October 7, 2010

கமான்..கமான்...காமினி (சவால் சிறுகதை)

திடுமென விழிப்பு வந்தது காமினிக்கு. காற்றில் கனமான மருந்து நெடி மூக்கைத் தாக்கியது. சிறிது நேர சிரமத்திற்குப் பின்னர் கண்ணைத் திறந்தாள். அரைக்கண்ணால் அறையை சுழற்றினாள். மெல்லிய நீல வெளிச்சத்தில் எதுவும் துல்லியமாக தெரியவில்லை. கட்டிலைச் சுற்றி சில எலக்ட்ரானிக் வஸ்துக்கள் கடோத்கஜன்கள் போல் நின்று கொண்டிருந்தன. சிக்னல் இல்லா ரோடை க்ராஸ் செய்யும் வாகனங்கள் போல ஒயர்கள் குறுக்கும் நெடுக்குமாய் ஓடிக்கொண்டிருந்தன. கதவு திறக்கப்படும் சத்தம் கேட்டதும் கண்களை மூடிக்கொண்டாள். இரண்டு ஜோடி பூட்ஸ்களின் ஓசை மெல்லத் தேய்ந்து அறை மீண்டும் நிசப்தமாயிற்று.

“ஏதாவது இம்ப்ரூவெமெண்ட்ஸ்?”

“ம்ம்ம். இப்பதான் பல்ஸ் ஸ்டேபிள் ஆயிருக்கு. இனிமே தான் கண்ட்ரோல் சோதனைகளை முயன்று பார்க்கனும்.”

“சிப் பங்கஷனிங்??”

“மற்ற எல்லா உறுப்புகளையும் கண்ட்ரோல் செய்கிறது. மூளையுடனான synchronization பக்காவாய் இருக்கிறது. சிலிக்கான் நியூரான்களை இம்ப்ளாண்ட் செய்து முடித்தபின் சோதனைகள் வெற்றியடைந்தால் மூளையை அகற்றி விடலாம்.”

“அவசியம் அதை செய்ய வேண்டுமா? sync proper எனும் பட்சத்தில் எதற்கு ரிமூவ் செய்யனும்?”

“நோ கௌதம். அது எப்பவுமே டேஞ்சர். சில சமயங்களில் சுரப்பிகள் தப்பாட்டம் ஆடினால் போச்சு. ஒரு செகண்ட் மிஸ்மேட்ச் ஆனாலும் ரிகவரி கஷ்டம். கண்ட்ரோல் அதை விட கஷ்டம்.”

“பழைய ஞாபகங்கள்?”

“இன்னும் எரேஸ் செய்யவில்லை. நாளைக்கு சேம்பருக்கு கொண்டு சென்ற பிறகு தான் நெர்வ் கேஸ் கொடுக்க வேண்டும். அதன் பின் 72 மணி நேரத்தில் அக்யூட் மெமரி லாஸ் ஏற்பட்டுவிடும். பிறகு புது செட் கண்ட்ரோல் அப்ளை செய்து பார்க்க வேண்டும். பை தி வே அந்த நம்பர்க்குரிய ஆளை கண்டுபிடித்தாயா?’

“இன்னும் இல்லை. அது ஃபேக் நம்பராக இருக்குமென நினைக்கிறேன். நாளை சொல்லிவிடுகிறேன்.”

“சரி. ஏற்கனவே ரன் பண்ணிய ப்ரோக்ராம்களை ஒரு முறை டெஸ்ட் பண்ணனும். ப்ளீஸ் ட்ரெஸ் ஹெர்.”

“ஒக்கே. ஐ வில்.”

மீண்டும் பூட்ஸ் சத்தம். ஆனால் இந்தமுறை ஒரு ஜோடி மட்டும். சத்தம் தேய்ந்து கதவு திறந்து மூடியதும் சிறுது நேரத்திற்கு அமைதி நிலவியது. மெல்லிய பீப் சத்தங்கள் கேட்டன. பின்னர் மீண்டும் நிசப்தம்.

“ஹலோ. டாக்டர் பேசறேன். கேன் ஐ டாக் டு சிவா?”

”....”

“என்ன சொல்லுங்க டாக்டர்? நீ பண்ண தப்பால இப்ப மாட்டிக்கப் போற”

“......”

