April 23, 2010

இத எப்படி உச்சரிப்பது?

Khao pod tod nam prik pow
Poh pia je
Geang jued woon shek phak
Mian kum

கண்ண மூடிக்கிட்டு ஏனோதானோன்னு டைப்படிச்ச மாதிரி இருக்கா? இத மெனுகார்டில் பார்த்த எங்களுக்கு எப்படியிருந்திருக்கோம். சத்தியமா ஒரு பேரும் சொல்லத் தெரியல. தாய்லாந்து உணவுகள் பரிமாறும் Benjarong என்கிற உணவக மெனு கார்டிலிருந்த ஐட்டம்கள் இவை. நல்லவேளையாக நீண்ண்ட விளக்கமும் ஆங்கிலத்தில் குடுத்திருந்தார்கள். இல்லையெனில் ஒரு வழியாகிருக்கும்.

பொதுவாகவே எனக்குத் தாய் உணவுகள் ரொம்பப் பிடிக்கும். காரணம் unique flavour. இரண்டு வருடங்களுக்குப் பிறகு இரவு உணவிற்காக சென்றோம் (அதே மூவர் கூட்டணி). தம்பி தற்போது சுத்த சைவ சன்மார்க்கத்தை:)) கடைப்பிடிப்பதால், ஆப்சனை என்னிடமே விட்டுவிட்டான் (அசைவம் சாப்பிடாத சமயத்தில் இங்கு கூட்டிவந்ததற்கு திட்டு விழுந்தது).

சூப் மற்றும் ஸ்டார்டர் ஆர்டர் செய்வதற்கு முன் அப்படைசர் தந்தார்கள். நம்மூர் வெற்றிலை மாதிரி இருந்தது. Mian kum என்று பெயராம். நம்மூர் வெற்றிலையில் பாக்கு, சுண்ணாம்பு சேர்த்து சாப்பிடுவதற்கு பதில் கொப்பரைத் தேங்காய், எலுமிச்சை, இஞ்சி, பச்சை மிளகாய், வெங்காயம், வேர்க்கடலையோடு இனிப்பு கலவை சேர்த்து சாப்பிட சொல்கிறார்கள். நன்றாக இருக்கிறது.

முதலில் சொன்ன Khao pod tod nam prik pow என்பது சில்லி பேஸ்ட்டோடு வறுத்த பேபி கார்ன். இதை rice tartletsல் பரிமாறினார்கள். அதோடு ஃப்ரைடு தாய் வெஜ் ஸ்ப்ரிங் ரோல் (poh pia je) சாப்பிட்டோம். நன்றாக இருந்தது. தாய் க்ளியர் சூப் வித் க்ளாஸ் நூடுல்ஸ். எனக்குப் பிடித்திருந்தது. மற்ற இருவரும் சூப்பிற்கு தம்ப்ஸ் டவுன் கொடுத்தார்கள்.

மெயின் கோர்ஸிற்கு jungle fried rice, bamme phad noodles, thai red curry, tofu mushroom curry ஆகியவை ஆர்டர் செய்தோம். ஆர்டர் எடுத்தவர் thai red curry ப்ளெய்ன் ரைசோடு தான் நன்றாக இருக்குமென்றார். பரவாயில்லை நாங்கள் சொன்னதையே கொண்டு வாருங்கள் என்று சொல்லிவிட்டு தம்பி அடித்த கமெண்ட் "வெறும் அரிசி சாதம் சாப்பிட நான் ஏண் இங்க வர்றேன்". மெயின் கோர்ஸ் வரும் வரை சிண்ட்ரெல்லா என்ற பெயரில் பைனாப்பிள் மற்றும் ஸ்ட்ராபெர்ரி கலந்த ஜூஸ் குடித்தோம் அருமையாக இருந்தது. மெயின் கோர்ஸும் நன்றாக இருந்தது.

