April 13, 2010

மொழி ஆராய்ச்சி

வெயில் கொளுத்துகிறது. இப்பவே இப்படின்னா அக்னி நட்சத்திரம் ஆரம்பித்தால்?? நினைக்கவே பயம்மாய் இருக்கிறது. இத்தனைக்கும் தமிழக நகரங்களில் சென்னையில் தான் வெயில் கம்மியாம். 35 ரேஞ்சிலேயே இருக்கிறது. வெயில் நகரான வேலூரில் 42 டிகிரி செல்சியஸ். ஏழு வருடங்கள் வேலூர் மாவட்டவாசியாக இருந்திருக்கிறேன். எவ்வளவு வெயிலடித்தாலும் தாங்கமுடியும் அங்கே. கசகசவென்ற உணர்விருக்காது. சென்னையில் கடல் காரணமாக புழுங்கித் தள்ளுகிறது. இன்னும் நுங்கு சீசன் ஆரம்பிக்கவில்லை சென்னையில். வெயிட்டிங். பாலைக் காய்ச்சி ஆறவைத்து, இளநுங்கை போட்டு ப்ரிட்ஜில் வைத்து கொஞ்சம் வெல்லம் சேர்த்து முழுங்கினால் சொர்க்கமாய் இருக்கும்.
***************

அம்மா வீட்டு வாசலில் ஒரு அறிவிப்பு பலகை வைக்கலாமென்ற யோசனையிலிருக்கிறோம்.
"அம்மாவைப் பார்க்க வருவபவர்கள் தயவுகூர்ந்து சாத்துக்குடி கொண்டுவரவேண்டாமென தாழ்மையுடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மாறாக சர்க்கரை, துவரம் பருப்பு, எண்ணைய், கிஃப்ட் கூப்பன்ஸ் அல்லது பணமாகவோ தருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்."

அள்ள அள்ள குறையாத அக்ஷ்யப் பாத்திரம் போல் தீரவே மாட்டேன் என குவிந்து கொண்டே இருந்தது சாத்துக்குடி. காபி டீ நிறுத்திவிட்டு ஜூஸாய் குடித்து மாளவில்லை. வீட்டிற்கு வந்து செல்லும் உறவினர்களுக்கெல்லாம் ரிடர்ன் கிஃப்டாய் அரை டஜன் சாத்துக்குடி கொடுத்தனுப்பும் அளவுக்கு சேர்ந்திருந்தது. ஆண்டவா ஏதாவது பண்ணி சாத்துக்குடியின் விலைய ஏத்துப்பா:(
*************

வேலைக்காக வட இந்தியா சென்ற அண்ணாவை வடக்கு வாஞ்சையுடன் வரவேற்று வஞ்சனையில்லாமல் ஜாண்டிசை அள்ளி வழங்கியிருக்கிறது. நான்கு நாட்கள் ஆஸ்பத்திரியில் ட்ரிப்ஸ் ஏற்றப்பட்டு, இதற்கு மேல் தாங்காது என சென்னை வந்து சேர்ந்தார். நேராக இங்கே வந்தவருக்கு நாலே நாலு இட்லியும் கொஞ்சம் தயிரும் சாப்பிட கொடுத்தேன். சாப்பிட்டு மறுநாள் வாலாஜா சென்று மருந்து சாப்பிட்டுவிட்டு ஊருக்கு சென்றார். அங்கிருந்து பெரியம்மா போன் பண்னி அண்ணாக்கு பரவாயில்லையாக இருப்பதாகவும், என் இட்லியை சாப்பிட்டதால் சரியாக போன உணர்விருப்பதாகவும் சொன்னார். இதை நான் பெருமை பீத்திக்கொண்டிருந்தபோது (இன்னொரு பெரியம்மா பையன்) மகன் சொன்னது 'ரொம்ப அலட்டிக்காதடி. உன் இட்லியப் பார்த்து ஜாண்டிசே அரண்டுடுச்சு'. ஹூம் பொறாமை பிடித்தவர்கள்":)
****************

அண்ணாவிடம் வடக்கு எப்படி என்ற விசாரணையில் எல்லாம் ஒகே மொழி தான் பிரச்சனை என்றார். அப்பா அவரிடம் "இதுல என்னடா பிரச்சனை. எல்லா வார்த்தைக்கும் முடிவுல ஹை போடு ஹிந்தியாகிடும்". அடுத்து ஒரு மொழி ஆராய்ச்சி மாநாடு ஆரம்பித்தது.