“புல் ஷிட். உன் கார்லயேவா கொண்டு போய் டிஸ்போஸ் பண்ணுவ. அதுவும் பட்டப் பகல்ல”

“......”

“நல்லா செக் பண்ணப் போ. மொதல்ல காரோட ரெக்கார்ட்ஸ ஒழி. நம்பர் ஃபேக்குன்னு நான் சொல்லிட்டேன்.”

“.......”

“தட்ஸ் ஒக்கே. எல்லாம் உங்க அப்பாவுக்காக.”

”.....”

“ஃபைன். டோண்ட் ஒர்ரி. டேக் கேர்.”

காமினியின் ப்ளாஸ்டர்களை எடுத்த டாக்டர் அதிர்ந்தார். காயங்கள் இருந்த இடம் சுத்தமாக இருந்தது. வடு கூட இல்லை. இண்டர்காமை எடுத்து லேபிற்கு சுழற்றினார். பதிலில்லை. அவசரமாக அறையை விட்டு வெளியேறினார். டாக்டர் அகன்றதும் காமினி எழுந்து தன் முகத்தில் இருந்த மாஸ்கை அகற்றிவிட்டு, வயர்களையெல்லாம் பிடுங்கி விட்டு அருகிலிருந்த கண்ணாடி ஜன்னலைத் திறந்து வெளியே குதித்தாள். கொரியன் புல்வெளி அவளை வரவேற்றது. காமினி சுற்றிலும் பார்த்தாள். இருட்டத் தொடங்கியிருந்தது. காம்பவுண்ட் சுவற்றைத் தாண்டி குச்சி குச்சியாய் சவுக்கு மரங்களும், யூகலிப்டஸ் மரங்களும் அணிவகுத்து நின்றன. அவற்றைத் தாண்டி எதுவும் தெரியவில்லை. கடலலைகளின் ஓசை மெல்லிதாய் கேட்டது. காம்பவுண்ட் சுவற்றையும் எளிதாக தாண்டினாள். வெளியில் ஹோண்டா சிட்டி நி்ன்றுக்கொண்டிருந்தது.
***

லவரமான முகத்துடன் அமர்ந்திருந்த இருவரையும் அளவில்லா எரிச்சலுடன் பார்த்துக்கொண்டிருந்தார் இன்ஸ்பெக்டர் கோகுல்நாத்.

“ஏன் சார். படிச்சவங்க தானே நீங்க? ஒன்னு ரெண்டு தப்பு பண்ணலாம். இப்படி வரிசையாவா பண்ணுவீங்க? உங்களுக்கு ஆராய்ச்சிக்கு பாடி தேவைப்பட்டா முறைப்படி பெர்மிஷன் வாங்கனும் சார். ரோட்ல கிடந்ததுன்னு எடுத்துட்டு வந்து யூஸ் பண்ணிருக்கீங்க. ஃபோட்டோ இல்லைன்றீங்க. இப்ப நாங்க என்ன சார் பண்றது. ப்ராபர் எவிடென்ஸ் இருக்கற கேஸெல்லாமே தண்ணி காட்டுது. இதுல இந்த இம்சை வேற. போனாப் போட்டும்ன்னு விடவேண்டியது தானே? இப்ப மட்டும் எதுக்கு எனக்கு இன்ஃபார்ம் பண்ணீங்க?”

“இல்ல சார். அது வந்து...”

“சொல்லித் தொலைங்க சார்”

“காமினி இப்ப ஒரு அரை ம்யூடண்ட் சார்”

“அப்படீன்னா”

”கம்ப்யூட்டர் சிப்பும், மூளையும் சேர்ந்து கண்ட்ரோல் செய்யும் மனித உருவிலிருக்கும் ஜந்து.”

“வாட்? ஜந்துவா?”

”ஆமாம் சார்.”

“காமினி வெளியிலிருப்பதால் என்ன மாதிரியான ப்ராப்ளம் வரும்?”

“இன்னும் உறுதியாய் தெரியவில்லை சார். If she becomes aggressive its very difficult control her."

