October 25, 2010

முழிப்பெயர்ப்புக் கவுஜைகள் - I

பிறமொழிக் கவுஞ்சர்களில் குறிப்பிடத்தக்கவர் கவுஞ்சர் அந்நோவ்ன். அவரின் எண்ணிலடங்கா படைப்புகள் வாசிக்க வாசிக்க மட்டற்ற மகிழ்ச்சியைத் தருவன. குழந்தைகளுக்கு குதூகல பாடலாகவும். பெரியவர்களுக்கு முற்போக்கு அர்த்தம் பொதிந்த தத்துவங்களாகவும் தெரிவது இவர் கவுஜைகளின் சிற்ப்பம்சம். இவரின் கவுஜைகள் படிப்பவரின் மனநிலைக்கு ஏற்ப தன் அர்த்தத்தை மாற்றிக்கொள்ளும் வல்லமை படைத்தவை.

Baa, baa, black sheep
Have you any wool?
Yes sir, yes sir,
Three bags full.
One for my master,
One for my dame,
And one for the little boy
Who lives down the lane.

- Unknown

சின்னஞ்சிறிய ஆட்டுக்குட்டியே
பயமின்றி திரிகிறாயே

அச்சுறுத்தலுக்கு அஞ்சேனய்யா
பயம் போக்கும் பானம் உள்ளதய்யா

எசமானருக்கு கொடுப்பேன்
பெண்ணெனப் பிரித்துப் பார்க்க மாட்டேன்
உலகமறியாச் சிறுவனென உதாசீனப்படுத்தமாட்டேன்
சமமாய் கொடுத்து மகிழ்வேன்
சரக்கையும் சந்தோஷத்தையும்

- தமிழில் வித்யா..

ஆசிரியர் சுட்டிக் காட்டும் ஆடு வயதில் சிறியது (baa baa - பாப்பா). நரிகள் திரியுமிடத்தில் இருக்கிறாயே. உனக்கு உள்ளூர பயமில்லையா எனக் கேட்கிறார். அதற்கு அந்த ஆட்டுக்குட்டியானது பயமிருந்தாலும் மூன்று பை முழுவதும் இருக்கும் திரவத்தைக் குடிப்பதால் பயம் போய் தைரியம் வந்துவிடும் எனக் கூறுகிறது. மேலும் பெண்கள் குடிக்கக்கூடாது எனத் தடைகள் போடும் கலாச்சார/பிற்போக்குத்தனமான சமுதாயத்திலிருந்து வந்தாலும் ஆணிற்கும் பெண்ணிற்கும் சரிசமமாக பகிர்ந்துக்கொடுக்கும் எண்ணம் கொண்ட கவுஞ்சர் அந்நோவ்ன் அந்தக் காலத்திலேயே பெண்ணீயம் பேசியிருக்கிறார். அதே போல் சின்னப்பையன் உனக்கு ஒன்னும் தெரியாது என்று சொல்லாமல் அவனையும் சக மனிதனாக மதித்து அவனுக்கு தனியே எடுத்துவைத்திருபதன் மூலம் குழந்தைகளின் மனதைப் புரிந்த வல்லுநராகயிருக்கிறார்.

கவுஞ்சர் அந்நோவ்னின் வேறொரு கவுஜையின் முழியைப்பேர்த்து அடுத்த பதிவில் தருகிறேன்.

11 comments:

தினேஷ் said...

கொலவெறி!!!!!

சாந்தி மாரியப்பன் said...

ஆரம்பிச்சாச்சா :-)))))))

பவள சங்கரி said...

அட வித்யா......என்னாச்சு பேபி...........ஆனா நல்லாத்தான் இருக்கு.....

அமுதா கிருஷ்ணா said...

சபாஷ்..உங்களை யாரு உங்க பையன் ஸ்கூலாண்ட விட்டது..

ambi said...

//அச்சுறுத்தலுக்கு அஞ்சேனய்யா//

ஆஞ்சேனேயான்னு வாசிச்சு வெச்சேன். :))

Thamira said...

ரசனை. எனக்கு ரொம்பப் பிடித்திருக்கிறது, உங்கள் இந்த சுவாரசிய விளையாட்டு.

Unknown said...

உங்ககிட்டருந்து இன்னும் நிறைய எதிர்பார்கிறேன்

ஆமா ஜூனியர் அப்டேட்ஸ் வரதில்லையே ஏன்???????

vinu said...

நான் கிறுக்கரத படிக்கிரவங்க

pesaama ungalin postai padikkum kirukkargalunnu maathirunnga ok

எஸ்.கே said...

அடடடடா!

Anisha Yunus said...

சில வருடங்களுக்கு முன் ஒரு தோழன் Twinkle Twinkle little star பாட்டை மொபைலில் தமிழாக்கப்படுத்தி அனுப்பியிருந்தான். அது ஞாபகம் வந்தது. இந்த தமிழாக்கமாவது பரவாயில்லை. :)

Vidhya Chandrasekaran said...

நன்றி தினேஷ்.
நன்றி அமைதிச்சாரல்.
நன்றி சங்கரி மேடம்.
நன்றி அமுதா கிருஷ்ணா.
நன்றி அம்பி.
நன்றி ஆதி.
நன்றி நவீன்குமார்.
நன்றி vinu.
நன்றி எஸ்.கே.
நன்றி அன்னு.