சிம்பிளா சொல்றேன் பாரு.

ராம் - இது ஹிந்தி.
ராமன் - இது தமிழ்.
ராமுடு/ராமுலு - இது தெலுங்கு.

எப்படிப்பா இப்படியெல்லாம்.

இருடி. இன்னும் பெட்டர் எக்சாம்பிள் பாரு

சார் - இது இங்லீஷ்
சார் - இது தமிழும் கூட??!!
சர்ஜி - இது ஹிந்தி/பஞ்சாபி
சாரு - இது தெலுங்கு.
சாரே - இது மலையாளம்.

அப்பா முடியலப்பா - இது நான்.

சித்தப்பா யார் யாருக்கோ சிலை வைக்கறாங்க. தமிழ் செம்மொழி மாநாட்டுல உங்களுக்கு ஒரு சிலை வைக்க ஏற்பாடு பண்றேன் - இது அண்ணா.
***************

அங்காடித் தெருவை பார்த்ததால் ஏற்பட்ட சோகத்தை விரட்ட சிப்பு படமொன்று பார்க்கலாமென முடிவு செய்தோம். கைவசம் இருந்த டிவிடிகளை அலசி ஆராய்ந்ததில் யாருக்கும் சுமுகமான கருத்து ஏற்படாமல் போகவே 'லவ் ஆஜ் கல்' சிடியோடு நான், அவர், அண்ணா(க்கள்) அமர்ந்தோம். கொஞ்சம் கொஞ்சமாய் ஆளாளுக்கு எஸ்ஸாக முழு படத்தையும் பார்க்கலன்னா உம்மாச்சி கண்ண குத்திடுமென்பதால் நானும் அண்ணாவும் முழுப் படத்தையும் கஷ்டப்பட்டு முடித்தோம். பட விமர்சனம்? அது கிடக்கு கழுதை.

எதுக்குண்ணா சயீப்க்கு பத்மஸ்ரீ கொடுத்தாங்க.

தெரியலயேம்மா தெரியலயே - அண்ணா.

கரீனா கபூர கிட்ட நின்னு பார்க்கற தைரியத்துக்கா இருக்கும் - போகிற போக்கில் அப்பா.
****************

சக பதிவர்கள் அனைவருக்கும் தமிழ்ப் புத்தாண்டு ஊப்ஸ் சாரி சித்திரை முதல் நாள் வாழ்த்துகள். அப்படித்தான் சொல்லனுமாம். கலைஞர் டிவில கத்துக்கொடுத்தாங்க:)

25 comments:

Anonymous said...

க்கிகிகிகி.. லவ் ஆஜ் கல் படம் வந்த போதே பார்த்து பேஜாரா போனேன். அந்த மாதிரி பார்ட்டி யாருனா குடுத்தா நல்லாத்தான் இருக்கும் :) தப்பிச்சுப்பாங்கல்ல

Vijay said...

\\எவ்வளவு வெயிலடித்தாலும் தாங்கமுடியும் அங்கே. கசகசவென்ற உணர்விருக்காது. சென்னையில் கடல் காரணமாக புழுங்கித் தள்ளுகிறது.\\
ஆமாம் வெயிலைக் கூடப் பொறுத்துக்கொள்ளலாம். இந்தப் புழுக்கத்தைத்தான் தாங்கிக் கொள்ள முடிய வில்லை.

\\அண்ணாவிடம் வடக்கு எப்படி என்ற விசாரணையில் எல்லாம் ஒகே மொழி தான் பிரச்சனை என்றார். \\
நம்ம மக்கள் அங்கே போய் ஒரே மாதத்தில் டிப்பிக்கல் வட இந்தியாக்காரனாக மாறிவிடுவார்கள். ஹிந்தி அருவியாகக் கொட்டும். ஆனால், வடநாட்டவர்கள் தான் நம்மூரில் வேலை கிடைத்தாலும், நாம் எல்லோரும் அவர்களிடம் ஹிந்தியிலேயே பாத் கர்னா ஹை என்று எண்ணுவார்கள்!