”அதாவது பாதியிலேயே அத்துகிட்டு போயிட்டா. இந்தா மாதிரி ஆராய்ச்சியெல்லாம் பண்ணும்போது செக்யூரிட்டி டைட் பண்ண மாட்டீங்களா சார்? ஏதோ பாதி படத்திலேயே தியேட்டரவிட்டு எழுந்து போற மாதிரி போயிருக்கா.”

“இல்லை சார் நாளையிலிருந்து தான் அவள் எந்த மாதிரியெல்லாம் ரியாக்ட் செய்வாள், எப்படி கண்ட்ரோல் செய்யவேண்டும் என்ற டெஸ்ட்களை மேற்கொள்ளவிருந்தோம். அதுக்காக அவளை இன்றிறவு எலக்ட்ரானிக் செக்யூர்ட் ரூமுக்கு மாற்றுவதாய் இருந்தது. அதற்குள்..”

“ஹுக்கும். அவள் கோபமடைந்தால் கண்ட்ரோல் செய்வது கஷ்டம்னீங்களே? உங்களுக்கு எப்படி தெரிய வந்தது?”

“சார் என் ஆராய்ச்சியின் முழு மாதிரியையும் உங்களுக்குப் புரிய வைக்க முடியாது சார். சுருக்க சொன்னால் மனித உணர்வுகளை, நடவடிக்கைகளை கம்ப்யூட்டர் மூலம் கட்டுப்படுத்துவதுதான் என் ரிசர்ச்சின் நோக்கம். இந்த ஒரு மாத காலத்தில் காமினியின் மூளையோடு என்னுடைய கண்ட்ரோலர் சிப்பும் சரியாக synchronize ஆகிக்கொண்டிருந்தது. என்னுடைய அடுத்த முயற்சி, சிப்பின் ஆதிக்கத்தை அதிகப்படுத்தி மெல்ல மெல்ல மூளையின் கட்டுப்பாடுகள் அனைத்தையும் சிலிக்கான் நரம்புகளின் உதவியால் சிப்பிலேயே கொண்டு வருவது. அதற்குள் இப்படியாகிவிட்டது.”

“சரி அந்த சிப்பை டிடெக்டிங் டிவைஸ் எதனுடனாவது இணைத்திருக்கிறீர்களா? சம்திங்க் லைக் அ ஜிபிஆரெஸ்?”

“இன்னும் இல்லை. காமினியை இன்னும் தனியாக விடாததால் அது எனக்கு அநாவசியமாகப் பட்டது.”

“கடவுளே. ஏன் சார் இப்படி அரைகுறை வேலை பண்ணி என் தாலிய அறுக்கறீங்க? ஒரு கம்ப்ளெய்ண்ட் எழுதிக் கொடுங்க. முடிஞ்சத பார்க்கிறோம்.”
***

kamini escaped. she may find you. get out from there n go to hadows bungalow immediately. dont take ur cellphone. i'm on the way" டாக்டரிடம் வந்த குறுஞ்செய்தியைப் படித்த சிவா துணுக்குற்றான். ஒரு பொட்டச்சிக்கு பயந்து ஓடறதா என நினைத்துக்கொண்டே பிஸ்டலை எடுக்கவும் காலிங் பெல் அலறியது. வியூவரில் கண் வைத்துப் பார்த்தவன் காமினியைப் பார்த்து அதிர்ந்தான். பின்னர் சரேலென கதவைத் திறந்து காமினியை உள்ளிழுத்து “ஸாரி.. எனக்கு வேற வழி தெரியலை” என்று காமினியின் நெற்றிப் பொட்டில் துப்பாக்கியை வைத்தான் சிவா. காமினியின் நீல நிறக் கண்கள் பிரகாசமாய் ஒளிர்ந்தது.
***

டேய்...நாலு நாளா நானும் பார்க்கிறேன். லாப்டாப்பிலிருந்து தலைய எடுக்க மாட்டேங்கற. இந்த ரெண்டு மணி நேரத்துல ஒரு பாக்கெட் சிகரெட் காலி பண்ணிருக்க. என்னடா பண்ற?” என்றான் கணேஷ்.

”இல்ல பாஸ். ஒரு சிறுகதை எழுதறேன்.”

