June 4, 2009

என்னைத் தெரியுமா?

இந்த 32 கேள்விகளுக்கு பதில் (சாய்ஸ்ல எதையும் விடக்கூடாதா?) சொல்லும் வேலையை கேபிள் சங்கர் மற்றும் விக்னேஷ்வரி கொடுத்திருக்காங்க. கொடுத்த வேலையை செவ்வனே செய்ய முயற்சி செய்திருக்கிறேன்.

1. உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா ?
பெற்றவர்கள் வைத்தது. கண்டிப்பா ரொம்பவே பிடிக்கும். பெயருக்கு ஏத்த மாதிரியே படிப்புல நான் குயின்:)

2.கடைசியாக அழுதது எப்பொழுது?
முணுக்குன்னா அழற ஆளில்லை நான். ஓரளவுக்கு எமோஷனலி ஸ்ட்ராங். 20 மாதங்களுக்கு முன் விடியற்காலை 5 மணியளவில் ஜூனியரின் அலறல் (ட்ரிப்ஸ் ஏத்த நரம்பு தேடிக்கொண்டிருந்தார்கள்) கேட்டு கதறி அழுதது தான் கடைசி. அழுவதற்க்கு வாய்ப்பில்லாமல் வாழ்க்கை அழகாய் போய்க்கொண்டிருக்கிறது.

3.உங்களோட கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா?
ரொம்ப. காலேஜில் சீனியர்ஸ்க்கு ரெக்கார்ட் எழுதி கொடுக்கிற அளவுக்கு அழகாய் இருக்கும்:)

4).பிடித்த மதிய உணவு என்ன?
மெக்சிகன், இட்டாலியன், ஜப்பானீஸ் சுஷி, கொரியன், சைனீஸ் என அடுக்குவேன் என நினைக்காதீங்க.
பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம், மோர் மிளகாய் தாளித்துக் கொட்டிய கொஞ்சூண்டு மோர் விட்டு பிசைந்த பழையது, தொட்டுக்க பூண்டு தொக்கு.
இஞ்சி துவையலும் தயிர் கீரையும்
பூண்டு ரசமும் சுட்ட அப்பளமும்
வெங்காயமும் மிளகும் நிறைய போட்ட ஆம்லெட்
தேங்காய் அரைத்து கொட்டி, மணத்தக்காளி வத்தலை பொரித்துப் போட்ட வத்தக்குழம்பில் சரியாக 3 நிமிடங்கள் மட்டுமே ஊற வைக்கப்பட்ட கல்தோசை/ஊத்தப்பம்
அரிசி உப்புமா (காந்தல்)
கேழ்வரகு கூழ் தொட்டுக்க ஆவக்காய் ஊறுகாய்.. Oops விட்டா நான் தனியா வலைப்பூ ஆரம்பிக்கிற அளவுக்கு அடுக்குவேன். Next?

5.நீங்கள் வேறு யாருடனாவது உங்களோட நட்பை உடனே வச்சுக்குவீங்களா?
ம்ம் கொஞ்சம் கஷ்டம். என்னை நானாகவே இருக்க விடுகின்ற நட்பினைத் தான் அதிகம் விரும்புவேன்.

6.கடலில் குளிக்க பிடிக்குமா....அருவியில் குளிக்க பிடிக்குமா?
குளிக்கப் பிடிக்கும். கடலலையில் கால் நனைக்கப் பிடிக்கும்.

7.முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்?
கண்களையும் அவர்களின் டிரஸ்ஸிங் சென்ஸையும்.

8. உங்க கிட்ட உங்களுக்கு பிடிச்ச விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன ?
பிடிச்ச விஷயம் : நிறைய இருக்கே. ஒரு விஷயத்தை செய்ய ஆரம்பிக்கும் முன் அதன் சாதக பாதகங்களை கம்ப்ளீட்டா அலசி ஆராய்வது.
பிடிக்காத விஷயம் : ம்ம் இது ரொம்பவே கம்மி. அடிக்கடி எட்டிப்பார்க்கும் கோவம்.