\\நானும் அண்ணாவும் முழுப் படத்தையும் கஷ்டப்பட்டு முடித்தோம். பட விமர்சனம்? அது கிடக்கு கழுதை.\\
தீபிகா படுகோன் பற்றியாவது நாலு வார்த்தை எழுதியிருக்கலாம். உங்களுக்குப் பொறாமை என்று நினைக்கிறேன் :)

Vidhoosh said...

சயீப் ... ஹெ ஹெ...

உங்களுக்கும், ஜூனியர் மற்றும் சீனியர், குடும்பத்தினர், சித்தப்பா, அண்ணா, பெரியம்மா பையன் மற்றும் ஜூனியரோடு நட்பையும் விரோதமாயும் இருக்கும் நண்டு-சிண்டுகள் எல்லோருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

ஞாயிறு அன்று அம்மாவை பார்க்க சாத்துகுடியோடு (பழைய சாத்தக் கரைச்சுக் குடிச்சுட்டு) வரேன்னு சொன்னேன்.
நுங்கு மில்க் ஷேக்கில் வெல்லம் வேண்டாம், பனங் கல்கண்டு போட்டும்,
நாலு இட்லியும் தொட்டுக் கொள்ள எள்ளுபொடியும் நல்லெண்ணையும் கொஞ்சமே கொஞ்சம் மிளகாய் சட்னியும் என் விருப்பம். ரெடி பண்ணி வைக்கவும்.

தாரணி பிரியா said...

சன் குழும 17 வருட பிறந்த நாள் வாழ்த்துக்கள் - ‍ இது சன் டிவியில சொல்லி குடுத்தது :)

தாரணி பிரியா said...

உங்களுக்கு சாத்துகுடின்னா இங்க தர்பூசணி. வீட்டு வாசல்ல நாளைக்கு கடை போடலாமுன்னு இருக்கேன் :)

Raghu said...

அப்பாவியா இருக்கீங்க‌, சீச‌னுக்கேத்த‌ மாதிரி ஒரு சாத்துக்குடி க‌டையை ஆர‌ம்பிப்பீங்க‌ளா....


//உன் இட்லியப் பார்த்து ஜாண்டிசே அரண்டுடுச்சு//

ஹி..ஹி..செம‌ டைமிங் :)))

என‌க்குகூட‌ சின்ன‌ வ‌ய‌சுல‌ ரொம்ப‌ ட‌வுட்டா இருந்த‌து, ஹிந்தியில‌ 'மிதுன் ச‌க்ர‌போர்த்தி'னு போடுவாங்க‌, அதையே த‌மிழ் ப‌த்திரிக்கைக‌ள்ல‌ பாக்கும்போது 'மிதுன் ச‌க்ர‌வ‌ர்த்தி'னு இருக்கும். என்ன‌மோடா ராம்/ராமா/ராமுலு/ராமுடு!

//சோகத்தை விரட்ட சிப்பு படமொன்று பார்க்கலாமென முடிவு செய்தோம்//

முத‌ல்ல‌ சிம்பு பட‌ம்னு ப‌டிச்சிட்டேன் :))

ச‌ன்டிவி பிற‌ந்த‌ நாள் வாழ்த்துக‌ள்...;)

Rajalakshmi Pakkirisamy said...

adanga mateengala neenga?

Bala said...

படித்தேன், ரசித்தேன் :))

உங்களுக்கும் தமிழ் புத்தாண்டு, மன்னிக்கவும் சித்திரை திருநாள் வாழ்த்துக்கள்.

பின்னோக்கி said...

என்னங்க இது ? ஜாண்டிச, இட்லிய வெச்சு முறியடிச்சுட்டேன்னு சொல்றீங்க. தயவு செய்து டாக்டரிடம் சென்று மேலும் செக் செய்ய சொல்லவும். விளையாட்டான விஷயமாக எடுத்துக்கொள்ளாதீர்கள்.

Vidhya Chandrasekaran said...

நன்றி மயில்.
நன்றி விஜய்.

நன்றி விதூஷ் (தங்கள் வரவு என் பாக்கியம்).

நன்றி தாரணி (தர்பூஸ் கூட ஒகேங்க. சாத்துக்குடி பிழியறதுக்குள்ள ஹூம்ம்).

நன்றி ரகு.

நன்றி ராஜி (ஹி ஹி).

நன்றி பாலா.

நன்றி பின்னோக்கி (பெரியம்மாவே பரவால்லன்னு ஆக்கிடுவீங்க போல. சும்மாங்க. ட்ரீட்மெண்ட் எடுத்துக்கிட்டிருக்காங்க).