“அடப்பாவி அந்தாளு போனதிலிருந்து ரொம்ப துளிர் விட்டுப் போச்சுடா உனக்கு. இப்ப எதுக்கு இந்த வேணாத வேலை. புஸ்தகம் எதுனாச்சும் போடப் போறியா?”

“ஒரே கதைலயா? போங்க பாஸ். ஒரு போட்டிக்காக எழுதிட்டிருக்கேன் பாஸ்.”

“போட்டியா? என்னடா புதுசு புதுசா என்னமோ சொல்ற”

“அதில்ல பாஸ். மூணு வாக்கியம் கொடுத்து அதே ஆர்டர்ல கதை எழுதனும்ன்னு போட்டி வச்சிருக்காங்க. சில கண்டிஷன்சும் இருக்கு. அதான் பாஸ் எழுதிட்டிருக்கேன்.”

“எந்திரி. என்னதான் எழுதிருக்கேன்னு பார்ப்போம்.”

எழுதியவரைப் படித்துவிட்டு “டேய் சத்தியமா சொல்லு. நீதான் எழுதினியா?”

“ஏன் பாஸ்? ஏன்? ஏன் உங்களுக்கு இந்த அவநம்பிக்கை?”

“இல்லடா காமினிங்கற கேரக்டர பத்தின டிஸ்க்ரிப்ஷன் எதுவுமே இல்லையே. பொண்ணுங்கள வர்ணிக்காத வசந்தா? அதான் கேட்டேன்.”

“போங்க பாஸ். நான் சயின்ஸ் பிக்‌ஷனுக்கு முயற்சி பண்ணிட்டிருக்கேன் பாஸ்”

“இங்கப் பார்றா. இது வேறயா? அது சரி. காமினிக்கும் சிவாவுக்கும் என்ன ரிலேஷண்டா?”

“அது வாசகர்களுக்குப் புரியும் பாஸ்”

“யாருக்கு?”

“ரீடர்ஸ்க்கு பாஸ்.”

“ஸ்ஸப்ப்பா. சரி காமினி எப்படிடா சிவாவ ட்ரேஸ் பண்றா?”

“அது வாசகர்களோட யூகத்துக்கு விட்ருக்கேன் பாஸ்.”

“கடவுளே........”

“பாஸ் எனக்கு ஒரு சின்ன ஹெல்ப் பண்ணுங்களேன்.”

“என்னடா?”

“காமினி... வெல்டன்.. எப்படியோ போலீஸ் கண்ல மண்ணைத் தூவிட்டு இந்த டைமண்டைக் கொண்டு வந்துட்டியே என்று பாராட்டினார் பரந்தாமன். இந்த வாக்கியம் வர்றாப்ல கதைக்கு நல்ல ஒரு எண்டிங் சொல்லுங்களேன்.”

”எண்டிங்”

“ஆமா பாஸ்’

“இந்தக் கதைக்கு.”

“ஆமா பாஸ்”

“சொல்றேன். பரிசு கிரிசு எதாவது உண்டா?”

“முதல் மூனு கதைக்கு ஆயிரம் ரூவா வொர்த் புஸ்தகங்களை பிரிச்சுக் கொடுப்பாங்களாம் பாஸ்.”

“பிரிச்சுன்னா? புக்லருந்து பேப்பர் கிழிச்சா?”

“என்ன பாஸ் சின்னபுள்ளையாட்டம் விளையாடறீங்க. எப்படியோ தருவாங்க பாஸ். முடிவு சொல்லுங்க பாஸ்”

“நாளைக்கு யோசிச்சு சொல்றேன். கோர்ட்டுக்கு கிளம்பு. இன்னிக்கு பரந்தாமன் கேஸ் ஹியரிங் வர்றது” கணேஷ் சொல்லிக்கொண்டிருக்கும்போதே காலிங் பெல் அலறியது.

வசந்த் சென்று கதவைத் திறந்தான். இளம்பெண் ஒருத்தி நின்றுகொண்டிருந்தாள்.

“வாவ். சாரி வாட் டூ யு வாண்ட் மிஸ்???”

“காமினி.. மிஸ் காமினி” சிரித்துக்கொண்டே சொன்ன காமினியின் நீல நிறக் கண்கள் ஒளிர்ந்தது.

43 comments:

விஜி said...