9.உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விசயம் எது?
பிடித்தது : என் மேல் அவர் கொண்டுள்ள அன்பும் பாசமும்.
பிடிக்காத விஷயம் : குறிப்பிட்டு சொல்லும்படி எதுவுமில்லை. நான் அவரை அவராகவே ஏற்றுக்கொண்டிருப்பதால் குறைகளென்று எதுவும் தெரியவில்லை.

10.யார் பக்கத்தில் இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள்?
நெருங்கிய நண்பர்கள்.

11.இதை எழுதும் போது என்ன வர்ண ஆடை அணிந்து உள்ளீர்கள் ?
கறுப்பு வெள்ளை குர்தா பைஜாமா.

12.என்ன பாட்டு கேட்டுக் கொண்டு இருக்குறீங்க ?
நெஞ்சே நெஞ்சே நீ எங்கே - அயன் (லவ்லி பாட்டு)

13.வர்ண பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை?
கருப்பு - கம்பீரத்தின் நிறம்

14.பிடித்த மணம்?
மதுரை மல்லி. ஜான்சன் பேபி சோப் வாசனை:)

15.நீங்க அழைக்கப் போகும் பதிவரிடம் உங்களுக்கு பிடித்த விஷயம். அவரை அழைக்கக் காரணம் என்ன ?

தீபா
ஆகாயநதி
மயில்

இவர்களைப் பற்றி மேலும் தெரிந்துகொள்ளலாம் என்றெண்ணத்தில் அழைத்திருக்கிறேன்.

16.உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்குப் பிடித்த பதிவு ?
சங்கர் - வாரத்துல ஏழு நாள் தான்னாலும் 70 படம் பார்ப்பார் போல. நிறைய மொக்கை படங்களில் இருந்து காப்பாற்றுவதால்.
விக்னேஷ்வரி - என்னை மாதிரியே ஃபுட்டி:)

17. பிடித்த விளையாட்டு?
பள்ளி நாட்களில் த்ரோ பால். இப்போ ஜூனியரோடு:)

18.கண்ணாடி அணிபவரா?
வெயில் காலங்களில் கூலர்ஸ்.

19.எப்படிப் பட்ட திரைப் படம் பிடிக்கும்?
எல்லா விதமான படங்களும். திராபையா இல்லாம இருக்கனும்.

20.கடைசியாகப் பார்த்த படம்?
அயன்.

21.பிடித்த பருவ காலம் எது?
மழைக்காலம். மழையில் நனையப் பிடிக்காது. ஆனால் சூடாக ஒரு கப் டீயுடன் அமர்ந்து ரசிக்கப் பிடிக்கும்.

22. இப்பொழுது படித்துக்கொண்டு இருக்கும் புத்தகம்?
வைரமுத்துவின் ஒரு போர்க்களமும் இரண்டு பூக்களும் (முடிச்சாச்சு)

23.உங்கள் டெஸ்க்டொப்-ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு நாள் மாற்றுவீர்கள்?
ஜூனியர் தான். வேறு வேறு போஸ்களில்:)

24.உங்களுக்கு பிடித்த சத்தம் ? பிடிக்காத சத்தம்?
பிடித்தது : ஜூனியரின் சிரிப்பு, மனதுக்குப் பிடித்த பாடல்கள்.
பிடிக்காதது : ஹார்ன் இரைச்சல், அதிக சத்ததில் டீவி, அரசியல் கட்சிப் பிரச்சாரங்கள்.

25.வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்ச தொலைவு?
மலேசியா, சிங்கப்பூர்

26.உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?
இருக்கு.

27.உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?
நேரம் தவறுதல், Negligince

28.உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?
கோபம்

29.உங்களுக்கு பிடித்த சுற்றுலா தலம்?
போனதில் நந்தி ஹில்ஸ், ஜெய்ப்பூர். போக விரும்புவது கூர்க்.

30.எப்படி இருக்கணும்னு ஆசை?
நான் நானாகவே.

