April 16, 2010

காதல் வைத்துக் காத்திருந்தேன்...

நூலைப் போல சேலை. தாயப் போல பிள்ளை என்ற மொழி உண்டு. அப்பாப் போல பிள்ளை என மாற்றியமைக்கலாம் என்ற யோசனையை தோற்றுவிப்பவர் இவர். விஜய் யேசுதாஸ். அப்படியே அப்பாவின் குரல். பல சமயங்களில் பாடுவது அப்பாவா பிள்ளையா என்ற குழப்பத்தை கூகிளாண்டவர் தான் தீர்த்து வைப்பார். தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என பல மொழிகளில் பாடியிருக்கிறார். பயணத்தைத் தொடர்கிறார்.

தமிழில் இவர் அறிமுகமானது பிரண்ட்ஸ் படத்தின் மூலம். ஓரளவுக்கு ஹிட்டான பாடல் ஜெயம் படத்தில் வரும் 'கோடி கோடி வார்த்தைகள்' பாட்டு. என் அப்பாவோட பேவரைட். எங்கோ ஏதோவொரு தெலுங்கு சேனலில் இதன் ஒரிஜினல் வெர்ஷனை கேட்டுவிட்டு எந்துக்கு எந்துக்கு எந்துக்குன்னு கொஞ்ச நாள் படுத்திக்கொண்டிருந்தார்.

தமிழில் இவர் பாடியுள்ள பாடல்கள் கொஞ்சம் கம்மிதானென்றாலும், அத்தனையும் ஹிட் வகையறாக்கள். காதல் கொண்டேன் படத்தில் 'காதல் காதல் காதல் நெஞ்சில்' பாட்டு ரொம்பப் பிடிக்கும்.
'காதல் தந்த மூர்ச்சை நிலை
நான் கண்கள் திறந்தும் தெளியவில்லை'சண்டக்கோழி படத்தில் 'தாவணி போட்ட தீபாவளி' பாட்டு சூப்பர் ஹிட்டாகியது. மீரா ஜாஸ்மினின் துறுதுறுப்பு கொஞ்சம், பாடல் படமாக்கப்பட்ட விதம் கொஞ்சம், இவர் குரலின் மேஜிக் நிறைய என சேர்ந்து எப்போது பார்த்தாலும் முழுவதுமாய் பார்க்கத் தூண்டும் பாடல்.அடுத்து நமது சூப்பர் ஹீரோ கம் டைரக்டர் சுண்ணாம்பு காவா நடித்த படத்தில் ஒரு பாட்டு. 'தாஜ் மஹால் ஓவியக் காதல்' பாட்டு. கண்ண மூடிக்கிட்டு பாக்கனும். தைரியசாலிகள் கண்ண தொறந்துகிட்டும் பார்க்கலாம்;)இவருடைய ஹிட் பாடல்கள் அனைத்துமே யுவன் இசையமைத்தது. புதுப்பேட்டை படத்தில் 'புல் பேசும் பூ பேசும்' பாட்டு. அட்டகாசமான நடனம் (சினேகா தவிர்த்து). அந்த கிதார் இசையோடு இவர் குரலும் பின்னி இழையும்.

மெலடி விரும்பாதவர்களுக்கும் பிடிக்கக்கூடிய பாட்டு தீபாவளி படத்தில் வரும் 'காதல் வைத்து காத்திருந்தேன்'. ஐயோ பாவனாவின் அழகோடு பாடல் அப்படித் தாலாட்டும். மனது லேசாக இருக்க நான் அடிக்கடி கேட்பது இந்தப் பாட்டு.

'உன்னைக் கண்ட நாள் ஒளிவட்டம் போல்
உள்ளுக்குள்ளே சுழலுதடி
உன்னிடத்தில் நான் பேசியதெல்லாம்
உயிருக்குள் ஒலிக்குதடி'அடுத்த பிடித்த பாட்டைப் பார்க்கவும் தனி மனதைரியம் வேண்டும். எனக்கு அது இல்லாத காரணத்தால் டிவியில் பார்க்க நேரிட்டால் அலறியடித்துக்கொண்டு சேனலை மாற்றிவிடுகிறேன். ஹீரோ??!! ஹீரோயின் காஸ்ட்யூமும், ஹீரோவின் அதிஅற்புதமான முகபாவங்களும் ஊப்ஸ் முடியல. மாயக்கண்ணாடி படத்தில் வரும் 'உலகிலே அழகி நீதான்'. இதே கேட்டகிரியில் பொக்கிஷம் படத்தில் 'நிலா நீ வானம் காற்று' பாட்டும் சேரும்.

மலைக்கோட்டை படத்தில் 'தேவதையே வா வா', தாமிரபரணி படத்தில் 'கட்டபொம்மன் ஊரெனக்க்கு', பாடல்களில் விஷாலுக்கு இவர் குரல் பர்பெக்டாய் செட்டாகும். சர்வம் படத்தில் 'சுட்டா சூரியன' பாட்டில் வரும் மேகம் கருக்குது மழ வரப் பார்க்குது என இவர் பாடும்போது இசை மழையே வரும்.

ஆயிரத்தில் ஒருவன் படத்தில் 'தாய் தின்ற மண்ணே' பாட்டை பாடியது யேசுதாஸ் சார் என ரொம்ப நாள் நினைத்துக் கொண்ண்டிருந்தேன். பெப்பி நம்பர் மட்டுமல்ல கிளாசிக்கலிலும் கலக்குவார் என நிரூப்பித்த பாடல்.

