்லுங்க:))

2. ஜூனியர் - கடந்த நான்கரை வருடங்களாய் எனக்கு புதுபுது விஷயங்களை ரொம்ப சிம்பிளா சொல்லி தந்துகிட்டிருக்காரு. என்னோட முன்கோபம், பொறுமையின்மை போன்ற நிறைய விஷயங்களில் பெரும் மாற்றம் ஜூனியரால். ஐ லவ் யூ டா குட்டி.

3. நண்பர்கள் - என் நட்பு வட்டம் மிகப் பெரியதெல்லாம் இல்லை. ஸ்கூல், காலேஜ், (எக்ஸ்)கலீக்ஸ் என சில நபர்களை மட்டுமே கொண்டதுதான். ஆனால் அவர்களால் அடையும் மகிழ்ச்சி எல்லையில்லாதது. நிறைய விஷயங்களில் எனக்கு உறுதுணையாக இருந்து, சில விஷயங்களில் கண்டித்து திருத்தி, துவளும்போதெல்லாம் தோள்கொடுத்து உற்சாகப்படுத்துவது என் நண்பர்கள் தான். பத்தாண்டுக்கும் மேலாம் நட்பு, குடும்ப உறவுகளுக்குப் பின்னும் தொடர்வது மகிழ்ச்சியாக இருக்கிறது.

4. இசை - “இன்னிசை மட்டும் இல்லையென்றால் நான் என்றோ என்றோ இறந்திருப்பேன்” என ஸ்வர்ணலதாவின் குரலில் ஒலிக்கும் இந்த பாடல் வரிகள் எனக்கு மிகப் பொருந்தும். பாட்டு கேட்டுக்கொண்டேயிருப்பது எனது பழக்கம். இந்த இசையமைப்பாளர் தான் பிடிக்குமென்றில்லாமல், நன்றாக இசையமைக்கு யாரையும் பிடிக்கும்.

5. சாப்பாடு - ஹி ஹி. சொல்லவே வேண்டாம். இன்ஃபாக்ட் இதான் முதல்ல வந்திருக்கனும். இது ஒன்னும் தரவரிசை இல்லைங்கறதால, இப்ப குறிப்பிடறேன். விதவிதமா, வாய்க்கு ருசியா சாப்பிடனும். மனுஷன் ஆடி ஓடி கஷ்டப்பட்டு சம்பாரிக்கறதெல்லாம் எதுக்கு? இதுக்குதானே. அதுல ஏன் குறை வைப்பானேன்:)

6. தூக்கம் - எந்த தொந்தரவும் இல்லாம, அமைதியான சூழல், நானா முழிச்சிக்கிற வரைக்கும் தூங்கறது எனக்கு ரொம்ப பிடிக்கும். ஏற்கனவே அது முடியலைன்னு இங்க புலம்பிருக்கேன். எப்படியாவது ஞாயிற்றுக்கிழமைகளிலாவது என் இஷ்டம் போல தூங்கிடுவேன். கும்பகர்ணின் வம்சாவளி டிஎன்ஏ ஏதாவது எனக்கு இருக்கான்னு செக் பண்ணனும்ன்னு ரங்ஸ் கிண்டல் பண்ணுவார்:)

7. திடீர்ன்னு எதையாவது செய்ய சொன்னா, சமாளிக்கறதுக்காண்டி எப்படியோ மேனேஜ் செய்யும் பழக்கம். அவசர அவசரமா எழுதுன இந்த பதிவு மாதிரி:))

8 comments:

கவிதா | Kavitha said...

//மல்ட்டிப்பிள் ஸ்ப்லிட் பெர்ஸனாலிட்டியால் பாதிக்கப்பட்டிருக்கும் //

அடிப்பாவீஈஈ :))

கவிதா | Kavitha said...

பிச்சி பிச்சி கொடுத்து அப்பம் பூனைக்கு இல்லாம போனக்கதையா போயிடப்போது.. :)

எனிவே ரொம்ப ரொம்ப தாங்கஸ் :) & வாழ்த்துகள் !

CS. Mohan Kumar said...

Awards are given to apt people. Congrats to you and each one of them.

ஹுஸைனம்மா said...

எனக்குமா!! ரொம்ப நன்றி & மகிழ்ச்சிப்பா... நான் யாருக்குக் கொடுக்கன்னே தெரியலை, அநேகமா எல்லாருமே வாங்கிட்டாங்க இந்த விருதை. :-))))

//கோபி ஆரம்பத்துல நல்ல புள்ளையா நம்மள மாதிரியே மொக்கை போட்டுக்கிட்டிருந்தாரு. அப்புறம் என்ன ஆச்சோ தெரியல. ஒரே இலக்கியமா போட்டு தாக்கறாரு.//

ஸேம் ப்ளட்... வரவர ஒண்ணுமே புரியமாட்டேங்குது!! :-)))

இவர் மட்டுமில்ல, ஆரம்பத்துல மொக்கை போட்ட நிறைய பேர் இப்ப ‘வளந்துட்டாங்க’!! நாந்தான்... :-((((

தூக்கம் - ஸேம் பிளட!! க.மு. - அது ஒரு கனாக் காலம்!!

விஜி said...

எதோ விருந்துன்னு கூப்பிட்டிருந்தாலாவது வந்து ஒரு கட்டு கட்டிருப்பேன் :))

நன்னிஸ்ங்கோ

பவள சங்கரி said...

அன்பின் வித்யா,

வழக்கம் போல ஜோவியலான இடுகை..பதிவர்களின் அழகான அறிமுகம். பிடித்த ஏழு விசயங்களும் யதார்த்தம் வித்யா. நல்ல பதிவர்களை அறிமுகம் செய்துள்ளீர்கள். அனைவருக்கும் வாழ்த்துகள்... அனைவரையும் தொடர்ந்தும் விட்டேன்.... நன்றி வித்யா.

Raghu said...

விருதுக்கு வாழ்த்துக்கள்.

//ஆரம்பத்துல நல்ல புள்ளையா நம்மள மாதிரியே மொக்கை போட்டுக்கிட்டிருந்தாரு. அப்புறம் என்ன ஆச்சோ தெரியல. ஒரே இலக்கியமா போட்டு தாக்கறாரு. இவர் படிக்கறதோடில்லாம அந்த புத்தகத்துக்கெல்லாம் விமர்சனம் வேற எழுதறாரு. ஒருவேளை விமர்சனம் எழுதறதுக்குன்னே படிப்பாரா இருக்கும்//

இந்த வருஷம் நீங்க வாசிச்ச புத்தகங்களில் 3, 5 பார்க்கும்போது இதே வரிகள் உங்களுக்கும் பொருந்துது :))

Vidhya Chandrasekaran said...

நன்றி கவிதா.
நன்றி மோகன் குமார்.

நன்றி ஹுஸைனம்மா (ஹி ஹி. கவலைப்படாதீங்க. நானிருக்கிறேன்:))).

நன்றி விஜி (என் இனமய்யா நீர்).

நப்றி சங்கரி மேடம்.

நன்றி ர‌கு (நோ!! ஒன்னு ரெண்டு புக்க வச்சு அந்த மாதிரி தப்பான முடிவுக்கெல்லாம் வரப்படாது)