31.கணவர்/மனைவி இல்லாம செய்ய விரும்பும் காரியம் ?
எதை செய்தாலும் அவரிடம் சொல்லிவிடுவதுண்டு

32)வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க..?
Life is beautiful as always:)

41 comments:

Raj said...

//பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம், மோர் மிளகாய் தாளித்துக் கொட்டிய கொஞ்சூண்டு மோர் விட்டு பிசைந்த பழையது, தொட்டுக்க பூண்டு தொக்கு....தேங்காய் அரைத்து கொட்டி, மணத்தக்காளி வத்தலை பொரித்துப் போட்ட வத்தக்குழம்பில் சரியாக 3 நிமிடங்கள் மட்டுமே ஊற வைக்கப்பட்ட கல்தோசை/ஊத்தப்பம்//

இது வரைக்கும் டேஸ்ட் பண்ணதில்ல...ட்ரை பண்ணனும்

அரிசி உப்புமா (காந்தல்)....Yes

முரளிகண்ணன் said...

நல்ல பதில்கள்.

பேசாமல் பதிவர்களுக்கு பிடித்த
மெனு என்ன (காலை/மாலை/இரவு)

என்று ஒரு தொடர் பதிவு வைக்கலாம்.

நிறைய தெரிந்து கொள்ளலாம்

மணிநரேன் said...

//போக விரும்புவது கூர்க்.//

அருமையான இடம்.அதுவும் பல இடங்களிலும் தங்குவதுபோல விடுதியில் தங்காமல் ஹோம்ஸ்டே எனப்படும் இடங்களில் தங்கிப்பாருங்கள்.
இனிமையான அனுபவமாக இருக்கும்.

Deepa said...

நல்ல பதில்கள்!
எமோஷனலி ஸ்ட்ராங் மட்டுமல்ல மெச்சூர்டான பெண்ணாகவும் தெரிகிறீர்கள். வாழ்த்துக்கள்.

pudugaithendral said...

பேசாமல் பதிவர்களுக்கு பிடித்த
மெனு என்ன (காலை/மாலை/இரவு)

என்று ஒரு தொடர் பதிவு வைக்கலாம்.//

தொடர்பதிவு என்ன வைக்கலாம் என்பதையே தொடர் பதிவு போட்டு யோசிப்பாங்க போலிருக்கே.

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்

S.A. நவாஸுதீன் said...

பள்ளி நாட்களில் த்ரோ பால். இப்போ ஜூனியரோடு:

ரசித்த பதில். சூப்பர்

S.A. நவாஸுதீன் said...

மழைக்காலம். மழையில் நனையப் பிடிக்காது. ஆனால் சூடாக ஒரு கப் டீயுடன் அமர்ந்து ரசிக்கப் பிடிக்கும்.

நல்ல ரசனை

S.A. நவாஸுதீன் said...

நான் நானாகவே.

சும்மா நச்சுன்னு இருக்கு

Vidhya Chandrasekaran said...

வெயிலுக்கு பழையது ட்ரை பண்ணிப் பாருங்க ராஜ். சூப்பரா இருக்கும்.

நன்றி முரளிகண்ணன்.

ஆம் மணிநரேன். அடுத்த ட்ரிப் அங்குதான் போலமென்றிருக்கிறோம்.

S.A. நவாஸுதீன் said...

Life is beautiful as always:)

Accept the reality in your life. Then it will be ofcourse as you said

S.A. நவாஸுதீன் said...

உங்களுடைய அனைத்து பதில்களில் இருந்தும் நன்கு விளங்குகிறது that you are well matured and strong.

வெற்றி said...

ஜிகினா இல்லாத பதில்கள், பரவசம்.

மென்மேலும் முன்னேற வாழ்த்துக்கள்.

Vidhya Chandrasekaran said...

நன்றி தீபா:)

வாங்க அக்கா. எப்படில்லாம் பதிவுக்கெ மேட்டர் தேத்த வேண்டிருக்கு.