ரகு ஸ்வீட் வேண்டாமென சொல்லிவிட, நான் கோகனட் புட்டிங் (பெயர் மறந்து போச்சு), தம்பி பனானா பேன் கேக் வித் கோகனட் ஐஸ்க்ரீம் ஆர்டர் செய்தோம். இதில் தம்பிது சூப்பர் விக்கெட் ஆகிவிட என்னுடையது இண்டர்நேஷனல் பருப்பு பாயாசம் ரேஞ்சுக்கு ஒருமாதிரி பார்டர் பாஸ் பண்ணியது.

மேலதிக தகவல்கள்

உணவகம் - Benjarong
உணவு/cuisine - Thai (Veg/Non veg)
இடம் - டிடிகே சாலை, ஆழ்வார்பேட்டை. ராயல் எண்டர்பிரைசஸ் எதிரில்.
டப்பு - அநியாய காஸ்ட்லி. மூவருக்கு கம்ப்ளீட் மீல் (வெஜ்) 2600 ரூபாய் வரியுடன்:(


பரிந்துரை - கண்டிப்பாக போகலாம். விலைதான் ரொம்பக் கூட. Though the food speaks for its price;)


டிஸ்கி 1 : பசி நேரத்தில் பதிவைப் படித்து வயிற்றெரிச்சல் பட்டால் கம்பேனி பொறுப்பாகாது.
டிஸ்கி 2 : இடுகை முழுக்க முழுக்க பெர்சனல் எக்ஸ்பீரியன்ஸை பேஸ் பண்ணி எழுதப்பட்டது. உங்களுக்கு மாற்று அனுபவம் ஏற்படுமெனில் அதற்கும் கம்பேனி பொறுப்பாகாது:)

9 comments:

Vijay said...

சென்னையில் இது வரை போன எந்த ஹோட்டலிலும் ஒரு வாவ் ஃபாக்டர் இல்லை. நீங்கள் சொல்லியிருக்கும் ஹோட்டல் மெனு கார்டைப் பார்த்து விட்டு ஓடி வந்துவிட்டேன்.

தாய் லாந்து சாப்பாடு எனக்கு ரொம்பப் பிடிக்கும். பெங்களூரில் அருமையான தாய் உணவகங்கள் உண்டு. டப்பும் கையைக் கடிக்காது. சென்னையில் இட்லி தோசையே அமாநுஷ்ய விலையாக இருக்கும் போது மற்ற நாட்டு உணவுகள், யப்பா, இப்பவே கண்ண கட்டுதே :(

karishna said...

விலை தாங்க ரொம்ப ஜாஸ்தியா இருக்கு!!...

Thamira said...

வயித்தெரிச்சல் பதிவா.? நான் தலைப்பைப்பார்த்து வேறெதுவோனு நினைச்சுட்டேன்.!

Raghu said...

//மூவருக்கு கம்ப்ளீட் மீல் (வெஜ்) 2600 ரூபாய் வரியுடன்//

Appreciate it...:))

க ரா said...

படம்லாம் பாக்கறதுக்கு ரொம்ப நல்லா இருக்குங்க. அதோட மீ த எஸ்கேப்பு.

Chitra said...

Looks like Thai food is very expensive in Chennai. It is much cheaper and better over here. :-)

Romeoboy said...

நம்ம ஊரு முனியாண்டி விலாஸ் பிரியாணி சாப்பிட்டு எழுதுங்களே .. அது தான் நாம பட்ஜெட்க்கு சரியா வரும் ..

Vidhya Chandrasekaran said...

நன்றி விஜய்.
நன்றி karishna.
நன்றி ஆதிமூலகிருஷ்ணன் (ஹி ஹி).
நன்றி ர‌கு.
நன்றி இராமசாமி கண்ணண்.
நன்றி சித்ரா.
நன்றி ரோமியோ.

விக்னேஷ்வரி said...

ம், யம்மி போஸ்ட். இந்த முறை என்னை விட்டுட்டுப் போஸ்ட் போட்டுட்டீங்க. உங்க பேச்சு கா.