T.V.ராதாகிருஷ்ணன் said...

சித்திரை முதல் நாள் வாழ்த்துகள்.

Anonymous said...

அம்மா வீட்டு வாசல் அறிவிப்பு பலகை ஐடியாவும், மொழி ஆராய்ச்சியும் சூப்பர்

Unknown said...

சாத்துக்குடி மேட்டர்: பக்கத்திலே இருக்கிற எதாவது ஒரு ஜூஸ் கடையோட டீலிங் பேசி முடிச்சிடுங்க ;-)

//கரீனா கபூர கிட்ட நின்னு பார்க்கற தைரியத்துக்கா இருக்கும் - போகிற போக்கில் அப்பா.//

செம்ம கமெண்ட். பேசாம நீங்க வலைப்பதிவுக்கு விஆர்எஸ் வாங்கிட்டு அப்பாவைப் பதிவெழுதச் சொல்லுங்க.

"உழவன்" "Uzhavan" said...

//ரிடர்ன் கிஃப்டாய் அரை டஜன் சாத்துக்குடி கொடுத்தனுப்பும் அளவுக்கு சேர்ந்திருந்தது//
 
அட்ரஸ் ப்ளீஸ்.. ஆட்டோ ரெடி :-) அம்மாவுக்கு என்னாச்சு? அம்மாவுக்கும் இட்லி குடுங்க. எல்லாம் சரியாயிடும் :-)
 
ம்ம்.. சித்திரைத் திருநாள் வாழ்த்துகள்!

pudugaithendral said...

புத்தாண்டு வாழ்த்துக்கள்

Cable சங்கர் said...

தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள். கலைஞர் வயசான காலத்துல எதையாவது சொல்வாரு அதையெல்லாம் நாம் பாலோ பண்ண முடியுமா என்ன?

துபாய் ராஜா said...

அருமையான துணுக்ஸ்.

துபாய் ராஜா said...

தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

Anonymous said...

ஹம்தும்ல நடிச்சதுக்கு நஷ்னல் அவர்ட் குடுத்தாங்க. இது என்ன பெரிய விஷயம். உங்க அப்பாவோட பதில் அருமை. சபாஷ்.

Chitra said...

எல்லோருடைய உடல் நலமும் எப்படி இருக்கிறது?

உங்கள் கூல் கல கல பதிவு போதுமே - நுங்கு சர்பத் மாதிரி நல்லா இருக்குங்க.

Anonymous said...

am the 17th.......

helo nan 17th vanthu comments podrenga...


சன் குழும 17 வருட பிறந்த நாள் வாழ்த்துக்கள் - ‍ இது சன் டிவியில சொல்லி குடுத்தது :)

--etharukum engal sangathukum sambantam ellai ellai..

உங்க பதிவு படித்து வயுறு எல்லாம் புண்ணபோச்சு
உங்க இட்லியை பார்சல் செய்து அனுப்பவும்.

ரொம்ப நாள் இட்லே சாப்பிடவில்லை.

பின்குறிப்பு -பதினைந்து போதும்...

நல்ல ஒரு பதிவு

எங்கள் சங்கம் உங்களயும்

சேர்த்துகொண்டுவிட்டது



நன்றி

வாழ்க வளமுடன்



வருத்தபடாத வாசிப்போர் சங்கம்

காம்ப்ளான் சூர்யா

Vidhya Chandrasekaran said...

நன்றி டிவிஆர் சார்.
நன்றி சின்ன அம்மிணி.
நன்றி KVR.
நன்றி இராமசாமி கண்ணண்.
நன்றி உழவன்.
நன்றி கலா அக்கா.
நன்றி கேபிள் சங்கர்.
நன்றி துபாய் ராஜா.
நன்றி அனாமிகா துவாரகன்.
நன்றி சித்ரா.
நன்றி சூர்யா.
நன்றி www.bogy.in.

Anonymous said...

உங்கள் அப்பா செம ஜாலியாய் இருக்கிறார்.. புத்தாண்டு வாழ்த்துகள் :-)

A Simple Man said...

யப்பா!! முடியல :-))

சாந்தி மாரியப்பன் said...

மொழி ஆராய்ச்சி சூப்பர். கரீனா கபூர்.. ச்சான்சே இல்லை :-))))))))))