வருகைக்கும் விரிவான கருத்துக்கும் நன்றி நவாஸுதீன்.

ஆகாய நதி said...

//
2.கடைசியாக அழுதது எப்பொழுது?
முணுக்குன்னா அழற ஆளில்லை நான். ஓரளவுக்கு எமோஷனலி ஸ்ட்ராங். 20 மாதங்களுக்கு முன் விடியற்காலை 5 மணியளவில் ஜூனியரின் அலறல் (ட்ரிப்ஸ் ஏத்த நரம்பு தேடிக்கொண்டிருந்தார்கள்) கேட்டு கதறி அழுதது தான் கடைசி. அழுவதற்க்கு வாய்ப்பில்லாமல் வாழ்க்கை அழகாய் போய்க்கொண்டிருக்கிறது.
//

ஐயோ எனக்கே அழுகை வருதே... நான் ரொம்ப....................... இமோஷனல்... :(

//
15.நீங்க அழைக்கப் போகும் பதிவரிடம் உங்களுக்கு பிடித்த விஷயம். அவரை அழைக்கக் காரணம் என்ன ?

தீபா
ஆகாயநதி
மயில்

இவர்களைப் பற்றி மேலும் தெரிந்துகொள்ளலாம் என்றெண்ணத்தில் அழைத்திருக்கிறேன்
//

ஆஹா... வெச்சுட்டாங்கயா ஆப்பு.. :)

//
23.உங்கள் டெஸ்க்டொப்-ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு நாள் மாற்றுவீர்கள்?
ஜூனியர் தான். வேறு வேறு போஸ்களில்:)
//

நானும் :)

எப்பாடி நச் பதில்கள் வெளிப்படையாக :)) வாழ்த்துகள் வித்யா... :)))

நட்புடன் ஜமால் said...

\\
4).பிடித்த மதிய உணவு என்ன?\\


இப்படி ஒரு கேள்விய யார்ப்பா சகோதரிகிட்ட கேட்டது

நட்புடன் ஜமால் said...

\\நான் அவரை அவராகவே ஏற்றுக்கொண்டிருப்பதால் குறைகளென்று எதுவும் தெரியவில்லை.\\


மிக அருமைங்க‌

நட்புடன் ஜமால் said...

\\30.எப்படி இருக்கணும்னு ஆசை?
நான் நானாகவே.\\


நல்ல பதில்.

வாழ்த்துகள்

SK said...

"கடலையில் கால் நனைக்கப் பிடிக்கும்."

நாங்க கடல் பத்தி கேட்ட நீங்க கடலை பத்தி சொல்றீங்க.. ஏதோ நல்ல இருங்க அம்மணி.

இருந்தாலும் பதில் எல்லாம் நல்லாதேன் இருக்கு. அதுவும் மதிய உணவு.. அருமை. :)

அமிர்தவர்ஷினி அம்மா said...

சாத்தான் விஷயத்துல நீங்களும் நானும் ஒன்னாவே இருக்கோம் :)-

Thamira said...

அழகழகான பதில்கள்.! அதுவும் மதிய உணவில்தான் நீங்க நிற்கிறீர்கள்..

இந்த உலகம்தான் எத்தனை பெரிது, அதில்தான் உணவுகள் எத்தனை எத்தனை.. வத்தக்குழம்பில் ஊறிய கல்தோசை.. ஆஹா கேட்கவே சுகமாக இருக்கிறதே.!

Thamira said...

--

"உழவன்" "Uzhavan" said...

" என்னைத் தெரியுமா? " படித்தோம்.. தெரிந்துகொண்டோம் :-)

Anonymous said...

5.நீங்க அழைக்கப் போகும் பதிவரிடம் உங்களுக்கு பிடித்த விஷயம். அவரை அழைக்கக் காரணம் என்ன ?

தீபா
ஆகாயநதி
மயில்

இவர்களைப் பற்றி மேலும் தெரிந்துகொள்ளலாம் என்றெண்ணத்தில் அழைத்திருக்கிறேன்
//

ஆஹா... வெச்சுட்டாங்கயா ஆப்பு.. :)
repeatuuu

Anonymous said...