புலிக்குப் பிறந்தது பூனையாகுமா என்ற மொழியை பொய்யாக்காமல் கலக்கிக்கொண்டிருக்கும் விஜய் மேன்மேலும் நல்ல பாடல்களை தர வேண்டும். வாழ்த்துகள் விஜய்.

21 comments:

pudugaithendral said...

என் குருநாதரின் ஞானப்பார்வையில் தன் மகன்களில் விஜய் தான் தனக்கு வாரிசாக இருப்பார் என்பது 18 வருடங்கள் முன்பே தெரிந்தது போல. தான் தயாரித்த கல்கி இதழில் சொல்லியிருந்தார்.

வாழ்த்துக்கள் விஜய்.

Chitra said...

மாயகண்ணாடியில் வரும் "உலக அழகி" பாட்டு, நல்ல காமெடி சாங். அது டூயட் மெலடி என்று நினைத்து, இப்படி சொல்லிட்டீங்களே...... ஹா,ஹா,ஹா,ஹா,....

Unknown said...

ஓ... விஜய் ஏசுதாஸ் பாடியதா??? எனக்கு மிகவும் புடுச்ச பாட்டு. :)

<<<
உன்னைக் கண்ட நாள் ஒளிவட்டம் போல்
உள்ளுக்குள்ளே சுழலுதடி
உன்னிடத்தில் நான் பேசியதெல்லாம்
உயிருக்குள் ஒலிக்குதடி
>>>
அருமையான வரிகள்.

செ.சரவணக்குமார் said...

ரொம்ப ரசிச்சு எழுதியிருக்கீங்க. நல்ல பகிர்வு.

எறும்பு said...

present...

:)

Anonymous said...

சண்டைக்கோழி மீரா ஜாஸ்மின் என் Favoruite.

Vidhya Chandrasekaran said...

நன்றி கலா அக்கா.
நன்றி சித்ரா.
நன்றி மஸ்தான்.
நன்றி சரவணக்குமார்.
நன்றி எறும்பு.
நன்றி சின்ன அம்மிணி.

A Simple Man said...

super songs..I too like vijay jesudas.
in pokkisham "nilaa nee vaanam" female voice is superb i think.

Vidhoosh said...

ப..த..நீ.. ச..ரீங்கக்கா !!

Raghu said...

காத‌ல் வைத்துக் காத்திருந்தேன்...க‌ண்டிப்பா விஜ‌ய்யோட‌....ச்சே..விஜ‌ய் யேசுதாஸோட‌ ஒன் ஆஃப் த‌ பெஸ்ட்

Anonymous said...

s present teacher.

am the first.........

hmm...

cinema vimarsanam elam poi..

epo padal padum mukiya singers pathi elutha arbitu vitanga..

nandri..
valga valamudan..

" கண்ண மூடிக்கிட்டு பாக்கனும். தைரியசாலிகள் கண்ண தொறந்துகிட்டும் பார்க்கலாம்;)hahha..evlo commedy panuvengla neenga..?:))

varuthapadatha vasippor sangam
complan surya.

துபாய் ராஜா said...

அழகான பாடல்கள். அருமையான தொகுப்பு.பகிர்விற்கு நன்றி.

Vijay said...

விஜய் யேசுதாஸ் நல்லாத்தான் பாடறார். ஆனால் தனக்கென்று ஒரு பாணி இல்லாவிட்டால் கஷ்டம் தான். மஜா படத்துல சொல்லித்தரவா பாட்டு கூட இவர் பாடியது தான் என்று நினைக்கிறேன். நன்றாக இருக்கும் :)

Rajalakshmi Pakkirisamy said...

மாப்பிள்ளைக்கு நிச்சயதர்த்தம் மாப்பிள்ளை தோழர்கள் நாங்கள் தான் ...........

பருப்பு (a) Phantom Mohan said...

எல்லாம் சரி மது பாலகிருஷ்ணன் பாட்டக் கேட்டுப்பாருங்க...ஹெட் ஷாட் போஸ் வந்திட்டு போன பார்த்திபன் கனவு படத்தில கனா கண்டேனடி, ஹெட் ஷாட் போஸ் இன் போஸ் படத்தில வைத்த கண் வைத்தது ரெண்டையும் கேளுங்க ஜேசுதாசே மிரண்டு போய்டுவாரு

அகில உலக பிரபல பதிவர்
பருப்பு

தாரணி பிரியா said...

காதல் வைத்து காதல் வைத்து என் பேவரைட். அதே போல மேகம் கருக்குது லைனை ரீவைன்ட் செஞ்சு செஞ்சு கேட்பேன்

Vidhya Chandrasekaran said...

நன்றி Simple Man.
நன்றி விதூஷ்.
நன்றி ர‌கு.
நன்றி Complan Surya.
நன்றி துபாய் ராஜா.
நன்றி விஜய்.
நன்றி ராஜி.
நன்றி பருப்பு.
நன்றி தாரணி பிரியா.

அமுதா கிருஷ்ணா said...

ஸ்டேஜ் ப்ரோக்ராம் சுவேதாவுடன் துபாயில் பண்ணியது சமீபத்தில் டிவியில் பார்த்தேன்.நன்றாக என்ஜாய் செய்து பாடுகிறார்.

பின்னோக்கி said...

என்னுடைய பேவரிட் - தீபாவளி படப்பாடல். அற்புதமான படல் + காட்சியமைப்பு..

Vidhya Chandrasekaran said...

நன்றி அமுதா.
நன்றி பின்னோக்கி.

T.V.ராதாகிருஷ்ணன் said...

பகிர்விற்கு நன்றி