ரொம்ப பெருசா இருக்கு வித்யா, க,சு சொல்ல முடியுமா? :)))

ஹுஸைனம்மா said...

எந்திரள்??

நல்லாருக்கு;

பவள சங்கரி said...

அப்பா ஒரே மூச்சில் படித்து முடித்தேன் வித்யா......சூப்பர்.....ஆத்தா....நான்பாஸாயிடேன்........ஹி..ஹி....

T.V.ராதாகிருஷ்ணன் said...

அருமை..வெல்ல வாழ்த்துகள்

Rajalakshmi Pakkirisamy said...

he he he ... ALL THE BEST :)

Gayathri said...

super nalla irukku..

Vidhoosh said...

super... :))

சி.பி.செந்தில்குமார் said...

பதிவின் லே அவுட் அருமை,இருங்க,படிச்சுட்டு வர்ரேன்

சி.பி.செந்தில்குமார் said...

கதை நல்லாருக்கு,வாழ்த்துக்கள்

சி.பி.செந்தில்குமார் said...

செம நக்கல்>>>

“முதல் மூனு கதைக்கு ஆயிரம் ரூவா வொர்த் புஸ்தகங்களை பிரிச்சுக் கொடுப்பாங்களாம் பாஸ்.”

“பிரிச்சுன்னா? புக்லருந்து பேப்பர் கிழிச்சா?”>>>>

அடி தூளு

சி.பி.செந்தில்குமார் said...

க்ளைமாக்ஸ் டச் அச்சு அசல் சுஜாதா டச்,வாவ்.ஆனா ஆங்கில வார்த்தை பிரயோகம் அதிகமா இருக்கே.

கவிதா | Kavitha said...

பரிசு பெற வாழ்த்துக்கள் வித்யா.. நல்லா இருக்கு.. .எந்திரன் இன்னும் பார்க்கல... அதை ஒட்டியோ..ன்னு படிக்கும் போது தோணுது.. :)

Chitra said...

Super. DOT. Best wishes! DOT.

R. Gopi said...

நான் இந்த மாதிரி யோசிச்சேன். ஆனா எழுதலை.

அதனால் என்ன? இதுக்குப் போட்டியா இன்னொரு கதை ரெடி பண்ணிட்டேன்:)))))))

Vidhya Chandrasekaran said...

நன்றி விஜி (ஏன்ன்ன்ன்?).

நன்றி ஹுஸைனம்மா (இன்னும் பார்க்கலைங்க).

நன்றி சங்கரி மேடம்.
நன்றி டிவிஆர் சார்.
நன்றி ராஜி.
நன்றி காயத்ரி.
நன்றி விதூஷ்.

Vidhya Chandrasekaran said...

நன்றி செந்தில்குமார் (கதைக்கு தேவைப்படுது சார்:))))

நன்றி கவிதா.
நன்றி சித்ரா.

நன்றி கோபி (அடங்கவே மாட்டீங்களா. இன்னொன்னு அடுத்த வாரம் ரிலீஸ் ஆகும்).

Vidhya Chandrasekaran said...

நான் இன்னும் எந்திரன் பார்க்கவில்லை:))

விஜி said...

ஹை நாந்தான் முதல் போணியா.. அப்ப பரிசு நிச்சயம், ஏற்கனவே இருக்கும் டீல் மறக்ககூடாது , யாருக்கு கிடைச்சாலும் ஷேரிங் :)))

நர்சிம் said...

வெற்றி பெற வாழ்த்துகள்.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

கதை சுவராசியமா இருக்கு!

Chandramohan said...

பரிசு பெற வாழ்த்துக்கள்.

>> சம்திங்க் லைக் அ ஜிபிஆரெஸ்?

I think it is GPS

Vijay said...

எந்திரன் ரொம்பத்தான் பாதிச்சிடுத்து போல? இண்டரெஸ்டிங்க் :)

Vidhya Chandrasekaran said...

நன்றி நர்சிம்.
நன்றி பன்னிக்குட்டி ராம்சாமி.

நன்றி Chandramohan (GPS என்பதே சரி. இன்ஸ்பெக்டர் டெக்னிக்கலி ஸ்ட்ராங் இல்லை என்பதனால் GPRS என குறிபிட்டேன்).