நாங்க கடல் பத்தி கேட்ட நீங்க கடலை பத்தி சொல்றீங்க.. ஏதோ நல்ல இருங்க அம்மணி.

repeatuuu

Vidhya Chandrasekaran said...

நன்றி விஜயராஜா.
நன்றி ஆகாயநதி.
நன்றி ஜமால் அண்ணாத்தே.

Vidhya Chandrasekaran said...

SK எப்படிங்க கரெக்டா இதெல்லாம் உங்க கண்ணுல மாட்டுது? எனிவேஸ் தேங்க்ஸ்.

வாங்க அமித்து அம்மா. சேம் பிளட்:)

நன்றி ஆதி.

நன்றி உழவன்.

யூ டு மயில்?

விக்னேஷ்வரி said...

பெயருக்கு ஏத்த மாதிரியே படிப்புல நான் குயின்:) //

அட்ரா அட்ரா...

அழுவதற்க்கு வாய்ப்பில்லாமல் வாழ்க்கை அழகாய் போய்க்கொண்டிருக்கிறது. //

மிக்க மகிழ்ச்சி. அப்படியே தொடர வாழ்த்துக்கள்.

4. அக்கா, பிடித்த உணவுன்னு தான் கேள்வி இருக்கு. உணவுகள் இல்ல. ;)

ஜான்சன் பேபி சோப் வாசனை //

ஜூனியரோட சோப்பை தினமும் திருடி குளிக்கிறது நீங்க தானா

சூடாக ஒரு கப் டீயுடன் அமர்ந்து ரசிக்கப் பிடிக்கும். //

ஒரு கப் டீயோட நிறுத்திட்டீங்களா.... நான் கூட எதுவும் சூப், பஜ்ஜி, .............. இன்னும் சொல்வீங்கன்னு எதிர்பார்த்தேன்.

எல்லா பதில்களும் நல்லாருக்கு வித்யா.

Cable சங்கர் said...

நைஸ்.. வித்யா..

தமிழ் said...

/
3.உங்களோட கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா?
ரொம்ப. காலேஜில் சீனியர்ஸ்க்கு ரெக்கார்ட் எழுதி கொடுக்கிற அளவுக்கு அழகாய் இருக்கும்:)/

ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

இரசித்தேன்

கார்க்கிபவா said...

மெக்சிகன், இட்டாலியன், ஜப்பானீஸ் சுஷி, கொரியன், சைனீஸ் என அடுக்குவேன் என நினைக்காதீங்க.
பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம், மோர் மிளகாய் தாளித்துக் கொட்டிய கொஞ்சூண்டு மோர் விட்டு பிசைந்த பழையது, தொட்டுக்க பூண்டு தொக்கு.
இஞ்சி துவையலும் தயிர் கீரையும்
பூண்டு ரசமும் சுட்ட அப்பளமும்
வெங்காயமும் மிளகும் நிறைய போட்ட ஆம்லெட்
தேங்காய் அரைத்து கொட்டி, மணத்தக்காளி வத்தலை பொரித்துப் போட்ட வத்தக்குழம்பில் சரியாக 3 நிமிடங்கள் மட்டுமே ஊற வைக்கப்பட்ட கல்தோசை/ஊத்தப்பம்
அரிசி உப்புமா (காந்தல்)
கேழ்வரகு கூழ் தொட்டுக்க ஆவக்காய் ஊறுகாய்.. Oops விட்டா நான் தனியா வலைப்பூ ஆரம்பிக்கிற அளவுக்கு அடுக்குவேன். Next?//


போதுமா????????????

சந்தனமுல்லை said...

கூல் வித்யா! உங்களை பத்தி அழகா சொல்லியிருக்கீங்க!

//30.எப்படி இருக்கணும்னு ஆசை?
நான் நானாகவே.//

சூப்பர்!

எம்.எம்.அப்துல்லா said...

;0) பிரசண்ட் மேடம் :)

அ.மு.செய்யது said...

//மெக்சிகன், இட்டாலியன், ஜப்பானீஸ் சுஷி, கொரியன், சைனீஸ் என அடுக்குவேன் என நினைக்காதீங்க.
பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம், மோர் மிளகாய் தாளித்துக் கொட்டிய கொஞ்சூண்டு மோர் விட்டு பிசைந்த பழையது, தொட்டுக்க பூண்டு தொக்கு.
இஞ்சி துவையலும் தயிர் கீரையும்
பூண்டு ரசமும் சுட்ட அப்பளமும்
வெங்காயமும் மிளகும் நிறைய போட்ட ஆம்லெட்
தேங்காய் அரைத்து கொட்டி, மணத்தக்காளி வத்தலை பொரித்துப் போட்ட வத்தக்குழம்பில் சரியாக 3 நிமிடங்கள் மட்டுமே ஊற வைக்கப்பட்ட கல்தோசை/ஊத்தப்பம்
அரிசி உப்புமா (காந்தல்)
கேழ்வரகு கூழ் தொட்டுக்க ஆவக்காய் ஊறுகாய்.. Oops விட்டா நான் தனியா வலைப்பூ ஆரம்பிக்கிற அளவுக்கு அடுக்குவேன். Next?//


ஏதோ சமையல் குறிப்புன்னுல்ல நினைச்சேன்.

Vidhya Chandrasekaran said...

நன்றி விக்னேஷ்வரி.
நன்றி கேபிள் சங்கர்.
நன்றி திகழ்மிளிர்.
நன்றி கார்க்கி.
நன்றி சந்தனமுல்லை.
நன்றி அப்துல்லா அண்ணா.
நன்றி அ.மு.செய்யது.

நாகை சிவா said...

//30.எப்படி இருக்கணும்னு ஆசை?
நான் நானாகவே.

32)வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க..?
Life is beautiful as always:)//

Kudos :)

நர்சிம் said...

எல்லா பதில்களும் நன்றாக இருந்தன.

தராசு said...

//எப்படி இருக்கணும்னு ஆசை?
நான் நானாகவே.//

இங்கதான் நீங்க நிக்கறீங்க,

அப்ப எங்க உக்கார்ந்தம்னு கேக்காதீங்க!!!!

வாழ்த்துக்கள்.

Arun Kumar said...

@29.உங்களுக்கு பிடித்த சுற்றுலா தலம்?
போனதில் நந்தி ஹில்ஸ், ஜெய்ப்பூர். போக விரும்புவது கூர்க்.@

நந்தி ஹில்ஸ்ஸா ..அதை monkey hillsன்னு பேரு மாத்தி ரொம்ப நாளாச்சு..

கூர்க போகனும்மா?? இந்த மாசமும் அடுத்த மாசமும் மழையை வேடிக்கை பார்த்துகிட்டே சூப்பரா enjoy பண்ணலாம்..

பதில்கள் எல்லாம் சூப்பர்..

Vidhya Chandrasekaran said...

நன்றி நாகை சிவா.
நன்றி நர்சிம்.
நன்றி தராசு.
நன்றி அருண்குமார்.

உண்மைத்தமிழன் said...

//20 மாதங்களுக்கு முன் விடியற்காலை 5 மணியளவில் ஜூனியரின் அலறல் (ட்ரிப்ஸ் ஏத்த நரம்பு தேடிக்கொண்டிருந்தார்கள்) கேட்டு கதறி அழுததுதான் கடைசி. அழுவதற்க்கு வாய்ப்பில்லாமல் வாழ்க்கை அழகாய் போய்க்கொண்டிருக்கிறது.//

இனிமேலும் தங்களுக்கு வாழ்க்கை இப்படியே அழகாய் இருக்க என் அப்பன் முருகனை வேண்டிக் கொள்கிறேன்..

பதில்கள் நன்று..

வாழ்க வளமுடன்..!

பட்டாம்பூச்சி said...

பதில்கள் எல்லாம் சூப்பர் :)