நன்றி விஜய் (அய்யோ இன்னும் பார்க்கலைங்க. நம்புங்கப்பா)

மணிகண்டன் said...

கதை நல்லா இல்லைங்க :)-

ஜெய்லானி said...

நல்ல கதை..!!

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

Wow...super... நானும் ஒன்னு எழுதி வெச்சு இருக்கேன் வித்யா.. உங்களுது படிச்சப்புறம் அது அனுப்பனுமானு தோணுது...சூப்பரா எழுதி இருக்கீங்க... கணேஷ் வசந்த் எல்லாம் கொண்டு வந்து கலக்கிட்டீங்க

☀நான் ஆதவன்☀ said...

:) நல்லாயிருக்குங்க வித்யா. வெற்றி பெற வாழ்த்துகள்

அவ்வ்வ் நானும் ஒன்னு எழுதலாம்னு இருக்கேன். பார்க்கலாம் உங்க அளவுக்கெல்லாம் எழுத முடியுமான்னு :)

☀நான் ஆதவன்☀ said...

:) நல்லாயிருக்குங்க வித்யா. வெற்றி பெற வாழ்த்துகள்

அவ்வ்வ் நானும் ஒன்னு எழுதலாம்னு இருக்கேன். பார்க்கலாம் உங்க அளவுக்கெல்லாம் எழுத முடியுமான்னு :)

'பரிவை' சே.குமார் said...

எந்திரன் பாதிப்பா?
கதை நல்லாயிருக்கு.

Anisha Yunus said...

கதை மெய்யாலுமே முடிஞ்சு போச்சா?? :))

செமயா எழுதியிருக்கீங்க. பாராட்டுக்கள்!!

vinthaimanithan said...

வாவ்! செம இண்ட்ரஸ்டிங்! நல்லாவே க்ரைம் எழுதுறீங்க. கணேஷும் வஸந்த்தும் வேற வந்துட்டாங்க. அப்புறம்... கோகுல்நாத் மட்டும் தனியா வர்றாரு.. விவேக், ரூபலா எங்க?

சரி சரி... சுஜாதாவோட "பேசும்பொம்மைகள்" நாவல் இந்தளவுக்கு உங்களை பாதிச்சிருச்சுன்னு புரியுது.

:)

Abhi said...

கதை ரொம்ப நல்லாயிருக்கு. பளாட் பிடிச்சிருந்தது. நானும் எழுதியிருக்கேன்.. படிச்சுப் பாருங்க

http://moonramkonam.blogspot.com/2010/10/tamil-short-story-saval-sirukathai.html

R. Gopi said...

Congrats

RVS said...

வாழ்த்துக்கள் ;-)

RVS said...

வெற்றி பெற்றதற்கு வாழ்த்துக்கள் ;-)

taaru said...

சிறுகதைய சீராக எழுதி போட்டீங்க...பரிசு பெற்றமைக்கு வாழ்த்துக்கள்....

மாதேவி said...

வெற்றிபெற்றதற்கு வாழ்த்துகள் வித்யா.
தொடரட்டும் வெற்றிகள்.

pichaikaaran said...

வெற்றி பெற்றதற்கு வாழ்த்துக்கள் ..

மேலும் எழுதுங்கள்

CS. Mohan Kumar said...

Congrats for winning a prize. You have a good talent for writing story. You can take it further & send to magazines and consider publishing book later.

பின்னோக்கி said...

வாழ்த்துக்கள் வெற்றி பெற்றதற்கு.

Prasanna said...

கதை அருமை.. மெயின் கதையிலேயே மெலிசாக சுஜாதா தெரிந்தார் :) கணேஷ் வசந்த்த எங்க பார்த்தாலும் ஒரு பரவசம் தான் ;) பினிஷிங் சூப்பர்..

Unknown said...

வாழ்த்துக்கள் வித்யா...

Sathish said...

வெற்றிபெற்றதற்கு வாழ்த்துகள் வித்யா....தொடரட்டும் உங்கள் வெற்றிகள்....ஒரு நல்ல sci fi கதையில் துடங்கி, காமெடி கலந்து த்ரில்லரில் முடிசிருகீங்க...சூப்பர்..